Followers

Monday, February 13, 2006

டாக்டர் ஆத்மராமும் இஸ்லாமும்

டாக்டர் ஆத்மராமும் இஸ்லாமும்


உணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்! ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிறந்து, மிகச்சிறு வயதிலேயே சென்னை வந்து கோபாலபுரத்தில் வளர்ந்தவன். எனது பள்ளிப் படிப்பு கல்லூரிப் படிப்பு எல்லாம் சென்னையில் தான். லயோலா கல்லூரியில் படித்த நான் 'ஸ்டேட் பர்ஸ்ட் அவுட் கோர்ஸ்' மாணவனாக தேர்வு பெற்றேன். அடுத்து ஐ.ஐ.டி.யில் படித்து பி.டெக் பட்டம் பெற்றேன். ஐ.ஐ.டி.யில் எனது படிப்பு முடிந்ததுமே அமெரிக்காவில் உயர்கல்வி யும், வேலை வாய்ப்பும் பெறுவதற்கான 'விசா' எனக்குக் கிடைத்தது. 19 வயதிலேயே 1965ல் அமெரிக்காவுக்கு முதன்முதலில் சென்ற நான் இன்று அமெரிக்க குடியுரிமை பெற்றவனாக உள்ளேன். அமெரிக்காவில் நான் உயர்கல்வி படித்து எம்.எஸ்.ல் தேறியதும், 3 துறைகளில் ஆய்வு செய்து பி.எச்.டி. செய்து, டாக்டர் பட்டம் பெற்றேன். மேலும் நான் உலகளாவிய அளவில் மிக உயர்ந்த அந்தஸ்துகள் பலவற்றை பெற்றுள் ளேன். அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான 'நாஸா'வில் கவுரவ உறுப்பினராகவும், ஐ.நா கல்விக் கழகத்தில் பேராசிரியராகவும் 25 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். ஐ.எம்.எஃப். என்ற சர்வதே நிதி அமைப்பு மற்றும் 'உலக வங்கி' ஆகியவற்றில் தலா மூன்றரை ஆண்டுகள் சிறப்பு உறுப்பினராகவும், ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரக் கொள்கை அமைப்பு காரியதரிசி போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளேன். இஞ்சினியரிங் துறையில் 41 புத்தகங்களை எழுதியுள்ளேன். எனது புத்தகங்கள் உலகில் பல நாடுகளிலும், பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் பாடப்புத்தகங்களாக வைக்கப்பட் டுள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ உட்பட உலகப் புகழ்பெற்ற பல பிரபலங்கள் எனது மாணவர்கள்... பிர்லா கோளரங்கத்தின் சாஃப்ட்வேர் எனது ஆலோசனைப்படி அமைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் இன்று கோடிக்கணக் கானோர் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் சாஃப்ட்வேரை முதன் முதலில் தயாரித்து வழங்கியது நான் தான் என்றும், அதைத்தான் பரவலாக அனைவரும் பயன்படுத்தி வருகி றார்கள் எனவும் பல விபரங்களைக் கூறி நம்மை திகைக்க வைத்தார்.

உணர்வு: உங்களுக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் எப்படி ஏற்பட்டது? ஆத்மராம்: நான் உட்பட 16 மாணவர்கள் முதன் முதலாக அமெரிக்கா சென்ற போது. அங்குள்ள விதிமுறைகள் சரிவர தெரியாத தால், சில காரணங்களால் அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டோம்.... அப்பொழுது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 'நுஸ்ரத் அலி' என்பவர், நான் தமிழ் பேசுவதைப் பார்த்து என்னை அணுகி, ''நீ மதராஸ்காரனா? நானும் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவன் தான். இந்திய நாடு பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற நான் இப்போது அமெரிக்க பிரஜையாக உள்ளேன். கவலைப்படாதே'' என ஆறுதல் கூறி என்னையும், என்னுடன் சேர்ந்து கைதான வர்களையும் நீதிமன்றத்தின் மூலம் விடுதலை பெற உதவி செய்தார். மேலும், அவரது வீட்டிற்கு அழைத்து தங்க வைத்து பலவித உதவிகளைச் செய்தார். அவர் மூலமாக இஸ்லாம் குறித்த அறிமுகம் உண்டானது. மேலும் நான் முதன்முதலில் பி.எச்.டி. ஆய்வில் தேறியதும் எனக்கு, டாக்டர் பட்டம் தருவதற்கு பரிந்துரை செய்தவர் எனது பேராசிரியரான 'இர்ஷத் அலி' என்ற முஸ்லிமே ஆவார். அவர் அன்று செய்த உதவியால்தான் இன்று நான் பல்வேறு உயர்வுகளை அடைய முடிந்தது. இதன் வாயிலாக இஸ்லாம் பற்றி மேலும் அறிய முற்பட்டு, பல்வேறு நூல்களை படித்து தேறினேன். அடிப்படையில் நான் பிராமண வைசிய குலத்தில் பிறந்ததால் இயல்பாகவே ஏகத்துவக் கொள்கை மீது எனக்கு ஆர்வம் உண்டு. எங்களது குல தெய்வம் 'ஒப்பிலி அப்பன்' என்ப தாகும். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஒப்பிலி அப்பன் கோவிலில் உள்ள சிலையில் ஏகத்துவ கொள்கையை வலியுறுத்தும் 'மா ஏகம் சரணம் வ்ரஜா' என்ற மந்திரம் பொறிக்கப்பட் டுள்ளது. அதிலிருந்தே நான் ஏகத்துவக் கொள்கையை ஆய்வு செய்யத் தொடங்கி னேன். மேலும், சகோதரர் பிஜேயின் பிரச்சாரத்தை தொலைக்காட்சி வாயிலாக பார்க்க ஆரம்பித்தது முதல் ஏகத்துவக் கொள்கையில் உறுதி ஆகிவிட்டது.

உணர்வு: இதைச் சற்று விளக்கமாக கூறுங்களேன்...
ஆத்மராம்: 2001ம் ஆண்டு என நினைக்கிறேன். நான் அமெரிக்காவில் எனது அலுவலகத்தில் சேட்டிலைட் சேனல்கள் ஒவ்வென்றையும் ஆய்வு செய்து கொண்டிருந் தேன். அமெரிக்காவில் ஃப்ரீ சேனல்கள் மட்டுமே 250க்கும் மேல் இருக்கும். மேலும் 'கட்டண சேனல்'கள் வேறு பலநூறு இருக்கும். அவற்றை நான் ஆய்வு செய்து கொண்டிருக் கும் போது திடீரென்று ஒரு தமிழ் குரல் கேட்டது. அந்தக் குரலின் வசீகரம் என்னை கவர்ந்தது. அந்தச் சேனலை டியூன் செய்தேன். அது விண் டிவி என நினைக்கிறேன். அதில், பிஜே அவர்களின் பேச்சை முதன்முதலில் கேட்டேன். அதில் இதன் தொடர்ச்சி நாளை தொடரும் என பாக்கர் அறிவிப்பார். அப்போது தான் அவர்கள் முதன்முதலில் எனக்கு அறிமுகம். அதன் பிறகு பிஜேயின் நிகழ்ச்சி களை தொடர்ந்து பார்த்து ஏகத்துவத்தையும், இஸ்லாத்தின் சிறப்புகளையும் நல்ல முறையில் உணர்ந்து கொண்டு வருகிறேன். நான் 2001 நவம்பர் மாதம் முதன்முதலில் பிஜேயுடன் தொலைபேசி வாயிலாக பேசினேன். அப்புறம் அடிக்கடி அவரிடம் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று வருகிறேன். நான் உலகின் பல நாடுகளுக்கும் சென்ற போதும் பிஜேயுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி உள்ளேன். அந்த உறவு இன்று வரை தொடர்கிறது. உணர்வு: பிஜேயின் கேள்வி நேரத்தின் போது உங்களுக்கு மட்டும் தொலைபேசி இணைப்பு உடனடியாக எப்படி கிடைக்கிறது? ஆத்மராம்: அது மட்டும் ரகசியம்.... தலைவர் பி.ஜே.யும், பாக்கரும் கூட இது குறித்து என்னிடம் கேட்டார்கள். அது தொலைபேசி தொழில்நுட்ப ரகசியம் என்பதே எனது பதில். நான் தற்போது 9 மாத விடுமுறையில் எனது அலுவல் விஷயமாக இந்தியா வந்துள்ளேன். ஒரு நாள் எதேச்சையாக விண் டிவி பார்க்கும் போது பிஜேயின் கேள்வி நேரம் ஒளிபரப்பானது. அது முதல் வாராவாரம் அவருடன் உரையாடி வருகிறேன்.

