NPR என்கிற தேசிய குடி மக்கள் பதிவேடு கணக்கெடுப்பு எல்லோருக்கும் ஆபத்தானது என்பதை நாம் அறிவோம்.
ஆனால், அது பெண் இனத்தை இவ்வளவு அசிங்கப்படுத்தக் கூடிய ஒரு சட்டம் என்பதை மஜ்லிஸ் கட்சியின் தலைவர் சகோ அசத்துதீன் உவைசியின் இளைய சகோதரரும் மஜ்லிஸ் கட்சியின் தெலுங்கான சட்ட மன்ற உறுப்பினர்களின் தலைவருமான அக்பருதீன் உவைசி தெலுங்கான சட்ட மன்றத்தில் ஆற்றியுள்ள உரைக்குப் பின்னர் தான் அறிய முடிகிறது.
அதாவது, ஒரு பெண்ணிடத்தில் அவருடைய முதல் குழந்தையின் வயது தெரியாவிட்டால் அப்பெண்ணிடத்தில் அதன் விபரம் அறிய கேட்கப்படும் கேள்விகளாக NPR படிவத்தில் வைக்கப்பட்டுள்ள கேள்விகள் என்னவெனில்
அப்பெண்ணின் திருமணமான வயது அல்லது consummation of marriage அதாவது அவர் திருமணமாகி உடலுறவு நிறைவு பெற்ற காலம் எது? எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார்.
அது எந்தப் பெண்ணாக இருக்கட்டும் அவளிடத்தில் இப்படி ஒரு கேள்வியை வைக்க இயலுமா?! இது இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவான தேசம். இந்த நாட்டின் பெண்களின் மாண்பை குலைக்கும் விடயத்தை தான் ஒரு சரத்தாக பாசிச பிஜேபி அரசு NPR படிவத்தில் வைத்துள்ளது.
இதனை சபையில் படிப்பதற்கே எனக்கு அவமானமாக உள்ளது என்கிறார். எனது தாய், எனது சகோதரி, எனது மனைவியில் மாண்பை இந்திய சகோதரிகளின் மாண்பை குலைக்கும் இந்த சட்டத்தை இயற்றியது யார்?
இதைக் குப்பையில் தூக்கி வீச வேண்டியது இந்தியப் பெண்களின் கடமையாக உள்ளது.
4 comments:
Suvi dont act you and you people are concerned about Indian culture. You are more concerned about Arabic culture.
இந்த கேள்விகள் இடம் பெற்றுள்ள என்பதை மத்திய அரசு அதிகாரப் புா்வமாக வெளியிட்டுள்ள pdf N கோப்பை வெளியிடலாமே.
நான் நிரூபணம் கேடகிறேன்.அளிக்க வேண்டும்.
//Suvi dont act you and you people are concerned about Indian culture. You are more concerned about Arabic culture.//
இது எனது மண். எந்த வந்தேறிகளுக்கும் அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனது நாட்டு கலாசாரத்தை அழித்தது ஆரியம். கூடிய விரைவில் ஆதி கால இந்திய பழக்க வழக்கங்கள் மீட்டெடுக்கப்படும். கொஞ்சம் பொறுத்திருக்கவும்.
//இந்த கேள்விகள் இடம் பெற்றுள்ள என்பதை மத்திய அரசு அதிகாரப் புா்வமாக வெளியிட்டுள்ள pdf N கோப்பை வெளியிடலாமே.//
வீடியோவில் அந்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். நன்றாக பார்க்கவும்.
Post a Comment