'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, July 16, 2011
வரதட்சணை கொடுமை - ஓர் ஆய்வு
வரதட்சணை கொடுமை - ஓர் ஆய்வு
வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:
வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.
-----------------------------------------------------------
திருமணமான 4 மாதத்தில், வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தீயில் கருகி இறந்துள்ளார். கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவொற்றியூர் கலைஞர்நகர் 8வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (27). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சியாமளாதேவி (25). இவர்களுக்கு கடந்த ஜனவரி 27ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 25 பவுன் நகை, பைக், வீட்டு உபயோக பொருட்களை சியாமளாவின் பெற்றோர் சீதனமாக கொடுத்தனர்.
இந்நிலையில், ரூ.2 லட்சமும், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை பெற்றோரிடமிருந்து வாங்கி வருமாறு சியாமளவை கணவர் யுவராஜூம், அவரது குடும்பத்தினரும் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் பெற்றோர் வீட்டுக்கு வந்த சியாமளா, தந்தை செல்வராஜிடம் இதுபற்றி கூறி அழுதுள்ளார். ‘தற்போது பணம் இல்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் ஏற்பாடு செய்கிறேன்’ என்று மகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார் செல்வராஜ்.
கணவன் வீட்டுக்கு சென்ற சியாமளா, கடந்த 3ம் தேதி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக, யுவராஜ் போலீசாரிடம் கூறினார். இது குறித்து, சியாமளாவின் தந்தை செல்வராஜ் சாத்தாங்காடு போலீசில் கொடுத்த புகாரில், “என் மகளை அவரது கணவர் யுவராஜ், மாமனார் மாரியப்பன், மாமியார் சுசிலா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். என் மகள் சாவில் மர்மம் உள்ளது” என்று கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, யுவராஜை கைது செய்தனர். அவரது பெற்றோரை தேடுகின்றனர்.--தினமும் படிக்கும் வழக்கமான செய்திகளில் ஒன்று
---------------------------------------------------------
இன்று சமூகத்தில் படித்தவர்கள் முதல் படிக்காத பாமரன் வரை சாதி மத பேதம் இல்லாமல் செய்யும் ஒரு சட்ட விரோத செயல் இந்த வரதட்கணை. எவ்வளவுதான் தவிர்க்க முற்பட்டாலும் இதன் கொடுமையை ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் சந்தித்தே வருகிறோம்.
இந்திய மண்ணில் மட்டுமே இந்த கொடுமை தலைவிரித்தாடுகிறது. சகோ ஆஷிக் தனது பதிவில் கூட மிகவும் அழகாக இந்த பிரச்னையை தொட்டிருக்கிறார். அதே போல் சகோதரி அனலைஸ்டும் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை புள்ளிவிபரங்களோடு தொகுத்துள்ளார்.
'தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்...பொருள் தந்து மணம் பேசுவார்.
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்...உலகை விலை பேசுவார்...
என்ற திரைப்பட பாடலின் வரிகளில் அந்த காலத்தில் பெண்ணுக்கு பொருள் கொடுத்து மணம் முடித்திருப்பதாக கண்ணதாசன் குறிப்பிடுகிறார். எனவே பண்டைய நமது முன்னோர்கள் வழக்கில் வரதட்கணை பெண் வீட்டார் கொடுப்பது என்பது இல்லாதிருந்திருக்கிறது. பிற்காலத்தில் உருவாக்க்பட்ட வழக்கமாகவே இதனை நாம் பார்க்கிறோம்.
இஸ்லாமும் இந்த கொடுமையை வன்மையாக கண்டிக்கிறது. கண்டிப்பதோடு அல்லாமல் எதிர்மறையாக அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் மஹர் (அட்வான்ஸ் ஜீவனாம்சமாக) மாப்பிள்ளை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையையும் இடுகிறது. என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கும் எகிப்து நாட்டு ஹைதம் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் மஹருக்கான தொகை இன்னும் சேரவில்லை. தற்போது அவரது தந்தை,தமக்கை என்று பலரும் 50000ரியால் தலைக்கு ஒவ்வொருவராக கொடுத்து இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது. இஸ்லாம் இவ்வாறு வழி காட்டியிருக்க மற்ற மதத்தவர்களை பார்த்து முஸ்லிம்களும் பெண்ணிடம் வரதட்சணை கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இதன் தீமையை விளக்கி இறைவனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற தொடர்ந்த பிரசாரத்தின் காரணமாக இன்று வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்து வருகிறது. 'பெண்ணிடம் வரதட்சணை வாங்கினால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று முரண்டு பிடித்து கொண்டிருக்கும் பல இளைஞர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இது போன்ற இளைஞர்களை தூய பிரச்சாரத்தின் மூலமாக நாம் அதிகமதிகம் உருவாக்க வேண்டும். அரபு நாட்டு நடைமுறைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சில விஷயங்களின் அரபுகளின் மேல் நமக்கு கோபம் இருந்தாலும் திருமண விஷயத்தில் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை நாமும் பின் பற்ற முயற்ச்சிக்க் வேண்டும். திருமண விருந்து மாபபிள்ளை செலவுதான். பெண்ணுக்கு உடுத்தும் துணியிலிருந்து, நகை, பெட்ரூம் என்ற சகல செலவுகளையும் மாப்பிள்ளைதான் சுமக்க வேண்டும். பெண்ணை பெற்றவர்களுக்கு எந்த செலவும் இல்லை. இதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. இதுபோன்ற ஒரு நிலை நமது நாட்டிலும் உருவானால்தான் பெண் சிசுக்கள் கொல்லப்டுவது நிற்கும். ஸ்டவ் வெடித்து புது மணமகள் இறப்பது நிற்கும்.
ஒரு இந்து நண்பர் 'நான் இஸ்லாத்தை தழுவ அதிக ஆர்வமுடன் இருக்கிறேன். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இஸ்லாத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்க என்னிடம் 30 பவுன் அல்லது 40 பவுன் தேவைப்படும். இருவருக்கும் சேர்த்து 80 பவுனுக்கு நான் எங்கு போவேன். இதே இந்து மதத்தில் 3 பவுன் 4 பவுனில் எனது மகளின் திருமணத்தை நடத்தி விடுவேன். எனவே இரண்டு பெண்களுக்கும் திருமணத்தை முடித்து விட்டு பிறகு நானும் எனது மனைவியும் இஸ்லாத்தில் இணையலாம் என்றிருக்கிறோம்'. என்று சொல்லும் அளவுக்குத்தான் முஸ்லிம்களின் பெரும்பாலோரின் நடவடிக்கை இருக்கிறது. இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த கொடுமையை வேரோடு பிடுங்கி எறிய அனைவரும் முயற்ச்சிப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
நல்ல விழிப்புணர்வூட்டும் பகிர்வு மற்றும் ஆய்வு. நன்றி சகோ.
திரைப்பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுவதெல்லாம் வரலாற்று ஆவணமாய் என்னால் நம்ப முடியவில்லை.
//கண்டிப்பதோடு அல்லாமல் எதிர்மறையாக அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் மஹர் (அட்வான்ஸ் ஜீவனாம்சமாக) மாப்பிள்ளை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையையும் இடுகிறது.//
--->இது....
//கண்டிப்பதோடு அல்லாமல் எதிர்மறையாக அந்த பெண்ணுக்கு மஹர் (ஒரு லட்சம் இரண்டு லட்சம் என அட்வான்ஸ் ஜீவனாம்சமாக) மாப்பிள்ளை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையையும் இடுகிறது.//
---என்று இப்படி இருந்திருக்கலாம் சகோ.சுவனப்பிரியன்.
(ஏனெனில், இஸ்லாத்தில் அப்படி தொகை ஏதும் குறிப்பிடவில்லையே...சகோ..!
மாறாக பணமோ... பொருளோ... கற்ற கல்வி(குர்ஆன் சூரா)... இரும்பு மோதிரம்... (என சில ஹதீஸ்கள்) ...முதலாக..., அவரவர் வசதிக்கேற்ப, அதிகபட்சமாக ஒரு (கின்தாரை) பொற்குவியலை (மஹராக) கொடுத்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள் என்ற அல்குர்ஆன் 4:20 வசனத்தின் மூலம் "ஒரு பொற்குவியலையும் கூட மஹராக வழங்கலாம்" எனத்தெரிந்து கொள்ளலாம் என்பதால்தான்... அப்படி ஒரு மாற்றம் சொன்னேன் சகோ.)
///இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த கொடுமையை வேரோடு பிடுங்கி எறிய அனைவரும் முயற்ச்சிப்போம்.///---அவ்வாறே வழிமொழிகிறேன்..!
வஅலைக்கும் சலாம்! சகோ. ஆஷிக்!
//திரைப்பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுவதெல்லாம் வரலாற்று ஆவணமாய் என்னால் நம்ப முடியவில்லை.//
பழந் தமிழர் கதைகளில் கூட பெண்ணுக்கு ஆண் பொருள் கொடுத்து திருமணம் முடித்ததாக படித்திருக்கிறேன். நூல் ஞாபகம் இல்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். ஞாபகத்தில் பட்டென்று இந்த பாடல் வந்தால் எழுதினேன். வேறொன்றுமில்லை.
//கண்டிப்பதோடு அல்லாமல் எதிர்மறையாக அந்த பெண்ணுக்கு மஹர் (ஒரு லட்சம் இரண்டு லட்சம் என அட்வான்ஸ் ஜீவனாம்சமாக) மாப்பிள்ளை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையையும் இடுகிறது.//
---என்று இப்படி இருந்திருக்கலாம் சகோ.சுவனப்பிரியன்.//
உதாரணத்திற்க்காகத்தான் அந்த தொகையை எழுதினேன். தவறாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக மேலதிக விளக்கம் தந்தமைக்கு நன்றி சகோ. ஆஷிக்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
வரதட்சனை எதிரான உங்கள் பதிவிற்கு இறைவன் நற்கூலியாளிப்பானாக.
//பழந் தமிழர் கதைகளில் கூட பெண்ணுக்கு ஆண் பொருள் கொடுத்து திருமணம் முடித்ததாக படித்திருக்கிறேன். நூல் ஞாபகம் இல்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.//
பண்டைய தமிழ் பாடல்
ஒடியாடி மிளகாய் அரைச்சு
ஒன்பது சட்டி கறியாக்கி
பார்க்க வந்தன் என் மாமன்
பரிசம் போட்டான் என் மாமன்
என்ற பாடலடிகள் பண்டைய நடைமுறையை எடுத்துச் சொல்கின்றன.
பதிவுக்கு நன்றி சகோ
சிவனும் வரதட்சணை வாங்காமல் இருக்க முடியாது. சிவன் தந்த வரதட்சணை! -----ARTICLE BY சு. அறிவுக்கரசு in viduthalai . news .26.03.2007
வரதட்சணை மணமகனுக்கு மணமகளின் தந்தை தரும் தட்சணை. தரவேண்டிய தட்சணை. ஆரிய பழக்கம்.தமிழர் பழக்கம் நேர் மாறானது.
பெண்ணைப் பணம் கொடுத்துப் பரிசம் போட்டு மணந்துகொள்வது தமிழர் முறை. பரிசம் பணம் ஆணின் தந்தை தருவார், ஆணே தருவார். பரிசுப் பணத்தை முலைப் பணம் என்று இலக்கியங்கள் கூறும்.
ஆரியப் பண்பாட்டுத் திணிப்பால் விளைந்த பல கேடுகளில் வரதட்சணையும் ஒன்று. பெண்ணைக் கேவலப்படுத்தும் பழக்கம். பல குடும்பங்களைச் சீரழித்த, சீரழித்துக் கொண்டிருக்கும் பழக்கம். பார்ப்பனர்களைப் பார்த்துத் தமிழர்கள் `காப்பி’ அடித்துக் கொண்டிருக்கும் பழக்கம்.
பார்ப்பனர்கள் பண்ணாத கொடுமைகளைச் சூத்திரத் தமிழர்களைப் பண்ண வைக்கும் பழக்கம்.
படித்தவர்கள் எனப்படும் ``முட்டாள்’’களையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் பழக்கம்.இந்தப் பழக்கத்தினால் பாழாகும் குடும்பங்கள் கணக்கில் அடங்காத அளவுக்கு அதிகம்.
இந்த நிலை, பல்கலைக் கழகத் துணை வேந்தர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.
கொடுமைகள் புரிய வைக்கிறது. கொலை செய்ய வைக்கிறது. தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வைக்கிறது.
உயிர்கள் பறிக்கப்பட்ட பின்னும் யாருக்கும் அறிவு வரவில்லை. சட்டம் தண்டித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் வரதட்சணைக் கொடுமைகளும் குற்றங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தூக்குத் தண்டனைகளுக்குப் பிறகும் கொலைகள் நடைபெறுகின்றன, அல்லவா,
சைவர்களின் கடவுளாகிய சிவன் வரதட்சணை வாங்கியதாம்.
சிவனும் வரதட்சணை வாங்கியிருக்கிறது. பார்வதி தவிர வேறு ஒரு பெண்ணையும் சிவன் திருமணம் செய்து கொண்டிருக்கிறது. கங்கை ஏன் கணக்கில் சேர்க்கவில்லை எனக் கேட்கிறீர்களா?
கங்கையைத் தலையில் மறைத்து வைத்துக் கொண்டு, சும்மா ``ஜஸ்ட் லைக் தட்’’ வைத்துக் கொண்டிருக்கிறது. அம்மி மிதித்து, அருந்ததி காட்டிக் கட்டிக் கொள்ளவில்லை.
அதனால், மாதங்கியைத் திருமணம் செய்து கொண்டது தான் கணக்கு! மாதங்கர் எனும் ஒரு முனிவர். இவர் பிரம்மாவின் மகன், தவம் இருந்து வந்தபோது, குளிக்கும் மணிக் கருணை ஆற்றில் மிதந்து வந்த குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்கி வந்தார். இதை கட்டிக் கொள்ளுமாறு சிவனைக் கேட்டார். சிவனும் வந்து மதங்கனின் மகன்(?) மாதங்கியை மணம் புரிந்துகொண்டது.
திருமணம் நம் தஞ்சை மாவட்டம் திருவெண்காட்டில்தான் நடந்தது. சீர் வரிசை எதுவும் தரவில்லை மாதங்க முனி.
இதுவும் வரதட்சணை ஏதும் கேட்கவில்லை. ஆனாலும் சுற்றி இருக்கும் ``சொந்தங்கள்’’ எத்தனை பேர் தெரியுமோ?முப்பத்து முக்கோடிப் பேர்! ஆமாம், முப்பத்து முக்கோடித் தேவர்களும் தான் சொந்தங்கள்.48 ஆயிரம் ரிஷிகள் பெண் வீட்டார் என்றால் அவர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை. அஷ்டத்திக்குப் பாலர்கள், கின்னரர், கிம்புருடர், நந்தி போன்ற துக்கடாக்கள் பற்றி விவரம் இல்லை.
சொந்தங்கள் சொல்லிக் காட்டின. வெறுங்கையோடு வந்தவள் என்று மாதங்கியைச் சொற்களால் வாட்டி வதைத்தனவாம்.
இழிவாகப் பேசின. தாங்கமுடியாமல் மாதங்கி, தன்னைத் தொட்டுத் தாலிகட்டிய சிவனிடம் கூறினாள். சிவன் தன் சொந்தங்களிடம் உபதேசம் செய்தது. வரதட்சணை வாங்குவது பாபம் எனக் கூறியது.
சொந்தங்கள் கேட்கத் தயாராக இல்லை.வேறு வழியில்லை சிவனுக்கு! தன் செல்வத்தின் ஒரு பகுதியை எடுத்து வரச் சொல்லியது. நந்தி எடுத்து வந்தது. ஆமாம்,
சிவனுக்கு எது செல்வம்? அதுதான் வெறும் புலித் தோலை இடைக்கணிந்து சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டை ஓட்டில் பிச்சை வாங்கித் தின்னும் பரதேசியாயிற்றே!
ஏது பணம்? இன்சூரன்ஸ் தொகையாக ஆண்டு ஒன்றுக்கு 36 ஆயிரம் கட்டும் பிச்சைக்காரி பற்றி ``விடுதலை’’ செய்தி போட்டதே, அது போன்ற பிச்சாடனனா சிவன்?
ஆக, தன் பணத்தை தன் மனைவி சார்பாக தரச் செய்து, வரதட்சணையாக வாங்கிக் கொண்டு, சொந்தங்களின் வாயை அடைத்துவிட்டதாம், சிவன்!
``வெல்லத்தில் விக்கிரகம் செய்து, அதில் கொஞ்சம் கிள்ளி நைவேத்யம் செய்து’’ ``என்பார்களே அதுபோல, கொடுத்ததும் இதுவே, எடுத்துக் கொண்டதும் இதுவே!
அதிகமாக ஆழப் போனால் மனம் புண்படும் இந்துக்களுக்கு! இத்தோடு நிறுத்திவிடுவோம்!
சரி, நீதி என்ன? வரதட்சணை வாங்காமல் கடவுளாலும் இருக்க முடியாது; வாங்காமல் கல்யாணம் கட்டிக் கொண்டால் சொந்தங்கள் விடாது. சொந்தங்களுக்கு சமாதானம் கூறக் கடவுளாலும் முடியாது.
கடைசியில் கடவுளாலும் வரதட்சணை வாங்கித்தான் தீரவேண்டும். விதியை யாரும் மீறக்கூடாது.
பின் ஏன், பிள்ளையைப் பெற்ற பிசாசுகள் பேயாய் அலையாது, வரதட்சணைக்கு? - சிவன் தந்த வரதட்சணை! -----ARTICLE BY
சு. அறிவுக்கரசு. IN viduthalai . news .26.03.2007
THANKS TO: http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_09.html
வேதப்படி பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனம் ரொம்ப முக்கியமானது.
இனி அவளுக்கு எதை செய்யப்போகிறாய். அதனால் மொத்தமாக அவளுக்கு செய்ய வேண்டியதை செய்துவிடு என்கிறது வேதம்.
அதனால், பெண்ணுக்காக ஆபரணங்கள் வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் என பல விலை மதிப்பற்ற பொருள்களை பெண்ணுடன் சேர்த்து அனுப்புவார்கள்.
சீதனம் எவ்வளவு இருக்கும் என்பதை யூகிப்பதற்காக ஒரு வேத மந்த்ரம் பாருங்கள்
‘ஏ கந்தர்வாஹா அப்சரஸ்ய தேவிஹிஏஷீ விருஷ்ஹேசு ஆஷதே ஷிவாஸ்தே’
ஏ, தேவதையே கந்தவர்களே எங்கள் பெண்ணை திருமணம் செய்து அனுப்புகிறோம். அவளுக்காக சீதனங்களை வண்டி வண்டியாக அனுப்புகிறோம். அவை அனைத்தும் அவளோடு பத்திரமாக போய்ச்சேரவேண்டும். எல்லாமே விலை மதிப்பற்ற பொருட்கள் என்பதால் பேய்கள், பிசாசுகள் அவற்றை அண்டாமல் அபகரித்துச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுகிறது அந்த வேத மந்த்ரம்
சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா?
இன்னாரு புதிய சீதனத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது வேதம். அதன் பெயர் அனுதேயி. அனுதேயி என்றால் என்ன பொருள்? அதன் பயன் என்ன? நீங்கள் கேட்பது புரிகிறது.
அனுதேயி என்றால் ஜடப் பொருள் அல்ல. அது இயங்கும் உயிர் பொருள். மணப்பெண் மணமுடித்து புகுந்த வீட்டுக்கு செல்லும் போது கூடவே இந்த உயிர்ப் பொருளும் செல்லும். அவள் சொன்ன வேலைகளைச் செய்யும். அப்படி என்ன சீதனம் அது என யோசிக்கிறீர்களா?
