இன்றைய கால கட்டத்தில் நமது நாட்டை ராமனை ஒரு உதாரண புருஷனாகவும், மனு தர்ம சட்டங்களை ஆட்சிஅதிகாரத்துக்கு பயன்படுத்தவும் பிஜேபியினர் முயன்று வருகின்றனர். ராமனை ஒரு கடவுளாக இந்துக்கள் நினைப்பது அவர்களின் மத சுதந்திரம் என்று நாம் ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களும் ராமனை ஒரு உதாரணமாக்க கொள்ள வேண்டும். இந்து தர்மத்தை சுவீகரித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் படுவதால் ராமாயணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே எப்படிப்பட்ட ராமனையும், ராமாயணத்தையும் மோடியின் தலைமையில் இவர்கள் இந்தியாவின் உதாரண புருஷனாக வைத்து ஆட்சி நடத்தப் போகிறார்கள் என்பதற்கு சில சான்றுகளை நாம் பார்ப்போம்.
ராமாயணம் - சில தகவல்கள்
திண்ணையில் திரு ஜெயபாரதன் அவர்கள் ராமாயணம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு ஷாலி அவர்கள் சில விளக்கங்களை கொடுத்திருந்தார். ஷாலி அவர்களது பின்னூட்டங்கள் வெகு சுவாரஸ்யமாக இருக்கும். நான் ரசித்த சில இடங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.
வால்மீகி ராமாயணத்தின் படி சீதையின் கல்யாணத்தின்போது இராமனுக்கு வயது 12, சீதைக்கு வயது 6
தோஷாத் தாரக்தியாம்பதி
சிந்தையா மான தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா
வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.
“அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே
நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.
இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள்.
‘நப்ரமாணி கிரதப்மாணி
பால்யே பாலேன பீடிதஹ்”
ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே?
குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை… என்கிறாள். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் நடந்துவிட்டது என்று அறிய முடிகிறது.
ஜெயபாரதன் ஸார்! தற்போது வால்மீகி பர்ணசாலையில் இருக்கும் சீதாயணம் சீதா தேவியின் வயது எவ்வளவு ஸார்?
Don’t Ask Men’s Wage and Women’s Age. என்று சொல்ல மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.
------------------------------------------------
சகலகலா வல்லி ஷாலி அவர்களே,
இதற்குக் கணித மேதை ராமானுஜன் தேவையில்லை. உங்கள் கணக்குப்படி 18 வயதில் துவங்கி 14 வருடம் வனவாசம். பட்டாபிசேகம் [18+14]=32 வயதில். அதாவது வால்மீகி பர்ண சாலையில் சீதையின் வயது குறைந்தது 33.
சி. ஜெயபாரதன்
----------------------------------------------
பேராசிரியர்.கவிஞர்.ஜெயபாரதன் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி!
நமது கம்பன் காட்டும் ராமனும் சீதையும் இளம்பருவத்து இணையாக அல்லவா இருக்கிறார்கள்.ஆறு வயது சிறுமியைப்பார்த்து கம்பர் இப்படி பாடமுடியாதே? பாட்டை பார்ப்போம்.
என்ன அருநலத்தினால் இனையள் நின்றுழி
கண்ணோடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
இத்துடன் விழி வீச்சு எங்கு போய் தாக்குகிறது என்பதையும் கம்பன் கூற மறக்கவில்லை.
நோக்கிய நோக்கு எனும் நுதிகொள்வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
ஆக கம்பர் மற்றும் வேறு பல இராமாயணங்களில் சீதையின் வயது 17 இராமனின் வயது 16 ஆக பார்க்க முடிகிறது.கம்பர் வழியில் வயது கணக்கிட்டால் 17+12+13=42, சீதா தேவி அசோகவனத்து சிறையிலிருந்து மீண்டு வரும்போது வயது 43.
ஒரு முதிர் வயது கர்ப்பிணிப் பெண்ணை காப்பற்றுபவன் தான் மனுஷன்.கானகத்திற்கு விரட்டி அடித்தவன் மனுஷனே அல்ல!
ஆகவேதான் கூறுகிறோம் அவன் ஸ்ரீ இராமா அவதாரம் என்று.
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி
தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
தன் பாவம் இல்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை
ஊமை கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்
(‘ கொடி மலர்-1966.கவிஞர்.கண்ணதாசன்)
சீதையின் கற்பு குறித்து இங்கு பேசப்படுகிறது.இராவணன் சீதையை கவர்ந்து சென்றதன் காரணம் காமமுமல்ல,காதலுமல்ல. தன் தங்கை மீனாட்சி (அழகிய மீன் போன்ற கண்களை உடையவள்) சூர்ப்பனகையை (அழகிய மூக்கு உடையவள்) அங்கஹீனப்படுத்தியதன் காரணமாகவே பழிக்குப் பழியாக சீதாவை கவர்ந்து சென்றான். சீதையின் அழகு ஒரு காரணமல்ல.ஏனெனில் இராவணனின் மனைவி மண்டோதரி பேரழகு மிக்கவள்.மண்டோதரி என்றாலே சிற்றிடையாள் என்றே பொருள்.அனுமன் முதலில் மண்டோதரியின் அழகைக் கண்டு இவள்தான் சீதையாக இருப்பாளோ என்று நினைத்தான்.மேலும் பஞ்சகன்னியர்கள் என்று சிறப்பாக அழைக்கப்படும் ஐந்து பெண்களில் மண்டோதரியும் ஒருத்தி. (அகலிகை,சீதை,தாரை,திரௌபதி,மண்டோதரி)
மேலும் இராவணன் ஒரு சிறந்த திரு நீறு அணியும் சிவ பக்தன்.பத்து தலை உடைய தசக்ரீவன்,இலங்கேஸ்வரன் என்ற சிறப்பு பெற்றவன்.இராவணேஸ்வரன்,திரிலோக அதிபதி என்னும் புகழுக்குரியவன்.தன் கடுமையான யாகத்தினால் எவராலும் வெல்லப்பட முடியாத சந்திரஹாச வாளை சிவனிடமிருந்து பரிசாகப் பெற்றவன்,அற்ப காதலுக்கோ, காமத்திற்கோ சீதையை தூக்கி வரவில்லை.ஆகவே சீதையின் கற்பு பற்றிய சிந்தனையே அவதூறானது.அற்பத்தனமானது.ஆனாலும் இராமன், உலைவாயை மூடலாம்,ஊர் வாயை மூடமுடியாது என்பதை உணரத்தவறியதால் ஊரைவிட்டு விரட்டிவிட்டான்.
சூர்ப்பனகையின் ஆசையை, காதலை ஏற்றுக்கொள்ள மறுத்து அவளை திருப்பி அனுப்பியிருந்தால் இராமாயணமும் இல்லை கானகமும் இல்லை.காது மூக்கை அறுத்து மூளி ஆக்கி அனுப்பிய கொடுமையின் எதிர் வினையே சீதையின் பிரிவு.
தன் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த இன்றைய வினோதினியின் முகத்தில் ஒரு தலை காதலனால் ஆசிட் வீசப்படுகிறது.அன்று ஒரு தலை காதலை ஏற்க மறுத்து காது மூக்கு அறுத்து அனுப்பப்படுகிறது.அட ராமா! இதுதான் ஒருதலை காதலுக்கு பரிசா? மோடி வகையறாக்கள் கூறும் இராமராஜ்யத்தில் இப்படித்தான் நடக்குமோ? இராம ஜெயம்! ஸ்ரீ இராம ஜெயம்! நம்பிய பேருக்கு ஏது பயம்?
ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தாலும்,அல்லது ஒரு பெண் ஒரு ஆடவனை ஒருதலையாக காதலித்தாலும் பெண்ணுக்கு மட்டுமே கிடைக்கும் பரிசு அன்றைய புராண காலத்தில் மூக்கறுபட்டு மூளியாதல். இன்றைய கலிகாலத்தில் அமில வீச்சில் முகம் அகோரப்படுதல்.இராம காவியத்தின் கதாநாயகி சீதா தேவியோ அல்லது கதையின் வில்லி சூர்பனகையோ எப்பெண்ணாக இருந்தாலும் இறுதியில் துன்பம் மட்டுமே அவர்களோடு துணைக்கு வரும். ஆணுக்கல்ல.
இதை கவிஞன் என்ன அழகாய் சொல்கிறான், பாருங்கள்.
“துன்பம் என்றும் ஆணுக்கல்ல,-அது
அன்றும் இன்றும் பெண்களுக்கே!
துள்ளித்துள்ளி நீ பாடம்மா சீதை(சூர்ப்பனகை)யம்மா-நீ
கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா!”
2 comments:
பூபதி
//மதத்துக்கும் மார்க்கத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன நண்பரே..!//
ஒருவர் பார்ப்பனராகவோ செட்டியாராகவோ தலித்தாகவோ பிறந்து விட்டால் இறக்கும் வரை அந்த சாதியில்தான் இருக்க வேண்டும். அவர் வேறு சாதிக்கு மாற முடியாது. பிறப்பை முக்கியமாகக் கொண்டு சட்ட திட்டங்களை அமைத்து செயல்படுத்துவது மதம். உதாரணம் இந்து மதம்.
ஒருவர் இந்துவாக இருந்து முகமது நபியின் வாழ்க்கை முறை சரியானது என்று முடிவு கட்டி இஸ்லாத்தை ஏற்கிறார். இஸ்லாத்தை ஏற்றவுடன் அவருடைய பழைய மார்க்கங்களின் சட்டங்கள் முற்றிலுமாக மாறுபட்டு ஒரு புது வாழ்க்கைத் திட்டத்தில் நுழைகிறார். பல தெய்வ வணக்கம் ஏக தெய்வ வணக்கமாக மாறுகிறது. தலையில் பிறந்தேன், தோளில் பிறந்தேன், காலில் பிறந்தேன் என்ற பாகுபாடுகள் மறைந்து அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற பரந்த நோக்கத்துக்கு வருகிறாரல்லவா! இதைத்தான் மார்க்கம் என்கிறோம். ஒருவனின் நடத்தையை வைத்து தீர்மானிப்பதால் இஸ்லாம் மதமல்ல: அது ஒரு மார்க்கம்.
அரேபியன்போல் வாழ்வதுஒரு வாழ்ககையா ? அரேபியன்போல் வாழ்வதுதான் அல்லாவுக்கு பிடிக்குமா? அரேபியன்போல் வாழ்பவனுக்குதான் சொா்க்கமா? அங்கு 72 கன்னிப் பெண்கள் பாிசாகக் கிடைப்பாா்களோ ? முட்டாள்தனம். மனிதனாக வாழ வேண்டும். அந்தணனாக வாழ்வதுதான் இந்திய பண்பாடு காட்டும் வாழ்க்கை. சாதி அமைப்பு சீரழிந்துபோன சமூக நிலை. அதற்கு அரேபியா தீா்வல்ல. முகம்மது அகண்டஅரேபியா வை உருவாக்கிட 46 யுத்தங்களை நடத்தினாா். அவர் இறந்த உடனே பதவிப்பித்து பிடித்து அவர் மனைவியும் மருமகனும் யுத்தம் செய்தாா்கள். ஒட்டகப்போா். முகம்மதுவின் பேரன் வரை அனைவரும் கொல்லப்பட்னனா். சன்னி மதம் ஷியா மதம் என்று இரண்டு அடிபிடிக்கு அஞசாத கோஷ்டியாக முகம்மதுவின் சீடா்கள் பிாந்து போனாா்கள். இன்று அரேபிய மதவாதிகள் 100 கணக்கில் பிாிந்து ஒருவனைக் கொல்ல மற்றவா்கள் வாய்ப்பை எதிா் நோக்கி உள்ளாா்கள். இந்த கேடு கெட்ட அரேபிய மதம் எனக்கு தேவையில்லை.யாருக்கும் தேவையில்லை.
Post a Comment