உணர்வு: குடந்தை மாநாட்டில் உங்கள் அனுபவத்தைக் கூறுங்களேன்? ஆத்மராம்: தவ்ஹீது ஜமாஅத்தின் அன்பான அழைப்பை ஏற்று குடந்தை பேரணிக்கு குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டேன். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்ட அந்த அற்புத நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பலவிதங்களிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம் எங்களைப் போன்று முன்னேறிய சமூகமாக மாற இட ஒதுக்கீடு மூலமே முடியும். அது விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பிஜே பொதுச் செயலாளர் பாக்கர் மற்றுமுள்ள நிர்வாகிகளின் வழிகாட்டல் படி முஸ்லிம்கள் உரிமையைப் பெறுவது உறுதி! உணர்வு: ஏகத்துவத்தை நன்கு உணர்ந்தாக கூறும் தாங்கள் இன்னும் உருவ வழிபாடு செய்கிறீர்களா. பிறப்பின் அடிப்படை யில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையை ஒப்புக் கொள்கிறீர்களா? ஆத்மராம்: மனுநீதி அடிப்படையிலான சாதி அமைப்பு முறை நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் அதன் நோக்கம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று உலகில் பிராமணர்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் மனுநீதி குறிப்பிடும் பிராமணர் ஆகமாட்டார்கள். எனவே பிராமணர் என்று யாரும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது. உருவ வழிபாடு ஆன்மீகத்தின் ஓர் அங்கமே! சாதாரண மக்கள் இறைவனை அடைவதற் கான ஒரு எளிய முயற்சிதான். எப்படி எல்லா நதிகளிலும் கடலில் சென்று கலக்கிறதோ அது போன்றே வழிபாட்டு முறை பலவாறாக இருந்தா லும் கடவுளை அடைவதே நோக்கமாகும். நான் உருவ வழிபாட்டை தவிர்த்து வருகிறேன். உருவமற்ற வழிபாட்டு முறை ஆன்மீகத் தின் உயர்ந்த படித்தரம் எனினும் அதனை எல்லோராலும் பின்பற்ற முடியாத நிலையே உள்ளது. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து திருந்தினால்தான் தடுக்க முடியும். நாளடை வில் அது குறைந்து விடும். படித்தவர்களால் மட்டுமே அது சாத்தியம். நான் படித்தவன் என்பதால், இறைவன் நாடினால் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடிக்கக் கூடியவனாக மாறுவேன்... என்றார். அவரது நேர்வழிக்காக நாமும் பிரார்த்திப்போமாக!

10 comments:

அழகப்பன் said...

தம்பி ஜேம்சு இந்த செய்தி படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்த சுட்டிக்குப் போய் பாருங்கள்.

உணர்வு

suvanappiriyan said...

திரு ஆரோக்கியம் கெட்டவரே!
திரு ஜேம்ஸ் அதை ஹம்பக் என்று சொன்னால் அதை நிரூபிப்போம். அதற்காக எழுத்தில் இவ்வளவு காட்டம் வேண்டாமே!

suvanappiriyan said...

நன்றி அழகப்பன்!
நான் ஜேம்ஸ்க்கு சொல்ல வந்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள்.

suvanappiriyan said...

திரு ஜேம்ஸ்!
உங்களின் கேள்விக்கு திரு அழகப்பன் பதிலளித்துள்ளார்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Benazir Bhutto never studied engineering.She studied in Radcliffe College and in Oxford
University.So I doubt whether she was his student as claimed by him.

