Followers

Monday, February 13, 2006

கார்ட்டூன் -தீவிரவாதம் தீர்வாகுமா?

கார்ட்டூன் -தீவிரவாதம் தீர்வாகுமா?

டேனீஷ் கார்ட்டூனுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தோம். உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. டெனமார்க்கின் பொருள்களுக்கும் தடை போடப்பட்டது. அந்த நாடும் தனது தவறை உணர்ந்து கொண்டது. பிரச்னையை இத்தோடு விட வேண்டியதுதானே! சில நாடுகளில் தூதரகத்தை எரிப்பது, ஆட்களைக் கடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது முகமது நபியின் போதனைக்கே எதிரல்லவா? இரண்டு நாட்களாக திரிபோலியில் கலவரத்தில் பலர் இறந்துள்ளார்கள். பிலிப்பைன்ஷிலும் கலவரம். ஆப்கானிஷ்தான், பாகிஸ்தானிலும் உயிர் இழப்புகள். இது போன்ற தீவிரவாதம் யாரால் ஊக்குவிக்கப் பட்டாலும் நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். இந்த போராட்டத்தில் தீவிரவாதத்தை நுழைப்பவர்கள் கண்டிப்பாக இஸ்லாமிய எதிரிகளே! இத்தனை நாடுகளிலும் போன உயிர்களை இவர்களால் திரும்ப கொண்டு வர முடியுமா? நிர்க்கதியாய் நிற்கும் அவர்களின் குடும்பத்துக்கு என்ன பதிலை இவர்கள் வைத்திருக்கிறார்கள்? கண்டிப்பாக குர்ஆனிலிருந்தோ, முகமது நபியின் வார்த்தைகளில் இருந்தோ இவர்கள் செய்யும் செயலுக்கு ஆதாரம் காட்ட முடியாது. தீவிரவாதத்தை தூண்டி விடும் இது போன்ற நபர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் இஸ்லாத்தை சரி வர கடை பிடிக்காதவர்களாகவே இருக்கின்றார்கள்.

இத்தனைக்கும் காரணம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களே என்று கூறுவேன்.எந்த மார்க்க அறிஞராவது இது போன்ற தீவிர வாதம் தவறு என்று சொல்லி இருக்கிறார்களா? இவர்கள் நினைத்திருந்தால் இத்தனை உயிர்கள் பறி போவதை சொற் பொழிவுகளின் மூலமே தடுத்திருக்க முடியும். நேற்று உபியில் நடந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சரும், மார்க்க அறிஞருமான முகம்மது யாகூப் குரைஷி கார்ட்டூன் வரைந்தவர்களை கொலை செய்பவருக்கு 11.5 மில்லியன் டாலர் பரிசு தருவதாக அறிவித்துள்ளாராம். இந்த பரிசு பணத்தையும் பொது மக்களிடம் வசூலித்துக் கொடுப்பாராம். பொது மக்களிடம் வசூலித்துக் கொடுப்பதற்கு இவர் எதற்கு? இதுதான் முகமது நபியின் வழி காட்டலா?

தொழுகின்ற பள்ளியில் ஒருவர் சிறுநீர் கழிக்கிறார். முகமது நபியின் தோழர்கள் அவரை தடுக்க அவரை நோக்கிச் செல்கின்றனர். அவர்களை தடுத்த முகமது நபி அந்த மனிதர் சிறுநீர் கழிக்கும் வரை பொறுமையுடன் இருந்து பிறகு அவரை அழைத்தார். அவர் வந்தவுடன். 'நண்பரே! இது நாங்கள் இறைவனை வழி படுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தூய்மையான இடம். இனிமேல் இது போன்ற தவறைச் செய்யாதீர்கள்' என்று அறிவுரை பகர்ந்தார். அவரும் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். முகமது நபியின் செயலோடு மேற் சொன்ன யாகூப் குறைஷியின் செயலை ஒப்பிட்டுப் பாருங்கள்.

குர்ஆனையும், நபியின் வாழ்க்கை முறையையும் போதிப்பதை விட்டுவிட்டு தங்கள் கற்பனையில் உதிப்பவற்றை எல்லாம் மார்க்கம் என்று எழுதி வைத்ததன் பலன், இன்று வரை அனுபவிக்கின்றோம். அமைச்சருக்கு தன் பெயர் பத்திரிக்கையில் வர வேண்டும் என்ற அற்ப விளம்பர உத்தியைத் தவிர வேறில்லை. இதுபோல் பொது மக்களை உசுப்பி விட்டு ஓடி ஒளிந்து கொள்வதே இவர்களின் வாடிக்கை. பிறகு இதன் பலனை இஸ்லாத்தின் தலையில் கட்டி விட்டு இந்த முல்லாக்கள் கம்பி நீட்டி விடுவார்கள். உலக கல்வியிலும், மார்க்க அறிவிலும் முஸ்லிம்கள் பின் தங்கி இருக்கும் காலமெல்லாம் இது போன்ற முல்லாக்களின் காட்டிலே மழைதான்.

