முகமது நபியைப் பற்றி கேலிச் சித்திரம் வரைந்து பிரச்சினையில் மாட்டியிருக்கும் டென்மார்க் அரசைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்திருப்போம். இந்த பிரச்சனையால் டென்மார்க்கின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்கா, மதினாவில் ஒவ்வொரு கடைகளிலும் ' டேனிஷ் பொருள்களை புறக்கணிப்போம்' என்ற வாசகம் அடங்கிய போர்ட் வைக்கப்பட்டுள்ளது. வளைகுடா முழுவதும் ஏறக்குறைய இதே நிலைமைதான். இந்த காரணங்களால் இரண்டு மில்லியன் டாலர் நஷ்டத்தை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறது டேனிஷ் அரசு. அளவுக்கதிகமான சுதந்திரம் ஒரு நாட்டையே பிரச்சினைக்கு இட்டுச் சென்றுள்ளது.
'டேனிஷ் பொலிடிக்கன்' என்ற பத்திரிக்கையின் முனனால் எடிட்டர் ஹெர்பர்டர் புன்டிக் தலைமையில் கோபனஹெனில் பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடை தற்போது வசூலிக்கப்படுகிறது. இதேபோல் டென்மார்க் அரசு அங்குள்ள முஸ்லிம்களை வளைகுடாவுக்குச் சென்று இங்கு உள்ள உண்மையான நிலவரங்களை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. டேனிஷ் இமாம் ஃபதே அலிவ் சொல்லும் போது. 'டென்மார்க் முஸ்லிம்கள் இந்த விவகாரத்தில் அரசுக்கு உதவ வேண்டு' என்று ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment