Followers

Monday, July 08, 2019

'ஹதியா ஹோமியோபதி கிளினிக்'

முன்னால் அகிலா அசோகன் தற்போது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று ஹதியா ஸஃபீனாக மாறியது நாம் அறிந்ததே. பல வழக்குகளையும் சந்தித்து இன்று மருத்துவராகி தனது பெயரில் மலப்புரத்தில் ஒரு மருத்துவ மனையையும் தொடங்கியுள்ளார்.
'ஹதியா ஹோமியோபதி கிளினிக்' என்ற பெயரில் சென்ற வெள்ளிக் கிழமை தனது மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார்.
இறைவன் இவரது பயணத்தை வெற்றிகரமாக்கி வைப்பானாக! ஈருலக வாழ்விலும் அமைதியையும் கண்ணியத்தையும் தந்தருள்வானாக!


7 comments:

Dr.Anburaj said...

இசுலாம் ஒரு இனிய மார்க்கம்.
ஆனால் அரேபியாவில் தோற்றுப் போன இயக்கம்.
அரேபிய நாடான மு்ஸ்லீம் நாடான இசுலாமிய நாடான எமனில் சவுதி அரேபியாவின் விமானம் குண்டு வீசுகின்றது. அரேபிய இசுலாமிய சகோதரத்துவம் படும் பாட்டைப் பாருங்கள். ஏமனில் அமைதியை ஏற்படுத்த இயலாத இயக்கம் இசுலாம் என்பது சரிதானே.

கண்முன்னே உயிரிழந்த 85,000 குழந்தைகள்; பரிதவித்த பெற்றோர்கள்! - பஞ்சத்தின் பிடியில் ஏமன்.`ஏமன்’ என்னும் வார்த்தையை வாசிக்கும்போதும் கேட்கும்போதும் உடைந்த கட்டடங்களும், பசியில் வாடிப்போயிருக்கும் குழந்தைகளின் முகங்களும்தான் கண் முன்னே வந்து செல்கின்றன.

இரண்டு வாரங்கள் முன்பு, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக மருத்துவ முகாமில் படுத்துக்கிடந்த அமல் ஹுசைன் என்னும் குழந்தையின் புகைப்படத்தை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. புகைப்படம் வெளியாகி ஓரிரு தினங்களில் அமல் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துவிட்டாள்.

Credits : The Newyork Times

அமல் புகைப்படம் வைரலாகியதைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களும் அமலின் மரணத்தையும் ஏமனில் நடந்துவரும் உள்நாட்டுப் போர் குறித்தும் செய்திகள் வெளியிட்டன. ஆனால், அமல் போன்று 85,000 குழந்தைகள் ஏமன் மண்ணில் புதையுண்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா. ஆம், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏமனில் 85,000 குழந்தைகள் பசியின் கொடுமையால் உயிரிழந்திருக்கின்றன.

ஏமன் என்னும் தென்மேற்கு ஆசிய நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையே 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியது. ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இரான் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. இதனிடையே சவுதி கூட்டுப்படைக்கு அமெரிக்காவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறது. சவுதி கூட்டுப்படை குறிவைப்பது கிளர்ச்சியாளர்களுக்குத்தான் என்றாலும் பலியாவது என்னவோ அப்பாவி பொதுமக்கள்தான்.

அதிர்ச்சி ரிப்போர்ட்..

ஏமனில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உதவிக்குழுக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன. அப்படி இருந்தும் ஒவ்வொரு மாதமும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நலக் குறைவால் உயிரிழக்கிறார்களாம்.

`Save the Children' என்னும் சர்வதேச அமைப்பு சமீபத்தில் ஏமன் குழந்தைகளின் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஏப்ரல் 2015-ல் இருந்து அக்டோபர் 2018-ம் ஆண்டு வரையில் 84,701 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை Save the Children அமைப்பு ஐ.நா தரவுகளை அடிப்படையாக வைத்து தயார் செய்துள்ளது.




Save the Children அமைப்பின் ஏமன் இயக்குநர் தாமர் கிரோலஸ் வெளியிட்ட அந்த அறிக்கையில், `ஏமனில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து தற்போதுவரை 84,701 குழந்தைகள் உணவின்றி உயிரிழந்துள்ளனர் என்று தரவுகள் சொல்கின்றன. இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் 5 வயதுக்கூட நிரம்பாத பச்சிளம் குழந்தைகள். இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறந்து போன அந்தக் குழந்தைகளின் உடல் உறுப்புகள் போதுமான உணவு கிடைக்காத காரணத்தால் செயலிழந்து போனதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது. தங்கள் கண் முன்னே குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்க முடியாமல் பெற்றோர்கள் பரிதவிக்கின்றனர். அந்தக் குழந்தைகள் அழுவதற்குக்கூட தெம்பில்லாமல் வெறித்துப் பார்க்கும் காட்சியைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவில்லாமல் போனதன் பின்னணி..

`உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும்

ஏமனில் 2015-ம் ஆண்டு சவுதி கூட்டுப்படைகள் காலடி எடுத்து வைத்தன.

Dr.Anburaj said...



ஹவுதி கிளர்ச்சிப் படைகள் இருக்கும் இடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. கிளர்ச்சியாளர்களை முடக்கும் பொருட்டு சவுதி படைகள் முதற்கட்டமாகத் துறைமுகங்களை மூடின. ஏமன் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் ஹோடைதா என்னும் மிகப்பெரிய துறைமுகம் வழியாகத்தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், துறைமுகம் மூடப்பட்டதையடுத்து உணவுப் பொருள்களின் இறக்குமதி பெருமளவு சரிந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த ஹோடைதா துறைமுகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர சவுதி கூட்டுப்படைகளும் ஹவுதி கிளர்ச்சிப்படையும் அடித்துக்கொண்டன. அவர்களின் சண்டையால் உணவுப் பொருள்களின் இறக்குமதி முற்றிலும் முடங்கியது. உணவுப் பொருள்கள் தட்டுப்பாட்டால் ஏமன் மக்கள் பஞ்சத்தில் தவிக்கும் நிலை உருவானது. அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. ஏமன் கரன்சியின் மதிப்பும் சரிந்தது. அதன் விளைவாகக் குழந்தைகள் போதுமான உணவு கிடைக்காமல் பசியில் துடித்தன. துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய வயதில் எலும்பும் தோலுமாக மருத்துவ முகாம்களில் படுத்துக்கிடந்தன.

Dr.Anburaj said...

ஏமன் என்னும் தென்மேற்கு ஆசிய நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையே 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியது. ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இரான் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. இதனிடையே சவுதி கூட்டுப்படைக்கு அமெரிக்காவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறது. சவுதி கூட்டுப்படை குறிவைப்பது கிளர்ச்சியாளர்களுக்குத்தான் என்றாலும் பலியாவது என்னவோ பொதுமக்கள்தான்.

Dr.Anburaj said...

சவுதி - அமெரிக்கா இடையே இரண்டு காரணங்களால் சின்ன விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி படுகொலை விவகாரத்தில் சவுதி முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறிவருகிறது. ஜமால் கொலையில் சவுதி அரசின் தலையீடு இருக்கிறது என்று தெரிந்தால் பயங்கர விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது முதல் காரணம்.

இரண்டாவது காரணம் சற்று விரிவாக..

ஏமன் நாட்டின் சாடா மாகாணத்தில் உள்ள அல் ஃபாலா பள்ளியில் அக்டோபர் மாத தொடக்கத்திலேயே வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், வழக்கமான உற்சாகம் அங்கு இல்லை. பள்ளியின் வராண்டாக்களில் மாணவர்களின் சிரிப்பொலிகள் கேட்கவில்லை. பள்ளி வளாகம் முழுவதிலும் ஒருவித அமைதி கவிந்துள்ளது. சில மாணவர்களின் புத்தகப் பையில் ரத்தக் கறை படிந்துள்ளது. சில மாதங்கள் முன் நடந்த ஏவுகணைத் தாக்குதலின் சுவடுகள் அவை. (Source : Aljazeera)

ஏமன் என்னும் தென்மேற்கு ஆசிய நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையே 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியது. ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இரான் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. இதனிடையே சவுதி கூட்டுப்படைக்கு அமெரிக்காவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறது. சவுதி கூட்டுப்படை குறிவைப்பது கிளர்ச்சியாளர்களுக்குத்தான் என்றாலும் பலியாவது என்னவோ பொதுமக்கள்தான்.

அன்றும் அப்படிதான்..

சாடா மாகாணம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதி. அன்று (ஆகஸ்ட் 9) அல் ஃபாலா பள்ளி வாகனம், வகுப்புகள் முடிந்ததும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு தயான் மார்க்கெட் அருகில் சென்று கொண்டிருந்தது. வாகனத்தின் ஓட்டுநர் காய்கறி வாங்குவதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, மாணவர்களை அமைதிகாக்கும்படி கூறிவிட்டு இறங்கிச் சென்றார். நடக்கப்போகும் விபரீதத்தை அவர் அறிந்திருக்கவில்லை. பள்ளி வாகனத்தினுள் மாணவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு பயங்கர சத்தம். வாகனம் சிதறியது. அதிலிருந்த மாணவர்களும்தான்! சற்று நேரத்தில் அந்த தயான் மார்கெட் பகுதி முழுவதும் மரண ஓலங்கள் ஒலித்தன. ஆங்காங்கே உடல்கள் சிதறிக்கிடந்தன. சவுதி கூட்டுப்படைகள் ஏவிய அந்த ஏவுகணை 40 பள்ளிக் குழந்தைகள் உட்பட 51 பேரின் உயிரைப் பலிகொண்டது.


அல் ஃபாலா பள்ளி மாணவர்கள் இந்தத் துயர சம்பவத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. பள்ளி பொலிவிழந்ததற்கு இந்தக் கோர சம்பவம்தான் காரணம். இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச அமைப்புகள் கண்டனங்களைப் பதிவு செய்தன. முதலில் `இது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சட்டப்படியான தாக்குதல்’ என்று விளக்கம் கொடுத்தது சவுதி தலைமையிலான கூட்டணி. பின்னர் ஐ.நா-வின் தலையீடால், ‘இது குறி தவறி நடந்த விபத்து’ என்று விளக்கம் கொடுத்தது. இந்தச் சம்பவம் சவுதிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மாணவர்களை பலிகொண்ட அந்த குண்டு, அமெரிக்க நிறுவனம் சப்ளை செய்தது என்னும் தகவல் வெளியாகி அமெரிக்காவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

Pi

Dr.Anburaj said...

தாய் தந்தையை புறக்கணிப்பது பண்பாடா ? தாய் தந்தையை புறக்கணித்த இவள் ஒரு நரகவாசி. அடுத்த பிறவியில் .... பிறந்து பாவம் களைவாள்.

vara vijay said...

Will she reach paradise?

vara vijay said...

Homeopathy medicine is it halal or not according to quran and haddith. Because it was invented by a kaffir German. Now uk and france had disowened it but excluding it from there medical insurance scheme.