Followers

Sunday, November 10, 2013

குர்ஆனும் தாயுமானவரடிகளின் உவமையும்!



அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

குர்ஆன் 24:35

இறைவன் இங்கு ஒளியை நேரிய இஸ்லாமிய மார்க்கத்திற்கும், அதன்படி மனிதர்கள் செயல்பட வேண்டும் என்றும் உதாரணத்தின் மூலம் விளக்குகிறான். இதே உதாரணத்தை நமது தமிழ் சித்தர் பாடல்களிலும் ஆங்காங்கு பார்க்க முடிகிறது.

தாயுமானவடிகள் திருப்பாடல்கள் -1

9. பொருளியல்பு

கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ.



கையில் விளக்கினை ஏற்றிக்கொண்டு அவ்வெளிச்சத்தின் பின்னே சென்று தனக்கு வேண்டும் உலகியற் பொருள்களைக் காண்பார் போன்று, மெய்யுணர்வு என்று சொல்லப்படுகிற திருவருள் விளக்கை முன்வைத்து அவ்வருள் வெளிச்சத்தின் பின் சென்று மெய்ப்பொருளாம் இறைவனின் சீரிய வழிகாட்டுதலை அடைவது எந்நாளோ என்று தாயுமானவர் மிக உருக்கமாக பாடுகிறார்.

தமிழ்நாட்டில் நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றியும், இறைவனின் தன்மைகளைப் பற்றியும் மிக உயரிய கருத்தையே கொண்டிருந்திருக்கிறார்கள். பின்னால் வந்த கலாசார புரட்சியினாலும், ஆரியர்கள் போன்ற அந்நிய சக்திகளின் படையெடுப்பாலும் இறைவனைப் பற்றிய கொள்கைகளும் திரிந்து இன்று கண்டதையும் கடவுளாக்கும் நிலைக்கு தமிழன் சென்று விட்டான். தமிழ் பாடல்கள் பலவற்றை ஆராய்ந்தால் அங்கு ஏக தெய்வ கொள்கை பல பாடல்களில் ஊடுருவி வருவதைக் காணலாம்.

இனி வருங்காலங்களில் தமிழ் பாடல்களில் உள்ள ஏக தெய்வ கொள்கைகளை குர்ஆனோடு ஒப்பிட்டு சில ஆக்கங்களை தர முயற்சிக்கிறேன் இறைவன் நாடினால்......

Saturday, November 09, 2013

சவுதி இளைஞர்கள் தெரு கூட்டும் அதிசயம்!



சவுதி அரேபியா தற்போது தனது நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்கும் முகமாகவும், முறையான அனுமதியின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை முறைப்படுத்தவும் சில சட்டங்களை சமீப காலமாக கடுமையாக்கியிருக்கிறது. இதனால் புனித நகரங்களான மெக்கா மெதினாவில் தெருக்களை சுத்தம் பண்ண ஆட்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. சிலரது அடையாள அட்டைகள் இன்னும் புதிக்கப்படாததால் சட்டத்துக்கு பயந்து பல பங்களாதேசத்தவர் வேலைக்கு வரவில்லை.

ஆட்கள் வேலைக்கு வராததால் மதினாவின் தெருக்களில் குப்பைகள் அதிகமாக சேர ஆரம்பித்தன. இது தொடர்ந்தால் சுற்று சூழலுக்கு ஆபத்து நேரும் என்பதை உணர்ந்த தன்னார்வ தொண்டர்கள் அந்த குப்பைகளை அகற்றுவதில் ஈடுபட ஆரம்பித்தனர். தற்போது சவுதிகளும் தெருக்களை கூட்டி தங்கள் வீதிகளை அழகாக வைக்க முயற்சிப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

நமது நாட்டில் இது போன்ற வேலை செய்பவர்களை தோட்டிகள் என்று ஒரு சாதியாக ஒதுக்கி வைத்திருப்போம். இந்துக்களிலேயே அவர்களோடு திருமண உறவு முதற் கொண்டு எந்த உறவுகளை பேணாததைப் பார்க்கிறோம். அவர்களை கோவிலுக்குள்ளும் அனுமதிப்பதில்லை.

ஆனால் சவுதியில் அதே வேலை செய்து வரும் பங்களாதேசத்தவர்கள் ஒவ்வொரு நேர தொழுகையிலும் அதே சீருடையோடு பள்ளியில் தோளோடு தோள் உரசி நின்று தொழும் காட்சியை தினமும் பார்க்கலாம். இந்த சகோதரத்துவத்தை கற்பித்தது இஸ்லாம். அதனை நடைமுறை படுத்தியவர் நபிகள் நாயகம்.

பல கோடிகளுக்கு அதிபதிகளான இந்த இளைஞர்கள் தேவை ஏற்படும் போது களத்தில் இறங்கி எந்த வேலையையும் செய்யத் துணிவதற்கு இஸ்லாம் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

திருடாமல், பொய் பேசாமல், மற்றவர்களின் சொத்துக்களை அபகரிக்காமல் எந்த தொழிலையும் செய்யலாம்: அது கேவலம் இல்லை என்பதை இந்த இளைஞர்கள் நிரூபித்து வருகிறார்கள். நாம் கூட நமது தமிழ் நாட்டில் எதற்கெடுத்தாலும் அரசையே எதிர்பார்க்காமல் நம்மால் முடிந்த பொது வேலைகளை செய்து சுற்றுப் புறத்தை தூய்மையாக்க முயற்சிப்போமாக!

தகவல் உதவி

சவுதி கெஜட்

Friday, November 08, 2013

மோடியின் ராம ராஜ்யம் - சில தகவல்கள்.

இன்றைய கால கட்டத்தில் நமது நாட்டை ராமனை ஒரு உதாரண புருஷனாகவும், மனு தர்ம சட்டங்களை ஆட்சிஅதிகாரத்துக்கு பயன்படுத்தவும் பிஜேபியினர் முயன்று வருகின்றனர். ராமனை ஒரு கடவுளாக இந்துக்கள் நினைப்பது அவர்களின் மத சுதந்திரம் என்று நாம் ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களும் ராமனை ஒரு உதாரணமாக்க கொள்ள வேண்டும். இந்து தர்மத்தை சுவீகரித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் படுவதால் ராமாயணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே எப்படிப்பட்ட ராமனையும், ராமாயணத்தையும் மோடியின் தலைமையில் இவர்கள் இந்தியாவின் உதாரண புருஷனாக வைத்து ஆட்சி நடத்தப் போகிறார்கள் என்பதற்கு சில சான்றுகளை நாம் பார்ப்போம்.

ராமாயணம் - சில தகவல்கள்

திண்ணையில் திரு ஜெயபாரதன் அவர்கள் ராமாயணம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு ஷாலி அவர்கள் சில விளக்கங்களை கொடுத்திருந்தார். ஷாலி அவர்களது பின்னூட்டங்கள் வெகு சுவாரஸ்யமாக இருக்கும். நான் ரசித்த சில இடங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

வால்மீகி ராமாயணத்தின் படி சீதையின் கல்யாணத்தின்போது இராமனுக்கு வயது 12, சீதைக்கு வயது 6

தோஷாத் தாரக்தியாம்பதி
சிந்தையா மான தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா

வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.

“அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே

நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.

இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள்.

‘நப்ரமாணி கிரதப்மாணி
பால்யே பாலேன பீடிதஹ்”

ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே?

குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை… என்கிறாள். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் நடந்துவிட்டது என்று அறிய முடிகிறது.

ஜெயபாரதன் ஸார்! தற்போது வால்மீகி பர்ணசாலையில் இருக்கும் சீதாயணம் சீதா தேவியின் வயது எவ்வளவு ஸார்?

Don’t Ask Men’s Wage and Women’s Age. என்று சொல்ல மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.

------------------------------------------------

சகலகலா வல்லி ஷாலி அவர்களே,

இதற்குக் கணித மேதை ராமானுஜன் தேவையில்லை. உங்கள் கணக்குப்படி 18 வயதில் துவங்கி 14 வருடம் வனவாசம். பட்டாபிசேகம் [18+14]=32 வயதில். அதாவது வால்மீகி பர்ண சாலையில் சீதையின் வயது குறைந்தது 33.

சி. ஜெயபாரதன்

----------------------------------------------

பேராசிரியர்.கவிஞர்.ஜெயபாரதன் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி!

நமது கம்பன் காட்டும் ராமனும் சீதையும் இளம்பருவத்து இணையாக அல்லவா இருக்கிறார்கள்.ஆறு வயது சிறுமியைப்பார்த்து கம்பர் இப்படி பாடமுடியாதே? பாட்டை பார்ப்போம்.

என்ன அருநலத்தினால் இனையள் நின்றுழி
கண்ணோடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.

இத்துடன் விழி வீச்சு எங்கு போய் தாக்குகிறது என்பதையும் கம்பன் கூற மறக்கவில்லை.

நோக்கிய நோக்கு எனும் நுதிகொள்வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.

ஆக கம்பர் மற்றும் வேறு பல இராமாயணங்களில் சீதையின் வயது 17 இராமனின் வயது 16 ஆக பார்க்க முடிகிறது.கம்பர் வழியில் வயது கணக்கிட்டால் 17+12+13=42, சீதா தேவி அசோகவனத்து சிறையிலிருந்து மீண்டு வரும்போது வயது 43.

ஒரு முதிர் வயது கர்ப்பிணிப் பெண்ணை காப்பற்றுபவன் தான் மனுஷன்.கானகத்திற்கு விரட்டி அடித்தவன் மனுஷனே அல்ல!

ஆகவேதான் கூறுகிறோம் அவன் ஸ்ரீ இராமா அவதாரம் என்று.

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி
தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
தன் பாவம் இல்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை
ஊமை கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்
(‘ கொடி மலர்-1966.கவிஞர்.கண்ணதாசன்)

சீதையின் கற்பு குறித்து இங்கு பேசப்படுகிறது.இராவணன் சீதையை கவர்ந்து சென்றதன் காரணம் காமமுமல்ல,காதலுமல்ல. தன் தங்கை மீனாட்சி (அழகிய மீன் போன்ற கண்களை உடையவள்) சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான். சீதையின் அழகு ஒரு காரணமல்ல.ஏனெனில் இராவணனின் மனைவி மண்டோதரி பேரழகு மிக்கவள்.மண்டோதரி என்றாலே சிற்றிடையாள் என்றே பொருள்.அனுமன் முதலில் மண்டோதரியின் அழகைக் கண்டு இவள்தான் சீதையாக இருப்பாளோ என்று நினைத்தான்.மேலும் பஞ்சகன்னியர்கள் என்று சிறப்பாக அழைக்கப்படும் ஐந்து பெண்களில் மண்டோதரியும் ஒருத்தி. (அகலிகை,சீதை,தாரை,திரௌபதி,மண்டோதரி)

மேலும் இராவணன் ஒரு சிறந்த திரு நீறு அணியும் சிவ பக்தன்.பத்து தலை உடைய தசக்ரீவன்,இலங்கேஸ்வரன் என்ற சிறப்பு பெற்றவன்.இராவணேஸ்வரன்,திரிலோக அதிபதி என்னும் புகழுக்குரியவன்.தன் கடுமையான யாகத்தினால் எவராலும் வெல்லப்பட முடியாத சந்திரஹாச வாளை சிவனிடமிருந்து பரிசாகப் பெற்றவன்,அற்ப காதலுக்கோ, காமத்திற்கோ சீதையை தூக்கி வரவில்லை.ஆகவே சீதையின் கற்பு பற்றிய சிந்தனையே அவதூறானது.அற்பத்தனமானது.ஆனாலும் இராமன், உலைவாயை மூடலாம்,ஊர் வாயை மூடமுடியாது என்பதை உணரத்தவறியதால் ஊரைவிட்டு விரட்டிவிட்டான்.
சூர்ப்பனகையின் ஆசையை, காதலை ஏற்றுக்கொள்ள மறுத்து அவளை திருப்பி அனுப்பியிருந்தால் இராமாயணமும் இல்லை கானகமும் இல்லை.காது மூக்கை அறுத்து மூளி ஆக்கி அனுப்பிய கொடுமையின் எதிர் வினையே சீதையின் பிரிவு.

தன் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த இன்றைய வினோதினியின் முகத்தில் ஒரு தலை காதலனால் ஆசிட் வீசப்படுகிறது.அன்று ஒரு தலை காதலை ஏற்க மறுத்து காது மூக்கு அறுத்து அனுப்பப்படுகிறது.அட ராமா! இதுதான் ஒருதலை காதலுக்கு பரிசா? மோடி வகையறாக்கள் கூறும் இராமராஜ்யத்தில் இப்படித்தான் நடக்குமோ? இராம ஜெயம்! ஸ்ரீ இராம ஜெயம்! நம்பிய பேருக்கு ஏது பயம்?

ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தாலும்,அல்லது ஒரு பெண் ஒரு ஆடவனை ஒருதலையாக காதலித்தாலும் பெண்ணுக்கு மட்டுமே கிடைக்கும் பரிசு அன்றைய புராண காலத்தில் மூக்கறுபட்டு மூளியாதல். இன்றைய கலிகாலத்தில் அமில வீச்சில் முகம் அகோரப்படுதல்.இராம காவியத்தின் கதாநாயகி சீதா தேவியோ அல்லது கதையின் வில்லி சூர்பனகையோ எப்பெண்ணாக இருந்தாலும் இறுதியில் துன்பம் மட்டுமே அவர்களோடு துணைக்கு வரும். ஆணுக்கல்ல.
இதை கவிஞன் என்ன அழகாய் சொல்கிறான், பாருங்கள்.

“துன்பம் என்றும் ஆணுக்கல்ல,-அது
அன்றும் இன்றும் பெண்களுக்கே!
துள்ளித்துள்ளி நீ பாடம்மா சீதை(சூர்ப்பனகை)யம்மா-நீ
கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா!”

Monday, November 04, 2013

அன்றைய அரபுலகமும் இன்றைய இந்தியாவும்!

The message Tamil part-1

link: http://www.youtube.com/watch?v=BXLuIM3cZF0

The Message Tamil part-2

link: http://www.youtube.com/watch?v=dDgPTMxYrAs

THE MESSAGE TAMIL PART-3

link: http://www.youtube.com/watch?v=urte2coGhGY

THE MESSAGE TAMIL PART-4

link: http://www.youtube.com/watch?v=zijkRFq2xII


அன்றைய அரபுலகமும் இன்றைய இந்தியாவும் ஏறக்குறைய ஒன்றாகவே தெரிகிறது எனது கண்களுக்கு.

குறைஷி குலமே உயர்ந்தது என்றனர் அரபுகள்:

பார்ப்பன குலமே உயர்ந்தது என்றனர் பார்பனர்:

மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது அங்கு:

அரசே மதுக் கடைகளை நடத்துகிறது இங்கு:

தீண்டாமை கொடுமை மிகக் கொடுமையாக நடந்தது அரபுலகில்

தீண்டாமை கொடுமை இன்றும் மறையவில்லை நம் நாட்டில்:

இந்த கணிணி யுகத்திலும் வன் கொடுமை சட்டம்:

இருந்தும் மறையவில்லை: அதுபற்றி நாம் வெட்கப்படுவதும் இல்லை:



மேலே உள்ள யுட்யூபை சிறிது நேரம் ஒதுக்கி பார்க்கவும். நம் ஊரில் தோட்டி என்று தெருக் கூட்டுபவர்களை இழிவாக பார்க்கிறோம். அவர்களை இழிந்த சாதியாக இந்து மதம் பார்க்கிறது. இந்து மத சட்டங்களும் அதனைத்தான் சொல்கின்றன. ஆனால் சவுதி அரேபியாவில் இந்த மக்களை மிகவும் அன்பாக நடத்துவதை பல இடங்களில் நான் பார்த்துள்ளேன்.

ஒரு சவுதி நாட்டவர் அந்த துப்புறவு தொழிலாளியின் உடையை உடுத்திக் கொண்டு தெருவையும் சுத்தம் செய்து நபிகள் நாயகத்தின் அறிவுரையையும் நாட்டு மக்களுக்கு சொல்கிறார். இது போன்று தெருக்களை சுத்தம் செய்பவர்களை எக்காரணத்தை முன்னிட்டும் இழிவாக பார்க்கக் கூடாது. அது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை இந்த குறும்படம் விளக்குகிறது. நம் நாட்டைப் போல் சவுதியில் யாரும் இழிவாக பார்ப்பதில்லை என்றாலும் தவறாக எவரும் விளங்கி விடக் கூடாது என்பதற்காக இது போன்ற எச்சரிக்கைகளை அவ்வப்போது அரசும் கொடுத்தும் வருகிறது.

சில நேரங்களில் தொழுகையில் முதல் வரிசையில் அதே யூனிஃபார்மோடு தொழுக வரும் பல பங்களாதேசத்தவரை தினமும் மசூதிகளில் பார்க்கலாம். இதற்கு காணம இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம் என்றால் மிகையாகாது.


மதரஸாக்கள் மூடப்படத்தான் வேண்டுமா?

CMN சலீம் அவர்களின் தளத்தில் மதரஸாக்கள் அதிகம் மூடு விழாக் காணுவதாக அவரது தளத்தில் குறைபட்டுக் கொண்டார். ஏன் மூடப்படுகின்றன என்பதை காரணங்களோடு நான் இட்ட பின்னூட்டங்களும், அதற்கு மற்றவர்கள் அளித்த பதில்களும்.

இங்கே யாருக்கும் வெட்கமில்லை.....!

மதரஸாக்கள் இந்தியாவின் தேசியச் சின்னங்கள்....

ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை
தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

தேசிய அவமானம்...!

முஸ்லிம்களே மூடு விழா நடத்துகின்றனர்.

ஒரு சமூகத்தின் வரலாறு அழிகிறது...

இங்கே யாருக்கும் வெட்கமில்லை...!

CMN SALEEM

----------------------------------------------------

Suvanappiriyan: மதரஸாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பாடமாக்கி வைத்திருந்தால் இன்று மூடு விழாக்கள் நடத்த அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆபாச களஞ்சியங்களை(துர்ருல் முக்தார்) பாடமாக்கி இளைஞர்களை வழி கெடுக்கும் இடங்களாக்கியது யார் குற்றம்?

மீதம் இருக்கும் மதரஸாக்களையும் மூடி விட்டு அவற்றை ஆங்கிலம், அறிவியல், வரலாறு, போதிக்கும் கல்விக் கூடங்களாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அதில் இஸ்லாத்துக்காக முக்கால் மணி நேரம் ஒரு பாடப்பிரிவு வைத்தால் போதும். இதுதான் இன்றைக்கு தேவை.

--------------------------------------------------

Najilali Mohamed: இன்ஷ அல்லாஹ் செயல்படலாம்! ஆனால் மத்ரசாக்களை அறிவியல், வர்லாற்றுக் கூடங்களாக்க வேண்டும் என்பது 100% பக்கா யூத யோசனை.

----------------------------------------------------

Suvanappiriyan:

//ஆனால் மத்ரசாக்களை அறிவியல், வர்லாற்றுக்கூடங்களாக்க வேண்டும் என்பது 100% பக்கா யூத ோசனை.//

குர்ஆனை விளங்காமல் அது சொல்லும் கருத்துக்களை உள் வாங்காமல் வரும் வார்த்தைகள் இது. ரசூலுல்லாஹ்விடம் பாடம் பயின்ற திண்ணைத் தோழர்கள் யாரும் ஏழு வருடம் மதரஸாவில் சேர்ந்து பாடம் படிக்கவில்லை. முறை வைத்து வேலைக்கு செல்வார்கள். வேலையிலிருந்து வந்தவுடன் விட்ட பாடத்தை மற்றவர்களிடம் கற்றுக் கொள்வார்கள்.

ஆனால் மதரஸா கல்வி முறையானது அந்த மாணவர்களை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தும் நிலையில் தான் இன்று வரை வைத்துள்ளது. ஒரு முஸ்லிம் தன்மானத்தோடு வாழ வேண்டும். அதற்கு வழி தராத இந்த மதரஸா கல்வி இனியும் தேவைதானா? என்று சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

நான் எந்த மதரஸாவிலும் சென்று கல்வி பயிலவில்லை. ஆனால் ஒரு மதரஸா மாணவனை விட அதிகம் இஸ்லாமிய சட்ட திட்டங்களை அறிந்தவனாக இருக்கிறேன். இவை எல்லாம் எனது ஆர்வத்தால் நானாக குர்ஆனின் உதவியோடு கற்றுக் கொண்டது. மற்றவர்களுக்கு தாவா பணியும் செய்கிறேன். இதற்கு எந்த கூலியும் வாங்குவதில்லை. அன்றைய சகாபாக்களும் இந்த வழியைத்தான் பின்பற்றினர்.

-----------------------------------------------

Najilali Mohamed: புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். ஆனால் பாரம்பரியத்தை இடித்துத் தள்ளாதீர்கள். மத்ரசாவுக்கு வக்ப் செய்தவர்கள் ஆன்மிகக் கல்விக்குத்தான் செய்தார்கள்.அவர்கள் நம்பிக்கையில் மண் போடாதீர்கள். மற்ற கல்வி கற்பதற்கு எத்தனையோ கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன . மத்ரஸாவில் கற்றவர்கள் யாரும் பட்டினி கிடக்கவில்லை.மற்ற கல்வி பட்டதாரிகள் யாரும் வறுமையில் இல்லையா? முயற்சி உடையவர்கள் எந்த கல்வியிலும் பிரகாசிப்பார்கள்.

-------------------------------------------------

Suvanappiriyan:

//மத்ரஸாவில் கற்றவர்கள் யாரும் பட்டினி கிடக்கவில்லை.//

எந்த விதமாக தங்களின் பட்டினியை போக்கிக் கொள்கிறார்கள்? மார்க்கம் தடுத்த பாத்திஹாக்கள், மௌலூதுகள், தட்டு, தாயத்துக்கள் இதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களே அதிகம். சிலர் பள்ளிகளில் இமாமாக இருந்து சம்பளம் பெறுவார்கள். இதுதான் மதரஸா பாடங்கள் நமது இளைஞர்களுக்கு கொடுத்தவை.

நான் சொல்ல வருவது ஒன்றுக்கும் உதவாத தற்போதுள்ள பாடத் திட்டங்களை நீக்கி விட்டு அதே மதரஸாவில் அரபி, ஆங்கிலம், கணிணி, வரலாறு, புவியியல், அறிவியல், தொழிற் கல்வி, குர்ஆன், ஹதீஸ் என்று பிரித்து ஒவ்வொரு பாடத்துக்கும் முக்கால் மணி நேரம் ஒதுக்கினால் அதன் பிறகு அந்த கல்வியின் பரிணாமத்தை நாம் பார்க்க முடியும். மாணவனும் ஒரு கைத் தொழிலோடு வெளியேறுவான். கௌரமாக தனது வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வான். தற்போதய சூழலில் இதுதான் நமக்கு தேவை.

தானம் செய்தவர்களும் அந்த மக்கள் சிறந்த மார்க்க அறிஞர்களாக வர வேண்டும் என்ற நோக்கிலேயே தங்களது சொத்துக்களை எழுதி வைத்தனர். ஆனால் தற்போதய மத்ரஸா கல்வி அதற்கு மாற்றமாகவே உள்ளது.

----------------------------------------------------

Imtiyaz Ahmed: மார்க்க கல்வி கற்பவர்களை கண்ணியப்படுத்தாமல் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் கீழ் தரமாக விமர்சனம் செய்த விளைவு. அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் கொடுக்க வேண்டும்

---------------------------------------------------

Suvanappiriyan:

//மார்க்க கல்வி கற்பவர்களை கண்ணியப்படுத்தாமல் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் கீழ் தரமாக விமர்சனம் செய்த விளைவு. //

இப்படி சொல்லி விட்டு நம் பிள்ளைகளை மாத்திரம் கான்வென்டில் சேர்த்து விடுவோம். அந்த பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பார்கள்.

ஆனால் மார்க்கம் படிக்க ஏழை மாணவர்கள், படிப்பு ஏறாத மாணவர்கள், வீட்டில் அடங்காத பிள்ளைகள், இப்படி கொண்டு வந்து மதரஸாக்களில் அடைதது விட்டு சென்று விடுவர். எங்கள் ஊரில் ஐந்து மதரஸாக்கள் உள்ளது. இந்த ஐந்திலும் உள்ளூர் குழந்தைகள் ஒருவர் கூட படிப்பதில்லை. மதுரை, ராமநாதபுரத்திலிருந்து வரும் ஏழை மாணவர்கள் தான் இன்றும் படித்து வருகின்றனர். இதனை சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். தற்போதுதான் சில மதரஸா ஆசிரியர்களை சந்தித்து பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை எடுத்துச் சொன்னேன். அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சில மாற்றங்கள் வரும் என்று சொன்னார். பார்ப்போம் என்ன மாற்றங்கள் என்பதை.

எனது சொந்தங்களிலும் ஒருவர் மதரஸாவுக்கு பெரும் சொத்தை எழுதி வைத்துள்ளார். அவர்களின் எண்ணம் வீணாகி விடக் கூடாதல்லவா!