பொலிவியா என்ற நாடு எவ்வாறு
கார்பரேட் கம்பெனிகளால் சீரழிந்தது என்பதை இந்த காணொளி மிக அழகாக விளக்குகிறது. இதே
நிலையை நோக்கித்தான் நமது நாடும் மத்தியில் ஆளும் பாஜகவும் செல்கிறது. இதனை தடுத்து
நிறுத்த வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையுமாகும்.
இஸ்லாம் நீர் மேலாண்மைக்கு வழங்கும்
தீர்வையும் பார்போம்.
தேவைக்கு
மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்-2925
தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர்
பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-2353, 2354, 6962
தனிநபரோ, குழுவோ யாராக இருந்தாலும் தனக்குத் தேவையான
தண்ணீரை எடுத்துக் கொண்டு மிதமிஞ்சிய தண்ணீரை யாருக்கும் விற்கக் கூடாது, அதாவது இலவசமாக வழங்கி விட வேண்டும். அதேவேளை
மேலதிகத் தண்ணீரை உனக்குத் தரமாட்டேன் என்று யாருக்கும் தண்ணீரைச் செல்லவிடாமல்
தடுக்கக் கூடாது. தன் பயன்பாட்டுக்குப் போகவுள்ளதை பிறர் பயன்பாட்டுக்குச் செல்ல
வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இது நபிகளார் முன்வைக்கும் நீர் பங்கீட்டு
திட்டமாகும்.
நபிகளார் நவின்றபடி மேலதிகத் தண்ணீரை தடுக்கவோ
விற்பனை செய்யவோ கூடாது என்ற அறிவுரையை எந்த அரசு கடைப்பிடிக்குமோ அங்கே தண்ணீர்
அரசியலுக்கு இடமிருக்காது. மாநிலங்களுக்கான சண்டைகளுக்கு முடிவு கட்டப்படும்.
நமது நாட்டில் தண்ணீருக்காக சண்டை போடுவதைப்
போன்று அரபு நாடுகளுக்கிடையே தண்ணீர் சண்டை இருப்பதை நாம் எந்தப்
பத்திரிக்கையிலும் படிக்க இயலாததற்கு காரணம் நபிகளாரின் இந்தத் தீர்வு தான்.
‘காற்றை சூல் கொண்டதாக நாமே
அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும்
புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து
வைப்போராய் இல்லை’
(15: 22)
No comments:
Post a Comment