Followers

Friday, July 29, 2011

இஸ்லாமிய கருத்தை வளைக்கும் சம்சுதீன் காசிமி!!



இஸ்லாமிய கருத்தை வளைக்கும் சம்சுதீன் காசிமி!!

சென்னையில் மெக்கா பள்ளியின் இமாமாக பணிபுரிந்து வரும் இந்த நபர் தனக்கும் கூட்டம் சேர வேண்டும் என்ற ரீதியில் அவ்வப்போது தடாலடியாக ஏதாவது உளருவது வழக்கம். முன்பு உஸாமா பின்லாடனுக்கு தொழுகை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். சமீப காலமாக இந்தியாவில் உள்ள ஜனநாயக நடைமுறை இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற ரீதியில் பேச ஆரம்பித்து இருக்கிறார். அதற்காக இவர் எடுத்து வைக்கும் ஆதாரம் என்ன என்பதையும் அது எதற்காக சொல்லப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

'நான் என் இறைவனிடம் வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் இறைவனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை'
-குர்ஆன் 6:57

'அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே! நீங்களும் உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள். இது குறித்து இறைவன் உங்களுக்கு எந்த சான்றையும் அருளவில்லை. அதிகாரம் இறைவனைத் தவிர எவருக்கும் இல்லை. 'அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.'
-குர்ஆன் 14:40

ஆட்சி அதிகாரம் சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்ற ரீதியில் மேற்கண்ட வசனத்தின் கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் மனிதர்களுக்கு உண்டு என்று இந்திய ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் குர்ஆனுக்கு எதிரானது. இறைவனின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களுக்கு கொடுப்பதால் மறைமுகமான இணை வைப்பை இது சேரும் என்பது இவரின் வாதம்.

இந்த வாதம் ஏதோ புதிதாக வைக்கப்படுவதாக எண்ண வேண்டாம். ஜனாதிபதி அலி அவர்களின் காலத்திலேயே இப்படி ஒரு வாதம் வைக்கப்பட்டு அது அலி அவர்களாலேயே முறியடிக்கவும் பட்டது. அலியின் மறைவுக்கு பிறகு திரும்பவும் இதே கொள்கையை கொண்டு வந்து குழப்பம் விளைவித்ததால்தான் ஷியா என்ற பிரிவு உருவாக காரணமானது.

இந்த குழப்பங்கள் ஏன் வந்தது என்று சிறிது விளக்கமாக பார்ப்போம். இறைவன் தனக்கென்று சில அதிகாரங்களை வைத்துள்ளான். தான் படைத்த மனிதர்களுக்கு சில அதிகாரங்கள் அந்த இறைவனே கொடுத்திருக்கிறான். மனிதர்களுக்கு மத்தியில் பிரச்னை ஏற்படும் போது மனிதர்களைக் கொண்டு தீர்ப்பு வழங்கிக் கொள்ளுமாறு படைத்த இறைவனே கட்டளையிடுகிறான். இதற்கு ஆதாரமான வசனங்களைப் பார்ப்போம்.

'கணவன் மனைவியருக்கிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்'
-குர்ஆன் 4:35

தம்பதிகளுக்கு மத்தியில் உலக பிரச்னைகளில் ஏதும் கருத்து வேறுபாடு வந்தால் நடுவர்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குமாறு இறைவன் கட்டளையிடுகிறான். இது இறைவனின் கட்டளைக்கு மாற்றமாகாது.

'அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும் மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான்.'
-குர்ஆன் 4:59

'அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்'
-குர்ஆன் 5:42

'ஒரு சமுதாயத்தின் ஆடு இன்னொரு சமுதாயத்தின் விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும் சுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்'
-குர்ஆன் 21:79

'நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்து சண்டையிடுங்கள். அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள். நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.'
-குர்ஆன் 49:9

மேலே கூறப்பட்ட அனைத்து வசனங்களும் மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் வந்தால் மனிதர்களைக் கொண்டே நியாயமான தீர்ப்பு வழங்கச் சொல்லி இறைவன் அனுமதியளிக்கிறான். இப்படி தீர்ப்பளிப்பது இறைவனின் கட்டளைக்கு மாற்றமாகாது. மேலும் பல வசனங்கள் மனிதர்களை சிந்திக்க சொல்கிறது. சிந்தனையின் மூலம் மனிதன் நல்லது எது கெட்டது எது என்பதை விளங்க முடியும் என்பதாலேயே மனிதர்களை சிந்தித்து செயல்பட சொல்கிறான்.

இறைவனுக்குரிய அதிகாரம் என்று வரும்போது மறுமை வாழ்வுக்கான நல்ல அமல்களான தொழுகை, நோன்பு, ஏழை வரி, ஹஜ், போன்ற கிரியைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் அடங்குகிறது. இந்த சட்டங்கள் அனைத்தும் குர்ஆனில் பாதுகாக்கப்பட்டும் இருக்கிறது. அந்த சட்டங்களில் சென்று யாரும் கை வைத்தால்தான் நாம் ஆட்சேபணை எழுப்ப முடியும்.

மறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை காட்டவே இறைவன் நபியாக முகமது நபியை அனுப்புகிறான். மறுமைக்கு தொடர்பில்லாத உலக விஷயங்களை செய்து காட்ட அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த அறிவும் ஞானமும் அதிகாரமும் இயல்பாகவே மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு சம்பவத்தின் மூலம் கூட அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் அவர்கள் மதினா வந்த போது மதினாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரிச்சை மரத்தை பயிரிட்டு தொழில் செய்து வந்த மதினாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'இதைச் செய்யாதிருக்கலாமே' எனக் கூறினார்கள். மதினாவாசிகள் அவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். அந்த வருடம் மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'உங்கள் பேரிச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது'? என்று கேட்டனர். நபிகள் நாயகம் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் 'உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.
-நூல் முஸ்லிம் 4358

'நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதும் கட்டளையிட்டால் அதைக் கடைபிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை'
-நூல் முஸ்லிம் 4357

'நான் எனது கருத்தைக் கூறினேன். அதற்காக என்னை பிடித்து விடாதீர்கள். ஆனால் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைபிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன்.'
-நூல் முஸ்லிம் 4356

மேற்கண்ட நபி மொழியில் இறைவனுக்குரிய அதிகாரம் எது மனிதனுக்குரிய அதிகாரம் எது என்பது தெளிவாக விளங்குகிறது. உலகின் ஜனநாயக நாடுகளில் மறுமைக்கான வழிமுறைகளுக்கு எந்த சட்டமும் இயற்றப்படுவதில்லை. எப்படி தொழுவது என்பதை நமது அரசாங்கம் நமக்கு விளக்குவதில்லை. மனிதர்களுக்கு உள்ள அதிகாரங்களை முறைப்படுத்தவே ஜனநாயக அரசுகள் உலகம் முழுவதும் செயல்படுகிறது. பெரும்பான்மை மக்களின் வசதியை முன்னிட்டு சில மார்க்க முரணான சட்டங்களை ஜனநாயக அரசு இயற்றினால் அது போன்ற இடங்களில் மட்டும் நாம் விலகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு எந்நாட்டுக்கும் ஏற்ற சட்டமாக இஸ்லாம் கட்டளை பிறப்பித்திருக்க இந்த மௌலவி மக்களை குழப்ப நினைக்கிறார்.

இப்பொழுது உதாரணத்திற்கு சம்சுதீன் காசிமி ஒரு இடத்தை வாங்குகிறார். வாங்கியவரிடம் பணத்தைக் கொடுத்து ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டவுடன் சம்சுதீன் காசிமிக்கு அந்த இடம் இஸ்லாமிய சட்டப்படி உரிமையாகி விடும். அதோடு நின்று கொள்வாரா...

உடனே சம்பந்தப்பட்டவரை ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு அழைத்து செல்வார். அங்கு சென்று அந்த இடத்துக்கு தக்க வாறு பத்திரங்ளை வாங்குவார். சாட்சிகளை தயார் பண்ணுவார். ரிஜிஸ்டரும் செய்வார். இவை எல்லாம் ஜனநாயக நாடான நமது நாடு போட்ட சட்டங்கள். இங்கு மட்டும் சம்சுதீன் காசிமி போன்றவர்கள் ஜனநாயக சட்டத்தை அமுல்படுத்த துடிப்பார்கள். இங்குதான் இவர்களின் இரட்டை வேடத்தை நாம் பார்க்க முடியும்.

அதேபோல் இஸ்லாம் தாடி வைக்க சொல்கிறது. ஓ.கே. ஆனால் இவர் தலையில் பெண்களைப் போன்று முக்காடு போட்டுக் கொண்டு அடிக்கடி அதை சரி செய்து கொண்டிருப்பது முகமது நபி சொன்ன வழிமுறையா? இல்லை. அவருக்கு அது அழகாக தோன்றுகிறது. தன்னை ஒரு புரோகிதர் என்று மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்ற மமதையில் சிகப்புத் துண்டை அணிந்து கொள்கிறார். இதை யாரும் குறை சொல்லவில்லை. ஏனெனில் உலக விஷயத்தில் மனிதனுக்கு எது அழகு என்று நினைக்கிறானோ(இஸ்லாமிய சட்டத்துக்கு பங்கம் வராமல்) அந்த உடையை அணிய அனுமதிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் கல்வியில் இட ஒதுக்கீடு, போலீஸ் அராஜகம், மதக்கலவரம், ஆட்சியாளரின் நிர்வாக குளறுபடிகளைக் கணடித்து சில இயக்கங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை நடத்துகின்றன. சில இடங்களில் கோரிக்கைகளில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இங்கு இஸ்லாமிய சட்டங்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை.

இந்த போராட்டங்களால் இஸ்லாமியர்கள் கல்வி வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதத்தைப் பெற்று பலனடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பாராட்ட வேண்டாம். தூற்றாமலாவது இருக்க வேண்டும் இந்த சம்சுதீன் காசிமி.

அரசாங்கம் கள்ளுக் கடையை நடத்துகிறது. விரும்பியவர்கள் சென்று குடிக்கலாம். என்னையோ அல்லது சம்சுதீன் காசிமியையோ அவசியம் குடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? முடியாது. ஆனால் பூரண மது விலக்கை கொண்டு வர மற்ற மக்களோடு சேர்ந்து ஜனநாயக முறையில் போராட முயற்ச்சிக்க வேண்டும். ஜனநாயக அரசியலில் உள்ள குறைகளை களைய முயற்ச்சிக்க வேண்டும்.

அடுத்து இவர் பாலஸ்தீன பிரச்னையை நம் நாட்டோடு முடிச்சு போடுகிறார். சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கி இஸ்ரேலும், அமெரிக்காவும் அராஜகம் பண்ணுவதை போராளிகள் எதிர்க்கின்றனர். அக்கிரமக்கார ஆட்சியில் ஹமாஸ் போன்ற ஒரு அமைப்பு இருந்தால்தான் இஸ்ரேலை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும். நமது நாடு தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல சுதந்திரங்களை அனைத்து மக்களும் அனுபவித்து வரும் நாடு. இங்கு ஜனநாயக பாதையில் சில குளறுபடிகள் இருந்தால் அதை சாதிவீகமான போராட்டத்தின் மூலமே சரி கண்டு விட முடியும்.

இந்த ஜனநாயக முறை தவறென்றால் வேறு எந்த வழி முறை என்பதையும் சம்சுதீன் தெளிவுபடுத்த வேண்டும். அபுபக்கர், உமர் காலங்களிலேயே உறுதிமொழி (பைஅத்) நாட்டு மக்கள் ஆட்சியாளரிடம் செய்த வழிமுறையும் உண்டு. இந்த முறையும் தேர்தலில் பின்பற்றப்படும் வழிமுறையை ஒத்தே இருக்கிறது.

எனவே நாலு வீட்டுக்கு போனோமா...நாலு பாத்திஹா ஓதி குடும்பத்தை ஓட்டிணோமா என்ற ரீதியில் காலத் தள்ளும் சம்சுதீன் காசிமி போன்றவர்கள் தேவையில்லாத சமாசாரங்களில் மூக்கை நுழைத்து அவமானப்பட வேண்டாம். மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இஸ்லாத்தை இத்தனை நாள் மூடி வைத்தது போதும். இனி உங்களைப் போன்ற உலகம் தெரியாத மார்க்க அறிஞர்கள் இஸ்லாத்துக்கு தேவையில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை சரியான திசையில் இஸ்லாம் சென்று கொண்டிருக்கிறது. அதைக் குழப்பவேண்டாம் என்று மட்டும் சம்சுதீன் காசிமிக்கு சொல்லிக் கொள்கிறோம்.

சம்சுதீன் காசிமியின் அரைகுறை பேச்சை கேட்டுக் கொண்டு இஸ்லாத்தை சரியாக விளங்காத சில இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே சம்சுதீன் காசிமி போன்றவர்களின் நாட்டுக்கு எதிரான விஷமக் கருத்துகளை இனியும் பரப்பாமல் தடுக்க வேண்டியது மக்கா மஸ்ஜிதின் நிர்வாகிகளின் பொறுப்பு. அரசும் இவரது பேச்சை கண்காணிக்க வேண்டும்.

19 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோ, சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன். எப்படியிருக்கிறீங்க?

எல்லா மதங்களிலும் ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக, இந்த இடுகை மூலம், சும்சுதீன் காசிமியின் பேச்சினைப் பகிர்ந்திருக்கிறீங்க. என்ன பண்ண, தமிழர்களின் தலையில் எல்லாவிதமான கருத்துக்களையும் திணித்து தாம் பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்திருப்பார் சகோ.

suvanappiriyan said...

சகோ. நிரூபன்!

நான் நலமே! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? சுகமா?

இஸ்லாத்தைப் பொறுத்தவரை புரோகிதத்துக்கு அறவே வேலை இல்லை. சம்சுதீன் காசிமி சொன்னாலும் ஜாகிர் நாயக் சொன்னாலும் அவர்கள் சொல்வது இஸ்லாமிய வட்டத்துக்குள் வருகிறதா என்பதை குர்ஆனின் துணை கொண்டு கண்டு பிடித்து விடலாம்.

இந்த முல்லாவின் உளறலுக்கு அங்கு அமர்ந்திருப்பவர்களே எதிரான கருத்தைக் கொண்டிருப்பவர்களே! ஏனெனில் ஜனநாயகத்துக்கு எதிராக குர்ஆனின் வசனம் எங்குமே சொல்லப்படவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தருமி said...

சுவன்ப்பிரியன்,
சம்சுதீன் பாய்க்கு உங்க பதிவில் விளக்கம் கொடுத்துட்டீங்க. அவரு வாசிச்சிப் பாத்துட்டு டக்குன்னு மனசு மாறிடுவாரு.

அதுனால இன்னொண்ணு பண்னிடுங்க. இங்கிலாந்துல ஒரு பாய் போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்காராம். அந்த நாட்டுக்குள்ளேயே சில பகுதிகளை ஷாரியா பகுதிகளா ஆக்கிக்கிட்டு இருக்காராம், அந்த இங்கிலாந்து சம்சுதின் என்ற Anjem Choudary. அவரு சொன்னதூ: put the seeds down for an Islamic Emirate in the long term’.

நீங்க ரொம்ப பிஸியா ஆயிருவீங்க .. இப்படியே ஒவ்வொரு புரோகிதருக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டே இருக்கணுமே ... பாவம்!

ஜனநாயகத்தைப் பேணும் நீங்கள் இதையும் வாசிங்க:
http://talkstraight.tumblr.com/post/8178941255/british-islamists-expand-campaign-to-set-up-sharia-law

http://timesofindia.indiatimes.com/world/uk/Islamists-mark-sharia-zones-across-Britain/articleshow/9415194.cms

suvanappiriyan said...

தருமி!
//நீங்க ரொம்ப பிஸியா ஆயிருவீங்க .. இப்படியே ஒவ்வொரு புரோகிதருக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டே இருக்கணுமே ... பாவம்!

ஜனநாயகத்தைப் பேணும் நீங்கள் இதையும் வாசிங்க://

Islamic extremists have launched a poster campaign across the UK proclaiming areas where Sharia law enforcement zones have been set up.
Communities have been bombarded with the posters, which read: ‘You are entering a Sharia-controlled zone — Islamic rules enforced.’
The bright yellow messages daubed on bus stops and street lamps have already been seen across certain boroughs in London and order that in the ‘zone’ there should be ‘no gambling’, ‘no music or concerts’, ‘no porn or prostitution’, ‘no drugs or smoking’ and ‘no alcohol’.
Hate preacher Anjem Choudary has claimed responsibility for the scheme, saying he plans to flood specific Muslim and non-Muslim communities around the UK and ‘put the seeds down for an Islamic Emirate in the long term’.
In the past week, dozens of streets in the London boroughs of Waltham Forest, Tower Hamlets and Newham have been targeted, raising fears that local residents may be intimidated or threatened for flouting ‘Islamic rules’.

விபசாரம், மது, சூது, டிஸ்கொதே போன்ற அநாசாரங்கள் இல்லாத ஒரு சமூகம் இங்கிலாந்தில் உருவானால் அந்த மக்கள் விரும்பும் பட்சத்தில் அதனை நானும் நீங்களும் வரவேற்போமே! அதுதானே முறை.

baleno said...

நமது நாடு தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல சுதந்திரங்களை அனைத்து மக்களும் அனுபவித்து வரும் நாடு. இங்கு ஜனநாயக பாதையில் சில குளறுபடிகள் இருந்தால் அதை சாதிவீகமான போராட்டத்தின் மூலமே சரி கண்டு விட முடியும்.

ஜனநாயக அரசு அது மக்களுக்காக இயற்றும் சட்டங்கள் இவை பற்றிய உங்கள் புரிந்துணர்வை பாராட்டுகிறேன்.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//Till then, My previous mentioning
//
எந்த ஒரு வேதத்திலாவது நோய் தீர்க்கும் மருந்து ஒன்றாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? உயிர் காக்கும் மருந்துகள் இன்சுலின், டயாலிசிஸ் சிகிச்சை முறை… இவை எதையாவது எந்த வேத புத்தகத்திலாவது சொல்லி இருக்கா?//
stays without challenge!//

'தேனீக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது.'
-குர்ஆன் 16:69

ஆயுர் வேத மருந்துகளிலிருந்து யுனானி மருத்துவம் வரை அனைவரும் மருந்தை கொடுத்து விட்டு தேனை குழைத்து சாப்பிடுங்கள் என்று மறக்காமல் சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். வைத்தியர் கொடுக்கும் மருந்தில் நோய் குணமாகிறதோ இல்லையோ தேனின் உதவியால் நோயாளி குணமாகி விடுவார்.

காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். :-)

suvanappiriyan said...

JULY 30, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியார் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்ப தாகவும். இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என்றும் கடந்த 7ம் தேதி போனில் மிரட்டல் வந்தது.

போனில் பேசிய மர்ம ஆசாமி இந்த விவரத்தை கூறி விட்டு திடீரென இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

இதையடுத்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சம் பந்தப்பட்ட மிரட்டல் போன் எங் கிருந்து வந்தது? என கண்டுபிடிக்க முயற்சித்தனர். இதில், திருவாரூர் சாட்டைக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணி யாற்றும் ராமநாதன் (28) என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கல்லூரிக்கு போன் செய்தவர் என தெரியவந்தது.

இதையடுத்து அர்ச்சகர் ராமநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, அதனால் பிறர்படும் அவதியை கண்டு ரசிப்பது தனது பொழுதுபோக்கு என்று அர்ச்சகர் ராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களிடமும் ஆபாசமாக போனில் பேசும் வழக்கம் உடையவர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

suvanappiriyan said...

இப்படிப்பட்ட கடன், மற்றும் பொருளாதார சிக்கலில் அமெரிக்க பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே குழியில் விழ தொடங்கிவிட்டது. இனி ஒரு போதும் எந்த சீர் திருத்தம் கொண்டு வந்தாலும், ஐ எம் எப் கோடி கோடியை கடன் வழங்கினாலும் அமெரிக்க பொருளாதாரம் மேலோங்கி வருவதற்கு எந்த அடித்தளமும் இல்லை, மக்கள் மீது இன்னும் வரி சுமையை ஏற்றி, உணவுப்பொருள் விலையை இன்னும் கூட்டினால் இதற்க்கு தீர்வாகாது மேலும் எதிர் மறை விளைவைத்தான் ஏற்ப்படுத்தும். அங்கு மக்கள் புரட்சி, கிளர்ச்சி யில் ஈடு படத்தான் இது வழி வகுக்கும். மேலும் இப்பவே ஒரு சில போராட்டங்கள் அங்கொன்னும் இன்கோன்னும் நடக்கத்தான் செய்கிறது, இதற்க்கு ஜார்ஜ் W புஷ் காலத்திலேயே திட்டம் தீட்ட தொடங்கி இருக்கவேண்டும் அவர்கள் அது சமயம் அரபு நாடு களின் என்னை வளம் மட்டும் கிடைத்தால் போதும் என்று குவைத்துக்கு ஆதரவாக போர் செய்தது அதன் நோக்கம் நிறைவேறாமல் அது தன்னையே வேறு திசையில் இட்டு சென்றது, மேலும் ஆயுத விற்ப்பனையை பெரிதும் நம்பி இருந்தது.. பின்பு அது தனக்கே எதிராக ஒரு கால கட்டத்தில் உபயோகப்படுத்துவதை அனுபவ பூர்வமாக உணந்து அதிலும் தோல்வி கண்டது. ஆகா இப்படி அடி எடுத்து வைக்கும் அனைத்து வழி களையும் இடி காத்திருக்க என்ன செய்ய போகிறோம் என்று சிந்திப்பதற்குள் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு போய் விட்டது, அதிலும் LEHMAN BROTHERS என்ற தனியார் வங்கி தான் முதன் முதலில் சீட்டு கட்டைப்போல் உதிர தொடங்கியது அதை தூக்கி நிறுத்துகிறேன் என்று அமெரிக்க அரசாங்கத்தின் பணம் அழிந்தது, இப்படி உடைந்த நிதி நிறுவனங்களை தத்து எடுததிலேயே அரசாங்கம் கலைத்து போய்விட்டது, இதில் தீவிரவாதிகளின் தாக்குதல் வேறு. அதனை செப்பனிடவும் ரெட்டை கோபுரத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அழித்த காப்புறுதி தொகையில் பல இன்சுரன்ஸ் கம்பெனி தள்ளாடிப்போனது.. மேலும் தீவிரவாதிகள் மற்றும்,. தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க அரசாங்கம் மேற்கொண்ட அதி நவீன தொழிநுட்பம், மற்றும் தீவிர பாதுகாப்பு வலயங்கள், மேலும் செலவினங்கள் வேறு பொருளாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாகி விட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக இப்படி செலவு செய்தும் பல குறைபாட்டினால் மக்களின் அதிருப்திக்கும் ஆளாகி அது மேலும் பாது காப்ப்பு செலவை கூட்டி கூட்டியே பட்ஜெட் எகிறிக்கொண்டே சென்று இப்போ இந்த அவலமான சூழ் நிலைக்கு ஆளாகி இருக்கிறது, ஐரோப்பிய யூனியன் தன பொருளாதார சரிவை கொண்டதற்கும் புது காரணம் ஒன்றுமில்லை அது முழுக்க முழுக்க அமெரிகாவின் வளர்ச்சியை நம்பிக்கொண்டு காலத்தை ஒட்டியது தன்னிறைவற்ற உணவு உற்பத்தி. ஆடம்பர வாழ்க்கை நாம் சுப்பர் பவர் என்ற இறுமாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு இவற்றிற்கு அளித்த முக்கியத்துவம்.. இது மட்டும் காரணமில்லா விட்டாலும் இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். மேலை நாடுகள் என்று சொல்லும் இவைகள் விரைவில் கீழை நாடுகளாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. திட்டமிடல் திட்டமிடல் திட்டமிடல் இது ஒன்று தான் ஒரு நாட்டை மேல்நோக்கி இல்லாவிட்டாலும் கீழ் நோக்கி செல்லாது பார்த்துக்கொள்ளும்.

-Anwar hilwai, dinamalar comments.

suvanappiriyan said...

தருமி!

//ஓ! ஒரு அயல்நாட்டில் போய் உட்கார்ந்து கொண்டு உங்களின் ஷாரியத் முறையைக் கொண்டு வருவீங்க .. அங்க இருக்கிறவங்க ‘சும்மா’ பார்த்துக்கிட்டு உக்காந்திருப்பாங்க ...இல்ல. நல்ல ஜனநாயகம்!//

அந்த மக்கள் ஷரீயத் சட்டத்தை விரும்பினால் அதை ஏன் தடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

//செளதியில் ஒரு போஸ்டர் ஒட்டுங்களேன்.//

சவுதி இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு நடக்கும் ஆட்சி. இந்த நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டே நான் இங்கு பணி செய்கிறேன் என்ற ஒப்பந்தத்தோடுதான் அனைவரும் வருகின்றனர். மேலும் சவுதியில் ஷரீயத் சட்டமே கடைபிடிக்கப் படுவதால் அதற்காக போஸ்டர் ஒட்ட வேண்டிய அவசியமும் எழவில்லை.

//இல்லை ... நம்ம ஊர்ல இப்படி போஸ்டர் ஒரு இடத்தில் ஒட்டுனா அது தப்பில்லையா ? உங்க இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டுனா வரவேற்பீங்க ... நல்ல தர்மம்!//

'கடவுள் இல்லை...இல்லவே இல்லை' என்று நீங்களும்தான் தமிழகம் முழுவதும் சுவர்களை அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். நாங்கள் தடுக்கிறோமா? இது ஜனநாயக நாடு சார்....

//ஷாரியத் ஆட்சின்னா என்னன்னு இப்போ கொஞ்சம் தெரியும். இங்கேயும் கொண்டு வந்திராதீங்க .. தாங்குற சக்தியில்லை!//

நாத்திகம் என்ற போலி தத்துவத்தை சிறிது தூர வைத்து திறந்த மனதோடு குர்ஆனை அணுகிப் பாருங்கள். பிறகு நீங்களும் ஷரீயாவுக்கு கொடி பிடிப்பீர்கள்.

suvanappiriyan said...

திரு பலினோ!
//ஜனநாயக அரசு அது மக்களுக்காக இயற்றும் சட்டங்கள் இவை பற்றிய உங்கள் புரிந்துணர்வை பாராட்டுகிறேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஜோ அமலன்!
//எடுத்துச்சென்ற‌வ‌ர்க‌ளில் பாம‌ர‌ரும் ப‌ண்டித‌ர்க‌ளும் உண்டு. எடுத்துச்சென்ற‌ கால‌ம் நெடுங்கால‌ம். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இடைச்செருக‌ல‌கள் நேர்ந்த‌ன‌ என்ப‌தை விட‌ இய‌ற்கை நிய‌தின் ப‌டி நேராம‌ல் இருந்திருக்காது என்று சொல்வ‌தே ச‌ரி.//

இந்து மதத்தினை தீவிரமாக பின்பற்றுபவர்கள் என்றேனும் ஏன் பிரம்மாவைக் கும்பிடுவது இல்லை. பிற்காலத்தில் பிரம்மா என்பவருக்கு சரஸ்வதி என்ற மனைவியை வைத்து நான்கு முகங்களைக் கொடுத்து ஒரு மனிதனாக மாற்றப்பட்டு பின்னர். சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களை இணைத்து மூன்றோடு ஒன்றாக்கப் பட்டு இன்று பிரம்மம் என்றாலோ பிரம்மன் என்றாலோ என்னவென்று தெரியாத அளவுக்கு தரம் இறங்கிப் போய்விட்டது.

இந்து வேதங்களை அருளியது யார்? என்ற தெளிவான விபரம் நமக்கு கிடைக்கவில்லை. பல ரிஷிகள் எழுதிய பாடல்களின் தொகுப்பாகவே வேதங்கள் அறியப்படுகிறது. அதிலும் வெறும் வாய்மொழியாகவே பல நூற்றாண்டுகள் கடந்து வந்திருக்கிறது. ஒரே வேதத்தில் ஓரிறைக் கோட்பாடும் பல தெய்வ வணக்கமும் எவ்வாறு வர முடியும். இங்கு ஏதோ ஒரு கொள்கை இடைச் செருகலாக இருக்க வாய்ப்புண்டு. கூகுளில் தேடியதில் கிடைத்த சில தகவல்களை பகிர்கிறேன். வேதத்தை நன்கு படித்தவர்கள் மேலதிக விளக்கம் தரவும்.

பல தெய்வ வணக்கத்துக்கு சில ஆதாரங்கள்:

பகவத் கீதையில், உலக நடப்புகள் அனைத்திற்கும் காரணமானவராகக் கிருஷ்ணர் காட்டப்படுகிறார். உபநிடதங்கள் ‘பிரம்மம்’ என ஒரு முழுமையை (absolute) ஏற்படுத்திக் காட்ட முயன்றன. ஏறத்தாழ அந்நிலைக்குக் கிருஷ்ணன் கீதையில் கொண்டுவரப்படுகின்றார். ‘ஆக்குபவன் நானே, ஆக்கப்படுபவன் நானே, கொல்பவன் நானே, கொல்லப்படுபவனும் நானே’ என்பது போன்றதோர் ‘ஒருமை வாதம்’ (ஏகம்) அங்கு நிலைநிறுத்தப்படுகிறது. இந்துக் கடவுள் தத்துவம் அனேகத்திலிருந்து ஏகத்தை நோக்கி நகர்கிறது.
இது எவ்வளவு செயற்கையானது என்பதை, மகாபாரதம் படித்தவர்கள் அறிவார்கள். பாரதம் நெடுக இடம் பெற்றுள்ள கண்ணன் பாத்திரத்திற்கும், பகவத் கீதை காட்டும் கண்ணன் பாத்திரத்திற்கும் தொடர்பே இல்லை.மகாபாரதக் கண்ணன், ஒரு சாதாரணப் பாத்திரம். அக்காப்பியத்தில் இடம்பெறும் சிசுபாலன் போன்ற சிறு பாத்திரங்கள் கூடக் கண்ணனைக் கேலி பேசுவதை நாம் பார்க்க முடியும்.



இருக்குவேதம் குறிப்பிடும் தெய்வங்களுக்குட் தலை சிறந்த தெய்வமெனக் கருதப்படுபவன் ‘வருணன்’. பாடல்கள் இவனை மிக உயரிய நிலையில் வைத்துச் சித்திரிக்கின்றன. வருணனை மட்டும் தனியே போற்றும் பாடல்கள் பன்னிரண்டே. இத்தெய்வத்தின் கை, முகம், கண்கள் முதலிய உடலுறுப்புக்கள் கூறப்பட்டுள்ளன. இதைவிட நடத்தல், பவனி வருதல், இருத்தல். உண்ணுதல் முதலிய செயல்களை வருணன் செய்வதாக இப்பாடல்களிலிருந்து அறிகிறோம். இவ் வருணன் சூரியனைத் தன் இரு கண்களில் ஒன்றாகக் கொண்டு விளங்குகின்றான். இக்கண்ணாலேயே வருணன் உலக நடவடிக்கைகளை ஒன்றும் விடாது கவனிக்கின்றான். இவன் வேள்விகளில் தருப்பையின் மீது அமருபவன். பளபளக்கும் பொன்னாடை அணிந்து தன் மாளிகையில் அமர்ந்து மக்கள் செய்யுங் காரியங்களைக் காண்கிறான்.

suvanappiriyan said...

continue......

‘பூஷன’ என்னுந் தெய்வத்தைப் பற்றி எட்டுச் சூக்தங்கள் இருக்கின்றன. இவை இவனைக் கைகால்கள் முதலிய உறுப்புக்களை உடையவனாக வர்ணிக்கின்றது.

இந்தியாவில் இன்று வழங்கி வரும் தெய்வங்களுள் இருபெரும் கடவுளர் தலைசிறந்து விளங்குவர். இவ்விருவருள் ‘விஷ்ணு’ ஒருவன். இருக்கு வேதத்தில் இவன் மிகச் சிறு தெய்வமாகவே காணப்படுகிறான். ஐந்தாறு சூக்தங்களில் மட்டுமே இவன் போற்றப்படுகிறான்.

இருக்குவேதத்தில் இருபதுக்கு அதிகமான பாடல்களில் ‘உஷை’ போற்றி வழுத்தப்படுகின்றான். இப்பாடல்கள் இத்தெய்வத்திற்கு உருவங் கொடுக்கின்றன. இவளே இருக்கு வேதத்தில் கூறப்படும் தனிப்பெரும் பெண் தெய்வம். இவன் கிழக்கே தோற்றுவள். ஒளியே இவள் அணிந்து விளங்கும் ஆடை. அழகிய ஆடை அணிந்து விளங்கும் உஷை ஆடல் அழகியாகப் போற்றப்படுகின்றாள். இவள் இருளை அகற்றுகின்றாள். இவள் களைவது இருளின் கரிய உடையை என்று கவி வர்ணிக்கின்றார். பருவங்கடந்து பன்னெடுங்காலம் வாழ்ந்து முதிர்ந்த பிராயம் எய்திக் காட்சியளிக்கும் இவள் எப்பொழுதும் இளமை சிறிதும் குன்றாது இளம் பிராயத்தினளாகத் தெரிவது கவியைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது

இருக்குவேதம் எடுத்துக் கூறும் சிறு தெய்வங்களுள் பர்ஜனியனும் ஒருவன். இவனைப் பற்றி மூன்று பாடல்கள் வருகின்றன. இவன் மழைத் தெய்வம்.

பிருதுவி என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். பிருதுவியை ஒரு தெய்வமாக இருக்குவேதம் எடுத்துக் கூறுகின்றது.

ஏக தெய்வ வணக்கத்துக்கு சில ஆதாரங்கள்:
பகவத் கீதை
அவன் மகாத்மா,கானுதர்கரியன் (7:19)
சென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் அறியான். (7:26)

அவன் ஆதிதேவன்,பிரவாதவன் (10:12)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி
அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் – யஜூர் வேதம் பக்கம் 377)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
“அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே” இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)


ரிக் வேதம் (8:1:1)
”மா சிதான்யதியா ஷன்ஸதா” அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

* ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.
( ரிக் வேதம் 1:164:46)


ரிக் வேதம் குறிப்பிடும் இறைவனின் திருப்பெயர்களில் மிக அழகிய திருப்பெயர் ‘பிரம்மா’ என்பதாகும்.’படைப்பாளன்’ என்பது இதன் பொருள்.இதனை அரபியில் மொழி பெய‌ர்ப்போமேயானால் ‘கலிக்’ என்றாகும்.ஏக இறைவனை ‘கலிக்’ என்றோ ‘படைப்பாளன்’ என்றோ ‘பிரம்மா’ என்றோ அழைப்பதில் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றுக் க‌ருத்தில்லை……..ஆனால் ‘ பிரம்மாவிற்கு நான்கு தலை உண்டு’ என்று கூறுவதையே மறுக்கின்றனர்……..ரிக் வேதம் கூறும் மற்றொரு அழகிய திருநாமம் ‘விஷ்ணு’.இதன் பொருள் ‘பரிபாலிப்பவன்’.இதை அரபியில் மொழிப்பெயர்த்தால் ‘ரப்’ என்றாகிறது……..இறைவனை ‘ரப்’ என்றோ,’பரிபாலிப்பவன்’ என்றோ,’விஷ்ணு’ என்றோ கூறுவதில் முஸ்லிம்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.ஆனால்,’விஷ்ணுவுக்கு நான்கு கைகள் உண்டு.கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்’ என்பதையே மறுக்கின்றனர்……..

suvanappiriyan said...

தமிழன்!
//தேனின் மருத்துவ குணங்கள் பற்றி அல்லாவுக்கு தெரியும் முன்பே மனிதர்களுக்கு தெரியும்..
Ebers Papyrus - எகிப்த்தின் பழைய மருத்துவனூல் 1500BC - அல்லா இதைத்தான் காப்பி அடித்து தான் தான் அதை கண்டுபிடித்த மாதிரி கூறியுள்ளார்….. அதை வேற நீங்கள் பெருமையாக இங்கே கூறுகிறீர்கள்.//

'இது முந்தைய வேதங்களிலும் ஆப்ரஹாம், மோசேயுடைய வேதங்களிலும் உள்ளது.'
-குர்ஆன் 87:18,19

எகிப்தியர்களுக்கு இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்தான் மோசே! இவரது காலம் கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்பு என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றது.

எனவே குர்ஆனின் செய்திகள் புதியதன்று. மனித குலம் தோன்றியதிலிருந்து இறைவன் புறத்திலிருந்து வழி வழியாக வந்த செய்திகளே வேதங்கள்.

திராவிடன்!
//அப்புறம் என்ன பள்ளியில் பாங்கு சொல்வதும் நமாஸ் படிப்பதும் தமிழில் செய்ய ஆரம்பிக்கவேண்டியதுதானே? முடியுமா? யோசித்ததாவது உண்டா?//

ஜனகனமன என்ற தேசிய கீதத்தை வங்காள மொழியில் இருந்தாலும் நாட்டுப் பற்றை தெரிவிப்பதற்காக நாம் மரியாதை செலுத்துகிறோம். அது போலவே உலக ஒற்றுமைக்காக பாங்கும், தொழுகையும் அரபியில் நடத்தப்படுகிறது. நீங்கள் அமெரிக்கா சென்றாலும் ஆப்ரிக்கா சென்றாலும் ஒரே பாங்குதான்: ஒரே தொழுகை முறைதான். கூட்டுத் தொழுகை முடிந்தவுடன் பிரார்த்தனை என்ற ஒரு சடங்கு உள்ளது. அது அவரவர் தாய் மொழியில்தான் கேட்கப்டுகிறது. ஒவ்வவொரு தொழுகைக்கு பின்னும் நான் என் தாய் மொழியான தமிழில்தான் பிரார்த்தனை புரிகிறேன்.

எப்போது ஆட்சேபணை வர வேண்டும்? அரபி மட்டுமே தேவ பாஷை. அரபி படிக்க யாரும் விரும்பினாலும் அவரது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று குர்ஆனில் எங்காவது சொல்லப்பட்டால் உங்களோடு சேர்ந்து நானும் ஆட்சேபிக்கிறேன்.

//இது ஒரு பள்ளியிலாவது தமிழில் அல்லது அரபி அல்லாத மொழியில் தொழுகை நடக்கும் போது சொல்லவேண்டும் நண்பரே.//

அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு தொழுகையில் பல முறை இந்த வசனங்கள் ஓதப்படுகிறது. தமிழில் விளக்கமும் கொடுக்கப்படுகிறது.

//கருத்து என்னவோ நல்லாத்தான் இருக்கு ஆனால்
நண்பரே நடைமுறையில் எந்த இஸ்லாமியரும் செயல்படுத்தாத கருத்துக்கள்//

இதற்கு காரணம் குர்ஆனை மொழி பெயர்க்காமலேயே அரபியில் பொருள் புரியாமல் மந்திரம் போல் ஓதி வந்ததுதான். இஸ்லாம் தமிழகத்துக்கு வந்து ஆயிரம் வருடம் ஆனாலும் குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது 100 வருடங்களுக்கு முன்பு தான். தற்போதுதான் தமிழ் மொழி பெயர்ப்பை படிக்கும் ஆர்வம் இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் வந்துள்ளது. நீங்கள் விரும்பும் மாற்றம் இனிமேல் அவசியம் ஏற்படும்.

suvanappiriyan said...

சார்வாகன்!
//1.ஜனநாயகம் என்பது இறைவனுக்கு இணை வைப்பது என்று சம்சுத்தீன் காசுமி கூறுகிறார்.குரானிலோ,ஆதர பூர்வ ஹதிதிலோ ஜன்நாயகத்திற்கு ஆதரவாக ஏதாவது ஆட்சி நடைபெற்றது என்று காட்டலாம்.//

முகமது நபியின் மரணத்துக்கு பின்பு அபுபக்கர் அடுத்த ஆட்சியாளராக மக்களால் முன்னிறுத்தப்படுகிறார். பைஅத்(உறுதிமொழி) என்ற ஒரு முறை இஸ்லாத்தில் உண்டு. குடிமக்கள் ஆட்சியாளரிடம் வந்து 'உங்கள் தலைமையை ஏற்றுக் கொள்கிறேன்' என்று அவர் கையைப் பிடித்து உறுதி மொழி எடுக்க வேண்டும். ஜனாதிபதி அபுபக்கரை அன்றைய அரபுகள் அனைவரும் வந்து பைஅத் செய்ததை நாம் வரலாறுகளில் பார்க்கிறோம். நமது தேர்தல் ஓட்டுப் போடும் முறையை ஒத்தே இந்த முறையும் இருக்கிறது.

