பாராளுமன்றத்தில் டெல்லி கலவரம் தொடர்பாக உவைஸி
''19 பள்ளிவாசல்கள் எரிக்கப்படுகிறது. 4 சிலிண்டர்கள் உள்ளே வைத்து எரியூட்டப்படுகிறது. சட்டம் தன் கடமையை செய்யும் என்று பொறுமை காக்கிறோம்..
பள்ளி வாசலின மேல் காவிக் கொடி ஏற்றப்படுகிறது. அங்கும் நாங்கள் பொறுமை காக்கிறோம்.
உயிருக்கு போராடும் ஒரு இஸ்லாமியரிடம் காவல்துறை 'ஜனகனமன பாடி உன் தேசப் பற்றை நிரூபி' என்கிறது. அவனது உயிரும் பிரிகிறது. இங்கும் நாங்கள் பொறுமை காக்கிறோம்.
85 வயது மூதாட்டி காவி குண்டர்களால் தீயிட்டு எரித்து கொல்லப்படுகிறார்.
60 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்களின் தந்தையை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
நமது பிரதம மந்திரி மிகுந்த இறை பக்தி உடையவர் என்று சொல்லிக் கொள்கிறார். உண்மையான இறை பக்தி கொண்ட ஒருவர் டெல்லி கலவரத்தைப் பார்த்து நிலை குலைந்து போயிருப்பார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆறுதலான வார்த்தைகளாவது வந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் வந்ததா?
இந்துக்களே! நமது நாட்டின் இறையாண்மையை காக்க நீங்களும் களத்துக்கு வாருங்கள். 60 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இறந்துள்ளனர். 11000 முஸ்லிம்கள் மேல் காவல் துறை வழக்கு பதிந்துள்ளது. அவர்களை விடுவிக்க லஞ்சம் கேட்கிறது. இதுதான் நாட்டின் இறையாண்மையா?
இப்படி எல்லாம் கொடுமைபடுத்தினால் நாங்கள் தீவிரவாதத்தை கையில் எடுப்போம் என்று நினைக்கிறீர்கள். நாங்கள் அவ்வாறு செய்யப் போவதில்லை. இங்கு இன்னும் முஸ்லிம்களின் பிணங்கள் எத்தனை விழுந்தாலும் அமைதியான போராட்டங்களின் மூலமே இந்த நாட்டை காப்பாற்றுவோம். ஆர்எஸ்எஸ் சிந்தாந்தம் இந்த நாட்டில் ஊடுறுவாமல் இருக்க இன்னும் எத்தனை தியாகங்களையும் செய்ய தயாராகி விட்டோம்.
'போலீஸ் ஹமாரா சாத் ஹே... ஏ அந்தர் கி பாத் ஹே' இதற்கு அர்த்தம் என்ன? இதுதான் நீங்கள் ஆட்சி செய்யும் லட்சணமா?''
மொழிபெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
1 comment:
ஒரு மதபெிடித்த அரேபிய கொளுப்பு அகம்பாவம் இரத்தத்தில் ஊறிய இவன்.
இவனை பதிவு செய்ததே அசிங்கமான செயல். மொத்த சேதங்களை பட்டியலிட்டிருக்க வேண்டும்.
தலைமைக்காவலா் கொல்லப்பட்டுள்ளாா். அதை ஏன் பதிவிடவில்லை.
ஒரு காவல் அதிகாரியின் பிணத்தின் மீது உடலில் 400 கத்தி குத்து காயங்கள் -அதை ஏன் பதிவிடவில்லை.
தாஹீா் அகமதது வீட்டில் கிடைத்ததை பறறி எழுதவில்லையே ஏன் ?
முஸ்லீம்களுக்கு மட்டும்தான் சேதங்கள் ஏற்பட்டதா ?
Post a Comment