Followers

Thursday, July 25, 2019

சவுதி அரேபியால் ஹிந்துகளை அல்லாஹ் அக்பர்

வடநாட்டில் ஜெய்ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி முஸ்லீம்களை தாக்குவது போல்.....
சவுதி அரேபியால் ஹிந்துகளை அல்லாஹ் அக்பர் என்று சொல்லச் சொல்லி தாக்குதல் நடக்கிறதா? அப்படி பதிலுக்கு நடந்தால் நிலைமை என்னவாகும்?
இதற்கு எதிராக மோடி ஏன் வாய் திறப்பதில்லை?என்று கேட்கும் சீமான்


7 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம்களைச் சீண்டிப் பார்க்கும் செயலலை கோடியில் ஒன்று கூட என்று சொல்ல முடியாது.
இந்துவான இராமலிங்கத்தை கொன்றதற்கு பதிலடியாக ஊருக்கு 100 முஸ்லீம்களை இந்துக்கள் கொன்றால் என்ன வாகும் என்ற கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள்.இந்துக்களுக்கு அது நடக்காத கதை.
துபாயில் கைது செய்து தேசிய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கையில் சிக்கியுள்ள முஸ்லீம்கள் குறித்து இந்த யோக்கியன் ஏன் வாய் திறக்கவில்லை ?
சவுதிக்கு போகும் இவன் பாக்கிஸ்தானில் இந்துக்கள் படும் வேதனையைப் பற்றி பேசாமல் இருப்பது ஏன் ?

எல்லா அயல் நாட்டவரும்
சவுதியை விட்டு வெளியேறி விட்டால் சவுதி மண்மூடிப் போகும்.

Dr.Anburaj said...

வேள்பாரி – வரலாற்று நெடுங்கதை( நல்ல கனியை தருவது நல்ல மரம்.அதை வெட்டுபவன் காடையன். இந்து சமயம் விளைவித்த ஒரு கனி வேள்பாரி)

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப் போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம் போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காக தன்னையே தந்தவன் வேள்பாரி.

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித் தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையனங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்க காலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றார். மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால் பரம்புமலைப் போரில் மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் நிகழாத வீரச் சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்றுவரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான். வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக் கொடிக்கு தேரைத் தந்தவன் மட்டுமல்ல .. .. .. தனது வீரத்தால் என்றும் ஒளி வீசும் வெற்றிக் கொடியை நாட்டிச் சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்.. .. ..

Dr.Anburaj said...

பரிணாமம் அடையும் இந்து பண்பாடு- சாதீயம் ஒழிய பாடுபட்ட மகான்.
வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை
December 24, 2015
- தி.இரா. மீனா

வேமனா

வேமனா

தெலுங்கு இலக்கியத்தில் வேமனாவின் படைப்புகள் புரட்சிகரமான சிந்தனையின் அடையாளமாக விளங்குகின்றன. ஆந்திர மாநிலத்தில் கொண்டவீடு என்ற இடத்தில் வேமனா பிறந்தார். குமரகிரி வேமா ரெட்டி என்பது இயற்பெயர். இளைய வயதிலேயே தாயை இழந்து, மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாகி அனபைத் தேடி அலைந்தார். தேவதாசியிடம் உறவுகொண்டு, பின்பு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வெற்றி அடையாமல் போனதாக அவர் வாழ்க்கை பற்றிய கதைகள் கூறுகின்றான். இளைய வயதிலேயே யோகத்தில் ஈடுபாடுகொண்டு லம்பிகா சிவயோகியிடம் பயிற்சிபெற்றதாகவும் செய்திகள் உண்டு. இந்தப் பின்னணியில் யோகி வேமனா என்றும் அழைக்கப் படுகிறார்.

ஏறக் குறைய மூன்றாயிரம் பாடல்கள்கொண்ட வேமனாவின் படைப்பு ’வேமனாவின் பத்யங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. பாடல்கள் நான்கு அடிகளைக்கொண்டு உள்ளன. மூன்று வரிகள் அவர் கருத்தையும் இறுதி அடி ‘விஶ்வதாபிராமா வினுரா வேமா’ என்ற முத்திரையோடும் அமைகிறது. எளிமையான மொழியில் எல்லாக் கால கட்டத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக்கொண்டு பத்யங்கள் அமைகின்றன.

சாதிகளுக்கு முதலிடம் தந்து சக மனிதர்களை மனிதர்களே புறக்கணித்த காலகட்டத்தில் இராமானுஜர் ஓர் சீர்திருத்தவாதியாக செயல்பட்டதைப் போலவே வேமனாவும் தன் காலகட்டத்தில் சாதியைத் தீவிரமாக எதிர்த்தவர். அவர் காலம் பதினாறாம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது. சிவனை மட்டும் வழி படும் ஜங்கம் பிரிவைச் சேர்ந்தவர். உழவு குடும்பத் தொழிலாகிறது. சிவன் அவருக்கு பிடித்த கடவுளாக இருந்ததைப் பாடல்கள் காட்டுகின்றன. என்றாலும் கடவுளைக் காட்டி மக்களை வேறுபடுத்தும் தன் கால அவலத்தை அவரால் பொறுக்கமுடியவில்லை.

“மனிதன் நடக்கும் மண் குடிக்கும் தண்ணீர்
எரிக்கும் தீ எல்லாம் ஒன்றே இதில்
சாதியும் குலமும் எங்கிருந்து வந்தன
விஶ்வதாபிராமா வினுரா வேமா”

என்பது பாடல்.

சர்வக்ஞர்

இதே கருத்தை கன்னட ஞானியான சர்வஞ்ஞரும் வலியுறுத்துகிறார். எந்தச் செயலிலும் வெற்றி அடைவதற்கு மனிதன் தொடர்ந்து செய்யும் பயிற்சிதான் காரணமாக முடியும் என்று நவீன உளவியல் இன்று சொல்வதை வேமனா அன்றே காட்டியிருக்கிறார். சர்வஞரும் அதையே சொல்கிறார்.

‘பாடப் பாட ராகம் இனிமையாகும்
தின்னத் தின்ன வேம்பு சுவைக்கும்
பயிற்சிதான் செயலை முடிக்கும்
விஶ்வதாபிராமா வினுரா வேமா

என்பது அவர் கவிதை.

Dr.Anburaj said...

2
துன்பம் தந்தவரை அழித்தே தீருவேன் என்ற வெறுப்பு மனமோடு வாழ்வது சகஜம்தான். ஆனால் அதிலிருந்து விடுபடும்போதுதான் தான் மனிதன், தன் பிறவிக்கான அடையாளத்தைப் பெறுகிறான். குற்றம் செய்தவனை மன்னித்து தண்டிக்காமல் சுதந்திரமாக விடுவதே மனிதத் தன்மை என்பது அவர் கருத்தாகிறது. இது வள்ளுவரின் ’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்பதோடு ஒன்றுகிறது.

இலக்கியம் என்பது எவராலும் அணுகமுடிவதாக இருக்கும் போதுதான் அது சமூகப் பயன்பாடு உடையதாகிறது. பாரதி உறுதிபடுத்தியதைப்போல எளிமைதான் நல்ல கவிதையின் அடையாளம்.

அன்றே இதைச் சில பெரியபுராணப் பாடல்களும், நாலாயிர திவ்யப்பிரபந்தப் பாடல்களும், ஒன்பதாம் நூற்றாண்டைய கன்னடமொழி வசனங்களும், தெலுங்குமொழி பத்யங்களும் காட்டி உறுதிசெய்துள்ளன. நல்ல கவிதை என்பதும், கவிஞன் என்பவன் என்று உணரப்படுவதும் அவற்றில் இருந்து வெளியாகும் உவமைகள் மூலம்தான். சான்றாகச் சாதாரண மனிதனுக்குத் தெரிந்த உப்பு, கற்பூரம், பசும்பால் இவையெல்லாம்தான் வேமனாவின் உவமைப் பொருள்களாகின்றன. உப்பும், சூடமும் பார்வைக்கு ஒன்றுபோலத் தெரிந்தாலும் கூர்மையான கவனிப்பு அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை அறியச்செய்வதுபோல, தனித்த பார்வையால் இரக்கம் உடையவர்களை இனம்காணமுடியும் என்கிறார். பாத்திரம் நிறைய இருந்தாலும் கழுதைப்பாலால் பயன் இல்லை. சிறு கிண்ணத்தில் உள்ள பசும்பாலைப்போல சிறிதளவு உணவு என்றாலும் மரியாதையோடு தரப்படும் போதுதான் சிறப்பு கிடைக்கும் என்கிறார்.

முக்காலமும் உணர்ந்தவர்களாகவே சமூக சீர்திருத்தவாதிகள் இருந்திருக்கின்றனர். முதியோர் இல்லங்கள் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில், வேமனா அன்று சொன்ன கருத்து பொருத்தம் உடையதாகிறது. ”தாய் தந்தையிடம் மதிப்பும், நன்றியும் இல்லாத மனிதன் எதற்காகப் பிறக்கிறான்,” என்ற வினாவை முன் வைக்கிறார்.

சில வினாக்களுக்கு விடை ஒவ்வொருவரின் மனசாட்சியுமாகத்தான் இருக்கமுடியும். இந்த வினாவின் நோக்கமும் படிப்பதோடு நின்றுவிடாமல் தன் பிறப்பின் காரணத்தை ஒவ்வொருவரும் அறியவேண்டும் என்பதுதான். பெற்றோர்களிடம்கூட சரியான உணர்வுகளை வெளிப்படுத்தாதவன் ஆறறிவு அற்றவன் என்பது அவர் பார்வையாகிறது.

Dr.Anburaj said...

தோற்றத்தை வைத்து மனிதனை எடைபோடுவது சரியான தீர்வாவதில்லை. ஆனால் உலகம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. அந்த நிலையை ஓர் எளிய உவமைமூலம் புரியவைக்கிறார். ’உலகம் அத்திப்பழம் போன்றது. அத்தியின் வெளித்தோற்றம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது. அதை எப்படி வெட்டினாலும் உள்ளே புழுக்கள் பெருகிக் கிடப்பதைப்போல, புறம் அழகாக இருந்தாலும் அகம் அழுக்கு நிறைந்து கிடப்பதாக உள்ளது என்கிறார். இந்த அத்திப்பழ உவமை கன்னட ஞானி பசவேசராலும் சொல்லப் படுகிறது.

“எனது மனமோ அத்திப் பழம், பாரையா
ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை”

என்ற வசனம், வெளிப்புறத்தில் மிக அழகான தோற்றம் கொண்ட அத்திப்பழம்போன்ற வெளித்தோற்ற அழகிருந்தாலும். பழத்தின் உள்ளே பெருகிக்கிடக்கும் புழுக்களைப் போன்றது மனதின் கசடுகள் என்ற அவரது உவமையை இங்கு ஒப்பிடலாம்

வழிபாட்டைவிட அதன் நோக்கம்தான் எப்போதும் முக்கியமானதாகிறது. தன்னுடைய வாக்கைக் காப்பாற்றமுடியாமல் போகும்போது பக்குவமான மனித வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை.

தேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர முடியாததைப்போல மனிதனின் தீயகுணத்தை அறிந்து, அதைத் தகுந்த சமயத்தில் நீக்கி விட்டால், அவனால் துன்பம் யாருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்படாது என்பது வேமானாவின் கருத்தாகும். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கருத்துக்களை ஆழமாகவும் உறுதியாகவும் எவ்விதச் சார்பற்றும் சொல்வதால், “வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை” என்று தெலுங்கு இலக்கிய உலகம் அவரை அடைமொழியோடு போற்றுகிறது. அதை உறுதியாக்கும் வகையில் அவர் கவிதைகளும் கருத்துகளும் வாழ்கின்றன. எல்லாக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துக்கள்கொண்ட ஓரிரு கவிதைகள் தரப்பட்டுள்ளன.

“இடமும் நேரமும் நம்முடையதாக இல்லாதபோது
வெற்றி நமக்கில்லை, இதனால் நாம் சிறியவர்களில்லை
கண்ணாடியில் மலை மிகச்சிறியது தானே
விஶ்வதாபிராமா வினுரா வேமா”

“தளர்வு நேரத்தில் உறவுத்தன்மையைப் பார்க்கவேண்டும்
பயமான சமயத்தில் படைபணியைப் பார்க்கவேண்டும்
வறுமைப்பொழுதில் மனைவியினியல்பைப் பார்க்கவேண்டும்
விஶ்வதாபிராமா வினுரா வேமா”

Dr.Anburaj said...

விஶ்வதாபிராமா வினுரா வேமா”

மக்கள் கவி வேமனாவிற்கு தன்னம்பிக்கையே பலம். ஒளிவுமறைவின்மை, அச்சமின்மை, அனுபவமே படைப்பு என்று ஒரு கலவையாக வாழ்ந்தவர் அவர்.

“மழையில் நனையாதவர் எவருமில்லை
வேமனாவின் கவிதையை அறியாதவருமில்லை”

என்ற பாராட்டு அவருக்கு உரியதாகிறது.

Dr.Anburaj said...


வேமனாவின் கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி.

முஸ்லீம்கள் படித்து இந்துமதத்தின் பால் மரியாதை கொள்வார்களா ? அல்லாவுக்குதான் வெளிச்சம்.