Followers

Monday, January 11, 2021

ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan).

 கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றபிறகு, சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்க போதுமான நிதி, இந்திய ராணுவத்திடம் இல்லாததால், நிதி திரட்ட ஆரம்பித்தார், அன்றைய பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி.


இதற்காக, தேசிய பாதுகாப்பு நிதி (National Defense Fund) என்ற பெயரில் நிதி வழங்கிடும்படி அன்றைய குறுநில மன்னர்களுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.

நிதி நெருக்கடியால் பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார்.

இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார், லால் பகதூர் சாஸ்திரி.

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நேரில் சென்று சந்தித்தவர், ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan).

ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நாட்டின் மோசமான நிதி நிலைமையை விளக்கினார்.

கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம், மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார்.

தனது கருவூலத்திலிருந்து 'ஐந்து டன்' தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார்.

(நிஜாம் வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600 கோடிகளுக்கும்
மேல்)

பாதுகாப்பு நிதி கேட்டால், தனது சொத்தின் பெரும் பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு, மற்ற குறுநில மன்னர்களிடம் பரவி பெரும் சர்ச்சையானது.

இன்றைய தேதிவரை, இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ - ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த்திகழ்ந்த ஹைதராபாதின் கடைசி நிஜாம், 24-02-1967அன்று காலமானார்.

இது போன்ற வரலாறுகளையும் தியாகங்களையும் மறைத்து விட்டு வரும் தலைமுறையிடையே மனக்கசப்பை உண்டாக்கும் தீவிர முயற்சிகள் நடைபெறுவது வேதனை.

இந்தியா எனும் அழகிய வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்!

நன்றி: தீனதயாளன்-ஜெகதீசன்.



No comments: