தமிழகத்தின் ஆகப்பெரும் கதைசொல்லி அண்ணன் சீமான் அவர்கள் மிக ஆழ்ந்து, கவனித்து, படித்து, புரிந்து "வஹ்ஹாபிஸம் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டது." என்ற கருத்தைச் சமீபத்தில் உதிர்த்துள்ளார்.
தன்னுடைய உளறல்களை சீமானிஸம் என்று தம்பிகள் பரப்புவதைப் போல வஹ்ஹாப் என்பவரின் கருத்துக்கள் தான் வஹ்ஹாபிஸம் என்று அண்ணன் சீமான் கருதிக்கொண்டார் போலும்.
உலகில் பொதுவாக இசங்களின் பெயர்கள் அதன் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும். ஆனால், வஹ்ஹாபிஸம் என்ற பெயர் முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்கு எதிரானவர்களால் அவரை இழிவு படுத்த முன்வைக்கப்பட்டது.
அப்துல் வஹ்ஹாப் அவர்கள் சொன்ன கருத்துக்கள் அவரது சொந்த கருத்தோ அல்லது புதுமையான கருத்தோ அல்ல. அவரின் கருத்துக்களுக்கு நபிகள் நாயகம் தொடங்கி பல இஸ்லாமிய அறிஞர்களின் தொடர்ச்சி இருந்தது.
இன்றும் அப்துல் வஹ்ஹாப் அவர்களைப் போற்றக்கூடிய யாரும் வஹ்ஹாபிஸம் என்ற பெயரை ஏற்பதில்லை.
பொதுவாகத் தம்பிகள் தமிழ் நாட்டிற்குள் ரத்தப் பரிசோதனை செய்து சிலரை இனம் மாற்றுவார்கள். ஆனால் அண்ணன் சீமான் ஒரு படி மேலே சென்று அரேபியாவில் பிறந்த அப்துல் வஹ்ஹாபை ஈராக்கில் பிறந்தவர் என்கிறார். இதுதான் அண்ணன் சீமான் மிக ஆழ்ந்து, கவனித்து, படித்து, புரிந்து, தெரிந்துகொண்ட லட்சணம்.
இவர் இன்று யாரையெல்லாம் இலுமினாட்டி என்கிறாரோ அவர்களின் அடிப்படை வட்டியும் அதை மையப்படுத்திய வங்கி அமைப்பும் தான். இந்த இரண்டையும் மிகக் கடுமையாக எதிர்த்தவர் அப்துல் வஹ்ஹாப். அவரை இலுமினாட்டி என்று சொல்லும் அண்ணன் சீமான் வங்கிகள் குறித்து கருத்துச் சொல்லத் தயாரா..?
உண்மையில் அண்ணன் சீமான் மீது கூட எனக்கு வருத்தமில்லை. அவர் வழக்கம்போல எங்கோ படித்ததைச் சொல்கிறேன் என்ற பாணியில் பேசுகிறார். ஆனால் அவருடன் இருக்கும் இஸ்லாத்தை ஏற்ற தம்பிகளில் ஒருவருக்குக் கூடவா இஸ்லாமிய வரலாறு தெரியாது. அல்லது ஆமை கதைகளும் அரிசிக் கப்பலுமே நமக்கு போதும் எனச் சிந்திப்பதை நிறுத்தி விட்டீர்களா..?
-சே.ச.அனீஃப்
No comments:
Post a Comment