அதாவது அனுதேயி என்றால் பின் தொடர்ந்து வந்து சொன்னதை செய்பவர். அதாவது இங்கே இன்னொரு பெண் . ஆமாம். பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.
மணப்பெண்ணோடு தோழி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்படும். இந்த சீதனப் பெண் தொடர்ந்து மணப் பெண்ணின் புகுந்த வீட்டில்தான் இருக்கவேண்டுமா? அவளுக்கென்று தனி வாழ்க்கை அமையாதா?
அதாவது அவளுக்குத் திருமணம் நடக்காதா? என்றெல்லாம் அந்த சீதனப் பெண் அனுதேயியை மையமாக வைத்து நாம் கவலைகளை கேள்விகளாக எழுப்பினால்.... அதற்கு வேதம் பதில் சொல்கிறது.
என்ன சொல்வது? அவளைப்பற்றி ஏன் யோசிக்கிறீர்கள்?
ARTICLE COLLECTED FROM SOURCE: திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.
பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
விழிப்புணர்வூட்டும்,அருமையான பதிவு
அலைக்கும் சலாம்! சகோ. ஹைதர்!
//ஒடியாடி மிளகாய் அரைச்சு
ஒன்பது சட்டி கறியாக்கி
பார்க்க வந்தன் என் மாமன்
பரிசம் போட்டான் என் மாமன்//
நிறைய நாட்டுப் பாடல்கள் கைவசம் இருக்கிறது போல.... பண்டைய தமிழ்க் கலாசாரமும் வரதட்சணைக்கு எதிராகவே இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ. வாஞ்சூர் பாய்!
//பெண்ணைப் பணம் கொடுத்துப் பரிசம் போட்டு மணந்துகொள்வது தமிழர் முறை. பரிசம் பணம் ஆணின் தந்தை தருவார், ஆணே தருவார். பரிசுப் பணத்தை முலைப் பணம் என்று இலக்கியங்கள் கூறும்.//
தமிழர்களின் கலாசாரப்படி பெண்ணுக்கு பொருள் கொடுத்தே முற்காலத்தில் திருமணம் முடிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பின்னால் வந்த ஆரிய படை எடுப்பினால் அவர்களின் வழக்கம் தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இதை எவ்வாறு களைவது என்பதே இப்போது நம்முன் உள்ள மிகப் பெரிய பிரச்னை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
வஅலைக்கும் சலாம் சகோ பேட்!
//அஸ்ஸலாமு அலைக்கும்
விழிப்புணர்வூட்டும்,அருமையான பதிவு//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
எதுக்கு பெண் ஆணுக்கு வரதட்சிணை கொடுக்கணும், ஆண் எதுக்கு பெண்ணுக்குக் வரதட்சிணை கொடுக்கணும்? ரெண்டு பேரும் கல்வி கத்துகிட்டு தன் சொந்தக் காலில நிக்கணும்னு எந்த மதமும் சொல்லாதோ?
இஸ்லாம் வலியுறுத்துவது ஆணின் மீதான வரதட்சிணைக் கொடுமை. இதில் பெருமை கொள்ள என்ன இருக்கு?
ரொம்ப முற்போக்குன்னா பெண்ணையும் சொந்தக் கால்ல நிக்கணும்னு அறிவுறுத்தட்டுமே?
//இஸ்லாம் வலியுறுத்துவது ஆணின் மீதான வரதட்சிணைக் கொடுமை. இதில் பெருமை கொள்ள என்ன இருக்கு?//
வசதியுடையவர்கள் தான் அதிகம் மஹராக கொடுப்பார்கள். வசதியில்லாத ஏழைகள் வெறும் 1000 ரூபாய் மஹரில் கூட திருமணம் முடித்திருக்கிறார்கள். இந்த தொகை பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தது. வசதி குறைந்த பெண்கள் அதிகம் மஹர் தொகையைக் கேட்பதில்லை.
//ரொம்ப முற்போக்குன்னா பெண்ணையும் சொந்தக் கால்ல நிக்கணும்னு அறிவுறுத்தட்டுமே?//
பெண்கள் இயற்கையாகவே பல சிரமங்களை வேலை இடத்தில் அனுபவிக்கிறார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் படும் துன்பங்களை முன்பு எனது பதிவிலேயே விளக்கியிருக்கிறேன். இஸ்லாத்தைப் பொறுத்தவரை உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் மனைவிக்கு தருபவனாக கணவனைப் பார்க்கிறது. இதில்தான் குடும்ப அமைதியும் உள்ளது.
**வசதியுடையவர்கள் தான் அதிகம் மஹராக கொடுப்பார்கள். வசதியில்லாத ஏழைகள் வெறும் 1000 ரூபாய் மஹரில் கூட திருமணம் முடித்திருக்கிறார்கள். இந்த தொகை பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தது. வசதி குறைந்த பெண்கள் அதிகம் மஹர் தொகையைக் கேட்பதில்லை.
**
==>
இஸ்லாமும் இந்த கொடுமையை வன்மையாக கண்டிக்கிறது. கண்டிப்பதோடு அல்லாமல் எதிர்மறையாக அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் மஹர் (அட்வான்ஸ் ஜீவனாம்சமாக) மாப்பிள்ளை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையையும் இடுகிறது. என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கும் எகிப்து நாட்டு ஹைதம் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் மஹருக்கான தொகை இன்னும் சேரவில்லை. தற்போது அவரது தந்தை,தமக்கை என்று பலரும் 50000ரியால் தலைக்கு ஒவ்வொருவராக கொடுத்து இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது.
<==
அப்புறம் இது என்ன? சவூதில ஆயிரமோ, ரெண்டாயிரமோ கேட்கிற புரிந்துணர்வுள்ள பெண்களே இல்லையோ? எல்லோருமே லட்சக்கணக்கில் மஹர் கேட்கும் கல் நெஞ்சக்காரர்களா?
//அப்புறம் இது என்ன? சவூதில ஆயிரமோ, ரெண்டாயிரமோ கேட்கிற புரிந்துணர்வுள்ள பெண்களே இல்லையோ? எல்லோருமே லட்சக்கணக்கில் மஹர் கேட்கும் கல் நெஞ்சக்காரர்களா?//
இது எனது நண்பர் ஹைதமும் அவரது குடும்பமும் செய்யும் தவறு. ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக வசதியான வீட்டுப் பெண்களை மணமுடிக்க சென்றால் அவர்களின் வசதிக்கேற்ப மஹர் தொகையும் கூடிக் கொண்டே செல்லும். ஏழைப் பெண்ணை மணம் முடிக்காதது நண்பர் ஹைதமின் தவறு. இங்கு எத்தனையோ பாலஸ்தீன பெண்கள் குறைந்த மஹருக்கு கிடைக்கிறார்கள். மனிதன் பகட்டுக்காக வாழ்பவன்தானே! எனவேதான் துன்பங்களையும் அனுபவிக்கிறான்.
//இங்கு எத்தனையோ பாலஸ்தீன பெண்கள் குறைந்த மஹருக்கு கிடைக்கிறார்கள். //
என்னங்க விலைக்கு வாங்கற மாதிரி சொல்றீங்க?
//
இது எனது நண்பர் ஹைதமும் அவரது குடும்பமும் செய்யும் தவறு. ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக வசதியான வீட்டுப் பெண்களை மணமுடிக்க சென்றால் அவர்களின் வசதிக்கேற்ப மஹர் தொகையும் கூடிக் கொண்டே செல்லும். ஏழைப் பெண்ணை மணம் முடிக்காதது நண்பர் ஹைதமின் தவறு.//
இது பத்தி அல்லா, குர் ஆன், ஹதீஸ்கள், குருமார்கள் ஏதும் அறிவுரைகள் சொல்லவில்லையா?
Post a Comment