சிறையில் வாடும் நம்மவர்கள்
சவூதி அரேபியாவில் கிட்டத்தட்ட பதினைந்து இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். ஒரு நபரால் விபத்துகளில் மற்றொருவர் மரணத்தை தழுவும்போது பகரமாக ஒரு லட்சம் ரியால்(சுமார் பன்னிரண்டு லட்சம் ரூபாய்) தர வேண்டும் என்பது சவூதி சட்டம். இதை மேலே சொன்ன பதினைந்து இந்தியர்களும் தர முடியாமல் வருடக்கணக்கில் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே குறைந்ந சம்பளத்தில் வேலை செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இதில் எட்வர்ட் வாஷிங்டன்(மகாராஷ்டிரா) என்பவரின் நிலை பரிதாமானது. இவர் கடந்த 2002 லிருந்து அல்கோபாரில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். டிரக் ஓட்டுனரான இவர் இரண்டு சவூதி இறப்பதற்க்கு காரணமாயுள்ளார். பகரமாக இரண்டு லட்சம் சவூதி ரியால் அந்த குடும்பத்திற்கு தர வேண்டும்.
ஹம்ஸா(கேரளா) என்பவர் இறப்புக்கு பகரமாக தர வேண்டிய தொகை இரண்டு லட்சத்து பதிமூன்றாயிரம் ரியால். இவர் கதீப் நகரத்தில் உள்ள சிறையில் 2004 லிருந்து அடைபட்டுள்ளார்.
ஆந்திராவைச் சார்ந்த முகம்மது ஓசாத் ரியாத் சிறையில் 2004 லிலிருந்து அடைபபடடுள்ளார்: இவர் கொடுக்க வேண்டிய தொகை இரண்டு லட்சம் ரியால்.
மொய்னுதீன்(கேரளா) அல்கஸீம் சிறையில் 2002லிருந்து சிறையில் வாடுகிறார். இவர் கொடுக்க வேண்டிய தொகை ஒரு லட்சம் ரியால்.
தமிழரான அகஸ்டின் துரை 2004 லிருந்து ரியாத் சிறையில் உள்ளார். இவர் கொடுக்க வேண்டியது இரண்டு லட்சம் ரியால்.
கேரளாவைச் சார்ந்த அப்துல் சமது அலஹஸா சிறையில் 2005 லிருந்த அடைப்பட்டுள்ளார். இவர் கொடுக்க வேண்டிய தொகை மூன்று லட்சம்;
மேலும் மீரான் அலி (கேரளா) , முகம்மது பஷீர் (கேரளா) , சலிம்கான் (ராஜஸ்தான்) , ஹனீபா (கேரளா) , அலி அக்பர் (கேரளா) , முஸ்தபா (கேரளா), அரவிந்த ராஜன் (கேரளா) போன்றோரும் இழப்பீட்டுத் தொகை தர முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.
வளைகுடா சென்று வாரி வந்து விடுகிறேன் என்று வந்தவர்கள், இன்று வாழ வழி இன்றி சிறையில் வாடுகின்றனர். வசதியற்ற இவர்களால் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது. நம் அரசாங்கமோ அல்லது சவூதி அரசாங்கமோ மனது வைத்தால்தான் ஒரு வழி பிறக்கும். அல்லது இந்த செய்தியைப் படிக்கும் செல்வந்தர்கள் உரியவர்களைத் தொடர்பு கொண்டு சிறையிலிருந்து மீட்டெடுத்தால் புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம்.
அன்புடன்
சுவனப்பிரியன்
29 comments:
கவனப்பிரியன்,
வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தங்கள் வாகனங்களுக்குரிய insurance வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்களால்
மரணமடையும் நபர்களுக்குரிய இழப்புத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொடுத்து விடும். இவர்கள் நிறுவனங்களுக்காக வேலை செய்தால் -
கண்டிப்பாக அந்த நிறுவனங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை ஓட்டுவது மிகப்பெரிய தவறாகும் - அதாவது
விபத்து என்ற அசம்பாவிதம் நடக்கும் பொழுது தான் பலரும் இந்தத் தவறை உணர்கின்றனர்.
இதிலிருந்து மீள்வதற்கு - யாராவது பெரிய பணக்காரர்கள் மனது வைத்தால் தான் உண்டு. இதுபோன்ற நபர்களுக்கென, துபாயில் போலிஸே
பட்டியல் தயார் செய்து, பணம் கொடை தரக்கூடிய செல்வந்தர்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறது. அவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட நபர்களைத்
தேர்ந்தெடுத்து ஈட்டுத் தொகையைக் கொடுத்து விடுதலை பெற்றுத் தர உதவுகின்றனர். இதற்குக் காரணம் - ஒவ்வொரு மனிதரும், தங்கள் வருமானத்தில் -
ஆண்டு வருமானத்தில் - 2.5% விகிதத்தை ஏழைகளுக்காகத் தர்மம் செய்ய வேண்டும் என்ற விதி. சிலர், இந்த மாதிரி சிறையில் வாழும் ஏழைகளுக்காக
தங்கள் பணத்தை செலவழிக்கின்றனர்.
