‘’வணக்கம்’’ - என்ற சொல்லாடல் பற்றிய ஆய்வு!
இந்த சொல் தமிழர்களிடையே மிக பிரபலம். இது தமிழர்களின் பழக்கம்தானா என்பதை இந்த பதிவில் பார்போம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இரு கைகளையும் கூப்பி ‘’வணக்கம்’’ என்று ஒருவரையொருவர் வணங்கிக் கொள்ளும் பழக்கம் தமிழர்களின் பாரம்பரியம் அன்று. பண்டைய காலத்தில் அரசர்களை வாழ்த்தி பாடல்களை பாடுவர். ஒருவரையொருவர் சந்திக்கும் போது வாழ்த்துக்களைத்தான் பரிமாறிக் கொள்வர். பண்டைய கால தமிழர்கள் மிகவும் சுய மரியாதையோடு வாழந்துள்ளனர். 'கடவுள் வாழ்த்து' என்று கடவுளையும் வாழ்த்தி வாழ்ந்துள்ளனர் அன்றைய நமது முன்னோர்கள்.
பார்பனர்களின் படையெடுப்புக்குப் பிறகுதான் வாழ்த்து கூறும் மரபு மாறி 'நமஸ்காரம்' என்ற சொல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்ற தமிழ் சொல்லாக 'வணக்கம்' என்ற சொல் பிற்பாடு சேர்க்கப்படுகிறது. மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்து தீண்டாமை கடை பிடிக்க ஆரம்பித்த போது அதற்கு தோதுவாக மனிதனை மனிதன் தொடாமல் தூர இருந்தே 'வணக்கம்' என்று கை கூப்பும் வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. பேராசிரியர் நன்னன் இதனை பல காலமாக சொல்லி வந்துள்ளார். மனிதனை வணங்க ஆரம்பிக்கும் போதுதான் அங்கு தீண்டாமை உள்ளே நுழைகிறது. ஒருவன் உயர்ந்தவன்: மற்றவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாட்டின் ஆரம்ப புள்ளியே இந்த வணக்கம் என்ற சொல்தான். பண்டைய தமிழர்களின் நூல்களில் இது போன்ற பழக்கத்தை நாம் காண முடியாது.
முஸ்லிம்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்வார்கள். அதற்கு செவியுறுபவர் 'வஅலைக்கும் சலாம்' என்று சொல்வார். இதற்கு அர்த்தம்: ' உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக' என்று சொல்ல அதற்கு மற்றவர் 'உங்களுக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக' என்று சொல்லி ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்கின்றனர். மனிதன் உலகில் வாழும் காலங்களில் விரும்புவது சாந்தியையும் சமாதானத்தையும் தானே...
இதே நடைமுறைதான் முற்காலத்தில் தமிழர்களிடத்திலும் இருந்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் தற்போது இந்துக்கள் வணங்கும் எந்த தெய்வத்தின் சிலைகளையும் காண முடியவில்லை. பண்டைய தமிழர்கள் உருவம் வைத்து வணங்கும் வழி முறையை கொண்டிருக்கவில்லை. குட்டு வெளிப்பட்டு விடும் என்பதற்காகத்தான் மோடி அரசு கீழடி அகழ்வாராய்ச்சிக்கு முறையாக ஒத்துழைப்பு தர மறுக்கிறது. இவர்கள் என்னதான் முட்டுக் கட்டைப் போட்டாலும் உண்மை இணையத்தின் வாயிலாக தானாக வந்து கொண்டுள்ளது. அனல்வாது, புனல்வாது என்ற நிகழ்வில் தமிழர்களின் பண்டைய வரலாறுகள் அனைத்தும் திட்டமிட்டு பார்பனர்களால் அழிக்கப்பட்டன. அந்த நூல்கள் எல்லாம் இன்று இருக்குமானால் தற்போதய வரலாற்றையே முழுவதுமாக மாற்றி எழுத வேண்டியிருக்கும். ஏதோ திருக்குறள் போன்ற அரிய நூல்கள் பார்பனர்களின் சதியிலிருந்து தப்பி பிழைத்து இன்றும் நம்மோடு உலாவிக் கொண்டிருக்கின்றன.
ஆக்கம்: சுவனப்பிரியன்
1 comment:
திராவிட இயக்கம் போடும் அரசியல் செல்வாக்கு மிக்க பதவிகளுககாக காலம் முழுவதும் அடிமையாக வாழ்ந்தவா் பேரா. நன்னன் என்பது அனைவருக்கும் தெரியும்.
குறள்:436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
குறள் விளக்கம்:
முதலில் தனக்குள்ள குற்றத்தைக் கண்டு நீக்கி, பிறகு பிறருடையக் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க தலைவனுக்கு என்ன குற்றம் நேரும்?.
மேலே செல்ல
குறள்:437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
குறள் விளக்கம்:
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், பயன் ஏதுமில்லாமல் அழிந்து போகும்.
மேலே செல்ல
குறள்:438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
குறள் விளக்கம்:
பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வது, குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
மேலே செல்ல
குறள்:439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
குறள் விளக்கம்:
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.
மேலே செல்ல
-------------------------------------
தமிழன் மாட்டு வண்டியில் சென்றான் -நன்னன் மாட்டு வண்டியிலா சென்றாா்?
தமிழன் குடுமி வைத்திருநந்தான் ஸ்ரீ நன்னன் குடுமி ஏன் வைக்கவில்லை
இப்படியே ஆயிரம் பதிவிடலாம்.
பார்பனதுவேசம் பேசி காசு சம்பாதித்து பழகிய ஒரு சமூக விரோதி
Post a Comment