2 comments:

suvanappiriyan said...

திரு நூர்தீனுக்கு!

டேனிஷ் அரசாங்கமும், நார்வே அரசாங்கமும் வருத்தம் தெரிவித்து அது அரேபிய பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. கார்டடூனை அனுமதித்ததற்காக அந்த நாடுகளும் பொருளாதார பாதிப்புகளையும் சந்தித்தது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீவிரவாத்தின் பக்கம் சென்றதனால் முஸ்லிம் நாடுகளில் 25 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். அதிக பட்சமாக பாகிஸ்தானில் வெளி நாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடப் பட்டுள்ளன. இந்த போராட்டத்தைப் பயன் படுத்தி சமூக விரோதிகள் பயனடைய பார்க்கிறார்கள். இது போன்ற நேரங்களில் மார்க்க அறிஞர்கள் மக்களை சாந்தப் படுத்த வேண்டும். உங்கள் வாதப்படி கார்ட்டூன் வரைந்தவன் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் அதற்க்கு தலையை எடுப்பது தான் இஸ்லாம் கொடுக்கும் தீர்ப்பா? அதிலும் ஒரு மாநிலத்தின் மந்திரியும், மார்க்க அறிஞரும் ஆன ஒருவர் இது போன்று பேசலாமா? என்பது தான் என் கேள்வி. அப்படி பேசியதற்காக இரண்டு கிரிமினல் வழக்குகள் அவர் மேல் நேற்று உ.பி யில் போடப்பட்டுள்ளது.

suvanappiriyan said...

குறிப்பிட்ட இந்த பதிவைப் பற்றி மாற்றுக் கருத்துடன் சிலர் தனி மடல் எழுதியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பதிலாக அரப் நியூஸில் வந்த கடிதங்களைப் பார்வைக்கு வைக்கிறேன்.

Turn the TablesThe blasphemous cartoons only displayed the hatred in the hearts of the cartoonists and their supporters. However, we Muslims in many parts of the world responded to their hatred by returning hatred and violence.We Muslims have fallen into the hatred trap through various acts of violence and putting bounties on the heads of the cartoonists. We should realize the intention of these cartoons was to incite hatred in Muslim hearts, and yet we have fallen into their trap.Turn the tables on these people; stick to the decent form of protest of boycott and make it stronger. This boycott will also forge unity of thought among Muslims.We Muslims indeed respect our Prophet Muhammad (pbuh) and value him more than our own parents; but do we not fail to respect and value him when we take to violence and bloodshed?Let us all turn the tables on them by peaceful means and a willful collective boycott worldwide; assuredly, this way will work in the long run.
Fareed Siddique, Riyadh, published 23 February 2006

Emotional OutburstsThe report “Indian Minister Offers Bounty” (Feb. 19) shows how self-defeating emotional outbursts can be — especially when it comes from a person holding ministerial rank. Announcing $11.5 million in cash and gold equal to the weight of the cartoonist does not improve the situation or the image of Muslims. Strong condemnation of the cartoons is warranted. Efforts through diplomatic channels should be made to put an end to such insults. I would suggest to the minister, Muhammad Yaqoob Qureshi, to get the money and the value of the gold and spend it to improve the welfare of Muslims in his own city of Meerut or channel the funds to print the teachings of Islam and the Prophet (peace be upon him) in all European languages and distribute them for free to non-Muslims in order to reduce their misunderstandings.
Hameed Husaini, Riyadh, published 23 February 2006


Good ProjectThis is in response to the article, “MBC Team in Denmark to Present Correct Image of the Prophet,” (Feb. 20). I think this is a very good project. What Yalla Shabab is doing is great.This is really the right way to do things if someone does not understand your culture or religion. I’m Christian but I’ve been living here in the Gulf for sometime now. I know that one of the greatest things that Islamic scholars impart is tolerance.On the other hand, I wish there was also a team from the media, in cooperation with Islamic leaders, who would work to stop the violence that has escalated in several Muslims communities around the world.Violence from these riots only emphasizes what the Danes wrongly think Islam is about (violence). The violence has to stop. When will it end? Innocents on both sides are affected. I wish Yalla Shabab all the best.
Precious de Leon, Saudi Arabia, published 23 February 2006