Followers

Monday, January 11, 2021

இந்தியாவை நாம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே தொலைத்துவிட்டோம்.

 கிட்டதட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வளர்ச்சியடையாத இந்தியாவில் இருந்தோம். ஏதேனும் ஒர் நெட்வொர்க்கில் தொடர்புகொண்டால் அழகான ரிங்டோனோ, ஏதேனும் கொடூர பாடலோ ஒலிக்கும்.


ஆனால், இன்று அப்படியெல்லாம் இல்லை. நெட்வொர்க் வேலை செய்து உடனே ரிங்டோன் கிடைத்துவிட்டால் நீங்கள் வரம்பெற்றவர் கிடைத்து அவர் பேசுவது தெளிவாக கிடைத்துவிட்டால் நீங்கள் இன்னும் மேன்மையானவர்.

கூடுதலாக வளர்ச்சியடையாத அந்த இந்தியாவில், இந்தியாவுக்கு என ஒரு தொலைதொடர்பு இருந்தது. ஆனால் இன்று அப்படியொன்று இல்லவேஇல்லை. இருந்த தனியார்ர் நிறுவனங்களில் பல இன்று இல்லை....

அப்பொதெல்லாம் சிவகாசி - மதுரைக்கு செல்ல ரூ.500க்கு பெட்ரோல் போட்டாலே போதுமானது. இந்த வளர்ந்த இந்தியாவில் ரூ.900க்கு போடுமளவு மதுரைக்கான தூரம் அதிகரித்துள்ளது.

சென்னை சென்று வர மொத்த சுங்கவரியே ரூ300 தான். இன்று ரூ.900 வரை சுங்கவரியே எடுத்துக்கொள்கிறது.

முன்பெல்லாம் மருத்துவ படிப்பிற்கான கட்டணத்திற்கு யோசித்தால் இன்று நுழைவுத்தேர்வு பயிற்சி கட்டணத்திற்கே யோசிக்க வேண்டியது உள்ளது.

முன்பெல்லாம் நீதிமன்றங்கள் மக்களுக்கு தேவையான ஒன்றை நீதியாக சொல்லின. இந்த வளர்ந்த இந்தியாவில் ஆட்சியாளார்களுக்கு எது தேவையோ அதுவே நீதியாகின்றன.

முன்பெல்லாம் ஊடகங்கள் கொஞ்சம் சுயமாய் யோசித்தன. இன்றெல்லாம் என்ன தலைப்பு செய்து அதுவும் எப்படி வரவேண்டுமென யாரோ சொல்லி தருகிறார்கள்.

முன்பெல்லாம் சாமியார்கள் வலது பக்கம் மூச்சை வாங்கி இடதுபக்கம் வெளியிடுங்கள் என்றார்கள். இன்றெல்லாம் அவர்கள் முழுநேர அரசியல் புரோக்கர்களாக வாழ்கிறார்கள். அவர்களது சிஷ்யர்கள் மூழு மூடர்களாக வாழ்கிறார்கள்.

முன்பெல்லாம் பாகிஸ்தான் எதிரி, சீனா எதிரி என்றார்கள். இன்று யாரெல்லாம் இவர்களின் முட்டாள்தனங்களை எதிர்கிறார்களோ அவர்கள் எல்லாம் பாகிஸ்தான், சீனாகாரர்கள் என்கிறார்கள்.

அட எரிவாயு மானியமில்லாமல் 300 ரூ வாங்கி கொண்டு இருந்தோம். இன்றெல்லாம் 42ரூ மானியத்தோடு ரூ.750க்கு வந்துவிட்டது.

ஜிஎஸ்டி வந்த ஓராண்டில் பொருட்கள் விலை எல்லாம் வெகுவாக குறைந்து விடும் என்றார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் குறையுமென்ற நம்பிக்கையே இல்லை இந்த வளர்ச்சி இந்தியாவில்.

அப்பொதெல்லாம் புதிய அரசு மருத்துவமனைகள், புதிய கல்வி கட்டிடங்கள், புதிய நிறுவனங்கள் என யோசித்து உருவாக்கினார்கள். இன்றெல்லாம் உருவாக்கியதை எப்படி தனியாருக்கு விக்கலாம் என யோசிக்கிறார்கள்.

ரயில்வேயில் பிளாட்பாரம் ஒரு தனியாருக்கு, ரயில் ஒரு தனியாருக்கு, அதில் நடத்தும் ஹோட்டல் ஒரு தனியாருக்கு, தண்டவாளங்களில் ஒன்று ஒரு தனியார்க்கு இன்னொன்று இன்னொரு தனியார்க்கு என அமர்ந்து யோசித்து இந்திய நாட்டை மக்களை சுரண்டுகின்றனர்

இந்த நவீன டிஜிட்டல் சுவச்சா இந்தியா நம்மளை கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துக்கொண்டிருக்கிறது.

ஏனெனில் நமக்கான இந்தியாவை நாம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே தொலைத்துவிட்டோம். இந்த மூடர்கூட்டம் தொலையாமல் அதனை மீட்க முடியாது.

சிவகாசியிலிருந்து....பா. சரவணகாந்த்



1 comment:

Dr.Anburaj said...

அரசு நிறுவனம் தேங்கிய குட்டை யாக செயல்படும். பிரச்சனைகளுக்கு தீா்வு காணாமல் சோம்பேறியாக சம்பளம் வாங்குவார்கள். அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில படிக்க வைக்கவில்லை ?

இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

ஆக தனியாா் மயமாக்குதல்தான் சிறந்த தீர்வு என்ற முடிவுக்கு நாட்டை தள்ளியது திரு.நரசிம்மராவ் தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் ஆட்சிதான்.

பொய் சொல்லி வாசிப்பவர்களை ஏமாற்ற வேண்டாம்.