உபியின் சஹரான்பூரில் கோவிலுக்கு அருகில் ஒரு பொது கழிப்பிடம் உள்ளது. கோவிலுக்கும் கழிப்பிடத்திற்கும் இடையில் ஒரு சுவரும் உள்ளது. சுற்று வட்டார மக்கள் அந்த கழிப்பறையைத்தான் இது நாள் வரை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் குண்டர்கள் இது கோவிலின் புனிதத்தை கெடுக்கிறது என்று சொல்லி 'ஜெய்ஸ்ரீராம்' என்ற கோஷத்தோடு இடித்து தள்ளியுள்ளனர். அந்த ஏழைகள் 'இனி நாங்கள் எங்கே செல்வோம்' என்று கேட்கின்றனர். இடித்தவர்களின் வீடுகளுக்குத்தான் செல்ல வேண்டும். மோடியும், அமித்ஷாவும் உருவாக்கிய கூட்டம் எந்த அளவு மூளை வறண்டவர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
உலகில் உள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் ஒரு பக்கம் கழிவறை கட்டாயமாக இருக்கும். கழிவறைக்கும் இறைவனை வழிபடுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
1 comment:
டாக்டர் சாந்தா - வாழ்க நீ எம்மான்...,
உலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிக கவர்னர் தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டாக்டர் சாந்தா பற்றிய சில நினைவலைகள்.
⏩நான் இறந்த பிறகு என்னுடைய அஸ்தியை கடலில் கரைக்க வேண்டாம்; அடையார் கேன்சர் மருத்துவமனை மண்ணிலேயே என்னுடைய அஸ்தியை புதைத்து விடுங்கள்; இறந்த பிறகு கூட நான் இங்கேயே வசிக்க ஆசைப்படுகிறேன்.
⏩ஒரு கான்சர் நோயாளியின் அருகே இரண்டு நாட்கள் டாக்டர் சாந்தா இருந்து நோயுடன் போராடியது கண்டு நான் மலைத்துப் போனேன் என்கிறார் டாக்டர் சி எஸ் மணி.
⏩நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான சர்.சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் சாந்தாவின் உறவினர்கள்.
⏩திங்கள் இரவு எட்டு முப்பது வரை மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த டாக்டர் சாந்தா செவ்வாய் அதிகாலை உயிர் துறந்தார். இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரையில் கூட பணி செய்யும் பாக்கியம் எவ்வளவு பேருக்கு வாய்க்கிறது?
வாழ்க நீ எம்மான்...
- பத்மநாபன் நாகராஜன்
நல்லவர்கள் உத்தமர்கள் தியாகசீலா்கள் இநதுக்களாக இருந்தால் சுவனப்பிரியன் கண்கள் பார்க்காது.காது கேட்காது. எனவே நான் பதவிட்டுள்ளேன்.
Post a Comment