ஆந்திர பிரதேசம் கோதாவரி மாவட்டத்தில் இரு தலித் இளைஞர்களை 12 மணி நேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். சாவர்ணா சாதியை சேர்ந்த இளைஞர்களே தலித்களை இவ்வாறு அடித்து துன்புறுத்தியது.
தலித்களை எப்படி கீழ் சாதியாக பிற்படுத்தப்பட்ட சாதிகள் பார்க்கிறதோ அதே பார்வையில்தான் பார்பனர்கள் ஒட்டு மொத்த பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் பார்க்கிறார்கள். இதில் நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்த்து எதை சாதிக்கப் போகிறார்கள்? பார்பனர் பார்வையில் ஒட்டு மொத்த இந்துக்களும் சூத்திரர்கள்தானே!
பிஜேபி அதிகாரத்தில் வந்ததிலிருந்து தலித்கள் கொடுமைபடுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்து மதத்தை காக்க வந்துள்ளதாக பாஜக போடுவது பகல் வேஷம் என்பதை என்று இந்துக்கள் உணர்கிறார்களோ அன்று தான் இந்தியா பழைய பெருமையை பெறும்.
1 comment:
தவறு. பகவத்கீதை என்னும் மா பெரும் ஞான நூல் மனிதனின் ஆளுமையில் சத்தவம் ராஜ தாமச ஆகிய 3 குணங்கள் மாறுபட்ட அளவில் இருந்து அவனது ஆளுமையை நடததையை பெரிதும் நிா்ணயம் செய்கிறது என்கிறது.இது பிறப்பில் ஏற்பட்டு விடுகிறது.பயிற்சியால் கல்வியால் நல்ல சுழ்நிலையால் இதை கூட்டவோ குறைக்கவோ முடியும்.அப்பியாசத்தால் முடியும் என்கிறாா் ஸ்ரீகிருஷ்ணா்.
தாமசகுணம் அதிகம் உள்ளவன் இட்ட வேலையைச் செய்யும் ஏவலா் ஆக இருக்கலாம்.
அகரகாரத்தில் வாழும் அனைவரும் சத்வ ராஜ தாம்ச குணம் பேதம் கொண்டவா்கள்தாம். அங்கேயும் சுத்திரன் உண்டு.
அம்பேத்காா் நகரிலும் பிறாமணன் உண்டு.சத்திரியன் உண்டு.
சத்வ ராஜ தாம்ச குணங்களை நிா்ணயம் செய்ய கருவி ஏதும் இல்லை.வாழ்ந்து பாரத்து பட்டு அறிந்துதான் தெளிய முடியும். உண்மைஅ இதுதான்.
இந்த கருத்து அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது.
Post a Comment