Followers

Thursday, February 25, 2021

சுமார் 70 வயது கடந்த பெரியவர்..

 

Colachel Azheem
19 பிப்ரவரி, 2020  · 
இவரது பெயர் #கிருஷ்ணமூர்த்தி...
 
சுமார் 70 வயது கடந்த பெரியவர்..
 
அடிக்கடி நாகர்கோவில் கலாச்சார பள்ளியில் வந்து செல்வதை பார்த்திருக்கிறேன்....
 
இன்றும் லுஹர் தொழுகைக்கு கொஞ்சம் முன்னதாக சென்ற போது கிருஷ்ணமூர்த்தி வெளி வராந்தாவில் நின்று கொண்டு இருகரம் குவித்து மனதில் பிரார்த்தனை செய்து விட்டு சாஷ்டாங்கமாக விழுந்து கொஞ்சம் நேரம் கழித்து எழுந்தார்..
 
தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்து  அவர் எழுந்த போது அவரது கண்கள் கலங்கியிருந்ததை பார்த்து அருகில் சென்று பேச்சு கொடுத்தேன்..
 
நாகர்கோவிலில் இயங்கும் பிரபல பேக்கரி நிறுவன உரிமையாளரின் உறவினர் என்றும், முன்பு எப்போது மணிமேடை பகுதிக்கு வந்தாலும் இந்த பள்ளியில் வந்து சிறிது நேரம் அமைதியாக பிரார்த்தனை செய்வதுண்டு என்றும், தற்போது மனதில் ஏதாவது வருத்தம் ஏற்படும் போது இங்கு வந்து சிறிது நேரம் மனமுருகி பிரார்த்தனை செய்கையில் எனது மனம் லேசாகிறது என்றும் கூறி கண்கலங்கினார்...
 
எல்லாம் வல்ல இறைவன் பெரியவர் கிருஷ்ணமூர்த்திக்கு  நிம்மதியை அருள்வானாக! நேர் வழியையும் காட்டுவானாக!




 

3 comments:

Dr.Anburaj said...

இந்து சமயம் தனி மனித விருப்பங்களுக்கு தடை விதிப்பதில்லை.

இந்த மசுதியும் முன்பு ஒருகாலம் இந்து கோவில்தான். ஒரு இந்துவை அந்த வகையில் அது ஈர்த்தது ஆச்சரியமிலலை.

பிற மத தலங்களில் இறைவனின் சாந்நித்தியம் உண்டு. . . உண்டு . . .உண்டு என்பது இந்து

சமய பால பாடம்.

ஆனால் இசுலாம் . . .என்று பீற்றிக் கொள்ள இதை எடுத்துக் கொள்வது முட்டாள்தனம்.

Dr.Anburaj said...

சிலருடைய கூற்று என்னவெனில், அப்துல் முத்தலிப் அம்புகளில் தனது பிள்ளைகளின் பெயர்களை எழுதி ஹுபுல் சிலையின் தலைமை பூசாரியிடம் கொடுத்தார். அவர் குலுக்கி எடுத்த அம்புகளில் அப்துல்லாஹ்வின் பெயர் எழுதப்பட்டிருந்தது. உடனே அப்துல் முத்தலிப் அப்துல்லாஹ்வை பலியிட கஅபாவுக்கு அழைத்துச் சென்றார். அவரைக் குறைஷியர்கள் தடுத்தனர். குறிப்பாக மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ்வின் தாய்மாமன்களும், அப்துல்லாஹ்வின் சகோதரர் அபூதாலிபும் தடுத்தனர். அப்துல் முத்தலிப் அவர்களிடம் “நான் செய்த நேர்ச்சையை எவ்வாறு நிறைவேற்றுவது?” என்றார். அவர்கள் “குறி சொல்லும் பெண்ணிடம் இதுபற்றி ஆலோசனைக் கேள்”
------------------------------------------------------------------------------
ஹுபுல் சிலையின் தலைமை பூசாரியிடம் - இந்தியாவில் உள்ள சுடலைமாடசாமி போன்ற அரேபியாவில் இருந்த ஹுபுல் சாமியின் வரத்தால்தான் நபிகள் நாயகத்தின் தந்தை அப்பதுல்லா பிறந்துள்ளாா்.
-- இதுதான் வரலாறு சொல்வது.ஹுபுல் சாமி சக்தி பெற்றது என்றுதானே நபிகள் நாயகத்ின் வரலாறு சொல்கிறது.
உண்மையா? விளக்க முடியுமா?

Dr.Anburaj said...

வரலாற்றில் அண்டப்புளுகு
நெஞ்சு திறக்கப்படுதல்

இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஸஅத் கிளையாரிடம் அழைத்து வரப்பட்டார்கள். சில மாதங்களுக்குப் பின் அவர்களது நெஞ்சு திறக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றதென இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (மற்ற வரலாற்றாசியர்கள் நபி (ஸல்) அவர்களின் நான்காவது வயதில் தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பர்.)

அந்த நிகழ்ச்சி குறித்து அனஸ் (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகைத் தந்து நபி (ஸல்) அவர்களை மயக்குமுறச் செய்து, நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியே எடுத்தார். அதில் ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றிவிட்டு ‘இது உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும்’ என்று கூறி, தங்கத் தட்டில் இதயத்தை வைத்து அதில் ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு அந்த இதயப் பகுதிகளை ஒன்றிணைத்து நெஞ்சினுள் திரும்பப் பதித்துவிட்டார். இதைக்கண்ட சிறுவர்கள் ஹலீமாவிடம் ஓடோடி வந்து “முஹம்மது கொலை செய்யப்பட்டார்” என்றனர். நபி (ஸல்) அவர்களை நோக்கி அனைவரும் விரைந்தனர். அவர் நிறம் மாறிக் காட்சியளித்தார்.

அனஸ் (ரழி) கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான அடையாளத்தை நான் கண்டேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
-------------------------------------------------------சிறுவனாக முஹம்மது இருக்கும் போது . . . . . வானவர் ஜிப்ரீல் (அலை வந்து இருதய அறுவை சிகிட்சை செய்துள்ளாா்.வேடிக்கையாக இல்லை.
அண்டப்புளுகு.ஆகாயபுளுகு.