Followers

Monday, February 13, 2006

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்!

கல்விமான்கள் பலரின் கருத்துக்களை கீழே தந்துள்ளேன். மாற்று மதத்தவர்கள் தெரிந்து வைத்திருக்கும் அளவு கூட முஸ்லிம்களில் பலர் குர்ஆனைப் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கிறார்கள். முஸ்லிம்களில் எத்தனை வீடுகளில் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளது? கேட்டால் 'இதை எல்லாம் மௌலானாக்கள் தான் விளங்க முடியும். நமக்கு அந்த அளவு அறிவு ஏது? என்று பதில் சொல்கிறோம். 'நீங்கள் விளங்குவதற்காகவே இந்த குர்ஆனை மிகவும் இலகுவாக ஆக்கியிருக்கிறோம்' என்று குர்ஆனில் இறைவனே குறிப்பிடுகிறான். அப்படி இருக்க இன்னும் ஏன் தயக்கம். மாற்று மதத்தவர்களுக்கு விளங்குகிறது, முஸ்லிம்களாகிய உங்களுக்கு விளங்கவில்லை என்பது நகைப்பிற்கிடமானது அல்லவா?

காலங் காலமாய் ஒடுக்கப் பட்டு, தீண்டத் தகாதவர்களாய் மனதுக்குள் புழுங்கித் தவிக்கும் என் சகோதரர்களுக்கும் இந்த பதிவிலேயே தீர்வும் இருக்கிறது.

ஆர்தர் ஜே.ஆர்பெர்ரி (Arthur J.Arberry) கூறுகிறார்:

குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன்.ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னி பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன. குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கின்றன. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய சொற்களின் ஓசை நயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களை பரவசமடையச் செய்கிறது' என்று பிக்தால் தம் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.

-The Koran Interpreted , London: Oxford University Press, 1964, Page 10

சரோஜினி நாயுடு

இஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும். குர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.

-Sarojini Naidu, Lectures on”The Ideals Of Islam” see sand writings of Sarojini Naidu, Madras, page 167

சுவாமி விவேகானந்தர்

மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைத கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாய் இருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க அளவில் அணுகி இருக்கிறது என்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவ பூர்வமாய்க் கூறுகிறேன்.

நான் அழுத்தமாய்ச் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமிய செயல் பாடின்றி வேதாந்தக் கருத்துக்கள் - அது எவ்வளவு தான் சிறப்பானதாக பெருமைக்குரியதாக இருந்தாலும்- பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்.

Letters Of Swamy Vivekananda page 463
__________________________________________________________________

சர் சி.பி.ராமசாமி அய்யர்

இஸ்லாம் என்றால் எனன? இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். நான் ஓர் இந்து. இந்து சமய நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் நான் இதை தைரியமாகவே கூறுகிறேன். மனித குலம் ஒன்றே என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாக இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் எனது சொந்த மதம் வெற்றி பெற வில்லை. இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே எனும் அடிப்படைச் சிந்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையைப் போனறு வேறெந்த மதமும் - அவற்றின் மதக் கருத்தோட்டம் எதுவாயினும் சரியே- கடைபிடிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவின் போயர் இன மக்கள் பிரச்னை, ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்னைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப் பிரச்னைகளும் இருக்கவில்லை.

Sir C.P. Ramasamy Iyer, Eastern Times, 22nd December, 1944
_______________________________________________________________________

மகாத்மா காந்தி

தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாம் பரவி விடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள். இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரீகத்தைக் கற்று தந்தது. மொராக்கோவுக்கு ஒளியைக் கொண்டு வந்தது. உலகுக்குச் சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக் கூடும் என்பதால் தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாமின் வருகைக்காக அஞ்சுகிறார்கள். அவர்கள் நன்றாக பயப்படலாம். சகோதரத்துவம் என்பது பாவம் என்றால். கறுப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்சத்துக்கும் காரணம் உண்டுதான்.

Mahatma Gandhi Quoted in “Mohamed The Prophet Of The Islam” by Ramakrishna Roa. Page 8

அன்னி பெசன்ட் அம்மையார்

அரேபியாவின் இந்தத் துதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான உணர்கிறேன்.

Annie Besant, The life and Teachings of Mohamed 1932, page 4

லாமார்டின்

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்துதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மத் அவர்கள்.

Lamartine, Historie De La Turquie, Paris, 1854 Volume 2, page 276, 277

No comments: