Followers

Monday, November 04, 2013

அன்றைய அரபுலகமும் இன்றைய இந்தியாவும்!

The message Tamil part-1

link: http://www.youtube.com/watch?v=BXLuIM3cZF0

The Message Tamil part-2

link: http://www.youtube.com/watch?v=dDgPTMxYrAs

THE MESSAGE TAMIL PART-3

link: http://www.youtube.com/watch?v=urte2coGhGY

THE MESSAGE TAMIL PART-4

link: http://www.youtube.com/watch?v=zijkRFq2xII


அன்றைய அரபுலகமும் இன்றைய இந்தியாவும் ஏறக்குறைய ஒன்றாகவே தெரிகிறது எனது கண்களுக்கு.

குறைஷி குலமே உயர்ந்தது என்றனர் அரபுகள்:

பார்ப்பன குலமே உயர்ந்தது என்றனர் பார்பனர்:

மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது அங்கு:

அரசே மதுக் கடைகளை நடத்துகிறது இங்கு:

தீண்டாமை கொடுமை மிகக் கொடுமையாக நடந்தது அரபுலகில்

தீண்டாமை கொடுமை இன்றும் மறையவில்லை நம் நாட்டில்:

இந்த கணிணி யுகத்திலும் வன் கொடுமை சட்டம்:

இருந்தும் மறையவில்லை: அதுபற்றி நாம் வெட்கப்படுவதும் இல்லை:



மேலே உள்ள யுட்யூபை சிறிது நேரம் ஒதுக்கி பார்க்கவும். நம் ஊரில் தோட்டி என்று தெருக் கூட்டுபவர்களை இழிவாக பார்க்கிறோம். அவர்களை இழிந்த சாதியாக இந்து மதம் பார்க்கிறது. இந்து மத சட்டங்களும் அதனைத்தான் சொல்கின்றன. ஆனால் சவுதி அரேபியாவில் இந்த மக்களை மிகவும் அன்பாக நடத்துவதை பல இடங்களில் நான் பார்த்துள்ளேன்.

ஒரு சவுதி நாட்டவர் அந்த துப்புறவு தொழிலாளியின் உடையை உடுத்திக் கொண்டு தெருவையும் சுத்தம் செய்து நபிகள் நாயகத்தின் அறிவுரையையும் நாட்டு மக்களுக்கு சொல்கிறார். இது போன்று தெருக்களை சுத்தம் செய்பவர்களை எக்காரணத்தை முன்னிட்டும் இழிவாக பார்க்கக் கூடாது. அது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை இந்த குறும்படம் விளக்குகிறது. நம் நாட்டைப் போல் சவுதியில் யாரும் இழிவாக பார்ப்பதில்லை என்றாலும் தவறாக எவரும் விளங்கி விடக் கூடாது என்பதற்காக இது போன்ற எச்சரிக்கைகளை அவ்வப்போது அரசும் கொடுத்தும் வருகிறது.

சில நேரங்களில் தொழுகையில் முதல் வரிசையில் அதே யூனிஃபார்மோடு தொழுக வரும் பல பங்களாதேசத்தவரை தினமும் மசூதிகளில் பார்க்கலாம். இதற்கு காணம இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம் என்றால் மிகையாகாது.


5 comments:

வவ்வால் said...

திரு.சு.பி.சுவாமிகள்,

// நம் நாட்டைப் போல் சவுதியில் யாரும் இழிவாக பார்ப்பதில்லை என்றாலும் தவறாக எவரும் விளங்கி விடக் கூடாது என்பதற்காக இது போன்ற எச்சரிக்கைகளை அவ்வப்போது அரசும் கொடுத்தும் வருகிறது.

சில நேரங்களில் தொழுகையில் முதல் வரிசையில் அதே யூனிஃபார்மோடு தொழுக வரும் பல பங்களாதேசத்தவரை தினமும் மசூதிகளில் பார்க்கலாம். இதற்கு காணம இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம் என்றால் மிகையாகாது.
//

மிக்க மகிழ்ச்சி,இப்படிலாம் இருதால் அல்லது தான்!

ஆனால் இந்தியாவிலே இஸ்லாமியர்களும் ஜாதியம் தானே பார்க்கிறாங்க,மீனாட்சிபுரம் சம்பவம் வைத்து ஒருத்தர் பதிவு கூட போட்டிருந்தார். படிக்கலையோ?

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//ஆனால் இந்தியாவிலே இஸ்லாமியர்களும் ஜாதியம் தானே பார்க்கிறாங்க,மீனாட்சிபுரம் சம்பவம் வைத்து ஒருத்தர் பதிவு கூட போட்டிருந்தார். படிக்கலையோ?//

மீனாட்சிபுரத்தின் தற்போதய நிலையை பிபிசி மிக அழகாக பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. அதை பதிவாகவே இட்டுள்ளேன். இங்கு சென்று உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள்.

'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'

'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.

'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'

'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'

http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post_29.html

Anonymous said...

தீபாவளியை முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளில், 154 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

தமிழகத்தில், சென்னை மண்டலம், 1,085; கோவை, 954; மதுரை, 1,752; சேலம், 1,336; திருச்சி மண்டலம், 1,711 என, மொத்தம், 6,838 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 150 கோடி ரூபாய் மதி"ப்பிலான, மது வகைகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதனால், 12 நாட்களுக்கு தேவையான மது வகைகள், கடைகளில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டன. எதிர்பார்த்தது போலவே, இலக்கைத் தாண்டி நேற்று முன்தினம், தீபாவளி அன்று மட்டும், 154 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு விற்பனையை விட, 22 சதவீதம் (126 கோடி ரூபாய்) அதிகம். "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்தது. இனி பண்டிகை நாட்கள் என்று முன்கூட்டியே சரக்குஇருப்பு முறையாக வைத்தால், அது இலக்கை தாண்டி விற்கப்படலாம் என்பதற்கு இது ஓர் உதாரணமாகி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=841617

Anonymous said...


A man killed his father and another man and gave the crime a communal angle to grab the compensation promised by the Uttar Pradesh government to victims of the recent riots, police said Thursday.

Chandra Pal Singh, a retired soldier, and Sauraj were found dead in Badgaon in Saharanpur district Oct 2.

Police earlier thought the killings were related to the communal riots in Muzaffarnagar and nearby areas that left 63 people dead Sep 6-10.

But investigation revealed that Jogendra, the younger son of the soldier, shot his father so that he can claim the Rs.10 lakh in compensation and Rs.15 lakh from his insurance.

Jogendra and his widowed mother claimed that men from a neighbouring village killed Chandra Pal Singh.

Officials told IANS that to give the crime a communal angle, the accused had thrown in a skull cap at the crime scene.
http://www.deccanherald.com/content/367526/up-son-kills-father-get.html

....இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. சத்திர பால் சிங்கை கொன்றது வேறு யாருமல்ல, அவருடைய மகன் ஜோகேந்திராவே என்று தெரியவந்துள்ளது. கலவர இழப்பீட்டு தொகையான பத்து லட்சத்தை பெறுவதற்காக தன் தந்தையை தானே கொன்றது அம்பலமாகியுள்ளது. முஸ்லிம்கள் கொன்றது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த குல்லாவை அங்கு விட்டு சென்றதும் தெரியவத்துள்ளது.

http://manithaabimaani.blogspot.com/2013/11/blog-post.html

Dr.Anburaj said...

இந்தியாவில் வேதகாலத்தில் சாதி தீண்டாமை ஏதும் இல்லை.இல்லவேயில்லை. கலாச்சாரம் கல்வி தொழல் புகோளம் சமூக சுழ்நிலை காரணமாக குரான் சொல்வது போல் மனிதா்களை அடையாளம்காண பலகோத்திரங்களை அல்லா படைத்ததுபோல் மக்களில் பல சாதிபிாிவுகள் உண்டாயின. சாதி வேறுபாடு இருந்தாலும் திருமணம் செய்ய சாதி தடை கிடையாது. பெண்ணுக்கு சாதி கிடையாது என்றது அதன் அடிப்படையில். பிறாமணா்கள் ஒன்றும் தனியாக வானத்தில் வந்து குதித்துவிடவில்லை. மக்கள் பண்பட பண்பட ஒருவித வாழ்க்கை முறையைப்பின்றபற்றி அந்தணா்களாக பிறாமணா்களாக மாறினாா்கள். இவர்களின் ஆதிபெற்றோா் பல சாதியினா்தான். பல சாதி மக்கள்தான் பிறாமணா்கள் ஆனாா்கள். காலபோக்கில் மக்களின் மனதில்சுயநலமும் வெறுப்பும் ஆதிக்க மனப்பான்மையும் தோன்றிவிட்டது. எனவே அதற்குதகுந்தால்போல் புத்தகங்களையும் எழுதி குவித்து விட்டாா்கள். இதுதான் உண்மை. 2000 ஆண்டுகளக்கு முன்னரே திருவள்ளுவா் பிறப்பொக்கும் எவ்உயிா்க்கும் சிறப்பொப்பா செயதொழில் வேற்றுமைகாணின் - . இவற்றையெல்லாம் தொிந்தும் மறைத்துவிட்டு ஆரெபிய நாகரீகம் சிறந்தது என்க்கூறுவது முட்டாள்தனமுாகும். திருக்குறள் குரானுக்கு மூத்த ......அண்ணன். மறந்துவிடாதீா்கள்இ