Followers

Monday, January 26, 2015

பாலிவுட் நடிகர்கள் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு



இந்து மகா சபையின் வார இதழான ‘இந்து சபா வார்தா’ தலையங்கத்தில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர்கான், சயீப் அலிகான், ஃபர்தீன் கான், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் மனைவிகளை நேசிப்பது உண்மை யானால், அவர்களை திரும்பவும் இந்துக்களாக மாற்றவேண்டும்.

முஸ்லிம் நடிகர்களுக்கு ஜோடியாக இந்து நடிகைகளை நடிக்கச் செய்யுமாறு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிர்பந்தம் அளிக்கப்படுகிறது. முஸ்லிம் நடிகர்கள், இந்து கதாபாத்திரங்களில் இந்து நடிகைகளுடன் நடிப்பதை பார்க்கும் இந்துப் பெண்கள், முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துகொள்வதை ஒழுக்கக் கேடாக கருதுவதில்லை. இவர்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் இளைஞனை தங்கள் ஆதர்ச நாயகனாக பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் காரணமாகவே இந்துப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்வதை இயல்பானதாக கருதுகின்றனர். லவ் ஜிகாத்துக்கு இந்த முஸ்லிம் நடிகர்கள் தூண்டுகோலாக இருக்கின்றனர். இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வார இதழின் ஆசிரியர் முன்னா குமார் சிங்கை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த முஸ்லிம் நடிகர்கள் தங்கள் மனைவிகளை நேசிக்கிறார்கள் என்றால், பிறகு ஏன் தங்கள் மனைவிகளை முஸ்லிம்களாக மாறச் செய்து இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றச் செய்தனர்?இந்தப் பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் முஸ்லிம் குடும்பப் பெயர்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இப்பெண்கள் தங்கள் (இந்து) குடும்பப் பெயர் களையே வைத்துக்கொள்ள ஏன் அனுமதிக்க கூடாது?” என்றார்.

தமிழ் இந்து நாளிதழ்
25-01-2015

இந்து பெண்களை இதை விட அசிங்கமாக வேறு எவரும் கேவலப்படுத்த முடியாது. ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பது இவர்களைப் பொறுத்த வரை சரியாக பொருந்தி போகிறது. அமீர் கானோ, ஷாருக் கானோ அல்லது சய்யீஃப் அலி கானோ இஸ்லாத்துக்கு அத்தாரிட்டி கிடையாது. இவர்கள் அனைவரும் கூத்தாடிகள். பணம் கொடுத்தால் எந்த வேஷமும் கட்ட தயங்க மாட்டார்கள். இஸ்லாத்தை பின் பற்றும் ஒருவன் நாளொரு பெண்ணோடு அரை குறை ஆடையுடன் ஆடி சமூகத்தை சீரழிப்பானா? எனவே பெயரைத் தவிர்த்து இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு கூத்தாடியை திரையில் பார்த்து, அவனது பெயரை பார்த்து மயங்கி இந்து பெண்கள் முஸ்லிம் இளைஞர்களிடம் மயங்கி விடுகின்றனர் என்ற வாதமானது இந்திய பெண்களை எவ்வளவு கேவலமாக இந்த இந்துத்வாவினர் நினைக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்து மக்கள் இந்த வாதத்தை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க முன் வர வேண்டும். இஸ்லாமிய இளைஞர்கள் திட்டமிட்டு இந்து பெண்களை கவர்கிறார்கள் என்று முன்பு சொன்ன குற்றசாட்டு பொய் என்பதை இதன் மூலம் அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

தமிழ் திரைப்படத் துறையில் அனைவரும் ஹிந்து மத ஹீரோக்களே! இவர்கள் யாரையாவது பார்த்து முஸ்லிம் பெண்கள் இந்து மதத்துக்கு மாறுகின்றார்கள் என்று சொன்னால் பலரும் சிரிக்க மாட்டார்களா?

கூத்தாடிகளான சல்மான் கானையும், ஷாருக்கானையும், அமீர்கானையும் காட்டி எந்த முஸ்லிமும் பெருமைபட்டுக் கொள்ள மாட்டான். இவர்கள் குர்ஆனின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்தான் முஸ்லிம்களுக்கு பெருமை இருக்கிறது. இஸ்லாம் பிறப்பினால் ஒருவனுக்கு வருவதில்லை. அவன் வாழ்வதின் மூலமாகத்தான் இஸ்லாமியனாக பார்க்கப்படுகிறான்.

இந்து மதத்தை பூரணமாக பின் பற்றும் ஒருவன் எவ்வாறு தந்தை பெரியாரை காட்டி பெருமைபட்டுக் கொள்ள முடியாதோ அது போல்தான் இந்த சினிமா கூத்தாடிகளான கான்களை காட்டி எந்த முஸ்லிமும் பெருமைபட்டுக் கொள்ள முடியாது.

இந்து மதத்திலுள்ள வர்ணாசிர கொள்கைகளையும், மூடப் பழக்கங்களையும் முதலில் ஒழிக்க முற்படுங்கள். மத மாற்றங்கள் தானாக குறைய ஆரம்பிக்கும்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.


No comments: