Followers

Wednesday, July 17, 2019

மீனாட்சிபுரம் - மன மாற்றம் ஓர் கள ஆய்வு

மீனாட்சிபுரம் - மன மாற்றம் ஓர் கள ஆய்வு

இதில் நான் வியந்த ஒரு விஷயம்... ஃபாத்திமா பீவி என்ற 80 வயது பாட்டி நபிகள் நாயகத்தின் தியாகத்தை விவரிக்கிறார். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருந்தவர்கள் எப்படி அன்பு கொள்வார்களோ அந்த அளவு அன்பை நபிகள் நாயகத்தின் மீது பொழிகிறார்.

பல அன்பர்கள் தங்களை புதிய முஸ்லிம்கள் என்று சொல்ல வேண்டாம் என்கின்றனர். ஏனெனில் அவர்கள் மதம் மாறி 40 வருடங்கள் ஆகி அவர்களின் குழந்தைகளுக்கும் நல்ல இடங்களில் திருமணம் முடிக்கப்பட்டுள்ளது. பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள செங்கோட்டை முஸ்லிம்களோடு திருமண பந்தங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தங்களுக்கு எங்கு சென்றாலும் சக மனிதர்களால் மரியாதை தரப்படுகிறது. முன்பு போல் எங்களை தீண்டத்தகாதவர்களாக பார்ப்பதில்லை. இஸ்லாமால் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் இது என்கின்றனர்.

மற்ற ஊர்களில் உள்ள முஸ்லிம்கள் அங்கு அடிக்கடி சென்று அவர்களோடு அதிக பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். திருமண பந்தங்களை ஏற்படுத்த வேண்டும். நமது ஊர்களுக்கு விருந்தாளிகளாக அழைக்க வேண்டும். அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு இன்னும் அதிகமதிகம் உதவிகள் புரிய வேண்டும்.

ஆயிரம் பெரியார்கள், ஆயிரம் அம்பேத்கார்களால் செய்ய முடியாத மாபெரும் புரட்சி இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் ஒரு நொடியில் நிகழ்ந்து விடுகிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே!


No comments: