Followers

Thursday, February 18, 2021

காய்கறிகளை நோட்டமிடச் சொல்கிறது குர்ஆன்!

 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளை நோட்டமிடச் சொல்கிறது குர்ஆன்!

 

''எனவே, மனிதன் தன் உணவின் பக்கம் சென்று அது எவ்வாறு பெறப்படுகிறது என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

பின், பூமியைப் பிளந்து-

பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

அடர்ந்த தோட்டங்களையும்,

பழங்களையும், தீவனங்களையும்-

இவையெல்லாம் உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,’’

 

குர்ஆன் 80:24

 

 

'அன்றியம், இறந்து தரிசாகக்கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; மழையினால் அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
 
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சைக் கொடிகளினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
 
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?'   

 

(திருக்குர்ஆன் 36 : 33-35)



2 comments:

Dr.Anburaj said...

பாமரனுக்கும் தெரிந்த மிகச் சாதாரண தகவல்களை இறைவனிடமிருந்து வந்த தகவல்கள்

தொகுப்பு என்று சொல்லப்படும் குரானில் இருப்பது வேடிக்கை.இதை ஏன் இறைவன் சொல்ல வேண்டும். வேறு பயன்படும் கருத்துக்களைச் சொல்லாமல் அனைவருக்கும் அறிந்த சாதாரண தகவல்களை குரான் பதிவு செய்ய வேண்டுமா?


அதையும் மிக உயா்ந்த கண்டுபிடிப்பு என்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜன்ஸ்டீனை பாடம் நடத்த அழைத்து 1 ம் வகுப்புக்கு பாடம்

நடத்தச் சொல்வது பயனற்றது.கொடூமையாகும்.

Dr.Anburaj said...

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272
--------------------------------------------------------------
என்னை அறிந்திலேன்
இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும்
அறிந்திலேன் - திருமந்திரம் 2366
--------------------------------------------------------
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது
ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே
- திருமந்திரம் 252
-----------------------------------------------------------
ஆற்றரு நோய்மிக்கு,
அவனிமழை இன்றிப்
போற்ற அருமன்னரும்
போர்வலிகுன்றுவர்
கூற்று உதைத்தான்
திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே
- திருமந்திரம் 517
சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர்.
-------------------------------------------------------------
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272
-------------------------------------------------------------
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
- திருமந்திரம் 270
----------------------------------------------------------------
ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான்; உணர்ந்து எட்டே.

ஒரே மெய்ப் பொருளானவன்,
சிவ சக்தியராக இரண்டானவன்,
பிரமன், திருமால் ருத்திரன்என்ற மும் மூர்த்திகளுமானவன்,
நான்கு புருஷார்த்தங்களை (அறம், பொருள், இன்பம், வீடு ) உணர்ந்தவன்,
ஐம் பொறிகளை (மெய், கண், மூக்கு, வாய், செவி) வென்றவன்,
ஆறு சக்கரங்களில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,
ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,
எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.