Followers

Saturday, February 06, 2021

112:1. (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான்.

 


1 comment:

Dr.Anburaj said...

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.
அருவமாய், உணர்ச்சியிலும் படாத பெருமான் தமக்கு உருவமாய், காட்சியிலும் தோற்றமளித்தான் என்பார், ‘உரு நாம் அறியவோர் அந்தணனாய்’ என்றார். தனக்கென வரையறைப்பட்ட வடிவமும், அதற்குரிய பெயரும், தொழிலும் இலானாதலின், இறைவனை, ‘ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லான்’ என்றார். பெயர், வடிவம், தொழில் என்பன ‘நாம ரூபக் கிரியைகள்’ எனப்படும். அவற்றுள், நாமத்தையும் ரூபத்தையும் எடுத்துக் கூறினமையால். ‘ஒன்று’ என்றது தொழிலைக் குறிப்பதாயிற்று. ‘உருவொடு தொழில் பெயர் ஒன்றும் இன்றியே - பரவிய நீ’ என்பது கந்தபுராணம். இனி, அருள் காரணமாகப் பலவகைத் திருமேனிகளையும், பெயர்களையும், தொழில்களையும் இறைவன் தாங்கி நிற்றலின், ‘ஆயிரம் திருநாமம் பாடி’ எனக் கூறினார். ‘பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மான்’ என்றார் திருநாவுக்கரசரும். ஆயிரம் என்பது எண்ணற்ற பொருளில் வந்தது.

‘கொட்டாமோ’ என்பதை, ‘கொட்டுவோம்’ என்பது வகர இடைநிலை தொகப்பெற்று நின்றதாகவும், இரண்டு எதிர்மறை ஓர் உடன்பாட்டினை உணர்த்தியதாகவும் உரைப்பர். இது, பின்வருகின்ற ‘பூவல்லி கொய்யாமோ’ முதலியவற்றிற்கும் பொருந்தும்.

இதனால், இறைவனது திருநாமத்தைப் பாடிப் பரவ வேண்டும் என்பது கூறப்பட்டது.
-----------------------------------------------------------------------
ஏக இறைவன் என்ற சரக்கு இந்தியாவில் உள்ளது. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்ய அவசியம் இல்லை.