உறவினர்களை நண்பர்களை அரவணைத்து செல்வோம்.....
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்டார். அப்போது மக்கள், “இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்கு ஏதேனும் தேவை இருக்கலாம்” என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு (அந்த மனிதரை நோக்கி), “நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறிவிட்டு, “உமது வாகனத்தை (உமது வீடு நோக்கி) செலுத்துவீராக” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் :அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)
நூல் : புகாரீ 5983
----------------------------------------------
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரீ 6138
----------------------------------------
இணைவைப்பாளராக இருந்தாலும் உறவைப் பேண வேண்டும்
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள்.
நூல் : புகாரீ 5979
1 comment:
காபீர்கள் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு இந்துக்களுக்கு பொருந்தாது
என்று கருதும் ஒரு முஸ்லீமை நான் இன்னும் சந்திக்கவில்லை.சந்திக்க இயலாது என்று நம்புகின்றேன். காபீர்கள் என்றால் இறைவிசுவாசம் அற்றவர் அல்லாவின் மற்றும் தூதரின் எதிரி என்று ஆயிரம் விதமாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. காபீர்களை பிடறியில் ஓங்கி வெட்டுங்கள் எனறு கூட அரேபிய காட்டுமிராண்டிகள் எழுதி வைத்ததை இன்றும் இந்திய அரேபிய அடிமைகள் படித்து பின்பற்றி வருகின்றார்கள்.
காபீர்களைக் கொல்லுங்கள் என்பது முஹம்மதுவின் கட்டளை. சிலைவணஙகியான தாயாரின உறவை பேணிக் கொள்ளங்கள் என்று சொன்ன முஹம்மது இசுலாத்தை எற்றுக் கொண்ட பெண்களை தங்களின் கணவன் மார்களை விவாகரத்து செய்யச் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஏன் இந்த லம்பாடித்தனம்.
அரேபிய குப்பையை கிண்டினால் வருவது மயிா்தான்.
Post a Comment