Followers

Thursday, February 04, 2021

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் புனித இஸ்லாத்தை ஏற்றனர்..!

 ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் புனித இஸ்லாத்தை ஏற்றனர்..!

இந்தியா - ஹைதராபாத்தை சேர்ந்த "ஜேம்ஸ்" என்பவர், தன் குடும்பத்துடன் "துபை"யில் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர். மகன் திருமணமாகி, அவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார்
.
இந்த குடும்பம், தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே, ஜேம்ஸ் "முஹம்மது" என்றும், இவரின் மனைவி "மரியம்" என்றும், மகள் "ஆயிஷா" என்றும், மகன் "ஈஸா" என்றும் மருமகளுக்கு "சாரா" என்றும் "இஸ்லாமிய பெயர்களை சூட்டி" தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.
இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி "துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி" கூறுகையில், இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தை ஏற்றனர்.
இவர்களுக்கு, யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை, இவர்களின் ஆர்வம், தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இஸ்லாத்தை தழுவிய ஜேம்ஸ், "கலீஜ் டைம்ஸ்" பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், "கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது" என்றும், ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடமாக, இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும், குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும், தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார்.
இது ஒரு மீள் பதிவு



1 comment:

Dr.Anburaj said...

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.
விளக்கம் : அருவமாய், உணர்ச்சியிலும் படாத பெருமான் தமக்கு உருவமாய், காட்சியிலும் தோற்றமளித்தான் என்பார், ‘உரு நாம் அறியவோர் அந்தணனாய்’ என்றார். தனக்கென வரையறைப்பட்ட வடிவமும், அதற்குரிய பெயரும், தொழிலும் இலானாதலின், இறைவனை, ‘ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லான்’ என்றார். பெயர், வடிவம், தொழில் என்பன ‘நாம ரூபக் கிரியைகள்’ எனப்படும். அவற்றுள், நாமத்தையும் ரூபத்தையும் எடுத்துக் கூறினமையால். ‘ஒன்று’ என்றது தொழிலைக் குறிப்பதாயிற்று. ‘உருவொடு தொழில் பெயர் ஒன்றும் இன்றியே - பரவிய நீ’ என்பது கந்தபுராணம். இனி, அருள் காரணமாகப் பலவகைத் திருமேனிகளையும், பெயர்களையும், தொழில்களையும் இறைவன் தாங்கி நிற்றலின், ‘ஆயிரம் திருநாமம் பாடி’ எனக் கூறினார். ‘பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மான்’ என்றார் திருநாவுக்கரசரும். ஆயிரம் என்பது எண்ணற்ற பொருளில் வந்தது.

‘கொட்டாமோ’ என்பதை, ‘கொட்டுவோம்’ என்பது வகர இடைநிலை தொகப்பெற்று நின்றதாகவும், இரண்டு எதிர்மறை ஓர் உடன்பாட்டினை உணர்த்தியதாகவும் உரைப்பர். இது, பின்வருகின்ற ‘பூவல்லி கொய்யாமோ’ முதலியவற்றிற்கும் பொருந்தும்.

இதனால், இறைவனது திருநாமத்தைப் பாடிப் பரவ வேண்டும் என்பது கூறப்பட்டது.
-------------------------------
ஆகவே இசுலாத்தில் அரேபியாவில் விசேசம் ஏதும் இல்லை. பல கோத்திரங்கள் கலாச்சாரங்கள் வாழ்க்கை சுழல்கள் இருக்கும் போது மாறுபட்ட வழிபாட்டு முறைகள் சமய கலாச்சாரங்கள் இருப்பதுதான் இயற்கை. அதை உணா்வது அறிவுடைமை.

இசுலாம் அரேபிய மக்களின் சமய கலாச்சார கருத்துக்களின் தொகுப்பு.

அது மட்டும் உண்மை சத்தியம் என்பது முட்டாள்களின் பிதற்றல்.

1