'நான் சவுதி அரேபியா ரியாத்திலிருந்து பேசுகிறேன். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். நேற்று இவருடைய வாடகை காரில் நானும் எனது மகனும் பயணித்தோம். அவசரத்தில் எனது கைப் பையை வாடகை வண்டியிலேயே விட்டு விட்டேன். அதில் எனது பாஸ்போர்ட் எனது மகனின் பாஸ்போர்ட் அமெரிக்க டாலர்கள், ரியால்கள் என்று அந்த கைப் பையில் இருந்தது. முக்கிய ஆவணங்கள் பணம் தொலைந்ததால் மன உளைச்சலில் இருந்தேன். ஆச்சரியமாக இன்று இந்த பாகிஸ்தானி டிரைவர் அனைத்தையும் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பித்தார். முஸ்லிம்கள், பாகிஸ்தானிகள் என்றால் பலர் வெறுப்பதை பார்த்திருக்கிறேன். அது தவறு என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.'
1 comment:
ஜால்ரா போடுவதில் நடக்கும் முட்டாள்தனங்கள் இந்த பதிவில் தெளிவாக உள்ளது.
ஒரு பாக்கிஸ்தானி தவற விட்ட பொருளை பணத்தை நோ்மையுடன் ஒப்படைத்தான்.இது போன்ற சம்பவங்கள் பல உலகமெங்கும் நடைபெற்று வருகின்றது. இந்த நோ்மைக்கு பொறுப்பு அந்த மனிதனின் ஆளுமைப் பண்பு. அதற்காக அவனை நாம் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.அவனது பிறப்பு அவனது மதம் அவனது நாடு தேசீயம் அதில்சம்பந்தப்படவில்லை. காரணம் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானியா்கள் அனைவரும் யோக்கியர்கள் அல்ல.
இந்நிலையில் கீழ்கண்ட கருத்து ஜால்ரா அடிக்கும் மனப்பான்மையைக் காட்டுகிறது.
அந்த முஸ்லிம்கள், பாகிஸ்தானிகள் என்றால் பலர் வெறுப்பதை பார்த்திருக்கிறேன். அது தவறு என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.'
இந்த அம்மணி யாரையோ காக்கா காக்கா பிடிக்க இந்த பதிவை போட்டுள்ளாா் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
Post a Comment