Followers

Monday, July 25, 2011

மருத்துவ துறை மாணவனுக்காக முடிந்தால் உதவலாமே!

எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.



தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

நன்றி: இந்நேரம்.காம்

இது போன்று திறமையிருந்தும் படிக்க வசதியில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமை. வசதியுடையவர்கள் அந்த மாணவனுக்கு உதவலாம். என்னால் முடிந்த உதவியையும் தருகிறேன். பேங்க் கணக்கு விபரங்களை யாரும் அனுப்பி தந்தால் உதவியாக இருக்கும்.

6 comments:

suvanappiriyan said...

திரு தருமி!

//இத்துடன் WHY I AM NOT A MUSLIM என்ற நூலின் முக்கியக் குறிப்புகள் முடிந்து விட்டன.//

அப்பாடா..... ஒரு வழியாக இஸ்லாத்தின் மேல் எந்த அளவு அபாண்டங்களையும், வசன திரிபுகளையும் செய்ய முடியுமோ அந்த அளவு 22 பதிவுகளில் செய்து முடித்தாகி விட்டது. இந்த கருத்துக்கள் அனைத்தும் புதியனவாக இருந்திருந்தால் உங்களின் இந்த பதிவுகள் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் உங்கள் பதிவுகளின் கருத்துக்கள் அனைத்தும் உலக அளவிலேயே ஆங்கிலத்திலேயே பல முறை விவாதிக்கப்பட்டு தீர்வு கண்டவைகளே! எனவே தான் இந்த பதிவுகள் எந்த ஒரு பாதிப்பையும் இணையத்தில் ஏற்படுத்தவில்லை.

//முதலில் ஒரு தூண்டுகோல் - சுவனப்பிரியன். இவரது மத அறிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. (வயதும் சின்ன வயது என்றே நினைக்கிறேன்.) என்னை ஆச்சரியப்பட வைக்கும் இன்னொன்று எப்படி இஸ்லாமியரில் மிகப் பலர் மதத்திற்காக இத்தனை வலுவாக இருக்கிறார்கள் என்பது.//

எனக்கும் தற்போது 45 வயதாகிறது. வேலை நேரம் போக இணையத்தில் ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் தேடித் தேடி எனது நேரத்தை போக்கிக் கொண்டிருந்தேன். தற்செயலாக தமிழ்மணம் பக்கம் போகும்போது நேசகுமார், தருமி, டோண்டுராகவன், கால்கரி சிவா போன்றவர்களின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட பதிவுகளை படிக்க நேர்ந்தது. நான் பின்பற்றும் மதம் உண்மையில் இவர்கள் சொல்வதுபோல்தான் இருக்கிறதா என்று குர்ஆனை புரட்ட ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம். இது நாள்வரை எனது தாய் தந்தையர் இஸ்லாம் என்பதால் பெயரளவில் முஸ்லிமாக இருந்த நான் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை படிக்க ஆரம்பித்தவுடன் என்னையறியாமல் உடல் சிலிர்க்க ஆரம்பித்தது. பி.ஜெய்னுல்லாபுதீன், டாக்டர் ஜாகிர்நாயக் போன்றோரின் எழுத்துக்களும் வீடியோக்களும் என்னை மேலும் இஸ்லாத்தை அறிய தூண்டியது. இன்று ஓரளவு மற்றவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லக் கூடிய அளவு தேர்ச்சி பெற்றதற்கு இணையதளம் முதற்காரணம். தருமியும் ஒரு காரணம். எனவே என்னை சினிமா மோகத்திலிருந்து இஸ்லாத்தின் பால் கொண்டு வந்த இஸ்லாமிய எதிர்ப்பு பதிவர்களுக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

//போராட்டம் இஸ்லாமிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவேயில்லை; அது சுதந்திரத்தை விரும்புவோருக்கும் அதனை எதிர்ப்போருக்கும் நடுவே!//


இதற்கு பதிலை நான் சொல்வதை விட ஒரு கிறித்தவரே கார்டியன் பத்திரிக்கையில் விவரித்துள்ளார். அதையும் பார்ப்போம்.

மேற்கண்ட 22 பதிவுகளுக்கு பிராயச்சித்தமாக 'நான் ஏன் கர்த்தரை ஏற்றுக் கொண்டேன்?' என்று பதிவுகளும் உங்களிடமிருந்தே வரும் காலம் தொலைவில் இல்லை.

suvanappiriyan said...

கொஞ்சம் இந்த கட்டுரையையும் படித்துப் பாருங்களேன்.

Black conversion or "reversion" to Islam is not new; it has been taking place in the African diaspora since time immemorial.

However, I looked deeper into the phenomenon to find out why a growing number of Black Britons, especially younger ones, are embracing Islam. Although I am not a Muslim, I have always been interested in Islam – three of my all-time heroes, Muhammad Ali, Malcolm X and Jamaican singer Prince Buster were Muslim converts, and I was intrigued by the way Islam inspired all three to transcend their respective vocations to become icons.

What surprised me at the start of my study was that very little of any substance had been written about a religious phenomenon which first came to public prominence in the dubious form of Michael de Freitas, a Trinidad-born, UK-based lapsed Catholic. As Michael X and then Michael Abdul Malik, he was at the forefront of the race equality struggle in Britain during the 1960s. It was this stark lack of information that encouraged me to write a book, something that involved painstaking research and innumerable interviews in cities and towns with a growing Black Muslim presence.

One of the first issues I became aware of was the fact that many converts feel uncomfortable with the term "black Muslim", as they regard themselves as part of a worldwide community of believers who do not recognise "race". However, others are less reticent about associating their blackness with being a Muslim, and believe that Islam is the "natural religion of black people" and provides the means for full "spiritual, mental and physical liberation" from an oppressive system designed to subjugate them.
My research reveals that there is no one, straightforward reason for conversions, but a plethora of theological, emotional and cultural motivations. Practically all those interviewed suggested that Islam had given their lives meaning and woken them from a spiritual malaise. Others said that their faith provided inspiration and strength to engage with a society they regarded as corrupted by materialism and moral relativism. And for those whose lives had previously been errant, Islam's decisiveness on a range of religious and socio-cultural matters had given them a focus and an anchor. Equally, many of the women interviewed suggested that the Islamic focus on modesty had liberated them from the rampant fashion-related consumerism that objectifies all women, and sexualises pre-pubescent girls.

What I also found of real interest was the fact that the vast majority of those interviewed had some previous connection to Christianity, either as former church attendees or through having relatives with firm ecclesiastical connections. This differs from white converts who tend to have no previous religious experience.....

suvanappiriyan said...

continue.......

I also found that the aforementioned Malcolm X had influenced many black folks, particularly men, to consider Islam. In many respects brother Malcolm's life reads like a blueprint for the majority of those with whom I spoke. He was bright child who was brought up as a Christian, but was failed by an institutionally racist society. As a result he became a delinquent who subsequently fell foul of the law. While incarcerated he embraced Islam (in the form of the Nation of Islam) and this turned his life around , resulting in him becoming one of the most eloquent, courageous and uncompromising spokespeople for black civil and human rights.

Black Muslims in this country, just like in the US, have also gained a reputation for "cleaning up" the lives of those involved in crime, drugs and gang violence, and many of those I spoke with were recipients of this remedial work. As a result, these beneficiaries were never bashful about sharing their beliefs with those of others faiths or none, and it would be true to say that black converts are often in the vanguard of efforts to proselytise. Having said that, my book includes contributions from Black Muslim doctors, academics, students, artists, sportsmen and musicians. The latter are important because Muslims are increasingly using the musical genre of hip-hop to promote Islamic teachings, and it is worth noting that many of the leading hip-hop artists are Muslims.
Black Muslims are mindful that both 9/11 and 7/7 have placed their faith under a microscope with converts singled out for particular scrutiny. However, all those interviewed showed a commitment to walking "the straight path" and believed that sections of the media made too much of the so-called impressionability and/or susceptibility of converts to the wiles of "preachers of hate".

Finally, I would say that Islam is providing a spiritual alternative among those who would generally have looked to Christianity for answers to life's great questions. My book is an attempt to find out more about a phenomenon that is enriching Britain's religious landscape, and should hopefully be a catalyst for greater discussion and study.

Black Muslims in Britain: Why are a growing Number of Young Black people are Converting to Islam? is published by Lion Hudson

-Richard reddy
Guardian news paper, uk, Monday 5 October 2009 16.00 BST

suvanappiriyan said...

Dharumi!

//ஒரு சின்ன கேள்வி: பின் ஏன் சுவனம் பற்றிய என் பதிவில் சத்தத்தையே காணோம். இப்படி மெளனமாக விட்ட கேள்விகள் ஏராளம்.//
காரணம் ஏற்கெனவே அனைத்திற்க்கும் பதில் சொல்லியாகி விட்டது.
//ஓரினச் சேர்ககைக்கு இஸ்லாம் பெருந்தடை ஏதும் விதிப்பதில்லை. பாபர் (1483-1530) ஒரு பையன் மீது கொண்ட காதலைத் தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார். (340) //

சாய்பாபா ஓரின சேர்க்கை பிரியர். எனவே இந்து மதம் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறது என்று யாராவது எழுதினால் அந்த நபரை மனநலம் பிறழ்ந்தவராகத்தான் என்னால் பார்க்க முடியும்.

//குரானிலும் 52:24, 56:17, 76:19 - சுவனத்தில் பையன்களால் நீங்கள் கவனிக்கப் படுவீர்கள் என்பதற்கான பொருள், அவர்கள் உங்களுக்கு ஏவல் செய்ய என்பதுவா, பாலின இன்பத்திற்காகவா என்பது ஒரு கேள்வியே. ((342)//

'நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்.' என்று லூத் கூறினார்.
-குர்ஆன் 7:81

'நமது கட்டளை வந்த போது அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து அதன் மேற்பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.

அவை உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் இந்த அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.'
-குர்ஆன் 11:82,83

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்க்காகவே லோத் என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்புகிறான். அவர்கள் திருந்தாத காரணத்தால் அந்த ஊரையே தலைகீழாக புரட்டி எடுத்து விட்டதாக இறைவன் கூறுகிறான். அந்த இடம் இன்று வரை மனிதர்கள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக ஆகியுள்ளது. Dead Sea 'இறந்த கடல்' என்று ஜோர்டான் கடல் பகுதியில் இன்றும் அந்த இடத்தை நீங்கள் பார்வையிடலாம். அந்த கடல் பகுதிகளுக்குள் மீன்கள் வந்தாலும் இறந்து விடுகிறதாம். அந்த அளவு உப்பின் அளவு மற்ற கடல்களை விட அதிகரித்திருப்பதே காரணம். குர்ஆன் பெரும்பாவங்களில் ஒன்றாக ஓரினச் சேர்க்கையை கண்டித்திருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற பொயயை நெஞ்சறிந்து சொல்லலாமா?

'அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்'
-குர்ஆன் 52:24

'இளமை மாறாத சிறுவர்கள் தெளிவான பானம் கொண்ட கிண்ணத்துடனும், குவளைகளுடனும் தட்டுக்களுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்'
-குர்ஆன் 56:17,18

இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!

Dead Sea salt refers to salt extracted or taken from the Dead Sea.
The Dead Sea is popular with tourists from all over the world for its reputed therapeutic effects. The water of the Dead Sea has ten times the salt content of other sea water and is consequently substantially denser. This allows anyone to easily float on Dead Sea water because of its greater density. Its mineral composition is also different from ocean water since only 12-18% of Dead Sea salt is sodium chloride. A 2006 analysis of a commercial Dead Sea Salt product measured a 2.5% sodium chloride content; by comparison, 97% of the salt in normal ocean water is sodium chloride.
உலகிலேயே மிக நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் கருதப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க்கரைக்கு அண்மையில் அமைந்தன என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். விவிலிய நூற்பகுதியாகிய பழைய ஏற்பாட்டின்படி சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள் ஆபிரகாம் காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது தொடக்க நூல் 19:1-9). சவுல் அரசன் தாவீதை கொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை சாக்கடலுக்கண்மையில் உள்ள ஏன்கேதியில் அமைந்துள்ளது.
சோதோம், கொமோரா என்னும் நகர்கள் கடவுளுக்கு எதிராகப் பெரும் தீங்கு செய்ததால் கந்தகத்தாலும் நெருப்பாலும் அழிக்கப்பட்டன தொடக்க நூல் 19:1-29) என்றும், அப்பகுதியே சாக்கடல் என்றும் விவிலியம் கூறுகிறது. சோதோமை அழிப்பதற்கு முன், கடவுள் லோத்து என்பவரையும் அவருடைய குடும்பத்தவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினார். ஆனால் லோத்தின் மனைவி கடவுளின் கட்டளையை மீறி, எரிந்த நகரைத் திரும்பிப் பார்த்ததால் உப்புத் தூணாக மாற்றப்பட்டாள் தொடக்க நூல் 19:23-29).
-விக்கிபீடியா

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?//

'மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்' என்று முஹம்மதே! கூறுவீராக.
குர்ஆன்: 10:108

நீங்கள் மேலே சுட்டும் பகவத் கீதையின் வசனமும் நான் சுட்டியிருக்கும் குர்ஆனின் வசனமும் ஒரே கருத்தைத்தானே சொல்கிறது!


//ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது.//

'நோய் முதல் நாடி' என்று வள்ளுவர் கூறுவதற்கேற்ப எனது முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று முதலில் சிந்தித்து அதை களைய பாடுபட வேண்டும். தீண்டாமை, சாதி வேற்றுமை, மூடப் பழக்க வழக்கங்கள் என்று சனாதன தர்மம் சொல்லாத பல வழக்கங்களை இந்து மதம் அனுமதித்து நடைமுறைபடுத்தியதால்தான் பல தலைமுறைகளுக்கு முன்னால் இந்துவாக இருந்த என் முன்னோர் இஸ்லாத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானர். எனவே ரியாலுக்கோ, டாலருக்கோ கத்திக்கோ மயங்கி வேறு மதத்துக்கு சென்று விட்டனர் என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

//ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?//

'அல்லாஹ் அக்பர்' என்பது 'இறைவன் பெரியவன்' அதாவது ஏக இறைவன். இஸ்லாத்தின் மூல மந்திரமான 'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பதற்கு 'இறைவன் ஒருவனைக் தவிர வேறு இறைவன் இல்லை' என்ற பொருள் வரும்.

இதையேதான் நமது முன்னோர்களும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கின்றனர். இங்கு இரண்டு மதத்தின் கொள்கைகளும் ஒத்துப் போகிறதா இல்லையா?
ஏக இறைவனை பறை சாற்றக் கூடிய பல வசனங்களை ருக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களிலிருந்தே பல ஆதாரங்களை என்னால் தர முடியும்.

//அல்லாவோ குரானை அனைவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கச் சொல்கிறார்! அல்லா என்கிற கருதுகோளே ஹிந்து சமய இறைக் கோபாட்டிற்குப் புறம்பானதாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதில் பொருள் ஏதும் இருக்க முடியுமா?//

'முஹம்மதே!உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?'
-குர்ஆன் 10:99

சிலரிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு முகமது நபி வற்புறுத்துவதை இறைவன் இந்த வசனத்தில் கண்டிக்கிறான். எனவே மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதில் மற்றவர்களை நிர்பந்திக்கக் கூடாது என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிகிறோம்.

திரு களிமிகு கணபதி!
//இஸ்லாமும் கிறுத்துவமும் கத்தியால் மட்டும் பரவவில்லை. நம்முடைய தவறான புரிதல்களால், செயல்களாலும்தான் நடந்தது என்பதறிந்து, ஹிந்துக்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.//

இன்று பெரும்பான்மை மக்களால் தவறாக புரிய வைக்கப்பட்ட ஒரு நிகழ்வை அதன் உண்மையை சிறப்பாக எடுத்து வைத்துள்ளீர்கள். முகலாயர்கள் காலத்தில் கத்திக்கு பயந்து நாங்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் இன்றைய காலத்தில் நாங்கள் இந்து மதத்துக்கு திரும்பியிருக்க வேண்டுமே! இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பான்மை மதமான இந்துவில் ஐக்கியமாவதுதானே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக அமையும். ஆனால் எவருமே ஏன் தாய் மதம் திரும்புவதில்லை? காரணம் இந்து மதத்தில் உள்ள குறைபாடுகள். அதனை நிவர்த்தி செய்யாத வரை மத மாற்றம் ஒரு தொடர்கதையாகவே இருக்குமல்லவா!

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//எனக்கும் பல முகமதிய நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் சமய அடிப்படையில் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை.//

இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. நான் படிக்கும் காலத்தில் இருந்து இந்து கிறித்தவ நண்பர்களிடத்தில் இன்று வரை நட்போடு பழகியே வருகிறேன். மதமோ மார்க்கமோ எங்களின் நட்புக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை. மத விவகாரங்களில் சமரசமும் செய்து கொள்வதில்லை.

//தமிழ்நாட்டில் ஒரு அரபு சமுதாயத்தை உருவாக்குவதில் வஹாபிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது இதில் முக்கியமான செய்தி.//

அரபு சமுதாயத்துக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இஸ்லாம் வருவதற்கு முன்பு சவுதியில் பிறந்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தார்கள். விபசாரம் கொடி கட்டிப் பறந்தது. மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. முகமது நபியின் குடும்பத்தினரே வட்டி தொழிலில் சிறந்து விளங்கி வந்தனர். மனிதர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமையும் அரங்கேறி வந்தது.

இஸ்லாம் அந்த மக்களின் வாழ்வில் நுழைந்தவுடன் அனைத்து கொடூரமான பழக்கங்களும் சில ஆண்டுகளிலேயே களையப்பட்டது. இங்கு தமிழகத்தில் கூட இஸ்லாமியரிடத்திலும் வரதட்சணை கொடுமை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தலைவிரித்தாடியது. தௌஹீது(உங்கள் பார்வையில் வஹாபி) கொள்கைகள் சில ஆண்டுகளாக சிறந்த முறையில் பிரசாரம் செய்ததன் விளைவாக இன்று வரதட்சணை வாங்குவது அவமானம் என்று இளைஞர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். சில இடங்களில் முன்பு தவறாக வாங்கிய வரதட்சணையை பெண்ணின் தந்தையிடம் திருப்பி கொடுத்த நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது. எனது நண்பன் அவனது தாயார் வரதட்சணை வாங்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதனால் கடந்த மூன்று வருடமாக திருமணமே செய்து கொள்ளாமல் பெற்றோருடன் போராடிக் கொண்டிருக்கிறான். இன்னும் சில ஆண்டுகளில் அரபு நாடுகளைப் போல் பெண்ணுக்கு மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் நிகழ்வுகள் தமிழகத்திலும் அரங்கேறும்.

அதே போல் தர்ஹா வணக்கம். இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. 'தரை மட்டத்துக்கு மேலே கட்டப்பட்ட எந்த சமாதியையும் இடித்து சமப்படுத்தி விடவும்' என்பது முகமது நபியின் போதனை. முகமது நபிக்கும் மண்ணால் ஆன சமாதியே இன்று வரை உள்ளது. காரணம் முகமது நபியையும் ஏசுவைப் போல் கடவுளாக்கி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே! ஆனால் தமிழகத்தில் எங்களின் மூதாதையர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டு இருந்ததால் அந்த பழக்கத்தின் வாயிலாக இறந்தவர்களுக்கு சமாதி கட்டும் பழக்கத்தை இஸ்லாத்திலும் கொண்டு வந்து விட்டனர். இதன் தவறை விளக்கி சொல்லியவுடன் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த தர்ஹா இடிக்கப்பட்டு அது லைப்ரரியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வன்முறையில் இல்லாமல் பிரசாரத்தின் மூலமாக சாத்தியப்பட்டது. நாகூர் தர்ஹாவையும் மக்களின் மனமாற்றத்தோடு இடித்து விட்டு அங்கு ஒரு கல்விச் சாலையை நிறுவ பலர் முயற்ச்சித்து வருகின்றனர். தர்ஹா போன்ற மூடப் பழக்கங்களை களைய பலரும் முயற்ச்சித்து வருகின்றனர்.

எந்த நாட்டிலிருந்து கொள்கைகளை கடன் வாங்கினாலும் அது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

//முகமதியரிடையே ஏதும் சச்சரவு என்றால் உங்க ஜமாத்துலயே பேசி முடிச்சுக்குங்க என்று காவல் துறையே சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.//

சிவில் பிரச்னைகளை சின்ன சின்ன சண்டைகளையும் ஜமாத்துகளுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்வது காவல் துறையின் சிரமத்தையும் குறைக்கிறது தானே! இதனால் கோர்ட் கேஸ் என்று அலைந்து நேரமும் பணமும் விரயமாவதும் தடுக்கப்படுகிறதே!

இதே நிலைமை பல ஹிந்து கிராமங்களில் இன்றும் நடைமுறைப்படுத்தப் பட்டே வருகிறது.

சோழன்!

//எல்லாவற்றிகும் ஆதாரமாக இருக்கும் ரியால்களுக்கும், டாலர்களுக்கும் முடிவு கட்டினாலே போதும். பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.//
முதலில் மண்ணின் மைந்தனான தாழ்த்தப்பட்டவனுக்கு உரிய பங்களிப்பை அளித்து விட்டு அதன் பிறகு டாலரையும் ரியாலையும் தடுக்க முயற்ச்சிப்போம் சோழன். நானும் உதவிக்கு வருகிறேன்.
//எங்கள் தெருவில் ஒரு காலத்தில் முக்காடு போட்ட முஸ்லீம் பெண்களையும் அரேபியர்களை போன்ற தாடி வைத்த ஆண்களையும் பார்பதே அரிது. ஆனால் தற்போது நிலைமை தழை கீழ்.//

தாடி வைப்பதும் முக்காடு போட்டுக் கொள்வதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பமல்லவா! ஒரு பெண்ணுக்கு புர்கா போட்டு செல்வது தனக்கு பாதுகாப்பு என்று நினைத்தால் அதை யார்தான் தடுக்க முடியும். அதே போல் பெண்ணுக்கு தாடி வளர்வதில்லை. தாடி ஆண்மைக்கே உரிய அடையாளம். சம்பந்தப்பட்டவர் தனக்கு தாடி இருப்பது அழகு என்று தோன்றினால் வைத்துக் கொள்ளட்டுமே! உங்களை தாடி வைக்க சொல்லி வற்புறுத்தினால்தான் அதில் குறை காண முடியும். தினமும் ஷேவ் செய்வதால் கண்ணின் பார்வை நரம்புகள் பாதிப்படைவதாகவும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.