இஸ்லாமிய மதரஸாவை இடித்துத் தள்ளிய யோகி அரசு!
உபியில் உள்ள ஆஜம்கர் மாவட்டத்தில் உள்ள கிராமம் சாந்த் பட்டி. கடந்த 70 வருடமாக 'தர்ஸ்கா இஸ்லாமிக் ஸ்கூல்' 600 மாணவ மாணவிகளைக் கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய கல்வியோடு அரசு பாடத்திட்டங்களையும் சேர்த்து கல்விப் பணி ஆற்றி வருகிறது. இடப் பற்றாக்குறை காரணமாக பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஐந்து வகுப்பறைகளையும் நூலகத்தையும் கட்டியுள்ளனர் நிர்வாகிகள்.
முகமது அலி என்ற உள்ளூர்வாசி நிர்வாகத்தோடு உள்ள சில தனிப்பட்ட பகையினால் 'மைதானத்தில் எப்படி கட்டிடம் கட்டலாம். அரசு ஆவணத்தில் அது விளையாட்டு மைதானம்' என்றுதானே குறிப்பிடப்பட்டுள்ளது என்று வழக்கு தொடர்ந்தார். இவர் சமீபத்தில் பிஜேபியில் சேர்ந்துள்ளார். கிராம மக்கள் எவ்வளவோ பேசிப் பார்த்தும் பலன் இல்லை. முஸ்லிம்களுக்கு எந்த வகையிலாவது தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு ஆணையை பயன்படுத்தி கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை இடித்து தள்ளியுள்ளது யோகி அரசு. அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவியர் வகுப்பறை இல்லாமல் உள்ளூரில் உள்ள பெரிய வீடுகளில் அமர்ந்து பாடங்களை பயின்று வருகின்றனர்.
இஸ்லாமிய மாணவ மாணவிகள் கல்வியறிவு பெற்று விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக காய் நகர்த்துகிறது யோகி அரசு. யோகியைப் போல் கஞ்சா அடித்துக் கொண்டு போதையில் மிதந்தால் மிகவும் சந்தோஷப்படுவார் போல. இவரைப் போன்ற காவிகள் எந்த அளவு திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார்களோ அதை விட வீரியமாக முஸ்லிம்கள் தங்களின் கல்வியை மேம்படுத்திக் கொள்வார்கள். எங்கு அதிக எதிர்ப்பு இருக்கிறதோ அங்குதான் இஸ்லாம் மிக வேகமாக வளரும். அந்த காட்சியை நாமும் நமது கண்களால் இறைவன் நாடினால் பார்க்கத்தான் போகிறோம்.
விலை போன இந்திய ஊடகங்கள் இதனை உலகுக்கு கொண்டு வரப் போவதில்லை. நாம் தான் இணையத்தின் வாயிலாக ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
1 comment:
அரேபிய அடிமைத்தனத்தையும்
அரேபிய பயங்கரவாத்தையும்
வளா்க்கும் மதரசாக்கள் இந்தியாவில் இருப்பது அவமானம்.
Post a Comment