Followers

Saturday, April 06, 2019

பள்ளிவாசலாக மாற்றப்பட்ட திரையரங்கம்

பள்ளிவாசலாக மாற்றப்பட்ட திரையரங்கம்
****************************************************
மும்பையிலிருந்து அந்த இனிய செய்தி வந்துள்ளது...!
மும்பை நாக்படாவில் 1921-இலிருந்து இயங்கி வந்த அலெக்ஸான்ட்ரா என்கிற திரையரங்கம் இப்போது பள்ளிவாசலாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
எந்தத் திரையரங்கத்தில் ஆபாசத் திரைப்படங்களும் அசிங்கமான காட்சிகளும் வெளியிடப்பட்டு வந்ததோ இன்று அதே இடத்தில் மார்க்கப் போதனை வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்தத் திரையரங்கத்தில் ஒரு காலத்தில் ஆபாசமான ஆங்கிலப் படங்களே வெளியிடப்பட்டு வந்தன. திரையரங்க வளாகத்தில் ஆபாசமான ஓவியங்கள் கண்களை உறுத்துகின்ற விதத்தில் பதாகைகளாய்த் தொங்கவிடப்பட்டிருக்கும். இதனால் இந்தப் பாதை வழியாகச் செல்லாமல் பள்ளிக்கூட பேருந்துகள் சுற்றுப்பாதையில் போக வேண்டிய அவலமும் நிகழ்ந்திருக்கின்றது.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் வணிகம் செய்து வருகின்ற ரஃபீக் தூத்வாலா என்பவர் 2012-இல் 15000 சதுர அடிகளைக் கொண்ட இந்தத் திரையரங்க வளாகத்தை பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கினார். வாங்கிய நாளே இதனை ‘தீனியாத்’ என்கிற தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார்.
செக்குலர் பள்ளிகளில் படிக்கின்ற பள்ளி மாணவர்களுக்கு ‘தீனியாத்’ என்கிற பெயரில் பாட நூல்களைத் தயாரிக்கின்ற பணியில் தீனியாத் ஈடுபட்டிருக்கின்றது. மூன்று ஆண்டுகளாய் இந்த நிறுவனம் இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இப்போது வளாகத்தின் முன் பகுதியில் திருத்தங்கள் செய்து ஐவேளை தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்றன.
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஆரவாரங்கள் வந்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து இப்போது பாங்கொலி கேட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த மாற்றம் மகிழ்ச்சியானது. தித்திப்பானது.
தமிழகத்திலும் இது போன்ற மாற்றங்கள் வராதா என மனம் ஏங்குகின்றதா?
இறைவன் நாடினால் வரும்.


1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவில் என்று அரசயில் வாதிகளிடம் ஊழல் பணம் கொழிக்கத் துவங்கியதோ திரைப்படத்துறைகளில் அந்த கள்ளப்பணம் முதலீடானது.

தமிழ்நாட்டில் ” கலைஞா்” குடும்பம்.

இதனால் பேராசையோடு கடுமையான லாபநோக்கோடு படங்கள் தயாரிக்கப்பட்டது. ஆபாசம் வன்முறை என்று படங்கள் மக்களை கவா்ந்து அவர்களை பலமுறை பார்க்க வைத்து வசுலை அள்ள வேண்டும் என்ற நோககத்தை நிறைவேற்ற தணிக்கை துறை வீரியமற்றதாக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்தியதாக்கம் கடுமையான கலாச்சார சீரழிவு. குடும்பங்கள் சீர் குலைந்தன். குழந்தைகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனா்.ஆனால் நடிகர்கள் தயாரிப்பாளா்கள் காட்டில் பணம் சுனாமியாகக் கொட்டுகின்றது. ஒரு நடிகைக்கு சம்பளம் 1-3 கோடி என்று இருப்பதாக செய்திகள் வருகின்றது.

தமிழ்நாட்டில் திரைத் துறையில் ”கலைஞா்” குடும்பம் இன்று கடுமையாக முறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.அவர்கள் வைத்ததுதான் சட்டம். கலைஞா் குடும்பம் லாபம் பார்க்க நடிகைகள் அணிந்திருக்கும் உடையின் அளவு மிக வேகமாக சுருங்கி வருகின்றது.
காம் உணா்வுகளை ஒழுங்கு படுத்த முடியாது பெண்களும் ஆண்களும் கலாச்சார சீரழிவில் சிக்கி திணறி வருகின்றனா்.

ஒரு திரையரங்கம் மூடப்பட்டதுஎன்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் பள்ளி வாசல் ஒன்று முளைத்துவிட்டதே.

எத்தனை “ஜெகாதிகள்“ உருவாகப் போகின்றார்களோ தெரியவில்லை. மனம் சஞசலப்படுகின்றது. எத்தனை இந்துக்கள் சாகப்போகின்றார்களோ தெரியவில்லை.

ஜெய்-சி-முஹம்மது இயக்கத்திற்கு ஆட்கள் அதிகம் சேர வாய்ப்பு ஏற்படக் கூடாது.