இந்து பெண்மணி அம்ரிதா அவர்களின் வாக்கு மூலம்!
'பல நாட்களாக ஊரடங்கால் ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. எவரிடமும் பணம் இல்லை. எனது வீட்டில் இருந்த உணவு பொருட்களும் தீர்ந்து விட்டது. நாளை சாப்பாட்டுக்கு வீட்டில் உள்ள அனைவருக்கும் எதை கொடுப்பது என்று கவலையோடு இருந்தேன். மன உளைச்சலால் எனது உடல் நிலையும் பாதித்தது.'
'மாலை நேரம் அருகில் உள்ள பள்ளி வாசலில் இருந்து மூன்று இஸ்லாமிய சகோதரர்கள் வந்தனர். இதோ... இங்குள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் அன்பளிப்பாக கொடுத்து விட்டு... 'வேறு ஏதும் தேவையிருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் சகோதரி' என்று அன்பொழுக கேட்டுக் கொண்டனர். எனது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இந்து, முஸ்லிம் வேற்றுமை எங்கிருந்து வந்தது? மனதார சொல்கிறேன். நம்மை படைத்த அல்லாஹ் எவரையும் பட்டினியோடு உறங்கச் செய்வதில்லை. ஏதாவது ஒரு வகையில் உதவிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
-------------------------------------------------
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வின் மீது எப்படி நம்பிக்கை வைக்க வேண்டுமோ அப்படி நீங்கள் நம்பிக்கை வைத்தால், அவன் பறவைகளுக்கு எப்படி உணவு வழங்குகிறானோ அப்படி உங்களுக்கும் வழங்குவான். அவை பசியோடு காலையில் வீட்டை விட்டு செல்கின்றன, மாலையில் வீடு திரும்பும்போது வயிறு நிறைந்து திரும்புகின்றன..
‘[திர்மிதி]
1 comment:
நைஜிரியா சோமாலியா மாலி போன்ற நாடுகள் அரேபிய மத காட்டுமிராண்டிகளால் பாழ்பட்டு கிடக்கின்றது. அங்கே வறுமை தலைவிரித்து ஆடுகின்றது.
Post a Comment