Followers

Sunday, February 05, 2006

கார்ட்டூனுக்கு எதிராக!

முகமது நபியின் கார்ட்டூனுக்கு எதிராக நேற்று லெபனானில் டென்மார்க் நார்வேயின் தூதரகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் 28 பேர் காயமடைந்தனர். இது போன்ற வன்முறையை இஸ்லாம் அனுமதிக்க வில்லை என்றாலும் சிலரது உணர்வுகளை கட்டுப்படுத்துவது இயலாததாகி விடும். தற்போது லெபனானிலும் சிரியாவிலும் உள்ள தங்கள் நாட்டவர்களை நார்வேயும் டென்மார்க்கும் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளன.

இந்த தாக்குதல்களை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று அய்ரோப்பிய யூனியனின் தற்போதைய தலைமையான ஆஸ்திரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவும் இந்த கலவரத்தில் சிரிய அரசுக்கும் பங்குண்டு என்று தன பங்குக்கு பிரச்னையை ஊதி வருகிறது. அந்த கார்ட்டூனின் மறு பதிப்பை வெளியிட்ட நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ.பெயின் போன்ற நாடுகளுக்கு எதிராகவும் கோபக்கனல் திரும்பினால் பிரச்னை மேலும் சிக்கலாகும்.

நேற்று ஆப்கானிஷ்தானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் டென்மார்க்குக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இங்கு அய்நா அனுப்பிய டென்மார்க் துருப்புகள் சுமார் 170 உள்ளனர். இந்த வருடம் இந்த எண்ணிக்கையை 360 ஆக உயர்த்தப்போவதாக வேறு முன்பு உளறி வந்தது. இங்குள்ள படையினரின் உயிரும் தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது. நேற்று பாரிசிலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர் டென்மார்க்குக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்

இங்கு ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் யாரும் நபிகள் நாயகத்தை பார்த்தில்லை. அவர்களின நாட்டைச் சேர்ந்தவரும் அல்ல. இருந்தும் முகமது நபியின் மேல் இவர்கள் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

No comments: