Followers

Monday, February 13, 2006

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8

திருக் குர்ஆனின் 13;8 வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது.நாம் சாப்பிடும் உணவுகளையும் ஜீரணித்துக் கொண்டு பிறகு கழிவாக வெளியேற்ற முயற்ச்சிக்கிறது. நம் கண்களை எடுத்துக் கொள்வோம். கண்களில் ஏதேனும் தூசிகள் விழுந்து விட்டால்அதை எப்படியாவது வெளியேற்றவே கண் முயற்ச்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் தனக்குள் விந்துத் துளியை கருவாக வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்ச்சிக்கிறது. இவ்வாறு முயற்ச்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகிறது.இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ் வசனம் கூறுகிறது.

'ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது' என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இயற்கைக்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் குழந்தையை வெளியேற்றுவதற்கு முயற்ச்சிக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தை நானே தீர்மானித்தேன் என்று இறைவன் கூறுகிறான்.

அன்னிய பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இயற்கைக்கு மாறாக இறைவன் தன் வல்லமையை புகுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயித்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி தன் கற்பனையால் இத்தகைய அறிவியல் உண்மைகளை சொல்ல முடியாது. இது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

No comments: