Followers

Saturday, April 13, 2019

நவாஸ் கனி - ராமநாதபுர நாடாளுமன்ற வேட்பாளர்!

கஜா புயலின் போது கனடா வாழ் தமிழர்கள் (TMAC) மற்றும் இந்தியர்கள் (CCIM) சார்ந்த இயக்கங்களின் நிதி உதவியால், கிட்டத்தட்ட 2000 குடும்பக்களுக்கு 6000 கிலோ மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை மதுரையில் திரட்டினோம்.
அடுத்த கட்டம், அவற்றை கவனமாக தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு சேர்ப்பது.
இரண்டு சிறிய வேன்கள் வாடகைக்கு எடுப்பதென முடிவு செய்தோம்.
அதற்கு என் தந்தை S.T.Courierஐ அணுகலாம் என்றும், அவர்கள் இலவசமாகவே செய்து தருவார்கள் எனக்கூறினார்கள். 

ஏற்கனவே சென்னை/கடலூர் வெள்ளத்தின் போதும், கேரள வெள்ளத்தின் போதும் S.T.Courier, News7உடன் இணைந்து தமிழகம் முழுதிலும் இருந்து தன்னார்வலர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவரிடம் இலவசமாக கொண்டுசேர்த்தனர் என்ற ஞாபகம் இருந்தது.
அதுமட்டுமில்லாமல், பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வருடந்தோறும் அவர்கள் கல்லூரிக் கல்விக்கான செலவினை ஏற்று வருகின்றனர். என் தந்தை சிபாரிசினில் மட்டும் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
இவை எனக்குத்தெரிந்தும் என் மனதில் ஒரு தயக்கம். நான் பொறுப்பாளராக இருப்பதால் இன்னொரு நிறுவனத்திடம் வேலையை ஒப்படைப்பதால் எதுவும் தவறிளைத்து விடுவேனோ என்ற பயம்.
அதையும் மீறி, better sense prevailed. இதில் சேமிக்கும் பணத்தைக்கொண்டு இன்னும் சில குடும்பங்களுக்கு உதவலாமெனும் அடிப்படையில் ஒத்துக்கொண்டேன்.
என் தந்தை அந்த நிறுவனத்தின் Managing Director திரு.நவாஸ் கனி அவர்களைத் தொடர்பு கொண்டார்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல், அன்று மாலையே சென்னை, கேரளாவைப்போல் டெல்டா மாவட்டங்களுக்கும் தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னார்வலர்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை தன் நிறுவனம் மூலம் இலவசமாக எடுத்துச்செல்வதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பின் எங்களால் மதுரை கிளை அலுவலர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த டைப் வேன் என்பது தொடங்கி எந்த நேரத்தில் load செய்ய வேண்டும், எப்பொழுது தஞ்சை நோக்கிசெல்ல வேண்டும் என்பதில் மாற்றங்கள் இருந்துகொண்டே இருந்தன. தங்களது முதலாளியைப் போலவே மேனேஜர் தொடங்கி ட்ரைவர் வரை புன்முருவலுடன் அனைத்தையும் செய்து கொடுத்தனர்.
அடுத்தநாள் மாலை பொருட்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்க்கும் வரை உறுதுணையாக இருந்தனர்.
அடுத்த ஒரு வாரத்தில் மற்றுமொரு 1000 கிலோ அரிசி அனுப்பவேண்டியிருந்தது.
அம்முறை தயக்கமின்றி அவர்களிடம் உதவியைப் பெற்றுக்கொண்டேன்.
மேற்கூறிய நிகழ்வு என் சொந்த அனுபவத்தில் நான் அறிந்தது. ஆனால் அவர் செய்த நற்காரியங்கள் இதுபோல் எண்ணற்றவை.
இந்த நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்வதற்கு ஒரு காரணம் உள்ளது. திரு. கா.நவாஸ் கனி அவர்கள் தி.மு.க / காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக இராமநாதபுரத்திற்கான நாடாளமன்ற உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எல்லா அரசியல்வாதியும் நல்லவராய் சமூக அக்கரையுடையவராய் இருப்பதில்லை. ஆனால் மக்கள் தேவை அறிந்த, நிரூபிக்கப்பட்ட சமூக சேவகர் நிச்சயம் ஒரு நல்ல அரசியல் தலைவராக இருப்பார் என நம்புகிறேன். இராமநாதபுர மாவட்டத்திலேயே பிறந்து வளர்ந்ததால், அவருடைய அர்ப்பணிப்பு அவருடைய பதவி காலத்தில் முழுமையானதாகவே இருக்கும். முகவைக்கு இது ஒரு முத்தான வாய்ப்பு!
எனது ஊர் மக்கள் திரு நவாஸ் கனி அவர்களை வெற்றி அடையச்செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இறைவன் நாடட்டும்.
இவற்றை எல்லாம் அறிந்தும் வெறும் முகநூல் போராளியாக மட்டும் இருக்க இயலவில்லை. அவருக்கு ஆதரவாக களப்பணி ஆற்ற ஆவலுடனுள்ளேன். என்னுடன் கைகோர்க்க விரும்பும் நண்பர்கள், தன்னார்வலர்கள், என்னை facebook messenger மூலமாகவும் , whatsapp'லும் (நம்பர் கீழே) தொடர்பு கொள்ளலாம்.
உண்மையுள்ள,
Shafi.
Ph. +91 6374669689.
Mohammed Shafi பதிவு


No comments: