'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, November 10, 2013
குர்ஆனும் தாயுமானவரடிகளின் உவமையும்!
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
குர்ஆன் 24:35
இறைவன் இங்கு ஒளியை நேரிய இஸ்லாமிய மார்க்கத்திற்கும், அதன்படி மனிதர்கள் செயல்பட வேண்டும் என்றும் உதாரணத்தின் மூலம் விளக்குகிறான். இதே உதாரணத்தை நமது தமிழ் சித்தர் பாடல்களிலும் ஆங்காங்கு பார்க்க முடிகிறது.
தாயுமானவடிகள் திருப்பாடல்கள் -1
9. பொருளியல்பு
கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ.
கையில் விளக்கினை ஏற்றிக்கொண்டு அவ்வெளிச்சத்தின் பின்னே சென்று தனக்கு வேண்டும் உலகியற் பொருள்களைக் காண்பார் போன்று, மெய்யுணர்வு என்று சொல்லப்படுகிற திருவருள் விளக்கை முன்வைத்து அவ்வருள் வெளிச்சத்தின் பின் சென்று மெய்ப்பொருளாம் இறைவனின் சீரிய வழிகாட்டுதலை அடைவது எந்நாளோ என்று தாயுமானவர் மிக உருக்கமாக பாடுகிறார்.
தமிழ்நாட்டில் நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றியும், இறைவனின் தன்மைகளைப் பற்றியும் மிக உயரிய கருத்தையே கொண்டிருந்திருக்கிறார்கள். பின்னால் வந்த கலாசார புரட்சியினாலும், ஆரியர்கள் போன்ற அந்நிய சக்திகளின் படையெடுப்பாலும் இறைவனைப் பற்றிய கொள்கைகளும் திரிந்து இன்று கண்டதையும் கடவுளாக்கும் நிலைக்கு தமிழன் சென்று விட்டான். தமிழ் பாடல்கள் பலவற்றை ஆராய்ந்தால் அங்கு ஏக தெய்வ கொள்கை பல பாடல்களில் ஊடுருவி வருவதைக் காணலாம்.
இனி வருங்காலங்களில் தமிழ் பாடல்களில் உள்ள ஏக தெய்வ கொள்கைகளை குர்ஆனோடு ஒப்பிட்டு சில ஆக்கங்களை தர முயற்சிக்கிறேன் இறைவன் நாடினால்......
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக சகோ.
I have some related information for you, can you please display your email or send me an email to thiruvadiyan|at|gmail.com
கஜினி முகமதுவும் அதற்கு பின்னால் வந்தவர்களையும் சேர்த்துதானே?
சகோ திருவடியான்!
//I have some related information for you, can you please display your email or send me an email to thiruvadiyan|at|gmail.com //
nazeer65@gmail.com
ஷாலி says:
November 10, 2013 at 1:46 pm
சி. ஜெயபாரதன் says:
November 9, 2013 at 2:45 am
இராமனின் இராம ராஜியத்தில் பொது மக்கள் குரல் எடுத்துக் கொள்ளப்படும்; ஆனால் நியாயம் ஒருதலைப் பட்சமாக இருக்கும். இருபுறக் குரல்கள் கேட்கப்பட மாட்டா.
பேராசிரியப்பெருந்தகை அய்யா ஜெயபாரதன் அவர்கள் சொல்வது அச்சரலட்சம்.உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று,
ஒரு பிராமணன் ஸ்ரீ இராமனிடம் ஓடி வருகிறான்,” இராமா! இராமா! நாட்டில் அநியாயம் நடக்குது.ஒரு சூத்திரன் வேதத்தை ஓதுகிறான்.அதனால் என் இளவயது மகன் இறந்துவிட்டான்.இந்த அநியாயத்தை கேட்கமாட்டியா?”அந்த சூத்திரனைக்கொன்று என் மகனை உயிர் பிழைக்க வை.” என்று கூக்குரல் எழுப்புகிறான். ஸ்ரீ இராமன் என்ன செய்திருக்க வேண்டும்.அந்த பிராமணனுக்கு அழகிய உபதேசம் செய்து,”பிராமணா! உயிர் பிறப்பும் இறப்பும் கர்மவினையின் பொருட்டு நடப்பது.சூத்திரன் படிப்பதால் எவர் உயிரும் போகாது.மாமுனிவர் வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்தவர் வேதம் படித்து முனிவரானார்.இவர் வேதம் படித்ததால் எவர் இறந்தார்கள்? விசுவாமித்திரர் பிராமணர் இல்லை.இவர் வேதம் பயின்று பிரம்மரிஷி பட்டம் பெற்றார்.இவர் படித்ததினால் எவர் உயிர் இழந்தார்?ஒருவரும் இல்லை.இறப்பு எல்லா உயிர்களுக்கும் எழுதப்பட்ட ஒன்று.” என்று சொல்லவில்லை.தனது நாட்டு பிரஜை பிராமணன் சொன்னதும் தேடிப்போய் வேதம் படித்த சம்பூகனை கொன்று விடுகிறான். ஆக,அய்யா சொன்னதுபோல் இருதரப்பு நியாயம் கேட்கப்படவில்லை.பிராமணனுக்கு சார்பாகவே தீர்ப்பு.நீதிக்கு ஆப்பு! இது போன்ற இராமா ராஜ்ஜியம் இந்தியாவுக்கு வர வேண்டும்.ஏனெனில் நம் நாட்டில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.வாதி,பிரதிவாதி,வாய்தா வாங்கியே வருடம் ஓடுகிறது.ஒருதரப்பை மட்டும் கேட்டு அப்பவே தீர்ப்பு கொடுத்துவிட்டால் கோர்ட்டில் கூட்டம் குறையும். நீதியரசர்கள் நிம்மதி கூடும்.
IIM Ganapathi Raman says:
November 10, 2013 at 6:18 am
அப்பாவித்தனமான நம்பிக்கை.
மோடி ஒருவேளை பிரதமராகிவிட்டால், அவர் மதசம்பந்தமாக தடாலடி எடுத்தால், உலக அரங்கில் அவரின் இமேஜ் சீரியசாக டேமேஜ் ஆகிவிடும். அதை அவர் உணர்ந்து இருக்கிறார் என்பதை அவர் உ.பி சாமியார் தங்கம் கண்டேன் என உட்டான்ஸ் விட்டதைக் கிண்டலடித்ததிலிருந்து தெரியவரும். கழிப்பறைகளைக்கட்டுங்கள்; கோயில்கள் வேண்டா என்று சொன்னது, தன்னை இந்தியப்பிரதமராக்கத் தகுதியுடயோனாக்குதலே. ஆயினும் சிலவற்றைச் செய்ய முயன்று அதன் பேக்லாசைக்கண்டு ஒதுங்கிவிடுவார். எம் ஜி ஆர் இட ஒதுக்கீட்டுக்கொள்கையில் செய்ததைப்போல. ஜெயலலிதா கிடாவெட்டுவதைத் தடை செய்யமுயன்று விமர்சந்த்துக்குள்ளாகி வருத்தப்பட்டதைப்போல.
உலக இசுலாமியர் ஜனததொகையில் மூன்றாவது இடத்தில் இந்தியா. ஒரு இந்தியப்பிரதம் அவர்களையெல்லாம் விரட்டிவிட முடியுமா புனைப்பெயரில்? அதுதானே நீங்கள் சுட்டும் ‘வாலி வதம்”?
இந்துமதத்தை வளரவைப்பதும், களையெடுப்பதும், மக்களிடையே பரப்பி பிறம்தங்களை வெற்றி (அதாவது மக்கள் எண்ணிக்கையில்) காண்பது, ஒரு நாட்டின் பிரதமரின் கைகளில்தான் எனப்தை விட முட்டாள்தனமில்லை. அவை இந்துக்களிடமே இருக்கின்றன. எப்படி இசுலாமியர், கிருத்துவர்கள் தங்கள் மத்ததைச் செழிக்கவைக்கிறார்களோ, இந்தியாவில் – அப்படி.
எந்த இசுலாமியரும் அப்துல்கலாம் தங்கள் மதத்தை வாழ வைப்பார் குடியரசுத்தலைவராகி எனச்சொன்னதேயில்லை. புனைப்பெயரில்தான் அரசியல்வாதி, அல்லது அரசு தங்கள் மதத்தை வாழவைக்கும் என நம்புகிறார்.
வாலி வதம் தேவையில்லை. கீழ்ச்சொல்லும் வதங்காளே தேவை
சாதிகளை ஒழியுங்கள். வட மொழிஆதிக்கத்தையும் பிராமணர்களின் மதத்தில் செய்யும் ஆதிக்கத்தையும் ஒழியுங்கள். (தாங்கள்தான் அர்ச்சர்கள்!)
மருத்துவர்களயும் விஞ்ஞானிகளியும் அவர்களின் கூட்டாலிகளையும் (consciously misspelt) கூட இந்துவாக்கிவிடலாம்.
– திருவாழ்மார்பன்
IIM Ganapathi Raman says:
November 10, 2013 at 5:31 am
நீங்கள் எழுதினால் கண்டிப்பாக போடுவார்கள் என்பது என் அபிப்ராயம். தகுந்த ஆதாரங்களுடன் கட்டுரையாகப்போட்டு விடலாம்.
பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை. கண்டிப்பாக பரம ஞானிகள் அப்படிப்பட்ட தளைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எனபது இந்துமததின் நிறைய பேசப்பட்டிருக்கிறது. மாறனேரி நம்பிகளை சீடனாக ஏற்றுக்கொள்ளாதேயும். அவரொரு பறையர்” எனப்தற்கு ஆளவந்தார் சொன்னது: பரமஞானிகளுக்கு சாதிகள் இல!’ எனப்தே. மாறநேரி நம்பிகள் வைணவ ஆச்சாரிய பரம்பரையில் ஒரு சிறப்பான புள்ளி என்பதை திண்ணை வாசகர் அறிவாராக.
அதன்படி, ஒரு விலைமாதருக்கு பிறந்துவிட்டாலோ, அப்படிப்பட்ட குலத்தில் பிறந்துவிட்டாலோ மஹானின் புனிதத்துவம் மாசுபடும் என்பது பொருந்தா எண்ணம்.
அருணகிரிநாதரைப்பற்றி கிருஸ்ணகுமாருக்குச் சொல்லித்தெரியவேண்டியதில்லை. மற்றவருக்காக:
மாபெரும் முருக பக்தர். இவரின் பாடல்கள் முருக பக்தியைத் தமிழருக்குக் கொண்டுபோனதைப்போல வேறெவரின் பாடல்களும் கொண்டுபோனதில்லை.
அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் வாழ்ந்த, இன்றும் வாழும், விலைமாதர் குலத்திலே பிறந்தவர். தன் தாயை ‘வைத்த’ செட்டியாருக்குப் பிறந்ததாகவும் அல்லது தகப்பன் யாரெனெறு தெரியாமலே பிறந்து விடப்பட்டதாகவும் வர்லாறு. கணிகையர் குலமாதர் பெரும்தனவந்தர்களின் வைப்பாட்டிகளாகத்தான் வாழமுடியும். மாதவி, கோவலன் என்ற பூம்புகார் வைர வியாபாரியின் வைப்பாட்டி இல்லையா?
தான்தோன்றித்தனமாக வாழ்ந்தபடியால், விடி வந்து உடலெல்லாம் புண்ணாகி தற்கொலை செய்யப்போகும் போது முருகப்பெருமாளால் தடுத்தாட்கொள்ளப்பட்டார் என்பதுவே வரலாறு.
எனவே கிருஸ்ணகுமார் ! பரமஞானிகளை அவர்கள் பிறப்ப்பொன்றும் செய்யாது. அப்படிச்செய்யும் என்றால், அது உங்கள் ஜாதீயத்திமிரில்தான் பிறக்கும்.. வேறு வழியில்லை.
இராமாயணத்தைப்பற்றி இங்கு பேசுவதால், அதில் உருகுவதாக சிலர் நடிக்கின்றபடியால், அவர்களுக்கு:
மனிதனாகக் கருதப்பட்ட இராமரை, தெய்வநிலைக்கேத்திய தொண்டு செயத ராம சரித்ர மனாஸை யாத்த துல்சிதாஸ், அனாதையாக கங்கைக்கரையில் விடப்பட்ட ஒரு குழந்தை. அங்கேயே சுற்றிக்கொணடு இரந்து வாழ்ந்த குழந்தை.
கேள்வி ஞானத்தில் தனக்குத் தெரிந்த கீழை ஹிந்தியில் (eastern Hindi) இராம சரிதத்தை அவரெழுதாவிட்டால் வடக்கில் இராமருக்கு இவ்வளவு புகழவந்திருக்காது.
துல்சிதாசுக்குத் தன்தகப்பன் மட்டுமன்று; தாயும் தெரியாது என்று இராம காதையைத்தூக்கியெறிந்துவிடலாமே?
-திருவாழ் மார்பன்
Post a Comment