Followers

Sunday, March 01, 2020

மோடிக்கு எடப்பாடி. டிரம்புக்கு மோடி.

நீங்க உங்க ஏரியால அண்ணாச்சி கடையில தான் பொருள் எல்லாம் வாங்குறீங்க. எத்தனையோ கடைகள் வந்தாலும் தொடர்ந்து அண்ணாச்சி கடைதான். இப்ப அண்ணாச்சிக்கு உங்கள் மேல எவ்ளோ மரியாதையும் அன்பும் இருக்கும்... இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நீங்க அதே மாதிரி அண்னாச்சி கடையில தான் வாங்குறீங்க ஆனா அண்ணாச்சி உங்கள மசுரா கூட மதிக்கல. கூடவே இத வாங்கு அத வாங்குனு உங்களுக்கு உத்தரவு போட்டார்னா என்ன அர்த்தம்... ? அண்ணாச்சிக்கு நீங்க அடிமைனு தானே அர்த்தம்.
நம்ம டிரம்ப் அண்ணாச்சி இப்ப இந்தியா வந்தாரு. இந்தியா வரதுக்கு முன்னாடி இரண்டு லட்சம் பேரை வீதியில் நிறுத்துவார் மோடி என்றார். ( ஏற்கனவே பிஎஸ் என் எல், வங்கி மூடல், தனியார் தொலைதொடர்பு மூடல்னு நாடே வீதியில் தான் நிக்குது ) மோடியும் தன் அடிமைதனத்தை காட்ட 23 கிமீ தூரத்திற்கு ஆட்களை நிப்பாட்டினார். ( ஒவ்வொருவருக்கும் தலைக்கு 500 + போக்குவரத்து உணவு :ஆதாரம் டைம்ஸ் நவ் ). இது மோடி கூப்டு டிரம்ப் வரல. மோடி ஒவ்வொரு வருசமும் குடியரசு தினவிழாவிற்கு அழைக்க அங்கே இருந்து பதில் இல்லை. தீடிரென இந்த தேதியில் வருகிறோம் என அவர்கள் சொல்ல அடிமை அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கு முன்னரும் பல அமெரிகக் அதிபர்கள் வந்து சென்று இருக்கிறார்கள். அப்பொதல்லாம் தொழில் வளர்ச்சி இரு பக்கமும் உண்டு.
“ வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது “ என சொல்லிய பிறகு தான் அவர் இந்திய கிளம்பினார். இந்த அந்தஸ்து நரசிம்மராவ் ராஜீவ் மன்மோகன் என பலர் பெற்றது. அதை மோடி இழந்தார். உடனே மோடி உறுதியானவர் என நினைக்காதீர்கள். அமெரிக்காவின் பதப்படுத்தடுத்தப்பட்ட ( ஆண்டுகள் கணக்கில் ) சிக்கன் மட்டனை இந்தியா எப்போதும் பெற்றுக்கொள்ளும் என்பதே மோடி முதலவாதாக எழுதிய அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தம் .இது போக எங்கே பெட்ரோல் வாங்க வேண்டுமென்பதை அமெரிக்கவே இந்தியாவை வழிநடத்துகிறது. இதற்கு மன்மோகன் ஒப்புக்கொள்ள மறுத்தார். ஆனால் மோடி அதை செம்மையாக செய்தார்.
இப்போது போட்ட ஒப்பந்த படி 300 கோடி டாலருக்கு அமெரிக்க நமக்கு இராணுவ ஹெலிகாப்டர் தரபோகிறது. ஏற்கனவே நாமே தயாரிப்போம் என ஒப்பந்தம் போட்ட ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 300 மடங்கு அதிகம் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து இராணுவ விமானம் வாங்குகிறோம்இதில் கூடுதலாக இப்போது அமெரிக்க ஹெலிகாப்டர். . இந்த லட்சணத்தில் மேக் இன் இந்தியா இருக்கிறது. அடுத்து இந்தியாவுக்கு இனி அதிகளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ஐஒசி - எக்சான் மொபில் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ( பெட்ரோல் அரபு தேசங்களில் தானே கிடைக்கிறது நாம் ஏன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என கேட்டால் நீங்கள் தேஷ்துஷ்மன்) இப்படி இந்தியாவை அமெரிக்காவிற்கு விற்று இருக்கிறார்.இதுபோக சிறப்பு சலுகையாக டிரெம்பின் நிறுவனத்திற்கு ஜஸ்ட் லக்தட்டாக 20 ஆயிரம் கோடி முதலீடுக்கு வழிவகை செய்துள்ளார்கள். இது அன் அபிசியல்.
சரி நூறு கோடி செலவழித்து நாம் வரவேற்ற டிரெம்ப் நமக்கு என்ன கொடுத்தார். சுச்சின் டெண்டுல்கர் என சொன்னார். மோடியை கட்டிப்பிடித்தார். இந்தியாவின் வர்த்தக அந்தஸ்து பற்றி கேட்டதற்கு “அது குறித்து இருநாடுகளும் பேசி முடிவெடுக்கும்” என்றார். அமெரிக்காவின் பெட்ரோல் ஒப்பந்தம், இராணுவ விமானம் எல்லாம் மோடி யாருடன் பேசினார் ? அது சரி அடிமைகள் யாரிடம் பேசவேண்டும். மோடிக்கு எடப்பாடி. டிரம்புக்கு மோடி.


1 comment:

Dr.Anburaj said...


இது போன்ற விசயங்களில் கருத்து தெரிவிக்க எனக்கு தகவல்கள் தெரியாது.