அதே சமயம் நமது நாட்டு ஜனநாயக முறையையும் இஸ்லாம் தடுக்கவில்லை. ஆட்சியாளர் இந்த முறையில்தான் வர வேண்டும் என்று குறிப்பிட்டு எந்த வழி முறையையும் இஸ்லாம் காண்பிக்கவில்லை. அந்த நாட்டு மக்களின் விருப்பத்தில் இஸ்லாம் விட்டு விட்டது.

நபிகள் நாயகம் அவர்கள் மதினா வந்த போது மதினாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரிச்சை மரத்தை பயிரிட்டு தொழில் செய்து வந்த மதினாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'இதைச் செய்யாதிருக்கலாமே' எனக் கூறினார்கள். மதினாவாசிகள் அவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். அந்த வருடம் மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'உங்கள் பேரிச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது'? என்று கேட்டனர். நபிகள் நாயகம் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் 'உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.
-நூல் முஸ்லிம் 4358

'நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதும் கட்டளையிட்டால் அதைக் கடைபிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை'
-நூல் முஸ்லிம் 4357

மேற்கண்ட ஆதாரபூர்வமான நபி மொழிகள் ஆட்சி அதிகாரங்களை நாம் சுயமாக முடிவு செய்து கொள்ள அனுமதியளிக்கிறது.

//2.பரம்பரை மன்னராட்சி என்பது இஸ்லாமின் படி சரியா ? த்வறு அல்லவா.ஆகவே இஸ்லாமிய விரோதி அரசன் அப்துல்லாவின் ஆட்சியை தூக்கி எறிய ஏன் பொராட்டம் நடட்தக் கூடாது?//

மன்னர் அப்துல்லாஹ்வின் மேல் இவ்வளவு காட்டம் ஏன்? சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை கொடுத்துக் கொண்டிருப்பதாலா? முன்பே சொன்னது போல் ஜனநாயக ஆட்சியோ, மன்னராட்சியோ, ஜனாதிபதி ஆட்சியோ எந்த ஒரு அமைப்புக்கும் இஸ்லாம் தடை சொல்லவில்லை. அந்த நாட்டு மக்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்களோ அந்த ஆட்சியே நடக்கட்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

சவுதி மக்கள் மன்னர் அப்துல்லாவின் ஆட்சியை மன மகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமும்.
தினமும் சவுதி தொலைக்காட்சியில் மன்னரிடம் குடி மக்கள் பைஅத்(உறுதி மொழி) எடுக்கும் காட்சியை நேரிடையாக ஒளிபரப்புகிறார்கள். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.

நமது நாட்டில் ஜனநாயகம் என்ற பேரில் நடக்கும் கூத்துகளை தினமும் நாம் பார்த்து வருகிறோம். அதை சீர்திருத்த ஏதாவது முயற்சி எடுங்கள் சார்வாகன்.

தருமி said...

//மன்னர் அப்துல்லாஹ்வின் மேல் இவ்வளவு காட்டம் ஏன்? //

அதான ....!
அவரு எவ்வளவு நல்லவ்ர் .. வல்லவர்!

RAZIN ABDUL RAHMAN said...

சலாம் சகு சுவனபிரியன்..
பின்னுட்டம் என்னவோ பதினைந்துதான்..ஆனால் அதில் தாங்கள் விளக்கி கூறும் விஷயங்களுக்கு எல்லை இல்லை,,,

மாஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு நீடித்த ஆயுளையும்,நல்ல உடல் நலத்தையும்,ஆரோகியத்தையும்,அருளையும்,பரக்கத்தையும்,நிம்மதியையும்,கண்ணியத்தையும்,செல்வத்தையும்,நிறைவான மார்க்க உலக அறிவையும் வழங்க பிராத்திக்கிறேன்..

அன்புடன்
ரஜின்

Anonymous said...

அருமையான விளக்கம்.சம்சுதீன் காசிமி போன்றவர்கள் தெரிந்தே இப்படி கூறி வருகிறார்களா.தெரியாதது போல் நடிக்கிறார்களா.? iniavan.

suvanappiriyan said...

சகோ. ரஜின்!

//அல்லாஹ் உங்களுக்கு நீடித்த ஆயுளையும்,நல்ல உடல் நலத்தையும்,ஆரோகியத்தையும்,அருளையும்,பரக்கத்தையும்,நிம்மதியையும்,கண்ணியத்தையும்,செல்வத்தையும்,நிறைவான மார்க்க உலக அறிவையும் வழங்க பிராத்திக்கிறேன்..//

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி! இத்தகைய பிரார்த்தனைகளுக்கு வாய்ப்பு நல்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தமிழ் ஹிந்து தளத்தில் நடந்த விவாதத்தைத்தான் இங்கும் பதிந்தேன். நேரமிரு;பின் அந்த தளத்தில் சென்று பார்வையிடுங்கள்.

http://www.tamilhindu.com/2011/07/make-them-return-not-educate/

சில வேலைகள் காரணமாக இன்னும் ஐந்து நாட்களுக்கு இணையத்தின் பக்கம் அதிகமாக வர இயலாது. இன்ஷா அல்லாஹ் பிறகு சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

திரு தருமி!

//அதான ....!
அவரு எவ்வளவு நல்லவ்ர் .. வல்லவர்!//

சில நேரங்களில் உங்களை அறியாமல் உண்மையை ஒத்துக் கொண்டு விடுவீர்கள். நன்றி!