வணக்கம் (சட்டம் தன் கடமையை செய்யும்)
என் கல்லூரி நாட்களில் நடந்த நிகழ்வு. என் தேசத்தில் மேல் படிப்பு படிக்க முடியாத சூழ்நிலையில் நான் டெல்லி பல்கலை கழகத்தில் படிக்க வந்த போது கல்லுரியில் என்னை ஒரு ஹிந்தி மாணவன் நண்பர்களோடு என் கண் விழிகள் வெள்ளையாக இருப்பதை பார்த்து ஹிந்தியில் ஸ்ரீலங்கா பில்லி (இலங்கை பூனை) என்று சொல்லி கிண்டல் செய்து வந்தான். அப்போது எனக்கு ஹிந்தி தெரியாது. என் இஸ்லாமிய தோழி இடம் கேட்ட போது விவரம் சொன்னாள்.
இரண்டு முறை கல்லுரியில் புகார் செய்தும் அவன் மீண்டும் சொல்ல தொடங்கினான். கல்லூரி இடை வேளையில் மீண்டும் சொல்லி சிரித்தான். நான் கல்லூரியில் சேர்ந்த 10 நாளில் என் காலில் போட்டு இருந்த சுவால் நான் கோவத்தில் அவனை அடித்த போது அவன் மூக்கு உடைந்து இரத்தம் ஊத்த அவனை கல்லூரி ப்ரின்ஸ்பால் இடம் தூக்கி சென்று விட்டனர்.
கல்லூரி பிரின்சிபால் என்னை 15 நாள் சஸ்பெண்ட் செய்து மாலை 4மணிக்கு ஹாஸ்டலில் இருந்து அவுட் பாஸ் கொடுத்து விட்டார். கல்லூரி முடித்த உடன் என் தோழி ஷாபியா என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றால். இரவு ஷாபியா தந்தை வந்த உடன் என் தோழி அவள் தந்தை இடம் விவரம் சொன்ன உடன் என்னை மாடிக்கு வர சொன்னார்.
டெல்லி உயர் நீதி மன்றத்தில் மிக பெரும் வழக்கறிஞர் அவர். நடந்த விவரங்களை கேட்டு விட்டு அப்பா, அம்மா இடம் சொல்லி விட்டாயா? என்றார். என் அப்பா, அம்மா நான் 2 வயதாக இருக்கும் போது போரில் இறந்து விட்டார்கள். என் சித்தி வீட்டில் தான் இருக்கிறேன்....... நாளை மாலை விமானத்தில் நான் இலங்கை போகிறேன் என்ற உடன் (Youdont want go to Srilanka) நீ ஷாபியாவோடு ரெஸ்ட் எடு நாளை காலை உன்னை டெல்லி கமிஷ்னர் ஆபீஸ் அழைத்து செல்கிறேன் என்றார்கள்.
மறுநாள் காலை நான், என் தோழி, என் தோழி அம்மா, அப்பா டெல்லி கமிஷ்னர் ஆபீஸ் சென்று நான் ஒரு கம்பளைண்ட், என் தோழி தந்தை ஒரு கம்பளைண்ட் கொடுத்தோம். என் தோழி தந்தை கொடுத்த கம்பளைண்ட் தனது தேசத்தில் படிக்க முடியாத சூழ்நிலை நிலவியதால் இந்திய தேசத்தில் படிக்க வந்த மாணவியை கிண்டல் செய்த மாணவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் இந்த சம்பவம் நடந்தது. காவல் துறை மாணவன் மீதும், கல்லூரி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க தவறினால் நாளை காலை டெல்லி உயர் நீதி மன்றத்தில் இருவர் மீதும் வழக்கு தொடரப்படும். கமிஷ்னர் கல்லூரி ப்ரின்ஸ்பால் இடம் தொலை பேசியில் விவரம் சொல்கிறார் சஸ்பெண்ட் ஆர்டர் கேன்சல் செய்து விடுகிறோம் வாசுகியை நாளை கல்லூரிக்கு வர சொல்லுங்கள் என்றார்.
நான் படித்து முடிக்கும் வரை அந்த நல்ல உள்ளங்களின் அரவணைப்பில் இருந்தேன். கல்லூரி விடுமுறை நாட்களில் என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள் அவுட் பாஸ் வாங்கிக்கொண்டு. எனக்கு தாய், தந்தை இல்லை என்பதை அறிந்த ஷாபியா அம்மா தனது மகளை விட என்மேல் அதிகம் பாசம் கட்டினார்கள். அந்த நல்ல உள்ளங்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது. வருடங்கள் ஓடி விட்டன. அந்த நினைவுகள்................
(அன்புடன் வாசுகி மோகன்)
3 comments:
எனது வாழ்வில் இது போன்று 100க்கணக்கில் உதவிகள் செய்துள்ளேன். மேற்படி நிகழ்வில் உதவி செய்தவா் ஒரு முஸ்லீம் என்பது இதில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.நல்ல சம்பவம்.
Every Religion has produced men and women of most exalted character - Swami Vivekananda.
காபீர்களின் நல்லறங்களை அல்லா அங்கிகரிக்க மாட்டார் என்பவன்தான் கயவன். பொய்யன்.வஞ்சகம்.
தமிழ்நாட்டைச் சோ்ந்த இரண்டு பெண்கள் அகமதாபா் பாரத வங்கியில் அதிகாரிகளாக நியமனம்.
டெல்லி - அகமதாபத் செல்லும் ரயிலில் ஏறிய இருவருக்கும் ரிசா்வ் செய்த பெட்டியிலும் பொது மக்கள் ஏறிக்கொண்டதால் இடம் யில்லை. கண்ணீா் வடிய நின்ற இரண்டு பெண்களை ஒருவா் விசாரித்து பொதுமக்கள் ஏறாத ரிசா்வ் செய்யப்பட்ட பெட்டியில் தனது இடத்தையும் தனது நண்பா் இடததையும் கொடுத்து விட்டாா். பெண்கள் இருவரும் நிம்மதியாக பயணத்தை தொடா்ந்தனா். ஒரு நிலையத்தில் சற்று அதிக நேரம் ரயில் நின்றது. பக்கத்து பெட்டிகளை ஆராயந்த போது பொது பெட்டியில் தரையில் தனக்கு இடம் தந்த இருவரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நெஞ்சம் நிறைய நன்றியுடன் அவர்களை நோக்கி மனதார வாழ்த்தினா்.
அகமதாபா்த் சென்ற போது மீண்டும் அந்த இருவரையும் அவர்கள் பார்க்கவில்லை. காலம் கடந்து விட்டது.வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அந்த பெண்
பாரத பிரதமராக திரு நரேந்திர மோடி அவர்கள் பதவி யேற்ற போது திரு.மோடிஜியை உற்றுக் கவனித்த போது தங்களுக்கு அகமதாபா் ரயிலில் பதிவு செய்த இடத்தை தந்து விட்டு பொது பெட்டியில் தரையில் படுத்து தூங்கி ப் பயணம் செய்தவர் முகம் நினைவுக்கு வந்தது.
ஆம். அன்று அந்த இரு பெண்களுக்கும் பதிவு செய்யப்பட்ட இடத்தை கொடுத்து விட்டு தரையில் படுத்து பயணம் செய்தவர்கள்
01.திரு.தாமோரததாஸ் நரேந்திர மோடி - இந்திய பிரதமா்
02. திரு.சங்கா் சிங் வகேலா - குஜராத் மாநில பா.ஜ.க தலைவராக இருந்தவா்.
Its indian culture. Not Arabic culture
Post a Comment