An individual cannot be a member in World Bank or IMF.An individual
could be an employee or consultant only.

i checked in amazon and could not find a single book by anyone with part of the atma in engineering.

I have never heard of brahmin vysa
caste or category.And some of his claims seem to be far fetched.So I doubt whether the claims are true.

Let the magazine list the books
written by him or publish his CV.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

''எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, தான் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர் அல்ல; மாறாக, கல்வித்துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பலவித பதக்கங்களை யும் பாராட்டுக்களையும் பெற்றதன் மூலம் ஆராய்ச்சிக்காக அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட 'முனைவர்' எனப்படும் சிறப்பு டாக்டர் பட்டம் என்பதை விளக்கிய அவர், தன்னைக் குறித்து கூறிய விபரங்கள் அங்கிருந்த அத்துனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியது.


He has claimed he done M.S, and then PhD and is a technocrat.But it is reported (see above) that he did Phd in education.He has not given the title of the honor conferred upon him by the govt. of Norway.
I have doubts about the claims made
by him.They should publish his CV or give the list of the books
written by him.

suvanappiriyan said...

திரு ரவி
அவரின் படிப்பின் மீது சந்தேகம் இருந்தால் நேரிடையாகவே அவரிடம் கேளுங்கள். அல்லது பேட்டியை வெளியிட்ட உணர்வு இதழுக்கு எழுதி கேளுங்கள். என்னைப் பொறுத்தவரை இந்த பத்திரிக்கை ஆதாரம் இல்லாமல் எந்த செய்தியையும் வெளியிடாது. ஏனெனில் இது போன்ற பல வழக்குகளை இஸ்லாமியர்களிடம் இருந்தே சந்தித்தவர்கள்..(இஸ்லாமியரிடத்தில் உள்ள மூடப் பழக்க வழக்கங்களை நீக்கும் பொருட்டு கடந்த இருபது வருடமாக போராடி அதில் குறிப்படத்தக்க வெற்றியும் பெற்றுள்ளார்கள்) எனவே எனக்கு இது விஷயத்தில் சந்தேகம் இல்லை. உங்களுக்கு சந்தேகம் இருப்பின் நீங்கள் சென்னையில் இருந்தால் நேரிடையாக பத்திரிக்கை அலுவலகத்திற்கே சென்று கேட்டுப் பார்க்கவும்.

suvanappiriyan said...

திரு ப்ரம் ஈஸ்ட்!

டாக்டர் ஆத்மராமே மக்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு இஸ்லாத்தில் தனக்குள்ள ஈடுபாட்டை சொல்லி, கார்ட்டூன் விவகாரத்தால் டென்மார்க் அரசு தந்த பட்டத்தையும் துறந்திருக்கிறார். இஸ்லாத்தைப் படித்து வருகிறேன். வருங்காலத்தில் இஸ்லாத்தை கடைபிடிப்பேன் என்றுதான் சொல்லியுள்ளார்.அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நானும் சொல்லவில்லை அந்த பேட்டியிலும் அது போன்ற வரிகளும் இல்லை. செய்தியை அரைகுறையாக படித்து விட்டு எழுதியுள்ளீர்கள். இதில் பொய் சொல்வது யார் என்று மேலிருந்து படிப்பவர்களுக்கு தெரியும்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I am not in Chennai.I have raised some doubts and questions. Those who reproduced what has been published should ask the publisher for more details and for answers as
they only re-published it.

suvanappiriyan said...

நன்றி திரு ஆரோக்கியம் (உள்ளவரே!)

ரவியின் சந்தேகங்களுக்கு பதில் தந்து இருக்கிறீர்கள். கண்டிப்பாக அவர் இனி தினமும் டான டிவி பார்ப்பார் என்று நம்புவோம். நானும் திரு ஆத்மராமிடம் இருந்து ரவி கேட்ட படிப்பு சம்பந்தமான விபரங்களை சேகரித்து முறையாக வெளியிட முயற்ச்சிக்கிறேன்.