மற்ற வளைகுடா நாடுகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இங்கு பணி புரியும் அநேக வெளி நாட்டவர் வேலைகள் செய்து கை நிறைய சம்பாதிப்பதோடு, போனசாக மார்க்க கலவியும் கற்றுக் கொள்கிறார்கள்.
எப்படி என்றால் தலைநகர் ரியாத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இங்கு பழைய தொழில் நகரமாகட்டும் அல்லது புதிய தொழில் நகரமாகட்டும் எங்கெல்லாம் வெளிநாட்டவர் அதிகம் உள்ளனரோ அங்கெல்லாம் ஒரு கல்விக் கூடத்தை அரசு அரசு செலவில் நிர்மானித்துள்ளனர். இவற்றின் வேலை நேரத்தை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு ஏழு அல்லது எட்டு மணியிலிருந்து பத்தரை பதினேரு மணிவரையும். வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு பிறகும் பாடங்கள் எடுக்கப் படுகிறது. நாம் தங்கியிருக்கும் வீடு வரை வாகனம் வந்து அழைத்துச் சென்று திரும்பவும் நம்மை வீடு வரை வந்து சேர்க்கிறது. இந்த நேர மாற்றம்வெளி நாட்டவரின் வேலை நேரத்தை கணக்கில் எடுத்து செயல் படுத்தப்படுகிறது. பாட புத்தகம். நோட் புத்தகம், எழுதுகோல. ஸ்கூல் பேக் என்று அனைத்துமே இலவசம். வகுப்பகள் முடிந்தவுடன் நம் ஊர் மதிய உணவு திட்டம் போல் அனைவருக்கும் உயர்தரமான சாப்பாடும் கொடுக்கப்படுகிறது. பரீட்சையில் முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ஊர் வரை விமானப் பயணத்திற்கான காசோலை,கணிணி,செல்போனகள், சைக்கிள்கள் என்ற பரிசு மழைகளும் உண்டு. இதில் கூடுதலாக ஒவ்வொரு நாட்டவரின் மொழியை அனுசரித்து, அவ்வந்நாட்டு ஆசிரியர்களைக் கொண்டே பாடங்கள் எடுக்கப் படுவது தனிச் சிறப்பு. குர்ஆன் விளக்கம், முகமது நபியின் வாழ்க்கை வரலாறு, அரபி மொழிப்பயிற்சி., அரபி மொழி இலக்கணம் என்று பாடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பாடங்கள் ஆங்கிலத்திலேயே எடுக்கப் படுகிறது. நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக் என்பதால் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் ஆங்கிலப் பாடத்தையே எடுத்தேன். எங்கள் வகுப்பில் பாடம் எடுக்கும் அனைவரும் சவூதி நாட்டவர். இவர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இலவசமாகவே பாடங்கள் எடுக்கின்றனர். இந்த ஆசிரியர்கள் அனைவரும் சவூதி பலகலைக்கழங்களில் மிகப் பெரும் வேலைகளில் இருப்பவர்கள். அமெரிக்கா சென்று பட்டம் பெற்று வந்தவர்கள். எந்த சந்தேகம் கேட்டாலும் முகம் சுளிக்காது அவர்கள் மாணவர்களை அணுகும் முறைமிகவும் பாராட்டத் தக்கது.
என் வகுப்பில் பதினைந்து பிலிப்பைன் நாட்டவர், மூன்று இந்தோனேஷியர், இரண்டு ஆந்திரா(இந்தியா) எனது அடுத்த வகுப்பில் பரிட்டானியர், ஆப்ஃரிக்க நாட்டவர் என்று ஒரு கலவையாக வகுப்புகள் செனறு கொண்டிருக்கிறது. இதில் என்னையும்,இந்தோனேஷியரையும் தவிர்த்து மற்ற அனைவரும் புதிதாக முஸ்லிம் ஆனவர்கள். எங்களை விட புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு பாடங'களை கவனிப்பதும், உடனுக்குடன் குறிப்புகளை எடுப்பதும், லெக்சர்களை வாக்மேன்களில் பதிவு செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்வதும்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இது பற்றி மேலும் சில தகவல்களை, அவர்களின் வாயிலாகவே அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம் இறைவன் நாட்டம் இருந்தால்.
அன்புடன்
சுவனப்பிரியன்.
No comments:
Post a Comment