Followers

Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

Monday, January 26, 2015

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர் கே லஷ்மண் மறைவு!



இந்திய கார்ட்டூன் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த ஆர் கே லஷ்மண் நோய் வாய்பட்டதனால் திங்கட்கிழமை இறந்துள்ளார். அவருக்கு வயது 93. நமது தமிழ் பத்திரிக்கை துறையில் கார்ட்டூனிஷ்ட் மதனுக்கு எப்படி ஒரு தனி இடமோ அது போல் ஆங்கில பத்திரிக்கை உலகில் இவரது கார்ட்டூனுக்கு மிக மதிப்பிருந்தது. 'காமன் மேன்' என்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் இந்திய அரசியலையும் உலக அரசியலையும் கலக்கியவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இவர் வரைந்த பல கார்ட்டூன்கள் மிக யதார்த்தமாக இருக்கும்.

1921 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Friday, January 02, 2015

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மேக்தி ஆள் சேர்க்கவில்லை!



ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மேக்தி ஆள் சேர்க்கவில்லை!


ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக பெங்களூருவில் கைதான மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பல்கர் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

பெங்களூருவை சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆள் சேர்த்ததாக பெங்களூரு போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பெங்களூரு குற்றப்பிரிவு இணை ஆணையர் ஹேமந்த் நிம்பல்கர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த 20 நாட்களாக மேக்தியை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு, பண பரிமாற்றம், ஆள் சேர்ப்பு, வன்முறையில் ஈடுபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு போலீஸார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே போலீஸ் காவல் முடிந்து மேக்தி நேற்று பெங்களூரு மாநகர 9-வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேக்தியின் போலீஸ் காவலை நீட்டிக்குமாறு கோரவில்லை. இதனால் மேக்திக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேக்தியை கைது செய்து விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரியும் பெங்களூரு குற்றப்பிரிவு இணை ஆணையருமான ஹேமந்த் நிம்பல்கர் நேற்று மாலை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். மேக்தி வழக்கை அவர் சரியாக விசாரிக்கவில்லை என்பதால் அவர் அதிரடியாக தீயணைப்பு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தங்களுடைய மகன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக மேக்தியின் பெற்றோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
03-01-2015

மெஹ்திக்கு எதிராக இது வரை கருத்து சொன்னவர்கள் எல்லோரும் இந்த செய்தியை கண்டு கொள்ள மாட்டார்கள். ஒரு அப்பாவி இளைஞனின் எதிர்காலத்தை எந்த ஆதாரமும் இல்லாமல் நாசமாக்க துணிந்த காவல்துறை அதிகாரி பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு துணிந்து அரசுகள் செயல்பட்டால் பணத்துக்காகவும் விருதுகளுக்காகவும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய் கேசு போட்டு அவர்களின் வாழ்வை பாழாக்கும் அரக்கர்களின் கொட்டத்தை அடக்கலாம். பரவலாக இந்துத்வா எண்ணம் கொண்ட காவல் துறை உயர் அதிகாரிகளையும் இனம் கண்டு அவர்களுக்கும் வேறுபணிகள் கொடுக்க கர்நாடக அரசு முயல வேண்டும்.

Friday, August 22, 2014

கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி காலமானார்!



கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி காலமானார்!

கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி உடல் நிலை சரியில்லாமல் கடந்த நான்கு நாட்களாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்கை அளித்தும் பலனில்லாமல் இன்று வெள்ளிக் கிழமை காலமானார். இவருக்கு வயது 81. டிசம்பர் 21, 1932 ல் திருஹல்லி தாலுகா சிமோகா மாவட்டத்தில் பிறந்தார். 'சமஸ்காரா' என்ற இவரது நாவல் மிகப் பிரபலமாகி திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கன்னட இலக்கியத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றியவர். எழுத்துலகின் உயரிய விருதாகக் கருதப்படும், "ஞானபீடம்' விருது பெற்றவர்.

பெங்களூரில், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது, "பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என்று கூறியிருந்தார். இதை அறிந்த, பா.ஜ.,வினர் கடும் கோபம் அடைந்தனர். "கர்நாடக சட்டசபைத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் இவர், மோடியைப் பற்றி பேச அருகதை இல்லை. விரும்பினால் அவர், இந்தியாவை விட்டு வெளியேறிக் கொள்ளலாம்' என்றனர்.

மேலும், பா.ஜ., பிரமுகர்கள் பலர், எழுத்தாளருக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தனர். இதை அறிந்த அனந்தமூர்த்தி மேலும் கொதிப்படைந்தார். அவர் அன்று கூறியதாவது:

“பா.ஜ.,வுக்கு என்னைக் கண்டால் எப்போதுமே பிடிக்காது. ஏனெனில், நான், ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை வெளிப்படையாக எதிர்ப்பவன். ஹிந்துயிசம் பற்றி சரியாக அறியாத அவர்கள், அவர்களின் ஹிந்துயிசத்தை பரப்பி வருகின்றனர். என்னிடம் அந்த கருத்தை விற்க முடியாததால், கோபம் கொண்டுள்ளனர்.

ஆட்சியில் இல்லாத போதே, இவ்வாறு செயல்படுபவர்கள், மோடி பிரதமராகி விட்டால், எப்படி செயல்படுவர் என யோசிக்கவே முடியவில்லை. பிரதமர் பதவி என்பது, மிக உயர்ந்த பதவி. அதற்கென சில தகுதிகள் உள்ளன. நேரு, போன்றோர் வகித்த பதவி அது. அதை வகிக்க, மோடிக்கு தகுதியில்லை. பிரதமர் என்பவர், எல்லாராலும் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும்; பயத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கக் கூடாது. மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மக்கள் விரோத அரசு அல்ல; ஆனால், ஊழல் அரசு. இந்த அரசு, பதவியிலிருந்து வெளியேற வேண்டும். அதற்காக, மோடி போன்றவர்கள், அந்த பொறுப்புக்கு வரக் கூடாது”. இவ்வாறு, எழுத்தாளர், அனந்தமூர்த்தி கூறினார்.

ஆனால் அனந்த மூர்த்தியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்வா இயக்கத்தினர் இந்து மதத்துக்கும், இந்திய நாட்டுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் எத்தகைய கேட்டை விளைவிக்கக் கூடியவர்கள் என்ற உண்மை பல கோடி இந்திய மக்களுக்கு சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது. இன்னும் ஐந்து வருடம் கழித்து அனந்த மூர்த்தியின் வார்த்தை எத்தனை சத்தியமானது என்பதை வோட்டளித்த இந்திய மக்கள் உணர்வர். அது வரை நாமும் பொறுப்போம்.

இவரைப் போன்ற நல்லவர்கள் மறைந்தாலும் கோடான கோடி இந்தியர்களின் மனதில் பசுமையான நினைவுகளால் வாழ்ந்து கொண்டே இருப்பர்.

அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday, March 18, 2014

வெட்கம் கெட்ட மனிதர்கள் இவர்கள்தானோ!



நரேந்திர மோடிக்கு அமெரிக்கா கிளீன் ஷீட் வழங்கி விட்டது. மோடியின் மீதிருந்த களங்கம் துடைக்கப்பட்டு விட்டது என்று பிஜேபி சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது நினைவிருக்கலாம். இந்தியன் எக்ஸ்பிரஸும் மற்றும் நமது ஊடகங்களும் இது சம்பந்தமாக ஒரு ஆர்டிகிளை எழுதி மோடி புராணம் பாடியன. நமது தமிழ் பத்திரிக்கைகளும் 'ஆஹா மோடி கேடி அல்ல: அவர் புனிதர்' என்று வழக்கமான பல்லவியைப் பாடின.

ஆனால் சமீபத்தில் விக்கி லீக்ஸ் தனது அறிக்கையில் மோடியைப் பற்றி அவ்வாறான நிலைப்பாடு அமெரிக்காவுக்கு இல்லை என்றும் இந்த தகவல் தவறாக பரப்பப்பட்ட ஒன்று என்றும் கூறுகிறது. வழக்கமாக பொய்களையே கூறி வரும் பிஜேபியினர் இந்த விஷயத்திலும் தங்களின் திறமையைக் காட்டியுள்ளனர்.



பல கூட்டங்களில் மோடியே தனக்கு கிளீன் ஷீட் கிடைத்து விட்டதாக புளுகியிருக்கிறார். "Bayiyo baheno....see amrika saying i am incorruptible.." :-).

பொய்...பொய்...பொய் என்று எங்கு திரும்பினாலும் தனது பெயரை முன்னிறுத்த அனைத்து விதமான பிராடு வேலைகளையும் செய்து வரும் இவரிடம் நமது நாடு சென்றால் விளங்குமா?

இது பற்றி பிஜேபியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைனிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு 'விக்கி லீக்ஸிலிருந்தோ அல்லது அதன் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்ஜேயிடமிருந்தோ எங்களுக்கு எந்த நற்சான்று பத்திரமும் தேவையில்லை' என்று கோபமாக பதிலளித்துள்ளார். தங்களது பொய்களை விக்கி லீக்ஸ் இவ்வாறு அதுவும் தேர்தல் நேரத்தில் வெளியிட்டது பிஜேபியினரை பெரும் தர்ம சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது.

"The nation does not need a certificate from Julian Assange or Wikileaks about Modi, and neither does Modi to win the elections. What the people want is just good governance,"

வெட்கம் கெட்ட ஜென்மங்கள்! தங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் விக்கி லீக்ஸூம் நடந்தால் புகழ்வதும், தங்களுக்கு எதிராக பேசினால் அதையே திருப்பிப் போடுவதும் இவர்களுக்கு கை வந்த கலை என்பதை அறியாதவர்களா நாம்!

http://www.wikileaks.org/plusd/cables/06MUMBAI1986_a.html

http://www.truthofgujarat.com/narendra-modis-lie-america-admitting-hes-incorruptible-trashed-wikileaks/





.

Saturday, March 15, 2014

மோடியின் குஜராத்தில் மட்டுமே இது சாத்தியம்!



1. மோடியின் குஜராத்தில் மட்டுமே கோழிகள் பெரும் பெரும் முட்டைகளை இடுகின்றன.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் சப்ளை செய்து ராம ராஜ்யம் அமைப்போம்.

2. மோடியின் குஜராத்தில் மட்டுமே இது போன்ற தேங்காய்களை பார்க்க முடியும்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் ஏன் முழு உலகுக்குமே தேங்காய்களை நாங்கள் சப்ளை செய்வோம்.

3. மோடியின் குஜராத்தில் மட்டுமே இது போன்ற செங்கல் சூளைகளை பார்க்க முடியும்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் செங்கல் சப்ளை செய்வோம். ராமர் கோயில் கட்ட இங்கிருந்து செங்கல்லை அனுப்புவோம்.

4. மோடியின் குஜராத்தில் மட்டுமே கட்டப்பட்டுள்ள உலக பெருஞ்சுவர்.

இதைக் கொண்டு இனி எந்த பாகிஸ்தானிகளும் பங்களாதேசிகளும் குஜராத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்வோம்.

5. மோடியின் குஜராத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மின்சார கோபுரங்கள்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் தேர்தலுக்கு பிறகு குஜராத் மின்சார சப்ளை செய்யும்.

டிஸ்கி: இப்படியான ஒரு செய்தியை பணத்தை வாங்கிக் கொண்டு நமது இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிடலாம். இது வரை மோடியைப் பற்றி இவ்வாறான செய்திகளைத்தான் ஒட்டு மொத்த ஊடகங்களும் தந்து வருகினறன. தேர்தல் தேதி வேறு அறிவிக்கப்பட்டு விட்டன. இது போன்ற செய்திகள் இனி நிறைய வரும். வருங்காலங்களில் யாரும் அதிர்ச்சியடைந்து விடாமல் இருக்க முன் கூட்டியே அந்த செய்திகளை தற்போது நாம் தந்து விட்டோம். :-)

Saturday, October 05, 2013

போலீஸ் ஃபக்ருதீனும் தின மலரும்!

தினமலருக்கு ஒரு வாரத்துக்கு சுடச்சுட பொய் செய்திகளை தருவதற்கு போலீஸ் ஃபக்ருதீன் மேட்டர் கிடைத்து விட்டது. இனி உளவுத் துறை சொன்னது, காவல் துறை சொன்னது என்று எந்த அளவு இஸ்லாமியர்களையும் இஸ்லாத்தையும் இந்த பிரச்னைகளில் சிக்க வைக்கலாம் என்று தினமலர் குழு யோசித்துக் கொண்டிருக்கும்.

போலீஸ் ஃபக்ருதீன் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால் சட்டம் அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கட்டும். அப்போதுதான் இந்த தீவிரவாத செயல்கள் ஒரு முடிவுக்கு வரும். சாதி மத வித்தியாசம் பாராமல் நம் நாட்டு மக்கள் சுதந்திரமாக வெளியில் வர இது போன்ற தண்டனைகள் அவசியம். அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் செய்தி வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் தின மலரில் இந்த செய்திக்காக 100 க்கு மேற்பட்டவர்கள் பின்னூட்டம் அளித்துள்ளார்கள். எல்லா விலாசமும் வழக்கமாக தினமலரில் வாசகர் கடிதத்தில் வரும் பெயர்களே... அனைத்திலும் சொல்லி வைத்தாற்போல் 'இந்த கூட்டத்தை ஒழிக்கனும்', 'இஸ்லாம் வன்முறை மார்க்கம்', 'சவுதி அரேபியா உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பரப்புகிறது', 'முஸ்லிம் தீவிரவாதியை உடனே தூக்கிலிட வேண்டும்' , 'அது ஏன் எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்களே மாட்டுகின்றனர்' எனற ரீதியில் நுற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் ஒன்றிரண்டு மணிகள் வித்தியாசத்தில். தின மலரில் வேலை செய்யும் ஆபீஸ் பாயிலிருந்து நிறுவனர் வரை அனைவருக்கும் 20 போலி ஐடிகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களே இது போன்ற நச்சுக் கருத்துக்களை தமிழக மக்களின் கருத்தாக பரப்ப முயற்சிக்கின்றனர். இந்த வெறுப்பை விதைத்து மோடிக்கு ஆதரவை அதிகரிக்க செய்யலாம் என்பது தினமலரின் நினைப்பு.

ஆனால் பார்பனர்களைத் தவிர இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த சூழ்ச்சிகளை நன்கு அறிந்து வைத்தே உள்ளனர். நம்மோடு சகோதர பாசத்தோடு பழகி வரும் இந்த முஸ்லிம்கள் இது போன்ற ஈனச் செயல்களை செய்ய மாட்டார்கள் என்பது பெரும்பான்மை இந்து சகோதரர்களுக்கும் தெரியும். எனவே தான் தினமணி, தினமலரில் வரும் செய்திகளை படித்து விட்டு சிரித்து விட்டு சென்று விடுகின்றனர்.

அதே தின மலரில் அந்த செய்திக்கு கீழ் வந்து சில பின்னூட்டங்ளையும் பார்ப்போம்.

போலீஸ் பாக்ருதீனை நேற்று ஆந்திராவில் பிடித்ததாகவும் இன்று சென்னையில் பிடித்ததாகவும் தினமலர் செய்தி தருகின்றது. இவர்கள் நான்கு மாதங்களாக போலீஸ் பிடியில் உள்ளதாக வாசகர் ஒருவர் எழுதுகின்றார். அப்பாவி வட இந்திய வாலிபர்களை ஷூட் செய்து அனைத்து கொள்ளை வழக்கு பைல்களையும் மூடியதுபோல் இவர்களை முடித்து அனைத்து BJP யை சேர்ந்தவர்கள் கொலை பைலையும் மூடிவிடலாம் என போலீஸ் நினைக்கலாம். மேலிட பிரஷ்ஷர் அவ்வாறு இருக்கலாம். தீவிரவாதிகள் மத வேறுபாடன்றி ஒழிக்கப்படவேண்டும். முஸ்லிம் பெயரில் உள்ளதாக கூறப்படும் தீவிரவாதிகள் மதம் மாறி வந்தவர்களாகவே உள்ளனரே அது ஏன்? சமூக ஆர்வலர்கள் இதை பற்றி யோசித்தால் நல்லது.

Sound Saroja - Thangachimadam,இந்தியா
05-அக்-201313:25:26 IST Report Abuse

--------------------------------------------------------

செய்தி வெளியாகி 2 மணி நேரத்திலேயே 100 க்கும் மேற்பட்ட கருத்துக்கள் வழக்கமாக எழுதும் அதே நபர்கள் அதே காங்கிரஸ் திமுக எதிர்ப்பு அதிமுக பிஜேபி ஆதரவு வசனங்கள் இது எப்படி சாத்தியம்

-skr - - kuwait,குவைத்
05-அக்-201313:56:19 IST Report Abuse


நானும் கடந்த இருபது வருடங்களாக பார்த்து வருகிறேன். கொலை, கொள்ளையில் அதிகம் பிடிபடும் முஸ்லிம்களில் அதிகமான பேர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இமாம் அலியிலிருந்து இந்த கதை தொடர்கிறது. மதம் மாறுபவர்களை மிரட்டுவதற்காக காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டு இவர்களை வழக்குகளில் சிக்க வைக்கிறார்களா? அல்லது இந்துத்வாவாதிகளே இஸ்லாத்துக்கு மாறுவதாக நடித்து இஸ்லாத்தை களங்கப்படுத்த முயற்ச்சிக்கிறார்களோ என்று நான் சந்தேகிக்கிறேன். முஸ்லிம் பெண்களை காதலித்து பிறகு அவர்களை நடுத் தெருவில் விட்டுச் சென்ற பல இந்துத்வா வாதிகளின் செயல்களை நாம் அறிவோம். இவ்வாறு செய்யச் சொல்லி முன்பு ராம கோபாலனே பகிரங்கமாக அறிவித்தது நினைவிருக்கலாம். இதனால் உண்மையை உணர்ந்து உளப்பூர்வமாக இஸ்லாத்தில் தினமும் இணைபவர்களுக்கும் இந்த நடிகர்கள் சங்கடத்தை உண்டு பண்ணுகிறார்கள். எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களை நாம் தொடர்ந்து நமது கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். கலிமா சொல்லிக் கொடுத்ததோடு நமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி விடாமல் அவர்களின் செயல்பாடுகளையும் சில ஆண்டுகளாவது நாம் கூர்ந்து கவனித்து வர வேண்டும். அவர்களின் நிரந்தர வருமானத்திற்கு நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களின் வறுமையை பயன்படுத்தி இஸ்லாத்தை களங்கப்படுத்த இஸ்லாமிய எதிரிகள் முயற்சிக்கலாம். தற்போதய கால கட்டத்தில் இது மிக அவசியமாக படுகிறது.

ஏனெனில் மோடியை பிரமராக்கி பார்க்க வேண்டும்: அழிந்து கொண்டிருக்கும் வர்ணாசிரமத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று தினமலர் கும்பல் இரவும் பகலும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அவர்களின் சதித் திட்டம் வெற்றியடைய நாம் காரணமாகி விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை நடந்த சில நாளிலேயே ஒரு பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாம் செய்திகளில் பார்த்தோம். அதன் பிறகு அதை பற்றிய செய்தியையே காணோம். அவரது மனைவி தீ குளிக்காமல் வேறொரு பெண் ஏன் தீ குளித்தார்? அவருக்கும் ஆடிட்டர் ரமேஷூக்கும் என்ன தொடர்பு? அந்த பெண் இறந்தது தற்கொலையா? அல்லது திட்டமிட்ட கொலையா? பெண் விவகாரத்தால் அவரது கொலை நடந்ததா? என்ற ரீதியில் விசாரிததிருந்தால் என்றோ கொலையாளி பிடிபட்டிருப்பான்.

ஆனால் பெரும்பாலான ஊடகங்களும், காவல்துறையின் சில கறுப்பு ஆடுகளும் எந்த வகையிலாவது இஸ்லாத்தை இதில் சம்பந்தப்படுத்த பெருத்த முயற்சி எடுத்து வருகின்றனர்.

நான் மீண்டும் சொல்கிறேன்: இது போன்ற கொலைகளை செய்தது ஃபோலீஸ் பக்ருதீனும், அவனது கூட்டாளிகளுமாக இருக்கும் பட்சத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அதைத்தான் முஸ்லிம்களும் விரும்புகின்றனர். தமிழக முஸ்லிம்கள் என்றுமே தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. ஆனால் யாரையோ காப்பாற்ற இவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி அப்பாவிகளுக்கு சிறை தண்டனை பெற்று தந்தால் நம் தமிழக காவல்துறையின் மீதும் நீதித் துறையின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பர். முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவாராக....

மேலும் தினமலரும், தின மணியும் தினம் ஒரு பொய் செய்திகளாக போட்டு வருவதால்தானோ என்னவோ தற்போது 'தமிழ் தி இந்து' வின் பக்கம் பெரும்பாலோரின் பார்வை திரும்பியுள்ளது. சமீப காலமாக தினமலரின் சர்குலேஷன் குறைந்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பார்த்தேன். இப்படியே பொய் செய்திகள் தின மலரில் தொடர்ந்தால் பார்ப்பனர்களும், இந்துத்வாவாதிகளும் மட்டுமே படிக்கும் ஒரு பத்திரிக்கையாக மதிப்பிழக்கும் அபாயம் உள்ளது. அதை நாமும் வரவேற்போம்.. :-)

-------------------------------------------------------
புதிய தலைமுறை பிடிபட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி தருகிறது.



ஆனால் ஒரு மாலைப் பத்திரிக்கையோ அந்த செய்தியை எப்படி கொடுத்துள்ளது பாருங்கள். இதுதான் இந்திய ஊடகத் துறை....




Saturday, August 31, 2013

திறந்த வெளி விசாரணை தேவையா?



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போது மூன்று தமிழர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதைப் பற்றிய விவாதம் இந்த காணொளியில் காணக் கிடைக்கிறது. இந்த மூவரும் உண்மையிலேயே ராஜீவ் கொலையில் பங்கெடுத்திருந்தால் தூக்கில் இடப்பட வேண்டியவர்களே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராஜீவோடு சேர்ந்து 15 பேருக்கு மேல் இந்த குண்டு வெடிப்பில் இறந்துள்ளார்கள்.

இந்த விவாதத்தில் திரு சுப வீர பாண்டியன் ஒரு அழகிய கருத்தை வைக்கிறார். அதாவது ராஜீவ் கொலை வழக்கில் அனைத்து விசாரணையில் உள் அரங்கிலேயே வைத்து ஏன் செய்கிறீர்கள்? திறந்த வெளியில் வைத்து விசாரித்து அந்த விசாரணையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் காவல் துறை தவறு செய்தால் அதை மக்கள் கண்டு கொள்வார்கள். அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கும் நிலைமை மாறுமே என்கிறார்.

மிகச் சரியான கருத்து. இந்த முறையை பின் பற்றி அனைத்து குற்றவாளிகளையும் விசாரணை கைதிகளையும் விசாரித்தால் ஆளும் வர்க்கத்தில் உள்ள பல கருப்பு ஆடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம். ஆனால் ஆளும் வர்க்கம் இதற்கு சம்மதிக்காது. விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்ற ஒற்றை பதிலே இவர்களிடமிருந்து வரும்.

பொது அரங்கில் வைத்து விசாரித்து அதை ஒளிப்பதிவும் செய்து அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட கேஸ் விஷயமாக மேலும் பல தகவல்கள், பல உண்மைகள் பொது மக்களிடமிருந்து வர வாய்ப்புள்ளது. இது நடைபெறும் வழக்கு சரியான திசையில் செல்ல உகந்ததாக இருக்கும். அந்த குற்றவாளியை இயக்கியவர்கள் யார் என்பதும் பொது மக்கள் மூலமாகவே காவல் துறைக்கு தெரிய வரும்.

தற்போது என்ன நடக்கிறது?

சமீபத்தில் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பின் நிறுவனர் என்ற பெயரில் யாசின் பட்கல் என்ற இளைஞனை அதுவும் நேபாளில் வைத்து கைது செய்துள்ளது காவல் துறை. இந்த கைது பற்றி யாசினின் தந்தை சொல்வதைப் பார்ப்போம்.

யாசின் 1983-ம் ஆண்டு பத்கல் கிராமத்தில் பிறந்து அங்கேயே 10-ம் வகுப்பு வரை படித்தான். ஆனால் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் சென்ற யாசின் திரும்பி வரும்போது, 2007-ம் ஆண்டு திடீரென்று காணாமல் போய்விட்டான். இதுக்குறித்து துபாய் போலீஸிடம் முறையிட்டோம். நாங்களும் யாஸினை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் பயன் இல்லை.

அதன் பிறகு யாசின் தான் புனே குண்டுவெடிப்பை நிகழ்த்தினான் என்றும் அவன் இந்திய முஜாஹிதீனின் நிறுவனர்களில் ஒருவன் எனவும் உளவுத்துறை கதைகளை பரப்பி வந்தது.’
என அவர் தெரிவித்துள்ளார்.

இனி அடுத்து ஒரு செய்தி வந்துள்ளது. அதையும் பார்ப்போம்...

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02


இதில் உளவுத் துறை எந்த அளவு தனது கைவரிசையைக் காட்டியுள்ளது என்பது தெரியும். ஓய்வு பெற்ற முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு மார்க்கண்டேய காட்ஜூ 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பே உளவுத் துறை உருவாக்கிய ஒன்று என்று சில மாதங்களுக்கு முன்பு உண்மையை போட்டு உடைத்தார். தற்போது உளவுத் துறையால் உருவாக்கிய இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு ஒரு நிறுவனரையும் நமது உளவுத் துறையே ஏற்படுததியுள்ளது. இந்த விசாரணை மட்டும் பொது மக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் நடைபெறுமானால் கண்டிப்பாக உளவுத் துறையின் கருப்பு ஆடுகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும். ஆனால் ஆளும் வர்க்கத்தோடு கை கோர்த்து செயல்படும் உளவுத் துறையை மாட்டி விட ஆளும் வர்க்கமும் மசியாது. ஏனெனில் நாட்டில் நிர்வாகத்தில் அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப இவர்களுக்கு உளவுத் துறை பல வகைகளில் உதவி வருகிறது.

நாட்டின் நாணய மதிப்பு அதள பாதாளத்துக்கு செல்கிறது. அரசால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. மக்களின் கொந்தளிப்பு ஒரு பக்கம். திடீரென்று ஒருநாள் 'இந்தியன் முஜாஹிதீன்' நிறுவனர் கைது' என்ற செய்தி தலைப்புகளில் வரவே அனைவரும் நாட்டின் பண வீக்கத்தை மறந்து விட்டோம். எல்லோரும் யாசின் பட்கலைப் பற்றியே தற்போது பேசிக் கொண்டிருக்கிறோம். இது தான் நமது அரசாங்கங்கள் செய்து வரும் ராஜதந்திரங்கள். முன்பு பிஜேபி ஆட்சியில் இதே போன்று அரசை நோக்கி மக்களின் கோபம் திரும்பிய போது என்றோ சரண்டரான அப்சல் குருவை வைத்து நாடாளு மன்ற தாக்குதல் நாடகம் நடத்தப்பட்டது. அன்றும் இதே போல் அனைத்தையும் மறந்து அப்சல் குருவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். இது தொடர்கதை....

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் ராணுவ ரகசியங்களை தவிர்த்து மற்ற அனைத்து வழக்குகளையும் பொது அரங்கில் வைத்து விசாரிக்க வேண்டும். அன்றுதான் அப்சல் குரு, அஜ்மல் கசாப், யாசின் பட்கல் போன்ற உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுவது நிற்கும். இவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள். ஆனால் இந்த அநியாயங்களை அரங்கேற்றியவர்கள் அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு ராஜ நடை நடந்து நம் கண் முன்னேயே வருகிறார்கள்.

இதுதான் இந்திய ஜனநாயகம்.....





Friday, August 30, 2013

அஃப்சல் குரு, அஜ்மல் கசாப், அடுத்த இலக்கு யாசின் பட்கல்!



பொய்யே உன் மறு பெயர்தான் உளவுத் துறையா?

ஆச்சரியமாக கைதாகப்படும் அனைத்து தீவிரவாதிகளும் இந்து நாடான நேபாளத்திலேயே என்ற செய்தி எந்த அளவு உளவுத் துறை கச்சிதமாக தங்களின் காரியத்தை இதுவரை சாதித்து வருகிறது என்பதை தெளிவாக்குகிறது.

இனி நியூ இந்தியாவில் வந்த செய்தியை கீழே பார்ப்போம்.

இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் யாசின் பட்கல், போலி என்கவுண்டரில் பலியாகாமல் உயிரோடிருப்பது மிகுந்த நிம்மதியை தருவதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து யாசின் பட்கலின் தந்தை ஜரார் சித்திபாபா கூறும்போது; ‘காணமல் போன எனது மகன் யாசினை, போலி என்கவுண்டர் மூலம் போலீசார் சுட்டுக்கொன்று விடுவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தோம். ஆனால் தற்போது யாசின் கைதாகி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.

இந்திய நீதித்துறையின் மீது எங்கள் குடும்பம் முழு நம்பிக்கை வைத்து இருக்கிறது. நீதி விசாரணையில் உண்மை வெளிவரும்.

யாசின் குற்றவாளி என்றால் தண்டிக்கப்படட்டும் அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் யாசின் அப்பாவி; ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் அப்பாவிதான்.

யாசின் 1983-ம் ஆண்டு பத்கல் கிராமத்தில் பிறந்து அங்கேயே 10-ம் வகுப்பு வரை படித்தான். ஆனால் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் சென்ற யாசின் திரும்பி வரும்போது, 2007-ம் ஆண்டு திடீரென்று காணாமல் போய்விட்டான். இதுக்குறித்து துபாய் போலீஸிடம் முறையிட்டோம். நாங்களும் யாஸினை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் பயன் இல்லை.

அதன் பிறகு யாசின் தான் புனே குண்டுவெடிப்பை நிகழ்த்தினான் என்றும் அவன் இந்திய முஜாஹிதீனின் நிறுவனர்களில் ஒருவன் எனவும் உளவுத்துறை கதைகளை பரப்பி வந்தது.’ என அவர் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02

அஹ்மத் சித்திக் என்கிற பெயரை யாசீன் பட்கல் என்று மற்றியது இண்டெலிஜென்ஸ் ஏஜென்ஸிகள் என்று அஹ்மத்தின் உறவினரும் பெங்களூருவில் வழக்கறிஞராக பணி புரியும் அக்மல் ரஸ்வி தெரிவிக்கிறார்.
1983 ஆம் ஆண்டு பிறந்த அஹ்மத்தை 1973 ஆம் ஆண்டு பிறந்தார் என காவல் துறை கூறி வருகிறது.1990 ஆம் ஆண்டு புனேவிற்கு சென்றார் என்று இண்டெலிஜென்ஸ் பீரோ குற்றம் சாட்டும்போது அஹ்மத்திற்கு வயது வெறும் 7. பத்தாம் வகுப்பு கூட வெற்றி பெறாத அஹ்மத்தை இஞ்னியரிங் பட்டதாரியாக சித்தரித்தும் பல குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரி என்றும் சித்தரிக்கிறது உளவுத்துறை.
2004 ஆம் ஆண்டு அஹ்மத்தை அவருடைய தந்தை துபாய்க்கு அழைத்து சென்ற போதும் 6 மாதத்தில் திரும்பி வந்துவிட்டார்.
மீண்டும் 2005 ஆம் துபைக்கு சென்ற அஹ்மத் 2007 ஆம் ஆண்டு முதல் காணாமல் போய்விட்டார்.
குண்டு வெடிப்புகள் நடைபெற்ற இடங்களில் அஹ்மத் குண்டுகளை பொறுத்தும் சி.சி.டி..வியில் பதிவாகி இருக்கிறது என்று காவல் துறை கூறுகிறது.
ஆனால் அதனை இதுவரை வெளியிடாமல் மறைத்து வைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையில் தீவிரவாதிகள் அனைவரும் இந்திய நேபாள எல்லையில் தொடர்ந்து கைதாகும் மர்மம் என்ன?
இவர்கள் எப்படி நேபாள் எல்லை வருகை தருகிறார்கள்?இதனில் ஒளிந்திருக்கும் மர்மத்தை அரசு பொதுமக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றன.அரசுக்கு ஏதேனும் சிக்கலான தருணம் ஏற்படும் போது சொல்லி வைத்தாற் போல் தீவிரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். என்றும் அரசு இதனை தெளிவு படுத்த வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாசீன் பட்கலுக்கு தொடர்பு உண்டு என்று உளவுத்துறையும் காவல் துறையும் கூறிவரும் குண்டுவெடிப்புகள் பலவற்றிலும் முன்னர் கைது செய்யப்பட்ட அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக காவல் துறை குற்றத்தை நிறுப்பிக்க போதுமான ஆதாரங்களை தர இயலாமல் நீதிமன்றங்களில் தொடந்து கண்டனங்களை பெற்று வரும் வேளையில் புலனாய்வு பத்திரிக்கையான ‘குலைல் டாட் காம்’ என்ற இணைய தள ஆசியர் ஆஷிக் கேதான் குற்றத்த்திற்க்கு தேவையான ஆதாரங்களை காவல் துறை போலியாக உருவாக்கி அப்பாவி இசுலாமியர்களை வழக்குகளில் சிக்க வைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.இதனை அடிப்படையாக கொண்டு காவல் துறைக்கும் உளவு துறை அமைப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்திருக்கிறார் என்பதும் தவறு செய்த காவல் துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வழக்கை நடத்தி வருக்கிறார் என்பதும் குறிப்பிடபட வேண்டிய முக்கிய செய்தியாகும்.

வழக்கு தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் வசம் சென்றுள்ளது.யாசீன் பட்கலிடம் என்.ஐ.ஏ விசாரனை மேற்கொண்டு வருகிறது,முன்பு இதுபோல் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பல அப்பாவி இசுலாமியர்களின் விடுதலைக்கு என்.ஐ.ஏ ஆற்றிய பங்கு சிறிது ஒன்றும் அல்ல.வழக்கை என்.ஐ.ஏ விசாரனை செய்யட்டும் உண்மைகள் வெளிவரட்டும்..



----------------------------------------------------

பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

http://dinamani.com/tamilnadu/2013/08/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80/article1760548.ece

-Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/31/tamilnadu-dindigul-bjp-functionary-arrest-bomb-hurled-his-own-house-182455.html

இதே வேளையை சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்திருந்தால் அனைத்து ஊடகங்களும் ஒரே குரலில் இஸ்லாத்தின் மீது சேற்றை வாறி இறைக்க ஆரம்பித்திருக்கும். ஊடகம் முஸ்லிம்களிடம் குறிப்பிடும்படியாக இல்லையாதலால் இந்த நிலை. இனியாவது இஸ்லாமிய உலகம் விழித்துக் கொள்ளுமா!

Thursday, August 29, 2013

மேலப்பாளையம் நெல்பேட்டை முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ் ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர் யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.



சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.



உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.



மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றாரை இலட்சம் முலிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.



மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.



‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதாமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.



சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.



மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.



முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.



நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.



சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச்ச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.



யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்ப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை. மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.



கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.



பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.



பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.



முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.



எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.



மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரனைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையாம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

கட்டுரை ஆக்கம்:

சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ்

---------------------------------------------------------------------

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ புத்தகம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 'யாதுமாகி' பதிப்பகத்தில் கிடைக்கும்.

யாதுமாகி பதிப்பகம், 2, முதல் தெரு, வேலவர் காலனி, மகாராஜா நகர், திருநெல்வேலி -627 011

வெளியீடு : யாதுமாகி பதிப்பகம்,
37/17, ராமசாமி கோயில்
சன்னதி தெரு,
திருநெல்வேலி - 627 002

பேசி : 0462 - 4000285
பேசி : 94434 86285

Sunday, April 14, 2013

யாதும் ஊரே யாவரும் கேளீர்!

யாதும் ஊரே யாவரும் கேளீர்!

//Anonymous said...

"இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்." பரவாயில்லையே//

இந்த அனானி சகோதரருக்கு ஒரு முஸ்லிம் தமிழகத்தை நேசிப்பதும், தமிழ் மொழியை நேசிப்பதும், பாரத நாட்டை நேசிப்பதும் ஆச்சரியமாக தெரிகிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அந்த அளவு ஊடகங்கள் நமது மக்களை மூளை சலவை செய்து வைத்துள்ளன.


என்னைப் பொருத்த வரை இனம் மொழி கடந்து அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடியவன். அவன் ஆரியனோ, திராவிடனோ, அராபியனோ, ஐரோப்பியனோ, ஆப்ரிக்கனோ யாராக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் ஆதமுடைய மகன். என்னுடைய சகோதரன். அதே போல் இந்த உலகம் அதிலும் இந்த பூமிப் பந்தை உண்டாக்கியது இறைவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவன். இதனால் உலக நாடுகள் அனைத்தையுமே நான் நேசிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா என்று எந்த கண்டத்து நாடுகளையும் நான் விரோதமாக பார்க்கவில்லை. ஏனெனில் அத்தனை கண்டங்களையும் படைத்து பரிபாலிப்பது என்னைப் படைத்த இறைவனே!

அதே போல் உலக மொழிகள் அனைத்தையுமே நான் ஒரே தரத்திலேயே வைத்து பார்க்கிறேன். ஏனெனில் இந்த உலக மொழிகள் அனைத்தையும் மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காக இறைவனே மனிதனுக்கு அருளினான் என்று குர்ஆன் கூறுவதால் உலக மொழிகள் அனைத்துமே எனது சகோதர மொழிகளே! தேவ மொழிகள் என்று தனித்து பிரிக்கச் சொல்லி இஸ்லாமும் எங்கும் சொல்லவில்லை. எனவே எனக்கு மொழி வெறியும் கிடையாது.

அதே நேரம் நான் பிறந்த மண்ணான இந்திய தேசத்தையும், எனது தாய் மொழியான தமிழையும் மற்ற நாட்டையும் மொழிகளையும் விட சற்றே அதிகமாக நேசிக்கிறேன். காரணம் பிறந்த மண்ணை நேசிப்பதும், தாய் மொழியை நேசிப்பதும் நமது ரத்தத்திலேயே காலகாலமாக ஊறி விட்டதனால் இந்த நேசிப்பு வருகிறது. நான பிறந்து வளர்ந்து ஆளாகி எனக்கென்று ஒரு அடையாளத்தை தருவதனால் நான் பிறந்த மண்ணை நேசிப்பது இயல்பாகவே வந்து விடக் கூடிய ஒன்று.

அதே நேரம் இந்த நேசம், பாசம் மற்ற நாடுகளையும், மொழிகளையும், இனங்களையும் வெறுக்கும் அளவுக்கு சென்று விடக் கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். இந்த இடத்தில்தான் பலரும் தவறு செய்து விடுகின்றோம். ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் முஸ்லிம் அல்லாதவர்களை ஒதுக்கி வாழ வேண்டும்: அல்லது ஒரு இந்துவாக வாழ வேண்டுமானால் இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கை இல்லாதவர்களோடு அந்நியனாக பழக வேண்டும் என்று ஒரு மாயை தவறாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளுக்கு எப்படியோ.....பல மத இனங்கள் இணைந்து வாழும் நமது பாரத தேசத்துக்கு இந்த கொள்கையானது மிக ஆபத்தானது.

இஸ்லாம் இந்தியாவுக்கு சொந்தமான மதமல்ல...இந்து மதமே இந்தியாவுக்கு சொந்தமானது என்ற கருத்து பரவலாக விதைக்கப்படுகிறது. சொல்லப் போனால் நமது இந்திய நாட்டுக்கென்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்த மதமோ மார்க்கமோ இருந்திருக்க வில்லை. வரலாறு பதியப்பட்ட காலம் தொட்டு கடந்த 2000, 3000 வருடங்களாக நமது நாட்டின் வரலாறுகளை தோண்டிப் பார்த்தோமானால் எங்குமே அமைதி நிலவியதாக சரித்திரங்களை பார்க்க முடியவில்லை. யாருக்கெல்லாம் படை பலமும், ஆள் பலமும் இருந்ததோ அவர்கள் அனைவரும் அந்தந்த காலங்களில் நமது நாட்டை ஆண்டிருக்கின்றனர். எனவே ஒரு குழுவோ, ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது ஒரு மார்க்கமோ நமது பாரத நாட்டுக்கு உரிமை கொண்டாட முடியாது.

நமது நாட்டில் பல மார்க்கங்களாக இருந்த பல சாதிகளை ஒன்றாக்கி இன்று இந்து மதம் என்ற பொது மதத்தை காட்டுகின்றனர் சில இந்துத்வாவாதிகள். 'நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இதை இந்து ராஷ்டிரமாக அறிவிப்போம்' என்று அறிக்கைகளும் விடுகின்றனர். இந்த இந்து மதத்துக்கு பூரண உரிமை கொண்டாடுபவர்கள்..நம் தேசத்திலே இரண்டு அல்லது மூன்று சதவீதமே இருக்கும் பார்ப்பணர்கள். இவர்களில் தீவிர எண்ணம் கொண்ட அத்வானி, மோடி, மோகன் பகவத், போன்ற பலர் இஸ்லாம் இந்த மண்ணுக்கு அந்நியமானது. எனவே இந்த மண்ணின் சொந்த தயாரிப்பான இந்து மதத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்று தினமும் எங்காவது ஒரு இடத்தில் சொல்லி வருகின்றனர். இந்து மதம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எந்த அளவு ஒரு இட்டுக்கட்டப்பட்ட வாதம் என்பதும், அத்வானி போன்ற ஆரியர்களின் பூர்வீகம் எந்த நாடு அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதன் வரலாற்று ஆய்வுகளை கீழே தருகிறேன். படித்து தெளிவு பெறுவோம்.

-----------------------------------------------------------------


மாஸ்கோ: ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.



பிபிசி தொலைக்காட்சியில் 'Tracking The Aryans' என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர். அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.

ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை 'விசிட்டிங்' பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://timesofindia.indiatimes.com/world/europe/4000-year-old-Aryan-city-discovered-in-Russia/articleshow/6683681.cms?intenttarget=no

http://www.thehindu.com/news/international/4000yearold-aryan-city-discovered-in-russia/article812961.ece

http://www.dailymail.co.uk/sciencetech/article-1317362/Europe-begins-Cities-built-swastika-painting-Aryans-remote-Russian-plains.html

http://tamil.oneindia.in/art-culture/essays/2010/4-000-year-old-aryan-city-discovere-russia.html

Tuesday, April 02, 2013

மார்க்கத்தை சொல்லும் வழி முறை இதுதான்!



இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் சினிமா மோகத்திலும், இசையிலும், பெண்களிடம் சில்மிசம் செய்வதிலும் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனம் போன போக்கில் நடந்து கொள்கின்றனர்.இதற்கு மாற்றமாக நான் கீழே பகிரப் போகும் செய்தியையும் பார்த்து விடுவோம்.

அமெரிக்க கல்லூரிகளில் கல்வி பயிலும் சவுதி மாணவர்களில் ஒரு பிரிவினர் தங்களின் ஓய்வு நேரத்தில் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளை அந்நாட்டு மக்களுக்கு விளக்கும் அரிய பணியை தற்போது செய்து வருகின்றனர். 'கருணையின் தூதுவர்' என்ற தலைப்பில் ஒரு குழுவாக நபிகள் நாயகத்தின் பெருமைகளை மாற்றாருக்கு விளக்க முன் வந்துள்ளனர். முகமது நபி அவர்களின் பொன் மொழிகளை பொது மக்களுக்கு இலவசமாக வினியோகித்து தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக கழிக்கின்றனர். நபிகள் நாயகம் எவ்வளவு சிறந்த சகிப்புத் தன்மையோடு அன்பும் பாசமும் கொண்டவராக திகழ்ந்தார் என்பதை மாற்றாரும் அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது. இந்நிகழ்வானது அமெரிக்காவோடு நின்று விடாமல் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து என்று பரவலாக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது. பிரசாரத்தோடு தங்களின் அன்பை வெளிக்காட்ட அனைத்து மக்களுக்கும் இந்த மாணவர்கள் ரோஜா மலர்களை தருகின்றனர். துப்பாக்கிகளோடும், வெடிகுண்டுகளோடும் இஸ்லாமிய இளைஞர்கள் உலகம் முழுவதும் அலைகின்றனர் என்று அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் நமது இந்திய ஊடகங்கள் தினமும் பொய்ப்பிரசாரம் செய்து வருவதை நாம் அறிவோம். இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக 'எங்கள் கைகளில் துப்பாக்கிகளோ, வெடிகுண்டுகளோ இல்லை. அன்பை ஞாபகப்படுத்தும் ரோஜா மலர்களே உள்ளது' என்று அந்த இளைஞர்கள் அவதூறு பிரசாரத்துக்கு பதில் சொல்வது போல் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

அமெரிக்க நகரங்கள் மற்றும் ஐரோப்பிய நகரங்கள் அனைத்திலும் கேளிக்கை விடுதிகளுக்கு குறைவிருக்காது என்பது நமக்கு தெரியும். அங்கெல்லாம் இவர்களின் கவனம் செல்லாமல் உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பும் இந்த இளைஞர்களை நாமும் வாழ்த்துவோம். இவர்களுக்கு துணையாக பல டாக்டர்களும், இன்ஜினீயர்களும் இந்த பிரசாரத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்வுகள் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் மாணவர்களின் சொற்பொழிவுகளையும் புத்தகங்களையும் இன்முகத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.


Saudi students studying in the US on scholarship launched a campaign titled “Prophet of Mercy” in Times Square in the New York City, where the events of Sept. 11 took place. The purpose of the campaign is to define and provide knowledge about the Holy Prophet (peace be upon him).

The campaign was prepared by their collective efforts and funded by each one of them out of love for the Prophet Muhammad (Peace be upon him). Students distributed roses, each of which was attached to a Hadith of the Prophet (peace be upon him) written in English. The campaign was held in the United States, as well as in Canada, Australia, New Zealand and England. In New York, more than 1200 roses were distributed to tourists in Times Square. The students intended to express values of love and peace. More than 15 students participated in the distribution during the campaign.

According to online news portal Sabq, the campaign received a significant positive reaction from tourists and those in the region. Many tourists encouraged the students with smiles and words of gratitude for their campaign as it contributed to the promotion of peace and love among people. Many people returned to the distribution sites to inquire about the campaign and about the Prophet Muhammad (peace be upon him).

Others insisted on taking photographs and filming via their mobile phones in order to publish the pictures on networking sites and spread the idea more broadly and to define the campaign. Most of the Saudi participants in the campaign are doctors, engineers and students of higher degrees.

Monday 1 April 2013 - Arab News

இது ஒரு வகையான பிரசாரம். இதற்கு மாற்றாக நம் நாட்டிலும் இந்துத்வா வாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். சமீபத்தில் பிரவீன் தெகாடியா உதிர்த்த அழகிய வார்த்தைகளை பார்ப்போம்.

-----------------------------------------------------

ஆமதாபாத்:குஜராத் மாநிலம் 2015ல் இந்து மாநிலமாக வி.எச்.பி., அறிவிக்க உள்ளது என அதன் சர்வதேச செயற்குழு தலைவர் பீரவீண் தொகாடியா நேற்று நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அதாவது குஜராத்தில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களில் விஷ்வ இந்து பரிஷத் ஆதரவாளர்கள் பெருகிவிடுவார்கள் என்பதால் 2015ல் குஜராத் மாநிலம் இந்து மாநிலமாக வி.எச்.பி. , அறிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=679924

குஜராத் மாநிலத்தை வரும் 2015 ஆம் ஆண்டு இந்து மாநிலமாக அறிவிக்கப் போவதாக தீவிரவாத இயக்கமான விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.

இந்துக்களின் முன்னேற்றம் என்ற கோஷத்துடன் விஸ்வ இந்து பரிஷத் நேற்று புதிய இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. வரும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பின் பொன் விழாவையொட்டி குஜராத்தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அவருக்கும் தொகாடியாவுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் VHP தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில்...

இன்னும் இரண்டு ஆண்டுகளில் குஜராத்தின் 18,000 கிராமங்களிலும் விஎச்பியின் கிளைகள் துவக்கப்படும். 2015 ஆம் ஆண்டில் குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம். இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்துக்களின் பாதுகாப்பும், இந்துக்களின் வளர்ச்சியும் இந்துக்களின் கையில் தான் உள்ளது. அவர்கள் முழு இந்துக்களாக மாற வேண்டும், தீவிர இந்துக்களாக மாற வேண்டும். அப்போது தான் ராமர் கோவிலை நம்மால் கட்ட முடியும். இந்துக்களின் தலைவர்களை எங்களது தலைவர்களாக அங்கீகரிப்போம் என்றார்.

நரேந்திர மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் பிரதமராக கனவு காணலாம் என்றார் தொகாடியா.

பாஜகவின் உயர்மட்ட நாடாளுமன்றக் குழுவில் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம். இது குறித்தெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்றார்.

விஎச்பியின் செயலாளர் வினாயக்ராவ் தேஷ்பாண்டே பேசுகையில்...

குஜராத்தில் நமது இயக்கத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் 10,000 கமிட்டிகள் இருந்தன. இப்போது அது 6,000 மாக குறைந்துவிட்டது என்றார்.

இந்தக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜாக்ருதியும் கலந்து கொண்டார். இவரது மரணத்துக்கு மோடியை ஜாக்ருதி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளதாம். நமது பாரத தேசத்தின் வருங்காலத்தை நினைத்தால் பரிதாபப்படத்தான் வேண்டும்.

மோடி தலைமையில் ஒருகால் ராமராஜ்யம் அமைந்தால் நமது தமிழக கடைத் தெருக்களும் இவ்வாறு மாறி விடுமோ என்ற அச்சம் வருகிறது.



இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் எனது நாட்டை.....

Friday, January 25, 2013

விஸ்வரூபத்தால் ஆஸ்கார் வராது! ஆஸ்துமாதான் வரும்!

// அப்படியே கமல், இஸ்லாமை எதிர்த்து படம் எடுத்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சனை? மத நம்பிக்கைக்களை கேள்வி கேட்பதே தவறு என்ற நிலையை அல்லவா இஸ்லாமியர்கள் உருவாக்க முயல்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில், ஒரு "Da Vinci code" நூல் வரமுடியுமா? அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள்? மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.//

இது நண்பர் கணேசனின் பின்னூட்டம். "முஸ்லிம்கள் விமர்சனத்தையே எதிர்க்கிற சுபாவம் உடையவர்கள்" என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். இன்று உலகம் முழுவதும் மேலும் இணைய தளம் முழுவதுமே இஸ்லாத்துக்கு எதிரான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ஊடகங்கள் ஒரு சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரித்தால் அதன் பலன் எது வரை கொண்டு விடும் என்பதற்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் சில சம்பவங்களை அனுபவித்திருப்போம். முன்பு இவர்களால் ஊடகம் கைகளில் இருந்தால் இஸ்லாமியர்களைப் பற்றிய அவதூறுகளை சபை ஏற்ற முடிந்தது. எதிர்த்து பதில் கொடுக்க முஸ்லிம்களிடம் எந்த ஒரு ஊடகமும் இல்லை. இன்று வரை அதுதான் நிலை.

ஆனால பத்திரிக்கை, டிவி, சினிமா போன்ற ஊடகங்கள் முஸ்லிம்களிடம் தற்போதும் இல்லை என்றாலும் இணையம் என்ற மகத்தான தகவல் தொடர்பு சாதனம் ஒரு நொடியில் பல லட்சக்கணக்கான மக்களிடம் செய்திகளை சேர்ப்பித்து விடுகின்றது. இத்தனை காலம் இவர்கள் முஸ்லிம்களைப் பற்றி பரப்பி வந்த அவதூறுகள் வரிசையாக சரிந்து வருவதை பார்தது மனம் நொந்து போய் உள்ளார்கள். அந்த ஆற்றாமையால் வரக் கூடிய வார்த்தைகளே விமரிசனத்தை எதிர்க்கிறோம் என்பது.

நாம் என்று விமரிசனத்தை எதிர்த்தோம். தமிழகத்தில் எந்த ஒரு மதமாவது முஸ்லிம்கள் நடத்தும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியைப் போன்று எங்காவது நடத்தியதுண்டா? தமிழகத்தின் அனைத்து மாவடடங்களின குக் கிராமங்களை கூட விட்டு விடாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்துக்களும் கிறித்தவர்களும் நாத்திகர்களும் எவ்வளவு கோபம் வரக் கூடிய கேள்விகளைக் கேட்டாலும் புன் சிரிப்பு மாறாது முஸ்லிம்கள் தரப்பு பதிலளித்துக் கொண்டிருக்கிறது. கேள்வி கேட்பவரிடம் என்ன கேள்வி என்று முன்பே கேட்டு வாங்கிக் கொள்வதும் இல்லை. இந்த அளவு அனுமதி கொடுக்கப்பட்டு தமிழகத்தில் எங்காவது வேறுமதங்கள் நிகழ்ச்சிகளை நடத்தியது உண்டா? 'இந்து ஓர் இனிய மார்க்கம்' அல்லது 'கிறித்தவம் ஓர் இனிய மார்க்கம்' அல்லது 'நாத்திகம் ஓர் இனிய மார்க்கம்' என்று நிகழ்ச்சிகளை நீங்கள் எங்காவது நடத்தியது உண்டா? உங்களால் இவ்வளவு சுதந்திரமாக மாற்று மதத்தவர்களை கேள்வி கேட்க வைக்க முடியுமா? அவர்கள் வைக்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லத்தான் முடியுமா? அத்தனை இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் மறுஒலிபரப்பும் செய்யப்பட்டு உலக மெங்கும் நிகழச்சிகள் போய் சேருகின்றன. தீவிரவாதம், குழந்தை திருமணம், ஜிஹாத், பலதார மணம், முகமது நபி பல திருமணங்கள் செய்தது, தற்போது உலகில் நடக்கும் குண்டு வெடிப்புகள், இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகள் என்று ஒன்று விடாமல் ஹிந்துக்களையே கேள்விகள் கேட்க வைத்து நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோமே எங்களைப் பார்த்தா சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்கிறீர்கள்?

//எண்ணெய் வற்றினால், இங்கே மத்வாதிகளின் தொந்தி வற்றினால் எல்லாம் நின்று பழைய மாதிரி அப்துல் சம்து,லத்தீப் காலம் போல் திரவிடம் பேசி அமைதியாகி விடுவார்கள். //

அடுத்து இது சார்வாகனின் பிதற்றல். லத்தீப், சமது காலங்களில் முஸ்லிம்களிடம் கல்வியறிவு இல்லை. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. வீட்டுக்கு ஒரு பட்டதாரி வருடந்தோறும் வந்து கொண்டிருக்கிறார். சொத்தை விற்றாவது குழந்தைகளை படிக்க வைக்கும் மனப்பாங்கு முஸ்லிம்களிடம் தற்போது உள்ளது. இனியும் திராவிடம் பேசியோ, நோன்பு கஞ்சி குடிததோ, மணி மண்டபம் கட்டியோ, மீலாது மேடைகளில் வீர வசனம் பேசியோ இஸ்லாமியர்களின் ஓட்டை வாங்க முடியாது.

மேலும் எண்ணெய் வளம் இருக்கும் வரைதான் இந்த வஹாபிய எழுச்சிகளெல்லாம். எண்ணெய் தீர்ந்து விட்டால் வஹாபியமும் படுத்து விடுமாம். சார்வாகனுக்கு வரலாறு தெரியவில்லை என்பதால் நாம் அவர் மேல் கோபம் கொள்ள முடியாது. இஸ்லாமிய வரலாறு மிக எழுச்சியாக இருந்த காலமெல்லாம் முஸ்லிம்கள் வறுமையில் இருந்த காலங்களே! இரண்டு பேரிச்சை மழங்களை தின்றும், காய்ந்த இலைகளை கசக்கி தண்ணீரில் நனைத்து குடித்தும் வாழ்ந்த காலங்களில் இஸ்லாம் எழுச்சியோடு இருந்தது. என்று அரபு நாடுகளில் பெட்ரோல் வந்து பணம் புழங்க ஆரம்பித்ததோ அன்று இஸ்லாம் தனது எழுச்சியை சிறிது இழக்க ஆரம்பித்தது. சார்வாகன் சொல்வது போல் அரபு நாடுகளில் பெட்ரோல் தீர்ந்தால் தவ்ஹீது (வஹாபி) இயக்கம் முன்னை விட மிக வீரியமாக தனது செயல்பாடுகளை உலகமெங்கும் கொண்டு வரும்.

யாருக்குமே கையில் பணம் இருந்தால் வம்பு தும்புக்கு போகாமல் தனது சொத்துக்களை காக்கவே முயற்சிப்பர். அதுதான் இன்று உலக ரௌடி அமெரிக்காவுக்கு கேட்பதை கொடுக்கும கட்டாயத்துக்கு சில நாடுகள் தள்ளப்படுகின்றன.

அடுத்து இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதுதான் நமது குறிக்கோள் என்று பொய்யான பரப்புரையை பலர் பரப்பி வருகின்றனர். இஸ்லாமிய ஆட்சி அமைப்பது என்பது ஒரு முஸ்லிமுக்கு இடப்பட்ட கட்டளை அல்ல. ஐந்து முக்கிய கடமைகளில் இஸ்லாமிய ஆட்சி அமைப்பதும் வராது. இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று பிரித்துக் கொண்டு போன பாகிஸ்தானின் இன்றைய நிலையை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். குர்ஆனோ, ஹதீதுதுகளோ இவ்வாறு ஆட்சி அமைக்கச் சொல்லி முஸ்லிம்களுக்கு கட்டளையும் இட வில்லை. யதார்த்தத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள நாடுகளை விட சிறுபான்மையாக உள்ள நாடுகளில்தான் முஸ்லிம்கள் தங்களின் கடமைகளை சரிவர செய்து வருவதைப் பார்க்கிறோம். எனவே இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்ற பீதி தேவையில்லாத ஒன்று.

//மிதவாதிகள் எப்போதுமே இவ்வாறான கடும்போக்கு கட்சிகளிடம் இருந்து விலகி நிற்பதே சாலச் சிறந்தது. இல்லை என்றால் மூளைச் சலவை செய்தும், போலி வாக்குறுதிகளைக் கொடுத்தும் பயன்களை அனுபவித்து விட்டு இயலாக் கட்டத்தில் நட்டாற்றில் அதோகதியாக விட்டுவிட்டு மறைந்துவிடுவார்கள். இன்றையக் காலக்கட்டத்தில் தமிழக முஸ்லிம்களுக்குத் தேவை தொலைநோக்கு சிந்தனையும், சமத்துவம், ஜனநாயகம் மீது நம்பிக்கைக் கொண்ட காயிதே மில்லத் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் தான். //

'ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்'. அது போல் முஸ்லிம்களின் அரசியல் எதிர் காலத்துக்கு இக்பால் செல்வன் ஆலோசனை வழங்குகிறார். அதிலும் தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற கட்சிகளில் சில ஆயிரம் பேர்தான் ஆதரவாளர்கள் என்று கூறுவதை இவரது சகாக்களான ராஜ நடராஜனோ, சார்வாகனோ கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு சிறிய போராட்டத்துக்குக் கூட எந்த ஆரவாரமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி விடுவதை நமது நாட்டு உளவுத் துறை நன்கு அறியும். கனடாவில் உட்கார்ந்து கொண்டு பொஃபேக்களில் தனது பைங்கிளிக்காக காத்துக் கொண்டிருக்கும் இக்பால் செல்வனுக்கு தெரிய வாய்ப்பில்லை அல்லவா! :-)

முஸலிம்கள் படிக்க ஆரம்பித்து விட்டார்கள், சிறந்த அரசியல் தலைமைகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறி வருகிறார்கள், சமீப காலமாக இந்து முஸ்லிம் ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இன விடுதலை அடைய பெரியாரின் வழி காட்டுதலான இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஆதிக்க சாதிகளக்கு பொருக்குமா? இந்துத்வாவுக்கு பொருக்குமா!

எனவே சார்வாகன் என்ற பெயரிலும், இக்பால் செல்வன் என்ற பெயரிலும், நச்சுப் பாம்புகள் படமெடுத்து வருகிறது. விஷப் பல்லை எந்த ரீதியில் பிடுங்கி சமூகத்தில் அமைதியை கொண்டு வருவது என்பது முஸ்லிம்களுக்கும் இந்து நடுநிலையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அதை கச்சிதமாக செய்தும் முடிப்பர்.

விஸ்வரூபம் போராட்டத்துக்கு பிறகாவது நமது சென்சார் துறை சற்று விழித்துக் கொண்டு இது போன்ற பிரச்னைக்குரிய படங்களை வெளியிடுவதை தடை செய்ய முன்வர வேண்டும். இஸ்லாமியரகளை எதை சொன்னாலும் பொருத்துக் கொண்டு செல்வார்கள் என்ற காலம் மலையேறி விட்டது. இடைக்காலத் தடை இந்த படத்துக்கு வந்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு தனது படத்தை கமல் வெளியிட்டுக் கொள்ளட்டும். அமெரிக்காவை புகழ்ந்தும் முஸ்லிம்களை இகழ்ந்தும் பட்ம் எடுத்தால் ஆஸ்கார் உடனே கிடைத்து விடும் என்று இந்த உலக நாயகனுக்கு யாரோ சொல்லியிருப்பார்கள் போல. அதான் இந்த அம்பி அவசப்பட்டுடுத்து.

'முற்போக்கு பேசும் வைதீகன் மிக ஆபத்தானவன்' என்று முன்பு பெரியார் சொன்னது தற்போது ஞாபகத்தில் வருகிறது.

அவதூறுகளை படமாக எடுத்தால் ஆஸ்கார் வராது அம்பி! படம் நஷ்டமாயிடுத்தே என்று ஆஸ்துமாதான் வரும்! :-) இனி பார்த்து சூதனமா நடந்துக்கோ...வர்ட்டா...

டிஸ்கி: சில வேலைகள் காரணமாக இரண்டு நாள் இணையத்தின் பக்கம் வரமுடியவில்லை. உடன் போனிலும், மெயிலும் பல நாடுகளிலிருந்து 'என்ன ஆச்சு பாய்! உடம்பு சரியில்லையா' என்று அன்போடு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி! நலமுடன் உள்ளேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!




Sunday, December 30, 2012

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்


கடுமையான பசியோடு ‘அம்மா…சாப்பாடு ரெடியாயிடுச்சா..’ என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ஹஸன்! ‘கொஞ்சம் இருப்பா! மழையில இந்த உரியா மட்டை நனைஞ்சு போயிடுச்சு. அடுப்பு பத்த மாட்டேங்குது. இப்போ சரி பண்ணிடறேன்” என்று சொல்லிக் கொண்டே அடுப்பில் தனது வாயால் ஊத ஆரம்பித்தார் தாய் ஆமினா. தனது தாய் அடுப்பு பத்த வைக்க படும் சிரமத்தை பார்த்துக் கொண்டே தனது பள்ளி சீருடைகளை களைய ஆரம்பித்தான் ஹஸன்.

ஹஸன் அரசு பள்ளிக் கூடத்தில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். வறுமையான குடும்பம. தாய் ஆமினா வீட்டு வேலை முடிந்த கையோடு அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பாத்திரங்கள் தேய்த்து கொடுப்பதும் வீடுகளை பெருக்கி கொடுப்பதுமாக மேலதிக வேலையை செய்து வந்தார்.

திண்ணை இணைய இதழுக்காக நான் எழுதிய சிறுகதை. படித்துப் பாருங்கள். முடிந்தால் கருத்தையும் பகிருங்கள்.


http://puthu.thinnai.com/?p=17335

--------------------------------------------------


வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.

ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.

இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.

சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.

நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.

கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!
நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.

மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.

நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.

- முனைவர் வசந்திதேவி

சக்தி பிறக்கும் கல்வி என்ற நூலில் இருந்து-பக்-111

Wednesday, December 19, 2012

டெல்லி கற்பழிப்புகள் தொடராமல் இருக்க என்ன வழி?

டெல்லி கற்பழிப்புகள் தொடராமல் இருக்க என்ன வழி?

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, 23 வயது மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது. இதில் இரு அவைகளில் பெண் எம்.பி.க்கள் கொந்தளித்து போயினர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசத்துடன் பேசினர். நேற்று காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. ‌எனினும் முக்கிய பிரச்னையாக டில்லி கற்பழிப்பு சம்பவம் குறி்த்து எம்.பி.க்கள் பேசினர்.

ஜெயா பச்சன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கணம் விக்கித்து நின்று கண் கலங்கி விட்டார். இந்த சபையில் நின்று பேசவே வெட்கப்படுவதாகவும் சொன்னது அனைவரையும் உலுக்கி விட்டது. சுஷ்மா சுவராஜ் ஒரு படி மேலே போய் அவர்களை தூக்கில் இட வேணடும் என்று கோரிக்கை வைத்தார். அந்த குற்றவாளியின் தந்தையும் அந்த கயவனை தூக்கில் இட்டாலும் பரவாயில்லை என்று சொல்லியுள்ளார். இந்த மிருகங்களுக்கு உச்சபட்ச தண்டனை எதுவோ அதனை அரசு கொடுக்க வேண்டும்.

இந்நிலையில் நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..



அஸ்ஸாமில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை இந்த காணொளி விவரிக்கிறது. இவ்வளவு தெளிவாக ஆதாரம் கிடைத்தும் சம்பந்தப்பட்ட குண்டர்களை இந்த அரசு என்ன செய்திருக்கும்? இந்த அளவு பத்திரிக்கைகள் அந்த செய்தியை பிரபல்யப்படுத்தியிருக்குமா என்பது கேள்விக் குறியே? இது போன்று இரு அளவு கோல்களை நாம் கடைபிடிப்பது சமூகத்தில் முதலில் மாற வேண்டும்.

நீதியதி மார்க்கண்டேய கட்ஜூ

சம்பவம் குறித்து மார்கண்டேய கட்ஜூ கூறுகையில், "டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்திற்காக, பார்லிமென்ட்டிலும், நாட்டிலும் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள், கண்டனக்குரல்கள், இதே விஷயம் இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் நடக்கும் போது ஏன் எழுப்பப்படுவதில்லை. டில்லி மட்டுமே இந்தியா அல்லவே.

விதர்பா, ஆந்திரா ஆகிய இடங்களில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையில் நாடு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நான் பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தவில்லை. இந்திய தண்டனை சட்டம் 376ன் படி பாலியல் பலாத்காரத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் ஏன் மரண தண்டனை வேண்டும் என கேட்கிறார்கள் என்பது எனக்கு புரிய வில்லை. அதே நேரத்தில் இது மட்டுமே நாட்டின் பிரச்னை அல்ல. இந்தியாவில் அனைத்து பிரச்னைகளுக்கு ஒரே சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் எவ்வளவோ பேர் நாட்டில் உள்ளார்கள். விலைவாசி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கும் இதே போன்ற முக்கியத்துவத்தை அளித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட வேண்டும்" என தெரிவித்தார்.

சபாஷ் கட்ஜூ! உங்களைப் போன்றவர்கள்தான் தற்போது இந்த நாட்டுக்கு தேவை. தினம் தினம் இந்தியாவின் கிராமப்புறங்களில் எத்தனையோ இளம் பெண்கள் கற்பழிப்புக்கும், தீண்டாமைக்கும் உள்ளாகி தினம் செத்து மடிகின்றனர். அங்கெல்லாம் செல்லாத அல்லது கண்டு கொள்ளாத மீடியாக்கள் டில்லியை மட்டும் ஏன் முன்னிலைப் படுத்த வேண்டும்? டெல்லி மட்டும் தான் இந்தியாவா? இங்கு காட்டும் அக்கறையில் பாதியையாவது கிராமப் பகுதிகளிலும் காட்டினால் நமது நாடு என்றோ நிமிர்ந்திருக்கும்.

இதில் மற்றொரு புறத்தையும் நாம் பார்க்க வேண்டும். இரவு 11 மணிக்கு தன்னந்தனியாக வேறொரு ஆடவனுடன் அந்த பெண் ஏன் ஊர் சுற்ற வேண்டும். கேட்டால் காதல் கத்தரிக்காய் என்று சொல்வீர்கள்? தற்போது அந்த மாணவியின் நிலைக்கு யார் பொறுப்பேற்பது? பெற்றவர்களும் வயது வந்த பெண்ணைப் பற்றி எந்த கவலையும் படாமல் தண்ணி தெளித்து விட்டு விடுவதும் முக்கிய காரணம். மேலும் இளம் பெண்கள் சினிமா நடிகைகளைப் பார்த்து அது போன்று உடை அணிய ஆரம்பித்ததும் ஒரு காரணமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் கண்ணியமாக உடை அணிந்து தக்க பாதுகாப்புடன் தந்தை அண்ணன் போன்றவர்களுடன் சென்றால் தவறு செய்ய எவருக்கும் துணிவு வராது. எனவே கூடிய வரை பெண்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் கண்டவனுடன் ஊர் சுற்றாமல் கண்ணியமான உடை அணிந்து தக்க பாதுகாப்போடு வெளியே வந்தால் 90 சதவீதமான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.


தலை அலங்காரம் தேவைதான். அதற்காக இப்படியா பயமுறுத்தறது......

தாய்மை இழிவாக்கப்பட்டால் அந்த சமூகமே இழிவாகி விடும். எனவே தங்களின் பொருப்புணர்ந்து பெண்களும் நடந்து கொள்வார்களாக!

இது போன்ற பாலியல் குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதனை இந்த சம்பவத்துக்கு பிறகாவது நமது பாராளுமன்றம் பரிசீலனக்கு எடுத்துக் கொள்கிறதா என்று பார்ப்போம்.

----------------------------------------------------


(சீரியஸான பதிவை படிச்சுட்டு அதே சீரியஸோட போனா எப்புடீ....அதான் கொஞ்சம் தமாசுக்கு.....)


Thursday, November 08, 2012

இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியமா?


இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியமா?



தற்போது ரவி ஸ்ரீவாசனின் கைது பிரதானமாக பேசப்படுகிறது. கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ட்விட்டரில் அவதூறு பிரசாரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் நாட்டின் பிரதம மந்திரியின் அடுத்த ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுபவரான ப.சிதம்பரத்தின் மகனை பற்றி ட்விட்டரில் ஒரு விஷயத்தைப் பதியும் போது அது உண்மைதானா என்று தெரிந்து கொண்டல்லவா பதிந்திருக்க வேண்டும்? நாட்டின் மிக முக்கியமான குடும்ப உறுப்பினரைப் பற்றி அவதூறாக ஒரு செய்தி வெளியிடும் முன் யோசித்திருக்க வேண்டாமா?. தற்போது பிபிசி எந்த ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு ட்விட்டை பகிர்ந்தீர்கள் என்று கேட்கும் போது அவரால் நேரிடையான பதிலை சொல்ல முடியாது தடுமாறுகிறார்.

எனக்கு ட்விட்டரில் 16 ஃபாலோயர்தான் அப்போது இருந்தனர். இந்த பிரச்னைக்கு பிறகு 800க்கு மேல் ஃபாலோயர்கள் வந்துள்ளதாக சொல்கிறார். பிளாக்கரிலும் கூட ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல அவதூறு செய்திகளை தெரிந்தே வெளியிடும் பல பதிவர்களைப் பார்க்கிறோம். இதனால் அந்த தளத்தின் நம்பகத் தன்மையையும் இழக்கின்றனர் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. சம்பந்தப் பட்டவர்களும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எந்த ஒரு செய்தியையும் பதியும் போது அதற்குரிய ஆதாரத்தை வைத்துக் கொண்டு நாம் செய்தி வெளியிட்டால் பின்னால் வரக் கூடிய பிரச்னைகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

சுப்ரமணியம் சுவாமி தனது தம்பியோடு பேசி 'கவலைபடாதீர்கள் நாங்கள் இருக்கிறோம்' என்று சொன்னதாக வேறு சொல்கிறார். ஆக செய்த தவறை ஒத்துக் கொண்டு இனி அவ்வாறு நடைபெறாது என்று சொல்வதற்கு பதில் அந்த தவறை எப்படியாவது பூசி மெழுகவே பார்க்கிறார்.

அதேபோல் பல பதிவர்களும் ஆபாச படங்களை வெளியிடுவது, ஆபாச கதைகளை வெளியிடுவது என்று சகட்டு மேனிக்கு எழுதிக் குவிக்கிறார்கள். இந்த இணையத்தை பல வயதுடையவர்கள் சிறுவர்கள், குடும்பத்து பெண்கள் என்று அனைவரும் வலம் வருகிறோம். இதை உணர்ந்து நமது பதிவர்கள் ஆபாசமாக எழுதுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

அதே போல் மத சம்பந்தமாக அவதூறுகளையும் எழுதுவதில் பலர் தயங்குவதில்லை. சுப்ரீம் கோர்ட்டே தலையிட்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நமது ஊடகங்களின் நிலை இருக்கிறது. இணைய எழுத்தாளர்கள் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு தங்களின் கருத்துக்களை பதிய வேண்டும்.

நமது அரசு இணைய தளத்திற்கென்று சில விதி முறைகளை வகுக்க வேண்டும். கட்டற்ற சுதந்திரம் ஒரு மனிதனை எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும். எனவே தனி மனித நபர்களைப் பற்றி பிரசுரிக்கும் போது அதற்கான முக்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தால் பல அவதூறு பதிவுகள் வெளி வருவது தடுக்கப்படலாம். அதே போல் அநியாயமாக நிரபராதிகள் தண்டிக்க படுவதையும் தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

ரவி ஸ்ரீநிவாசின் பிபிசி பேட்டி



http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121105_twitterarrest.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

---------------------------------------------------------------------
.
வேலூரில் கடந்த அக்டோபர் 23 ந்தேதி மருத்துவ மனைக்கு அருகில் அரவிந்த ரெட்டி என்ற பாஜக உறுப்பினர் படுகொலை செய்யப்படுகிறார். காவல் துறை 'நிலம் சம்பந்தப்படட முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது' என்று சொல்கிறது. ஆனால் பாஜகவினரோ 'இந்த கொலை நாங்கள் வளர்வதை பொருக்காத இஸ்லாமிய இயக்கங்களால் நடத்தப் பட்டிருக்கலாம்' என்று இணையத்தில் சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள். தேர்தல் வேறு நெருங்குகிறது. பாஜக வை இந்த வகையிலாவது தூக்கி நிறுத்தலாம் என்பது இவர்களின் எண்ணம்.

இந்த இந்துத்வாவினர் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்யக் கூடியவர்கள். பொய்யான காரணத்தைக் கூறி பாபரி மசூதியை இடித்து ரத்த ஆறு ஓட விட்டனர். கோத்ராவில் நடந்த ரயில் விபத்தை 'முஸ்லிம்களின் சதி' என்று கூறி ரத்த ஆறு ஓட விட்டனர். மாலேகானில் குண்டு வைத்து முஸ்லிம்களை கொன்று அதற்கு காரணம் என்று அந்த ஊர் முஸ்லிம்களையே கைது செய்தனர். பிறகு ஹேமந்த் கர்கரே வந்து உண்மையை கண்டறிந்து சாது பிரக்யாசிங்கை உள்ளே தள்ளினார்.

தற்போது அரவிந்த ரெட்டி கொலையை மத சாயம் பூசி தமிழகத்தில் ஓட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது பிஜேபி. அதே போல் மேட்டுப் பாளையத்தில் ஆனந்த் என்பவர் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இவரும் பிஜேபி உறுப்பினர். இதுவும் முஸ்லிம்கள் வேலைதான் என்று பொய்யான காரணத்தை கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். கடைகளை மூடச் சொன்னதோடு அல்லாமல் அரசு பஸ்ஸையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.




இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வகையிலாவது கலவரத்தை உண்டு பண்ணி பிஜேபி யை வளர்க்க பார்க்கின்றனர். ஏனெனில் திராவிட இயக்கங்களினால் இந்துத்வா என்பது தமிழகத்தில் கானல் நீராக போய்க் கொண்டிருக்கிறது. மேல்சாதியினரின் ஆதிக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இழந்த அதிகாரங்களை அரசியல் மூலம் பெற இந்துத்வா துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக பிஜேபியை எப்படியாவது வளர்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. இது குஜராத் அல்ல. பெரியார் வாழ்ந்த தமிழகம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். இந்துத்வாவின் குள்ளநரித்தனங்களை தோல் உரித்துக் காட்டுவதில் முஸ்லிம்களை விட திராவிட இயக்கத்தினரே மும்முரமாக நிற்கின்றனர். நடுநிலையாளர்கள் திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு உரிய ஆதரவை நல்க வேண்டும். தமிழக முதல்வரும் இந்துத்வாவின் கோர முகத்தை உணர்ந்து அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Saturday, October 27, 2012

ஒரு துளி கடல் - குறும் படம்.

ஒரு துளி கடல் - குறும் படம்.



முஸ்லிம்களுக்கு எதிராக சினிமாத் துறை தொடர்ந்து எதிரான கருத்துக்களையே விதைத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க படம் ஒன்றும் முகமது நபியைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு அது பெரும் பிரச்னையாக உலகமெங்கும் பரவியதை நாம் அறிவோம். நம் தமிழக கூத்தாடிகளும் தங்கள் பங்குக்கு எந்த வகையிலாவது இஸ்லாத்தை இழித்து படம் எடுக்க தயங்குவதில்லை. அதில் விஜயகாந்த், அர்ஜூன், கமல ஹாஸன் போன்ற கூத்தாடிகள் முதலிடத்தில் இருப்பதை அறிவோம். தற்போது வெளி வர காத்திருக்கும் விஸ்வரூபமும் அது போன்ற சாயலிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. யார் எக்கேடு கெட்டாலும் இந்த கூத்தாடிகளின் கல்லா நிரம்ப வேண்டும். அதற்காக எதையும் செய்வார்கள்.

இதனை சட்டம் போட்டு தடுக்க முடியாது. அரசே ஆதரவாக செயல்படும்போது இதற்கு மாற்றாக உண்மைகளை நாமும் திரைப்படங்களாக கொண்டு வர வேண்டும். அந்த வகையில் 'ஒரு துளி கடல்' என்ற இந்த குறும்படம் சிறப்பாக வந்துள்ளது. புதியவர்களின் முதல் முயற்சி என்பதால் சில குறைகள் இல்லாமல் இல்லை. நாடகத்தனமாக சில காட்சிகள் வருகின்றன. இயல்பாக பேசுவது போல் காட்சிகள் அமைக்கப்பட வேண்டும். அந்த சிறுவன் பேசுவது கேமராவுக்கு முன்னால் பயந்து கொண்டே பதட்டத்தோடு பேசுவது போல் உள்ளது. கிராமத்தில் நடக்கும் காட்சிகளை படமாக்கும் போது அதில் பாமரத் தனமும் தெரிய வேண்டும். மேலும் கதைகள் அமைக்கும் போது குர்ஆனின் போதனைகளை ஒட்டியும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஒட்டியும் காட்சிகள் அமைக்கப்பட வேண்டும்.

இணையத்தில் இஸ்லாத்துக்கு எதிரான சதி வலைகளை ஓரளவு முறியடித்து விட்டோம். அதே போல் சினிமாத் துறையிலும் காலடி பதித்து அங்கு அரங்கேற்றப்படும் சதிகளை முறியடிக்க வேண்டும். அமீர் போன்ற இயக்குனர்கள் சிறந்த கதையம்சமுள்ள படிப்பினை ஊட்டும் திரைப்படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். டைரக்டர் அமீரைப் பொறுத்த வரை ஏற்கெனவே தவ்ஹீத் இயக்கத்தில் இருந்தவர். எனவே இஸ்லாமிய வரலாறுகளை ஓரளவு முறையாக தெரிந்தவர். எனவே குறும்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமீரின் ஆலோசனையையும் அவ்வப்போது கேட்டுக் கொள்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

குறும்படம் வெளியீடு நிகழ்வு

திரைப்பட இயக்குனர் அமீர் அவர்கள் குறும்படத்தின் முதல் பிரதியை வெளியிட கிரியேடிவ் கம்யூனிகேஷன் சென்னையின் துணைத்தலைவர் ஜி.அப்துர் ரஹீம் அவர்கள் பெற்று கொண்டார். இரண்டாம் பிரதியை திரைப்படத்தில் நடித்துள்ள வழக்கு எண் படத்தில் நடித்த ஜெயபால் அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியினை அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா அவர்கள் பெற்றுக் கொண்டார்.



அதன் பிறகு இயக்குனர் அமீர் வாழ்த்துரை வழங்கினார். முஹம்மத் நபி அவர்களை தவறாக சித்தரித்த திரைப்படத்திற்கு திரைப்படத்தின் மூலம் பதில் சொல்லியுள்ள இக்குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்களை நான் பாராட்டுகின்றேன். வருகின்ற காலங்களில் இதை விட தரமான குறும்படங்கள் அதிகமதிகம் இயக்கப்பட வேண்டும் அதற்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்று இயக்குனர் அமீர் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு அதன் வாயிலாக இஸ்லாத்தின் நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதன் பிறகு இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்டின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் அமீர் அவர்களை வரவேற்று, ஒரு துளிக்கடல் குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்கள் சிறப்பாகவும், குறுகிய காலத்திலும் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார் அவருக்கு இறைவன் அதிகமதிக கூலியை கொடுக்க வேண்டும் என்றார். இன்றைய காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வரக்கூடிய எதிர்ப்புகளை அமைதியாகவும், நிதானமாகவும் கையாள வேண்டும். ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை தீர்வாகாது. எந்த காலத்திலும் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், வளர்ச்சியையும் தடுக்க முடியாது. இது போன்ற தவறான திரைப்படங்கள் மூலமாக ஒரு காலத்திலும் முஹம்மத்(ஸல்) அவர்களின் மகத்துவத்தை யாராலும் தடுக்க முடியாது. தீமையை நன்மையை கொண்டே தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்..
-----------------------------------------------------------------------

மில்லி கெஜட்டை மீட்டெடுப்போம் வாருங்கள்!

இன்று நமது நாட்டில் முஸ்லிம்களின் குரலை கொண்டு செல்ல சிறந்த ஊடகங்கள் மிக அரிதாகவே உள்ளது. 170 மில்லியன் முஸ்லிம்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் மில்லி கெஜட் தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. 13 வருடங்களுக்கு முன் 16 பக்கங்களை கொண்ட இதழாக வந்ததை 32 பக்கங்களாக மாற்றினர். பல சிறந்த இஸ்லாமிய எழுத்தாளர்கள், மாற்றுமத நண்பர்கள் என்று பலர் இந்த பத்திரிக்கைக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்.

இதன் எடிட்டரான ஜபருல் இஸ்லாம் தற்போது இந்த இதழ் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பக்கங்களை பழைய படி 16 க்கு குறைக்கலாமென்றும் அல்லது இதழையே நிறுத்தி விடலாம் என்ற நோக்கிலும் உள்ளதாக குறை பட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் சிறுபான்மையினர் ஒரு பத்திரிக்கை அதுவும் ஆங்கிலத்தில் நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்குத் தெரியும். பிராந்திய மொழிகளில் வரும் பத்திரிக்கைகள் உலக அளவிலோ அல்லது ஒட்டு மொத்த இந்தியாவையோ அடைய முடிவதில்லை.

ஒரு இந்தியன் எக்ஸ்பிரஸேர், ஒரு ஹிந்துவோ தங்களின் எண்ணத்தை வெகு விரைவில் முழு உலகுக்கும் முழு இந்தியாவுக்கும் சில மணி நேரங்களில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பல பொய் செய்திகள் உலகை அழகாக வலம் வருகின்றன. உண்மை ஒரு ஓரத்தில் ஒதுங்கி உட்கார்ந்து விடுகிறது.

இந்த நிலை ஏற்படாமல் தடுக்க நாம் இதன் சந்தாதாரர் ஆவோம். நமது சொந்தங்களுக்கு இதன் சந்தாக்களை நாம் கட்டி அவர்களை சென்றடைய செய்வோம். மாற்று மத நண்பர்களுக்கு நமது சந்தாக்களை அளிப்போம்.

எத்தனையோ அநாவசிய செலவுகள் செய்து வரும் நாம் மிக குறைந்த தொகையான இந்த சந்தாக்களை பலருக்காகவும் கட்டி ஒடுக்கப்பட்ட இனத்தவர், இஸ்லாமிய மற்றும் உலக செய்திகளை பலரும் படிக்க உதவி புரிவோம்.

"we are now in the 13th year yet incurring serious losses month after month. We are thinking of two options: either to close down or to further reduce our pages to 16 pages per issue which will further restrict our ability to cover the issues of our community (we had 32 pages/issue which we reduced to 24 pages some time back)."

எடிட்டரின் கடிதம்

http://www.milligazette.com/pages/subscribe

எவ்வாறு சந்தாக்களை அனுப்புவது....

http://www.milligazette.com/misl/subs-faqs-mg.htm

உங்களது சந்தேகங்களுக்கு.......

http://www.milligazette.com/

பத்திரிக்கையை பார்வையிட.....

Saturday, October 06, 2012

காமிக்ஸ்களின் காலங்களுக்குச் செல்வோமா!


காமிக்ஸ்களின் காலங்களுக்குச் செல்வோமா!

ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்புகளெல்லாம் படிக்கும் காலங்களில் காமிக்ஸ் பைத்தியமாக திரிந்தேன். அதிலும் முத்து காமிக்ஸ் வெளியிடும் புத்தகங்கள் அனைத்தும் மிக அருமையான கதைகளைக் கொண்டிருக்கும். இதில் வரும் ஹீரோக்கள் பலராக இருந்தாலும் எனக்கு பிடித்த ஹீரோ 'இரும்புக் கை மாயாவி' தான். இதற்காக இவர்கள் வரைந்து வெளியிடும் படங்களும் தத்ரூபமாக இருக்கும். வீட்டில் செலவுக்கு கொடுக்கும் சில்லறை பணங்களை எல்லாம் சேமித்து முத்து காமிக்ஸ் வாங்க பயன் படுத்திக் கொள்வேன்.





நண்பர்கள மத்தியிலும் இதனை சுற்றுக்கு கொடுத்து அவர்களிடம் உள்ள மற்ற புத்தகங்களை இரவல் வாங்கியும் படிப்போம். ராணி காமிக்ஸ் என்று பல பெயர்களில் வந்தாலும் முத்து காமிக்ஸூக்கு ஈடாக இதுவரை தமிழில் புத்தகங்கள் வரவில்லை என்றே நினைக்கிறேன்.

காசு கொடுத்து வாங்கி கட்டுப்படியாகவில்லை என்று எங்கள் ஊர் அரசு லைபரரியில் மெம்பராக சேர்ந்தேன். நுலகத்தின் உறுப்பினர் எண் 451. இன்றும் எனக்கு அது ஞாபகம் இருக்கிறது. அங்கு கணக்கிலடங்காத சிறுவர் புத்தகங்கள் காமிக்ஸூகள் என்று அடுக்கி வைத்திருந்தனர். ஒரு பத்தகம் விடாமல் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். கொஞ்சம் பெரியவன் ஆனதும் தமிழ்வாணனின் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். சங்கர்லால் என்ற பெயரில் தமிழ்வாணன் எழுதிய அழகு தமிழில் வ்ந்த அனைத்து கதைகளையும் ஓரளவு படித்து விட்டேன்.

இன்னும் சற்று பெரியவனான பிறகு மு வரதராசனார் கதைகளுக்கு ரசிகனானேன். கல்லோ காவியமோ, கரித்துண்டு போன்ற பல நாவல்கள் முவ வின் கை வண்ணத்தில் மிக அநாயசமாக கதையின் ஓட்டம் செல்லும். அப்பொழுதெல்லாம் வீட்டில் ஒரு மர்ஃபி ரேடியோ ஒன்று மட்டுமே இருக்கும். அதிலும் அதிகம் இலங்கையின் அழகு தமிழில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்பதும் சிறந்த பொழுது போக்கு. அதை விட்டால் மாலை நேரங்களில் பள்ளி விளையாட்டு திடலில் பேட் மிட்டன் விளையாடுவதும் எனது வழமையான பழக்கங்களில் ஒன்று. அப்போது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். விளையாட்டில் எனக்குள்ள ஆர்வத்தைப் பார்த்த எனது தாத்தா என்னை திருச்சிக்கு அழைத்துச் சென்று புதிய பேட் ஒன்றை எனக்கு பரிசாக வாங்கித் தந்தார். வலங்கைமான் பள்ளி சார்பாக சென்று ஜெயித்து வந்த சமயம் அது.

இன்னும் சற்று பெரியவனான போது சுஜாதாவின் எழுத்துக்கு ஒரு மாதிரியாக அடிமையாகவே ஆகி விட்டேன் என்று சொல்லலாம். எங்கள் வீட்டுக்கு அந்த காலத்திலிருந்தே கல்கண்டும், ஆனந்த விகடனும் தொடர்ந்து வரும். விகடனில் தொடராக வந்த கரையெல்லாம் செண்பகப்பூ வையும் கனவுத் தொழிற்சாலையும் ஒரு வாரம் விடாமல் தொடர்ந்து படித்து வந்தேன். அதன் பிறகு இன்னும் பெரியவன் ஆனபோது சுஜாதாவின் அறிவியல் சம்பந்தமான கணிணி சம்பந்தமாக கதைகள் கேள்வி பதில்கள் போன்றவற்றை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் அறிவியல் தொடர்கள் முதலில் சற்று புரியாமல் இருந்தாலும் சில காலத்துக்குப் பிறகு விளங்க ஆரம்பித்தது. பெண் எழுத்தாளர்களில் சிவசங்கரி, லெஷ்மி, போன்றவர்களின் கதையும் புஷ்பா தங்கதுரையின்(இவர் ஆண்) கதைகளையும் விரும்பி படிப்பதுண்டு.

தற்போது புத்தகம் படிக்கும் பழக்கமெல்லாம் போய் கிடைக்கும் ஓய்வு நேரங்கள் எல்லாவற்றையும் இணையமே எடுத்துக் கொண்டு விடுகிறது. அன்று இரும்புக் கை மாயாவில் ஆரம்பித்த படிக்கும் பழக்கம் இடையில் சுஜாதாவிடம் வந்து இன்று மற்றொரு இரும்பு மனிதரான பி..ஜெய்னுல்லாபுதீனிடம் வந்து நிற்கிறது. இனி வரும் காலத்தில் யாருடைய எழுத்தைப் படிக்கப் போகிறேனோ அது இறைவன் கையில் உள்ளது. சரிதானே!

---------------------------------------------------

பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணம் ? - Big Bang

ஒரு புரோட்டன் என்பது எத்தனை சிறியது ? அதன் 'ட்'டன்னாவின் புள்ளியின் பரிமாணத்தில் 500,000,000,000 புரோட்டான்களை அடக்க முடியும். அல்லது ,ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு எத்தனை செக்கண்டுகள் உள்ளனவோ, ஏறத்தாழ
அத்தனை புரோட்டான்களை அடக்க முடியும்.




இந்த புரோட்டனை 100 கோடி பாகமாக்கினால் ஏற்படும் அவ்வளவு சிறிய இடைவெளியில் , ஒரு அவுன்ஸ் மேட்டர் என்னும் பருப்பொருளை அடைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கத் தயார் !

பரிமாணமற்ற அத்தனை சிறிய இடத்தில் பிரபஞ்சத்தின் அத்தனை பருப்பொருள்களின் சாத்தியங்களும் அடர்ந்திருந்த அந்த ஆரம்பக் கணத்தை 'ஒருமித்த கணம்' (சிங்குலாரிட்டி singularity ) என்கிறார்கள். அதிலிருந்து ,காரணமின்றி திடீரென அத்தனை சக்தியும் வெடித்துச் சிதறிப் பரவியது.

-சுஜாதா

அதெப்படி காரணமின்றி வெடித்து சிதறும் என்பதை சுஜாதா விளக்கவிலலை. விளக்க ஆரம்பித்தால் இறைவனின ஆற்றலை ஒத்துக் கொண்டது மாதிரி ஆகி விடும். :-)

.