இரவு தூக்கத்தின் முக்கியத்துவத்தை பேசும் குர்ஆன்!
‘உங்களுடைய தூக்கத்தை சுகம் தருவதாகவும் நாம் ஆக்கினோம். இன்னும் இரவை உங்களை பொதிந்து கொள்ளும் ஆடையாக ஆக்கினோம். பகலை வாழ்க்கைக்குரிய தேவைகளை தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்’.
(78:9-11)
அமைதியான தூக்கம் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அருமருந்து என்பதையும், இரவின் குளுமையும், அமைதியும் நம்மை ஒரு ஆடையாக பொதிந்து கொள்ளும் போது - கிடைக்கின்ற தூக்கத்தின் சுகம் அலாதியானது என்பதையும், பகல் என்பது உழைப்பதற்கான நேரம் என்பதையும் இந்த வசனம் வலியுறுத்தும் கருத்தாகும்.
CDC எனப்படும் Centers
for Disease Control and Prevention –ன் கோட்பாட்டின் படி வயது வந்தவர்கள் குறைந்தபட்சம் 7 முதல் 9 மணி நேரங்கள் இரவில் கட்டாயம் தூங்க வேண்டும். உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க தூக்கம் ஒரு இன்றியமையாத அருளாகவே காணப்படுகிறது.
ஒரு சராசரி மனிதன் 3 நாட்கள் கண்கள் விழித்து உறங்காமல் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு கீழ்க்கண்ட நோய்கள் ஆரம்பமாகிவிடுகின்றன.
- அறிவாற்றல் குறைபாடுகள் (COGNITIVE
IMPAIRMENTS)
- எரிச்சல் (IRRITABILITY)
- மருட்சி, மாயத்தோற்ற பயம் (DELUSIONS)
- பயம், களக்கம், நம்பிக்கையின்னை (PARANOIA)
- மனநோய் (PSYCHOSIS)
இங்கு இந்த காணொளியில் மருத்துவர் கூறுவதையும் பாருங்கள். இரவில் மனிதன் தூங்கும் நேரம் மெலடோனியம் எனும் ஹார் மோன் சுரக்கிறது. இது இரவு நேர தூக்கத்தில் மட்டுமே சுரக்கக் கூடியது. அந்த நேரத்தில் நீங்கள் முகநூலிலோ வாட்ஸ்அப்பிலோ மூழ்கி தூக்கத்தை கெடுத்தால் அதனால் மெலடோனியம் சுரப்பது தடை படுவதால் பல பின் விளைவுகளை நமது உடல் சந்திக்கிறது. ஆண்களும் பெண்களும் இதனால் பல உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள்.
எனவேதான் நமது முன்னோர்கள் 10 அல்லது 10.30க்கெல்லாம் படுத்து விட்டு சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து விடுவார்கள். இந்நேரம் மெலடோனியம் சுரக்க உகந்த நேரமாகும். எனவேதான் 10 மணிக்கெல்லாம் தூங்கி காலை தொழுகைக்கு தவறாமல் எழுந்திருப்பதை பெரும்பாலான இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர். குர்ஆன் மிக அழகாக இந்த உண்மையை விளக்குகிறது. ''இரவை உங்களை பொதிந்து கொள்ளும் ஆடையாக ஆக்கினோம்'' என்ற அழகிய அறிவியல் உண்மையை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது குர்ஆன்.
குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புவதற்கு இந்த வசனமும் ஒரு காரணமாக உள்ளது.
3 comments:
உங்களுடைய தூக்கத்தை சுகம் தருவதாகவும் நாம் ஆக்கினோம். இன்னும் இரவை உங்களை பொதிந்து கொள்ளும் ஆடையாக ஆக்கினோம். பகலை வாழ்க்கைக்குரிய தேவைகளை தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்’. (78:9-11)
------------------------------------------------
இது பயனற்ற வெத்து பேச்சு. குரான் எழுதப்படுவதற்கு லட்சம் வருடங்களுக்கு முன்பே பகல் இரவு வாழக்கை முறை அமைக்கப்பட்டு மக்களால் வாழ்ப்பட்டு வருகிறது.ஏதோ குரான் சொல்லிதான் பகல் இரவு அமைக்கப்பட்டு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது போல் குரான் இரவையும் பகலையும் பற்றி பேசுகிறது. மக்களுக்கு தெரிந்ததுதானே!
ஏதோ பெரிய ஞானம் போல் குரான் பேசுவது ....வெத்து வேட்டு பேச்சு.
இரவை உங்களை பொதிந்து கொள்ளும் ஆடையாக ஆக்கினோம்'' என்ற அழகிய அறிவியல் உண்மையை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது குர்ஆன்.
இந்தஅண்டப்புளுகு ஆகாய புளுகு எல்லாம் புளுக வேண்டாம்.
மெலடோனின் பற்றி 1500 வருடங்களுக்கு முந்தைய எழுதப்படிக்க தெரியாத அரபிகளுக்கு தெரியுமா? தெரிந்து எழுதினார்கள் எல்லாம் தாங்கள் சொல்வது சரி. அவர்களுக்கு தெரியாதே.
இரவை உங்களை பொதிந்து கொள்ளும் ஆடையாக ஆக்கினோம்''
சரியாத உளரல் தவிர இதில் உண்மை, ஆழ்ந்த கருத்து அல்லது உவமை , அறிவியல் உண்மை ஏதும் இல்லை.
ஏதோ முஹம்மது பேரைச் சொல்லி காட்டரபிகள் கிறுக்கி வைத்துள்ளார்கள்.
அதற்கு குரான் என்று பெயா் இட்டுள்ளார்கள்.
எனவே கொஞ்சம் பிலடப் காட்டி குரானை ஞான களஞ்சியமாக காட்ட முஸ்லீம்கள் ஆசைப்படுகின்றார்கள்.
10.30 to 4 am only 6 hrs, you should sleep more than 7 hrs. Hence you are failed.
Post a Comment