நன்றி சுவனப்பிரியன்
விளக்கமாக ஒவ்வொருவர் பற்றியும் தகவல் சேகரித்து எழுதியிருக்கிறீர்கள். இது குறித்து நான் முன்பே சில பதிவுகள் எழுதியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அகஸ்டின் துரைசாமியின் விடுதலைக்கான முயற்சிகள் செய்து வருகிறேன். பணம் தவிர வேறு வழியில்லை என்பது தான் இதுவரை கிடைத்த இறுதித்தகவல். அவ்வளவு பணம் எங்கே திரட்டுவதென்பது கேள்விக்குறியாக உள்ளது.
http://akaravalai.blogspot.com/2005/03/blog-post_12.html
http://akaravalai.blogspot.com/2005/08/blog-post_15.html
சவூதிச் சிறையில் வாடும் கைதிகள், விடுதலைக்கானக் கீழ்க்காணும் வழிகளை அறிந்திருக்கக் கூடும்; அறியாமலுமிருக்கலாம். அக்கைதிகளைத் தொடர்பு கொள்ள முடிந்தால் தெரிவியுங்கள்:
(1) கைதியின் குடும்பத்தினர்/நெருங்கிய நண்பர்கள் கொலையுண்டவரின் வாரிசுகளைச் சந்தித்து/தொடர்பு கொண்டுப் பேசிப் பேசி அவர்களின் மனங்களை இளக வைக்கலாம். பாதிக்கப் பட்டவர்கள் கைதியை மன்னித்து விட்டால் கைதிக்கு விடுதலை நிச்சயம். இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் பாதிக்கப் பட்டவரை முதல் நீதிபதியாக நியமித்துள்ளது.
(2) அங்கு வாழும் முஸ்லிம் செல்வந்தர்களுள் சிலர், தம் ஸகாத் நிதியைக் கைதிகளின் விடுதலைக்காச் செலுத்துவர். (குர் ஆன் கூறும் ஸகாத்துக்கு உரிய 8 பிரிவினருள் கைதிகள் அடங்குவர்). இச்செல்வந்தர்கள், கைதிகளுள் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் இறைச் சிந்தனையும் நிரம்பப் பெற்றவர்களையே விடுதலைக்காகத் தெரிவு செய்வர். மீக்கூறிய பண்புகளை வளர்த்துக் கொள்வது விடுதலையின் சாத்தியத்தை அதிகப் படுத்தும்.
(3) இந்தியத் தூதரகம் மற்றும் நல அமைப்புகளைத் தொடர்பு கொண்டு ஈட்டுத் தொகை உதவி கோருதல். இதன் பிரதிபலன் மிகக் குறைவு எனினும் முயலுவதில் தவறில்லை.
சுவனப்பிரியன் -
எழுத்துரு குழப்பத்தால் - உங்கள் பெயரை கவனப்பிரியன் என்று எழுதி விட்டேன்.
மன்னிக்கவும்.
இனி இத்தகைய தவறு நிகழாது பார்த்துக் கொள்கிறேன்.
அன்புடன்
நண்பன்.
One of my friends involved in a fatal accident. The victim hit him from the back and the victim’s pregnant wife died on the spot. My friend's sponsor did not get him insurance, because insurance was un-Islamic. My friend an orthodox Brahmin suffered in jail for two years. The preachers in jail converted him to Muslim and forced him to eat meat including beef. After two years, he was pardoned by the king since he was converted to Islam and released from jail. He was not allowed to go out of Saudi for next 5 years and there were mullahs overseeing him whether he is doing his duties as a true Muslim. I do not know what happened next.
I cannot criticize Islam because they are "peaceful" Religion. It is fault of a poor Brahmin boy who is "sang parivar" went to Saudi to destabilise the "Peace" in Saudi
Can some one tell me how to write in Tamil in this blog? I can write in Tamil too
Siva
cheque
திரு கவனப்பிரியன் அவர்களே,
நேற்று என் நண்பரின் கதையை ஆங்கிலத்தில் எழுதியதால் பிரசுரிக்கவில்லையோ? அல்லது சௌதி அரசாங்கதின் கொடுமை வெளியே தெரிந்துவிடும் என்ற பயமா?
Calgary Siva
பின்னூட்டம் இட்ட அனுராக்,நண்பன்,சிவா போன்றோருக்கு நன்றிகள் பல. சிறையில் வாடக் கூடிய இவர்களின் குடும்பத்தாரை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. இன்று நம் நாடு இவ்வளவு ஊழல்களையும் தாண்டி பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது, வெளி நாட்டவர் மாதா மாதம் அனுப்பும் பணத்தை வைத்தே. எனவே நம் அரசாங்கத்துக்குத்தான் இதில் முக்கிய பொறுப்பு உள்ளது.
சிறையில் மாமிசம் சாப்பிடச் சொன்னதாக தன் நண்பரைப் பற்றி சிவா சொல்லி இருந்தார். தவறான தகவல். விருப்பமில்லாதவர்களை யாரும் கட்டாயப்படுத்துவது கிடையாது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு ரொட்டியும் வெண்ணையும் கொடுப்பார்கள். மனம் மாறாமல் மதம் மாறி ஒரு பயனும் இல்லை. அதை இஸ்லாமும் அனுமதிக்கவில்லை.அல்லது 5 வருடம் அவரைக் கண்காணிப்பதுதான் முல்லாக்களின் வேலையா? பிறகு அவர் பழைய மதத்துக்கு திரும்பி விடலாம் தானே! அவர் யார்? நண்பரின் பெயர் அவரின் பாஸ்போர்ட் எண், வேலை செய்த இடம் போன்ற விபரங்களை தெரிவித்தால் உண்மை நிலையை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
தமிழில் தட்டெச்சு செய்ய இஸ்லாம்கல்வி டாட்காமுக்குச் செல்லுங்கள். தேவையான தகவல்கள் கிடைக்கும்
நண்பர் சிவா! முதல் கடிதத்தில் தமிழில் எப்படி அனுப்புவது என்று கேட்டீர்கள். மறுநாளே அழகிய தமிழில் மடல் இடுகிறீர்கள்.இதற்குத்தான் ஒரு நாள் பொறுத்து உங்கள் கடிதத்தை வெளியிட்டேன் மத விவகாரமானாலும் அல்லது மற்ற விஷயங்களிலும் நாம் பொய் சொல்வதை விட வேண்டும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல உங்களின் நண்பர், சிறைச்சாலை, மதமாற்றம் என்ற அனைத்துமே பொய என்று விளங்கி விட்டது. இனிமேலாவது பொய்களை பரப்புவதை விட்டு விடுங்கள்.
மேலும் நண்பர் வஹ்ஹாபிக்கும் மடல் இட்டமைக்காக நன்றி கூறிக் கொள்கிறேன்.
ஒரு நல்ல செய்தி:
அவரது சகாக்களின் முயற்சியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் ஒப்புதல் பெற்று திரு அகஸ்டின் துரைசாமி ரியாத் சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
திரு சுவனப்ப்ரியன் அவர்களே,
எனக்குத் தமிழ் தெரியும் என்று கூறினேன். தமிழில் தட்டெச்சத் தெரியவில்லை அன்று. பிறகு தம்பி குமரனிடம் பேசிக் கற்றுக்கொண்டேன்.
நிற்க, என்னுடைய நணபரின் பாஸ்போர்ட் நம்பர் இத்தியாதி விஷயங்களைக் கொடுத்தால் உங்களால் அவருக்கு நேர்ந்த கொடுமைகைளை சரி செய்ய முடியுமா?
சௌதி அரேபியாவின் மிகவும் நாகரீகமடைந்த அல்கோபாரில் வாழ்ந்தவன் நான். அங்கு இந்தியர்க்கு என்ன மரியாதை அதுவும் முஸ்லிம் அல்லாதவற்க்கு என்ன மரியாதை என்று நேரில் பார்த்தவன். பொய் என்பது என் இரத்ததில் இல்லை.
இஸ்லாமை மதிக்கிறவன் நான். உயிரிலும் மேலான இஸ்லமிய நண்பர் கடந்த 25 வருடங்காளக எனக்குண்டு
தம்மாம் லேடீஸ் மார்க்கெட்டில் என் மனைவியின் முகத்தை மூடிக் கொள்ளும்படி கண்ட்டித்த முல்லா உண்டு. முல்லாக்களுக்கு சௌதியில் இதைத் தவிர வேறு வேலை இல்லை. சௌதியைப் பற்றி தனி பதிவே போடுகிறேன்
கால்கரி சிவா
திரு கால்கரி சிவா!
நண்பரின் விபரங்களைக் கொடுத்தால் நானும் தமிழன் என்ற முறையில் முயற்ச்சிப்பதில் தவறில்லையே!
தம்மாமில் உங்கள் மனைவியின் தலையை முல்லாக்கள் மறைக்கச் சொன்னதாக சொன்னீர்கள். பெண்கள் எல்லோரும் முக்காடிட்டு வரும்போது உங்கள் மனைவி மட்டும் முக்காடில்லாமல் வந்தால் வித்தியாசமாக இருக்காதா? இந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்ற ஒப்பந்தில் தானே நாம் சவூதி வருகிறோம். மேலும் இதனால் உங்கள் மனைவிக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. மற்றவர்களின் வித்தியாசமான பார்வைகளில் இருந்தும் தப்பிக்கலாம் அல்லவா? இதை ஏன் உங்களுக்கு சாதகமானதாக பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.
உயிரினும் மேலான இஸ்லாமிய நண்பர்கள் உள்ளதாக சொன்னீர்கள். அது நம் தமிழ் மண்ணுக்கே உள்ள சிறப்பல்லவா? எனக்கு டியூஷன் எடுத்த பிராமண ஆசிரியரின் வீட்டின் அடுக்களை வரை செல்ல உரிமை பெற்றிருந்தேன். ஒன்றாம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை பள்ளி நேரம் போக மற்ற நேரமெல்லாம் அந்த ஆசிரியரின் வீட்டில்தான் இருப்பேன். அதிகமாக இரவு சாப்பாடு ஆசிரியர் வீட்டில்தான்.
சௌதிகளைப் பொறுத்த வரை மற்ற நாட்டவரை விட இந்தியர்களைத்தான் அதிகம் நம்புவார்கள். பிரியமும் வைத்திருப்பார்கள்.இதை பல ஆண்டுகள் இம் மண்ணில் வாழும் இந்தியர்கள் அறிவர். ஒரு சில இடங்களில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அந்த ஒரு சில முல்லாக்களின் தவறே ஒழிய இஸ்லாத்தின் தவறு கிடையாது. நம் ஊரிலும் காவல்துறையில் ஒரு சில கறுப்பு ஆடுகள் அத் துறையின் பெயரைக் கெடுப்பதால் ஒட்டு மொத்த காவல் துறையையும் நாம் சாடுவதில்லையே! அதிலும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் இந்தியாவின் பெயர் சவூதிகளின் மனத்தில் கலங்கத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த நிகழ்வும் இவர்கள் மனதில் இருந்து நீங்கி வருகிறது. இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்திய புண்ணியம் அத்வானியையும் பி.ஜே.பி யையுமே சாரும்.
நண்பர் அனுராக்குக்கு!
பல காலம் சிறையில் இருந்தவரை சம்பந்த பட்ட சவூதிகளின் மன்னிப்பால் விடுதலையானது உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருக்கிறது.இது போல் மற்றவர்களுக்கும் விடுதலை ஏற்பட பிரார்த்திப்போம்.
தம்மாமில் தலையை மூடி முகத்தை மட்டும் தான் என் மனைவி வெளியே காட்டிக் கொண்ட்ருந்தார். நாங்களும் சட்டத் திட்டதிற்க்கு உட்பட்டு வாழ்ந்தோம். சட்டம் இஸ்லாமியற்க்கு ஒரு வகையிலும் மற்றவற்க்கு வேறு முறையில் செயல் படுவதும் தவறு. அதை எதிர்க்க கூட அங்கு வழியில்லை. இஸ்லாம் வெறுப்பை உண்டாக்கவில்லை. இஸ்லாமை சார்ந்த சிலர் மற்றவர்கள் மேல் வெறுப்புடன் வாழ்கிறார்கள்.அந்த சிலரில் பெரும்பான்மையினர் சௌதிகள். இது என்னுடைய அனுபவம். நீங்கள் இஸ்லாமியர் என்பதால் உங்கள் அனுபவம் நன்றாக உள்ளது.
இந்தியர்கள் திறமையிடனும், நேர்மையுடனும் வேலை செய்வதால் அதனால் அவர்களுக்கு நம்பிக்கை. அப்படியிருந்தும் அமெரிக்கர்களுக்கும், வெள்ளைக் காரர்களுக்கும் மதிப்பும் அதிக சம்பளமும். அவர்கள் இனதத்தை சேர்ந்த எகிப்தியரையும் பாலஸ்தீனரையும் அவர்கள் நம்புவதில்லை. ஏனென்றால் அவர்களிடம் ஒற்றுமையில்லை.
சுவன், என் நண்பர் பழைய நினைவுகளிருந்து மீண்டு வருகிறார். அவரிடம் நான் தொலைபேசியில் பேசிய போது அந்த நிகழ்வைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தார். பிறகு அவருடைய தாயரிடமிருந்து அவர் அவருடைய பழைய சௌதி நண்பர்களை பார்க்கோவோ பேசவோ விரும்ப்பவில்லை என்று தெரிந்து கொண்டேன்.
சௌதியில் ஒரு வெளிநாட்டினற்க்காக அவருடைய ஸ்பான்ஸர் மட்டுமே அரசாங்கத்தை அனுக முடியும். நீங்கள் இதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் உஙகளையும் உள்ளே வைத்துவிடுவார்கள்.
இன்னும் என்னிடம் என் நண்பர்கள் அனுபவித்த சோகக் கதைகள் நிறைய உள்ளன. அவைகளை கூறினால் , நீங்கள் அடுத்த முறை விடுமுறைக்கு சென்று சௌதி திரும்ப்ப மாட்டீர்கள்.
ஒரு ப்ரீட்டிஷ் நண்பன் சந்தேகத்தின் பேரில், விசாரணையின் பேரில் 2 வருடங்கள் சிறையில் இருந்த சோகக் கதையை சொல்லவா?
அல்லது நான் சௌதியில் பணிபுரிந்த ஆபிஸில் சௌதி தீவிரவாதிகள் என் தென்னாப்பிரிக்க நண்பரை சுட்டு அவருடைய உடலை காரில் இழுத்து சென்ற நற்செயலை பாரட்டவா?
சுவன், சௌதியில் புண்ணிய மசூதிகள் இருக்காலாம், ஆனால் சௌதியினர் நல்லவர்கள் இல்லை. இது என்னுடையக் கருத்து. உங்கள் கருத்தும் அதாக இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை.

