'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, February 09, 2015
ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது! வாழ்த்துக்கள்.
பெரும்பான்மை இந்துக்களின் மன ஓட்டம் இந்துத்வாவுக்கு எதிராக உள்ளதையே டெல்லி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன. இனிமேலாவது வறுமையிலும் தீண்டாமையிலும் தினம் செத்து மடியும் பெரும்பான்மை இந்துக்களை அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர இந்துத்வா முயலட்டும். இதை விடுத்து இஸ்லாமியரிடத்தில் தொடர்ந்து மோதல் போக்கை கடை பிடித்தால் இந்துக்களே பிஜேபியை ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.
தனக்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது என்று படம் காட்டி வந்த டெல்லி இமாமின் ஆதரவை 'வேண்டாம்' என்று திருப்பி முகத்திலடித்து இன்று அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை வாழ்த்தி வரவேற்போம். இந்தியா முழுக்க இதன் தாக்கம் இனி வரும் தேர்தலிலும் ஒலிக்கட்டும். காவிகளின் கொட்டம் துடைப்பத்தால் அடக்கப்படட்டும்.
Labels:
'ஆம் ஆத்மி',
அரசியல்,
இந்தியா,
இந்துத்வா,
கார்ட்டூன்கள்,
நரேந்திர மோடி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பாஜகவை விளக்குமாற்றால் அடித்து விரட்டி குப்பையில் போட்ட டெல்லி மக்கள்: வைகோ.
டெல்லி: டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவை விளக்குமாற்றால் அடித்து விரட்டி குப்பையில் போட்ட டெல்லி மக்கள்:
வைகோ டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.
கோட்சேவுக்கு சிலை உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் மிகச்சரியான பாடம் கற்பித்துள்ளார்கள்.
எட்டே மாதத்தில் சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.
மவுனப்புரட்சி நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி.
டெல்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது.
நொறுங்கிய பாஜக
இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த டெல்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை டெல்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன.
பதவி விலகுவாரா மோடி
மக்கள் ஆதரவை இழந்துவிட்ட நரேந்திர மோடியின் மத்திய அரசு பதவி விலக வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் பெருமையை மேலும் உயர்த்த, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும்.
அசாதாரணமான நிலை
5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறதே என சிலர் கேட்கலாம். ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஒரு அசாதாரணமான நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பாசிச அடக்குமுறை இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து, ஆணிவேரை அறுக்கும் வேலையில் மோடி அரசின் முழு ஆதரவுடன் இந்துத்துவ சக்திகள் பாசிசத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வரும் அனைத்து அரண்களையும், குறிப்பாக மதச்சார்பற்ற தன்மையையும் நிர்மூலமாக்க பாரதிய ஜனதா கட்சியின் சங் பரிவாரங்கள் மூர்க்கத்தனமாகக் கொக்கரிக்கின்றன.
இதற்கு மேல் மத்திய அரசாக நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா அரசு நீடிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் பாசிச அடக்குமுறை நாட்களாகவே ஒவ்வொரு நாளும் கடக்கும்.
அறவழி போராட்டங்கள் எனவே நரேந்திர மோடி அரசு தானாக விலகாவிட்டால் அந்த அரசுக்கு எதிராக மக்களின் மவுனப்புரட்சியை முன்னெடுக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறவழியில் போராட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்துக் களங்களிலும் தொடர வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.com/news/india/vaiko-expresses-happy-over-the-defeat-bjp-delhi-polls-220692.html
Post a Comment