Followers

Monday, November 04, 2013

மதரஸாக்கள் மூடப்படத்தான் வேண்டுமா?

CMN சலீம் அவர்களின் தளத்தில் மதரஸாக்கள் அதிகம் மூடு விழாக் காணுவதாக அவரது தளத்தில் குறைபட்டுக் கொண்டார். ஏன் மூடப்படுகின்றன என்பதை காரணங்களோடு நான் இட்ட பின்னூட்டங்களும், அதற்கு மற்றவர்கள் அளித்த பதில்களும்.

இங்கே யாருக்கும் வெட்கமில்லை.....!

மதரஸாக்கள் இந்தியாவின் தேசியச் சின்னங்கள்....

ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை
தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

தேசிய அவமானம்...!

முஸ்லிம்களே மூடு விழா நடத்துகின்றனர்.

ஒரு சமூகத்தின் வரலாறு அழிகிறது...

இங்கே யாருக்கும் வெட்கமில்லை...!

CMN SALEEM

----------------------------------------------------

Suvanappiriyan: மதரஸாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பாடமாக்கி வைத்திருந்தால் இன்று மூடு விழாக்கள் நடத்த அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆபாச களஞ்சியங்களை(துர்ருல் முக்தார்) பாடமாக்கி இளைஞர்களை வழி கெடுக்கும் இடங்களாக்கியது யார் குற்றம்?

மீதம் இருக்கும் மதரஸாக்களையும் மூடி விட்டு அவற்றை ஆங்கிலம், அறிவியல், வரலாறு, போதிக்கும் கல்விக் கூடங்களாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அதில் இஸ்லாத்துக்காக முக்கால் மணி நேரம் ஒரு பாடப்பிரிவு வைத்தால் போதும். இதுதான் இன்றைக்கு தேவை.

--------------------------------------------------

Najilali Mohamed: இன்ஷ அல்லாஹ் செயல்படலாம்! ஆனால் மத்ரசாக்களை அறிவியல், வர்லாற்றுக் கூடங்களாக்க வேண்டும் என்பது 100% பக்கா யூத யோசனை.

----------------------------------------------------

Suvanappiriyan:

//ஆனால் மத்ரசாக்களை அறிவியல், வர்லாற்றுக்கூடங்களாக்க வேண்டும் என்பது 100% பக்கா யூத ோசனை.//

குர்ஆனை விளங்காமல் அது சொல்லும் கருத்துக்களை உள் வாங்காமல் வரும் வார்த்தைகள் இது. ரசூலுல்லாஹ்விடம் பாடம் பயின்ற திண்ணைத் தோழர்கள் யாரும் ஏழு வருடம் மதரஸாவில் சேர்ந்து பாடம் படிக்கவில்லை. முறை வைத்து வேலைக்கு செல்வார்கள். வேலையிலிருந்து வந்தவுடன் விட்ட பாடத்தை மற்றவர்களிடம் கற்றுக் கொள்வார்கள்.

ஆனால் மதரஸா கல்வி முறையானது அந்த மாணவர்களை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தும் நிலையில் தான் இன்று வரை வைத்துள்ளது. ஒரு முஸ்லிம் தன்மானத்தோடு வாழ வேண்டும். அதற்கு வழி தராத இந்த மதரஸா கல்வி இனியும் தேவைதானா? என்று சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

நான் எந்த மதரஸாவிலும் சென்று கல்வி பயிலவில்லை. ஆனால் ஒரு மதரஸா மாணவனை விட அதிகம் இஸ்லாமிய சட்ட திட்டங்களை அறிந்தவனாக இருக்கிறேன். இவை எல்லாம் எனது ஆர்வத்தால் நானாக குர்ஆனின் உதவியோடு கற்றுக் கொண்டது. மற்றவர்களுக்கு தாவா பணியும் செய்கிறேன். இதற்கு எந்த கூலியும் வாங்குவதில்லை. அன்றைய சகாபாக்களும் இந்த வழியைத்தான் பின்பற்றினர்.

-----------------------------------------------

Najilali Mohamed: புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். ஆனால் பாரம்பரியத்தை இடித்துத் தள்ளாதீர்கள். மத்ரசாவுக்கு வக்ப் செய்தவர்கள் ஆன்மிகக் கல்விக்குத்தான் செய்தார்கள்.அவர்கள் நம்பிக்கையில் மண் போடாதீர்கள். மற்ற கல்வி கற்பதற்கு எத்தனையோ கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன . மத்ரஸாவில் கற்றவர்கள் யாரும் பட்டினி கிடக்கவில்லை.மற்ற கல்வி பட்டதாரிகள் யாரும் வறுமையில் இல்லையா? முயற்சி உடையவர்கள் எந்த கல்வியிலும் பிரகாசிப்பார்கள்.

-------------------------------------------------

Suvanappiriyan:

//மத்ரஸாவில் கற்றவர்கள் யாரும் பட்டினி கிடக்கவில்லை.//

எந்த விதமாக தங்களின் பட்டினியை போக்கிக் கொள்கிறார்கள்? மார்க்கம் தடுத்த பாத்திஹாக்கள், மௌலூதுகள், தட்டு, தாயத்துக்கள் இதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களே அதிகம். சிலர் பள்ளிகளில் இமாமாக இருந்து சம்பளம் பெறுவார்கள். இதுதான் மதரஸா பாடங்கள் நமது இளைஞர்களுக்கு கொடுத்தவை.

நான் சொல்ல வருவது ஒன்றுக்கும் உதவாத தற்போதுள்ள பாடத் திட்டங்களை நீக்கி விட்டு அதே மதரஸாவில் அரபி, ஆங்கிலம், கணிணி, வரலாறு, புவியியல், அறிவியல், தொழிற் கல்வி, குர்ஆன், ஹதீஸ் என்று பிரித்து ஒவ்வொரு பாடத்துக்கும் முக்கால் மணி நேரம் ஒதுக்கினால் அதன் பிறகு அந்த கல்வியின் பரிணாமத்தை நாம் பார்க்க முடியும். மாணவனும் ஒரு கைத் தொழிலோடு வெளியேறுவான். கௌரமாக தனது வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வான். தற்போதய சூழலில் இதுதான் நமக்கு தேவை.

தானம் செய்தவர்களும் அந்த மக்கள் சிறந்த மார்க்க அறிஞர்களாக வர வேண்டும் என்ற நோக்கிலேயே தங்களது சொத்துக்களை எழுதி வைத்தனர். ஆனால் தற்போதய மத்ரஸா கல்வி அதற்கு மாற்றமாகவே உள்ளது.

----------------------------------------------------

Imtiyaz Ahmed: மார்க்க கல்வி கற்பவர்களை கண்ணியப்படுத்தாமல் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் கீழ் தரமாக விமர்சனம் செய்த விளைவு. அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் கொடுக்க வேண்டும்

---------------------------------------------------

Suvanappiriyan:

//மார்க்க கல்வி கற்பவர்களை கண்ணியப்படுத்தாமல் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் கீழ் தரமாக விமர்சனம் செய்த விளைவு. //

இப்படி சொல்லி விட்டு நம் பிள்ளைகளை மாத்திரம் கான்வென்டில் சேர்த்து விடுவோம். அந்த பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பார்கள்.

ஆனால் மார்க்கம் படிக்க ஏழை மாணவர்கள், படிப்பு ஏறாத மாணவர்கள், வீட்டில் அடங்காத பிள்ளைகள், இப்படி கொண்டு வந்து மதரஸாக்களில் அடைதது விட்டு சென்று விடுவர். எங்கள் ஊரில் ஐந்து மதரஸாக்கள் உள்ளது. இந்த ஐந்திலும் உள்ளூர் குழந்தைகள் ஒருவர் கூட படிப்பதில்லை. மதுரை, ராமநாதபுரத்திலிருந்து வரும் ஏழை மாணவர்கள் தான் இன்றும் படித்து வருகின்றனர். இதனை சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். தற்போதுதான் சில மதரஸா ஆசிரியர்களை சந்தித்து பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை எடுத்துச் சொன்னேன். அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சில மாற்றங்கள் வரும் என்று சொன்னார். பார்ப்போம் என்ன மாற்றங்கள் என்பதை.

எனது சொந்தங்களிலும் ஒருவர் மதரஸாவுக்கு பெரும் சொத்தை எழுதி வைத்துள்ளார். அவர்களின் எண்ணம் வீணாகி விடக் கூடாதல்லவா!

2 comments:

Anonymous said...

In Singapore, Madarashas are functioning with additional curriculum to cover Quran and Hadeeth. Visit www.moe.gov.sg. They produce normal academic students in addition to Islamic Studies. That's the model we should follow in India.

Dr.Anburaj said...

காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை அரேபிய முட்டாள்தனங்களைக்கற்றுக் கொடுக்கும் மையங்களை மதரசாக்களை அரேபியா தவிர பிற நாடுகளில் நடத்துவது முட்டாள்தனம. குரான் படிக்காத நாடுகள் தான் கலை அறிவியல் மருத்துவம் ஒழுக்கம் பொருளாதாரம் அன்பு பாராட்டல் சேவை அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள் அமைத்தல் ஜனநாயகம் மனித உாிமை காத்தல் போன்ற பண்புகளைப் பாராட்டி வருகின்றனா். குரான் படிக்கும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு மக்கள் இருக்கும் நாடுகளில் குழு யுத்தம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆரேபிய நாடுகளில் கூட அமைதியில்லை. துப்பாக்கி முனையில்தான் ஆட்சி நடந்து வருகின்றது. அரேபிய குப்பைகளை உலகெங்கும் பரப்பும் மதரஸாக்களை எவ்வளவு சீக்கிரம் முடுகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் உலகில் அமைதி தோன்றும். வங்க தேசத்தில் மதரஸாக்களில் படித்தவா்கள்தான் 1971 கலவலத்தில் கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் எதிராக கொடுஞ்செயல்களில் ஈடுபட்டாா்கள் என்று பங்களாதேஷ் அரசு குறிப்பு கூறுகின்றது.தங்களின் மண்டையில் ஏறியிருக்கும் என நினைக்கின்றேன். அறிவியல் மன்றங்களை துவக்குவாம். தொருதொறும வானவியல் தொலைநோக்கி அமைத்து கல்வி வளா்ப்போம்.பொழுதுபோக்கு மின்னணுவயில் மனறம் துவக்கி நேரத்தைப்பொன் ஆக்குவோம். அரேபிய குப்பைகளை குப்பைத்தொட்டியில்போட்டுவிட்டு மறந்து செல்வோம்.