க்ட்ட்ப்://சிவcஅல்கர்ய்.ப்லொக்ச்பொட்.cஒம்/
சிவா அவர்களே, முஸ்லீம் இல்லாதோரை இப்படி நடத்துவதை ஒருவர் நியாயப்படுத்தும் போது நீங்கள் வாதிட்டு பயனில்லை. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வழிபாட்டு உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால் இது ஏன் செளதியில் இல்லை
என்று கேட்டால் செளதியில் எல்லாம் இஸ்லாமிய முறைப்படி நடப்பதால் அது சரி என்றுதான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வாதிடுவார்கள்.
இன்னொரு நல்ல செய்தி:
சவுதி சிறையிலிருந்து விடுதலையான இந்திய நண்பர்கள் இணைந்து இன்னும் சிறையிலிருக்கும் மற்றவர்களின் விடுதலைக்காக தொடர்புடைய குடும்பங்களைச் சந்தித்து பேசி வருவதாகத் தெரிகிறது. இதனால் இன்னும் சிலருக்காவது விரைவில் விடுதலை கிட்ட வாய்ப்புள்ளது.
இங்கே நடக்கும் இன்னொரு விதமான விவாதங்களிடையே நான் எழுதிய குறிப்புகள் துருத்திக்கொண்டு நிற்பது comment moderation காரணமாக! எனக்கு முன்னால் எழுதியவர்களின் குறிப்புகளை நான் குறிப்புகள் எழுதும்போது காணமுடியவில்லை. அதனால் அவை குறித்து நான் எதுவும் கூற இயலவில்லை.
நல்லவர்களும் அல்லவர்களும் எங்கும் இருக்கிறார்கள். சிவாவின் அனுபவங்கள் உண்மையாக இருக்கலாம். அதே சமயம் இந்தியாவில் பிறமதத்தவர் அவமதிக்கப்படுவதும் பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. இரண்டையுமே இல்லையென்று யாரும் மறுக்க இயலாது. அதே சமயம் அப்படி நடக்கும் ஒரு சில சம்பவங்களை வைத்து, ஒரு சிலரை வைத்து ஒரு நாட்டையோ ஒரு இனத்தையோ மதிப்பிடுவது சரியானதாக இருக்காது என்பது என் கருத்து.
திரு கால்கரிசிவா!
இந்தியர்களை நம்பிக்கையுடன் நடத்துகிறார்கள் என்றால் அதற்கும் உள் நோக்கம் கற்பிக்கிறீர்கள். சவூதிகள் அனைவரும் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. எல்லா நாடுகளிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தெ உள்ளனர். இதற்கு சவூதி மட்டும் விதிவிலக்கா என்ன?
தென்னாப்பிரிக்க நண்பரை கொலை செய்த விபரத்தை எழுதி இருந்தீர்கள். இன்று அமெரிக்காவில் நம்மவர்கள் தாக்கப் பட்டு கொலை செய்யப்படுவதில்லையா? சமீபத்தில் மதுரை எம்.பி மோகன் அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த கணிணி வல்லுனர் கொலை செய்யப்பட்டதை பற்றி கூறும்போது , ' புஷ்ஷூக்கு பைத்தியம் பிடித்தால் ஈராக்கில் குண்டு போடுகிறான். அவன் நாட்டு மக்களுக்கு பைத்தியம் பிடித்தால் இந்தியர்களைக் கொல்கிறார்கள.' என்று காட்டமாக விமரிசித்தாரே! அதுவும் இறந்தவரின் நண்பர் சைனாவிலிருந்து போன் பண்ணி சொல்லித்தான் பெற்றோர்களுக்கே தெரியுமாம். ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு குடிமக்களில ஒரு சிலர் வெளி நாட்டவரைப் பார்த்து பொறாமைப் பட்டு இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். சவூதியில் இது போன்ற திருடர்கள் காவல் துறையில் பிடி பட்டால் சட்டத்தை உடன் அமுல் படுத்துவதை நாம் பார்க்கிறோமே!
உங்கள் நண்பரை கட்டாயப் படுத்தி மதம் மாற்றியதாக முன்பு சொல்லி இருந்தீர்கள். தற்போது அவர் தாயார் மூலம் பழைய நண்பர்களை பார்க்கவோ பேசவோ அவர் விரும்பவில்லை என்று எழுதியுள்ளீர்கள். இதன் மூலம் அவராகவே விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தெரியவில்லையா?
திரு ரவி ஸ்ரீநிவாஸ்!
நம் இந்திய நாடு மதசார்பற்ற நாடு. நாட்டு மக்கள் தஙகளின் மதத்தை பின் பற்றவும், பிரச்சாரம் செய்யவும் அனுமதி அளிக்கும் நாடு. இதை நாமும் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் சவூதியில் வாழக்கூடிய அந்நாட்டவர் அனைவரும் முஸ்லிம்கள். அவர்கள் நாட்டு சட்டம் இஸ்லாமிய அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் விரும்புபவர்கள். ஒப்பந்த அடிப்படையில் அந்நாட்டுக்கு சென்ற நானோ நீங்களோ அந் நாட்டு சட்டத்தைத்தானே பின்பற்ற முடியும்.! இதில் குறை காண என்ன இருக்கிறது?
திரு அனுராக்!
மற்ற நபர்களையும் விடுவிக்க முயற்ச்சி நடப்பதாக சொல்கிறீர்கள். மிக்க சந்தோஷம்.
இஸ்லாமியர்கள் பிறர் உரிமைகளை மதிக்கமாட்டார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். இஸ்லாத்தின் பெயரால் உங்களைப் போன்றவர்கள் எதை வேண்டுமானால் நியாயப்படுத்துவீர்கள்.
ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் சவுதி பிற மத்தினரை நடத்துவது போல் முஸ்லீம்களை நடத்தியிருந்தால் அதை சரி என்பீர்களா.சவுதியில் இருப்பது சரி என்றால் இந்த்துவ அமைப்புகள் கூறுவதும், கோருவதும் சரிதான் என்று கூறலாமே.
அமெரிக்காவில் அரசு இப்படி உடையணி, வழிபடாதே என்றெல்லாம் குறுக்கீடு செய்வதில்லை. சவுதியில் அரசு குறுக்கிடுகிறது, பிற மதத்தவர் உரிமைகளை நிராகரிக்கிறது. எனவே சவுதியையும் அமெரிக்காவையும் ஒப்பிடவே முடியாது. பல விஷயங்களில் அமெரிக்கவும், ஐரோப்பாவும் தராளமனம்
கொண்டவை.தனி நபர் உரிமைகளை, மத உரிமைகளை மதிப்பவை. அமெரிக்காவில் கிறித்துவம்
அரசு மதம் கிடையாது.இந்தியாவில்
அரசு உங்கள் மதச்சுதந்திரத்தில் குறுக்கிடுவது இல்லை.இந்தியா,அமெரிக்கா,ஐரோப்பா - இங்கு தனி நபர் உரிமைகள், மத உரிமைகள், பெண்கள் உரிமைகள் குறித்த நாகரிகமான அணுகுமுறை சவுதியில் இல்லை. இதுதான் உண்மை.எனவே பிரச்சினை சில தனி நபர்கள் மோசமாக நடந்து கொள்வது என்பது அல்ல.ஆகையால் ஏதோ சிலர் ஒழுங்காக இருப்பதில்லை, ஆனால் அமைப்பு சரியானது என்று வாதிடுவது ஏற்புடையதல்ல.
திரு சுவனப்ப்ரியன்,
நான் உள்நோக்கம் கற்பிக்கவில்லை. உண்மையைக் கூறுகிறேன். இந்தியர்கள் திறமையுடனும், நேர்மையுடனும் வெளிநாட்டீல் வேலை செயவதால் தான் இவ்வளவு மதிப்பு. இந்தியாவைப்போல் வெளிநாட்டீல் தொழிற்சங்கம் அமைத்தாலோ இல்லை நம் நாட்டீல் நடப்பதைப் போல் நடந்தாலோ இந்தியரை யாருன் சீண்டமாட்டார்கள்.
மேலை நாடுகளைப் பற்றி நான் கூற வந்ததை நண்பர் திரு. ரவிஸ்ரீனிவாஸ் கூறி விட்டார்கள். நான் என் தொழில் நிமித்தம் இந்தியா முழுவதும் சுற்றி இருக்கிறேன். மேலை நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், ப்ரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாண்ட், மத்திய கிழ்க்கு நாடுகளிச் சவூதி, எமிரகம், கட்டார், ஓமன், குவைத், கீழை நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, இந்த்தோன்ஷியா ஆகிய நாடுகளில் சுற்றியிருக்கிறேன். இவற்றில் சவூதியைப் போல் மோசமான நாட்டைக் கண்டதில்லை.
என்னுடைய நண்பர் இன்னும் இஸ்லாத்தில் இருக்கிறார் என்று உஙகளிட்ம் யார் கூறினார். அவருக்கு நடந்த விபத்து 1996ஆம் வருடம். அவர் ஈராயிமாம் ஆண்டில் இந்தியாவிற்க்கு திரும்பி சென்று தனக்கு நேர்ந்த கார் மற்றும் கட்டாய மத மாற்ற விபத்துகளை மறந்து வாழ்கிறார்.
சுவன், திரந்த மனத்துடன் தங்கள் குடும்பத்துடன் கனாடாவிற்க்கு வாருங்கள், என் வீட்டீல் தங்கி இங்குள்ள வாழ்க்கை மற்றும் சுதந்திரதை பாருங்கள். இங்கிருந்து நான் உங்களை அமெரிக்காவிற்க்கும் அழைத்து செல்கிறேன். சுதந்திரத்தை அனுபவியுங்கள்.
சவூதியில் இஸ்லாமிய புண்ணியஸ்தலங்கள் இருக்காலம்.ஆனால் சுதந்திரம் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் உள்ளது.
கால்கரி சிவா
திரு கால்கரி சிவா!
தொழிற்ச் சங்கங்கள் இல்லை என்றாலும் நீங்கள் பாதிக்கப் பட்டால் எந்த செலவும் இல்லாமல் கம்பெனியின் மீது வழக்குத் தொடர முடியுமே! இதில் வெற்றி பெற்று எத்தனையோ பேர் பயனடைந்துள்ளனர். ஆனால் வேலை நிறுத்தம் கூடாதுதான். அது முதலாளியையும் தொழிலாளியையும் பாதிக்கும் அல்லவா? கேரள நாட்டவர் அங்கு உள்ள தொழிற் சங்க பிரச்னைக்கு பயந்து தமிழ் நாட்டில் அதிகம் முதலீடு செய்வது நமக்குத் தெரிந்ததுதானே!
திரு சுவனப்பிரியன்,
வழக்குகள் எல்லாம் சிறுசிறு ஸ்பான்ஸர்கள் மேல் தான் தொடுக்கமுடியும். பெரிய கம்பெனிகள், ஒரே இரவில் உங்களை ஊருக்கு அனுப்பிவிடுவார்கள். பிறகு எங்கிருந்து வழக்கு தொடுப்பீர்கள்.
ஃபாஸ்டர் வீலர் என்ற் கம்பெனியை ஒரே இரவில் மூட உத்தரவிட்டு, அதன் 1000 கும் மேலான தொழிலாளர்களை ஒரே வாரத்தில் ஊருக்கு அனுப்பின கதை உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.
சவூதி பணக்கார திமிர் பிடித்த நாடு. இங்கு வெளிநாட்டுத் தொழிலாளர்க்கு முக்கியமாக இஸ்லாம் மதத்தை சாரதவர்க்கு வாழ ஏற்ற நாடு இல்லை என்பது என் தாழ்வானக் கருத்து.
என்னுடையத் தென்னாப்பிரிக்க நண்பர் கொல்லபட்டது தனி பட்ட விரோதத்தால் அல்ல. அன்று தீவிரவாதிகள் 22 பேரைக் கொலை செய்தார்கள். அதில் 8 இந்திய சகோதரும் அடங்குவர். அந்த சண்டையில் இடையில் வந்த 10 வயது எகிப்திய சிறுவனும் இறந்தான்.
கால்கரி சிவா
பி.கு. 1. இறந்த 8 இந்திய சகோதரர்களின் இக்காமா ப்ரவுன் கலர்.
(இக்காமா என்பது சவூதியின் அடையாள அட்டை. இது முஸ்லிம் களுக்கு பச்சை நிறத்திலும் மற்றவர்க்கு ப்ரவுன் கலரிலும் இருக்கும்)
2. நான் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய என்ற அடைமொழி தரவில்லை. என்னுடைய அபிப்ராயத்தில் அனைத்து இஸ்லாமியரும் தீவிர வாதிகள் அல்லர்.
திரு கால்கரி சிவா!
ஒரு சில சவூதிகள் ஹிந்துக்களின் மீது வெறுப்பாக இருந்ததன் காரணத்தை நான் முன்பே சொல்லியுள்ளேன். தொலைக்காட்சியில் அனைவரும் பார்க்க நேரம் குறித்து பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுகிறது. அரசாங்கமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இடிப்பதற்கு கூட்டத்தை கூட்டியவர் முன்னாள் உள்துறை அமைச்சர், இந்நாள் பிஜேபி தலைவர்.அதன் தொடர்ச்சியாக 2000 முஸ்லிம்களின் உயிரை எடுததது மேலும் சமீபமாக மோடி குஜராத்தில் கோடிக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களின் சொத்தை சூறையாடியதும் அல்லாமல் 3000 முஸ்லிம்களை கொலை செய்தது இதை எல்லாம் அரசாங்கங்களும் வேடிக்கை பார்த்தது போன்றவைகளால் ஒரு சில சவூதிகளின் மனதில் வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். இதற்கு முழு சூத்திரதாரி அத்வானியும் சங் பரிவாரும்தான்.
ஒரு ஸ்பான்ஷர் ஏர்போர்ட் வரை என் நண்பரை கொண்டு சென்றார். அங்கு என் நண்பர் தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை இமிக்ரேஷனில் எடுத்துக் கூறினார். உடன் அவருடைய பயணத்தை விமான நிலைய அதிகாரியே ரத்து செய்து அவரை கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தார். சட்டம் தெரிந்திருந்தால் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கலாம்.
சவூதியில் முஸ்லிம்கள் தொழுகை நேரத்தில் தோழாமல் இருந்தால் சட்டப்படி குற்றம். அவர்களை பிடிப்பதற்கு பதிலாக தவறுதலாக ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் முல்லாக்கள் பிடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த கலர் வித்தியாசம்.
மேலும் மக்கா நகரில் சில விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும். அந்த விதிமுறைகள் முஸ்லிம் அல்லாதவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அவர்கள் தவறுதலாக உள்ளே வந்து விடாமல் இருப்பதற்காகவும்தான் இந்த ஏற்பாடு.
திரு சுவனப்ப்ரியன்,
நான் உங்கள் கருத்திலிரிந்து வேறுபடுகிறேன், பெரும் பாலன சவூதிகள் இந்துக்களை வெறுக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த வெறுப்பு பாப்ரி மஸ்ஜித் உடைபபதற்க்கு முன்னேமே கூட இருந்திரிக்கிறது. பாப்ரி மஸ்ஜித் உடைப்பும் குஜராத் கலவரங்களும் அதை அதிகப்ப்டுத்தியிருக்கிறது. இதைச் சொல்வதால் என்னை இந்து தீவிரவாதி கூறிவிடாதீர்கள். இந்தியாவில் வோட்டு வாங்குவதற்க்கு அரசியல்வாதிகள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இந்து வோட்டு வேண்டுமென்றால் மசூதியை உடைப்பார்கள் கலவரத்தை தூண்டி விடுவார்கள் முஸ்லிம் வோட்டு வேண்டுமென்றால் கஞ்சி குடிப்பார்கள். நாம் பேசுவது சவூதியைப் பற்றி இந்திய அரசியலைப் பற்றி அல்ல.
70 களில் சவூதி அரசாங்கம் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை மட்டும் அழைத்து சென்றார்கள். இதைத் தடுத்து நிறுத்தியவர், திருமதி இந்திராகாந்தி அவர்கள். இந்தியா மதசார்ப்பற்ற நாடு. இங்குள்ள முஸ்லிம்களை மட்டும் வேலைக்கு எடுத்துச் சென்றால் அது நன்றாக இருக்காது. வேண்டுமென்றால் 50% முஸ்லிம்களையும் 50% பிற மததினரையும அழைத்துக் கொள்ளுங்கள். இதற்க்கு நீங்கள் உடன் படவில்லை என்றால் இந்தியாவிலிருந்து யாரையும் அனுமதிக்க முடியாது என அதிரடிக் கட்டளையிட்டார். இந்தியர் இல்லையென்றால் அரபு நாடுகளில் எண்ணை வளமிருந்தும் அவை பொருளாதர சரிவை சந்த்திக்கும். இந்தியரின் உழைப்பு, மேலைநாட்டினரின் தொழில்நுட்பம், அமெரிக்க சந்தை இவற்றால்தான் அரேபிய எண்ணைக்கு மதிப்பு. நான் மீண்டும் சொல்வது என்னவென்றால் பெரும்பாலான சவூதியர் பாப்ரி மசூதி உடைப்புக்கு முன்னரே இந்துக்களை வெறுத்து வந்த்துள்ளனர்.
நான் முன்னேமே குறிப்பிட்டது போல் சவூதியில் சட்ட்ம் எளிய ஸ்பான்ஸர் மேல் தான் பாயும். வல்லிய ஸ்பன்ஸரிடம் இந்தியரின் வாக்கு செல்லாது.
என்னிடம் ப்ரவுன் இக்காமா இருந்தும் சலா நேரத்தில் வெளியெ நின்றக் காரணத்தால் முல்லக் களிடம் பிரம்படி பல முறை வாங்கியிருக்கிறேன். இதற்க்காக நான் இஸ்லாமையோ அந்த முல்லாவையோ வெறுக்கவில்லை.
நான் ஒரு பெர்ஸனல் கேள்வி கேட்கலாமா? சுவனப்பிரியன் என்பது உங்கள் இயற்பெயரா அல்லது புனைப் பெயறா? சிவா என்பது என் இயற்ப்பெயர். கால்கரி தற்போது நான் வாழும் ஊர். அதானால் தான் கால்கரி சிவா என எழுதுகிறேன்.
நான் முன்பே சொன்னது போல் இஸ்லாமோ, முகமது நபியோ மாற்று மதத்தவரை தவறாக நடத்த சொல்லவில்லை. ஒரு யூதரின் பிரேதம் தெருவில் சென்ற போது அமர்ந்திருந்த முகமது நபி எழுந்து மரியாதை செய்தார். 'யூதருக்கா மரியாதை செய்கிறீர்கள்?' என்று நபித் தோழர் கேட்டதற்கு, 'ஆம் அவரும் ஆதமின் மகன்தானே!' என்று பதிலளித்தார். ஒரு சில சவூதிகள் தவறு செய்தால் அவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமாக செயல் படுகிறர்கள் என்றுதான் விளங்க வேண்டும். இதற்காக நானோ நீங்களோ ஒருவருக்கொருவர் வெறுப்படைய வேண்டாம் தானே!
பிரவுன் இக்காமா இருந்தும் உங்களை இம்சித்திருந்தால், அந்த முல்லா அதற்கான தண்டனையை இறைவனிடம் பெற்றுக் கொள்வார். ஒரு முஸ்லிம் என்ற முறையில் அதற்காக நான் வருந்துகிறேன்.
உலகில் நாம் பல சிரமங்களை சகித்துக் கொள்வது, இறப்புக்கு பின்னால் நமக்கு கிடைக்க இருக்கும் சுவனத்தை நினைத்தே!எனவேதான் என் பெயரை சுவனப்பிரியன் என்று வைத்துக் கொண்டேன்.இது என் புனைப் பெயர். எனக்கும் அலுவலகத்தில் வேலை நேரம் போக இது போல் தாய் மொழியில் ஒரு சில கடிதம் எழுதி கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிய உங்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
//இவர்கள் அனைவருமே குறைந்ந சம்பளத்தில் வேலை செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.//
அவர்களுக்கு தண்டனை என அரசுக்கும் சுமை, சிறைவாச மனிதர்களுக்கும் வேதனை.
Post a Comment