'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, July 06, 2011
அரிசோனா(அமெரிக்க) மாநிலத்தின் புழுதிப் புயல்
6 July 2011 Last updated at 07:16 GMT Help
A big dust storm descended on the Phoenix area of Arizona on Tuesday, drastically reducing visibility and delaying flights.
The storm was part of the Arizona monsoon season, which typically starts in mid-June and lasts until the end of September.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
திருமணம் நிச்சயிக்கப்படும் போதே, விவாகரத்து மனுவும் தயாராகி விடுகிறது. அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அவசியமல்லாதது ஆகி வருகிறது.
பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, உறவினர்கள் வாழ்த்துடன் தான் வாழ்க்கையை இளம் தம்பதியர் துவக்குகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணமான அடுத்த நாளே சிலரிடம் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.பெரும்பாலான கணவன் - மனைவிகள் குடும்ப சொத்து, சம்பாத்தியம், வகிக்கும் பதவி ஆகியவற்றால், "ஈகோ' கொள்கின்றனர். இதனால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, பிரிகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் எப்போதும் கம்ப்யூட்டரே வாழ்க்கைத் துணை என நினைக்கின்றனர்.பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், கட்டிய கணவரையோ, மனைவியையோ கண்டு கொள்வதில்லை. இதனால், இருவருமே சட்டப்படி பிரிந்து கொள்ள கோர்ட்டை நாடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, "ஆண்மை குறைவு' விவாகரத்துக்கு அதிகளவு காரணமாக உள்ளது.
ஆனால், கோர்ட்டுக்கு வரும்போது, இது மறைக்கப்பட்டு, "கணவர் டார்ச்சர் தருகிறார்; சந்தேகப்படுகிறார்; வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்' என பதிவு செய்யப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிக்குடித்தனம் நடத்த கணவர் வர மறுக்கிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. தனிக்குடித்தனம் செல்லும் போது, இருவருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு, தகராறு இவற்றை தீர்க்க ஆலோசனை கூற பெரியவர்கள் இல்லாததும் விவாகரத்துக்கு முக்கிய காரணம்.விவாகரத்து வழக்கோடு, குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.
கணவரையோ, அவரது குடும்ப உறுப்பினரையோ பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டால் இந்த சட்டத்தை (தவறாக)பயன்படுத்திக் கொள்கின்றனர்.குடும்ப வழக்குகளை தீர்க்க, கோவையில் குடும்ப நல கோர்ட் உள்ளது. சார்பு நீதிமன்றங்கள், இலவச சட்ட மையத்தில் நடக்கும், "லோக்- அதாலத்'களிலும் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல் வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன.
கோவை குடும்ப கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் 10 முதல் 15 விவாகரத்து மனுக்கள் வருகின்றன. இவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தகுந்த முகாந்திரங்கள் இருக்கும் மூன்று முதல் ஐந்து மனுக்கள் மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாதம் 100 முதல் 120 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 687 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம். 108 பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இவை தவிர, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவும், இரண்டு ஆண்டுகள் மட்டும் பிரிந்து இருக்கவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சமீப காலமாக, கணவனும், மனைவியும் ஒருமித்த நிலையில் "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு கோர்ட்க்கு வருவது அதிகரித்துள்ளது. பதிவாகும் மொத்த வழக்குகளில் 25 சதவீதம் வழக்குகள் இந்த வகையில் உள்ளன.தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளை, ஒரே கோர்ட்டில் விசாரிப்பது தாமதத்துக்கு வழி வகுக்கிறது. இதனால், கோவையில் மேலும் ஒரு கோர்ட் அவசியம் என வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.- தினமலர்-07-07-2011
ஒரே கல்லூரியில் படிக்கும் ஒருவரின் மகனைவிட மகள் நல்ல மதிப்பெண் பெற்றுவந்தால் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக அவள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்காக அவளை பாராட்டுவார். இந்த பாராட்டால் மகனுக்கு குறைவு ஏற்பட்டு விடாது. இது மகன் மகள் என்ற அடிப்படையிலான பாராட்டு அல்ல. உழைப்பிற்கும் முயற்சிக்குமான பாராட்டு. இதை போன்ற ஒரு பாராட்டை குடும்ப பொறுப்பை சுமந்துக் கொண்ட ஆண் பெறுகிறான்.
இது ஆண் என்பதற்கான பாராட்டு - உயர்வு - அல்ல. அவன் பொறுப்பிற்கும் கடமைக்கும் கிடைக்க வேண்டிய பாராட்டாகும். 'தங்கள் சொத்துக்களிலிருந்து செலவு செய்வதால் ஆண் உயர்வு பெறுகிறான்' என்று உயர்வு பெறுவதற்குரிய காரணத்தை இறைவன் இங்கு தெளிவாக வரையறுத்துவிட்டதால் அந்த காரணத்திற்கு உட்படாத எவரும் அந்தப் பாராட்டை பெறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.
வாழ்க்கை - குடும்ப - பகிர்ந்தளிப்பில் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே அளவிளான ஆனால் வெவ்வேறான பணிகள் வெவ்வேறான இடங்களில் சுமத்தப்படுகின்றன. வீடு, அலுவலகம் என்று கணவனுக்கும் மனைவிக்கும் வேலை செய்யும் இடங்கள் மாறலாம். வேலையின் தன்மைகள் கூட மாறுபடலாம். ஆனால் இருவரும் உழைக்கிறார்கள் என்பது மட்டும் மாறுபடாதது. இவள் தன் சொந்த இடத்தில் உழைக்கிறாள். அதனால் கூலி என்ற எந்த சட்டமும் இங்கு இல்லை. அவன் அந்நிய இடத்தில் உழைக்கிறான். அதனால் அங்கு கூலி கடமையாகிறது. இஸ்லாம் இங்குதான் ஆண்கள் மீது கூடுதல் சுமையை வைக்கிறது.
உன்னைப் போன்றே உன் மனைவியும் உழைக்கிறாள், நீ உன் உழைப்பிற்கு கூலி பெற்றுவிடுகிறாய். உன் வட்டாரத்தில் உனக்காக உழைக்கும் உன் மனைவிக்கு கூலி இல்லை, நீ அவளுக்கு கூலி கொடுக்கவும் முடியாது ஏனெனில் நீங்கள் இருவரும் அந்நியரல்ல. அதனால் உங்கள் இருவருக்கும் மத்தியில் பிணைப்பு மேலும் வலுப் பெறுவதற்காக அவளது பராமறிப்பு பொறுப்பு முழுவதையும் நீ ஏற்றுக் கொள் அது உன்மீது கடமையும் கூட என்கிறது இஸ்லாம்.
கணவனைப் போன்றே வெளியில் சென்று வேலை செய்து சம்பாதிக்கும் தகுதி பெண்களுக்கும் உண்டு இஸ்லாம் இதை மறுக்கவில்லை. ஆனால் இஸ்லாம் அதை அவள் மீது கடமையாக்கவில்லை. ஏனெனில் இஸ்லாம் குடும்ப அமைப்பை மன குழப்பமற்ற ஒரே சீரான போக்கில் இயக்க ஆசைப்படுகிறது.
கணவனும் மனைவியும் வேலைக்கு போகும் போது இவர்கள் இருவரின் வேலைகளை முடிக்க இன்னொரு ஆள் தேவைப்படுகிறது. அதாவது இவர்களின் குடும்ப அமைப்பிற்கு சம்பந்தமில்லாத, கூலியை மட்டுமே பிரதானமாகக் கொண்ட ஒரு ஆள் வசம் இவர்களின் வேiலையை ஒப்படைக்கும் சூழல் ஏற்படுகிறது. இது குடும்பத்தில் குறிப்பாக குழந்தைகளின் உள்ளத்தில் - வாழ்வில் - பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி தாய் பற்றிய பாச பிணைப்பை துண்டித்து தாயிடமிருந்து குழந்தைகள் பெற வேண்டிய அரவணைப்பையும் மென்மையான மன ஓட்டத்தையும் இல்லாமலாக்கி வெறுமையை அவர்களின் மனங்களில் விதைத்து விடுகிறது. உளநல, குழந்தைகள் நல ஆய்வாளர்கள் அனைவருமே இந்த கருத்தை மொத்தமாக பிரதிபளிக்கிறார்கள்.
பொருள் முதல் வாதம் பேசுபவர்கள் மட்டுமே கூலியை அல்லது சம்பளத்தை மையமாகக் கொண்ட வேலையின் பக்கம் ஆண்களையும் பெண்களையும் பாகுபாடின்றி ஓட்டி செல்ல முனைவார்கள். இவர்களுக்கும் குடும்ப அமைப்பு பற்றிய அக்கறையெல்லாம் இருக்காது. அது எப்படியாவது இயங்கிவிட்டுப் போகட்டும் என்பது தான் இவர்களின் நிலைப்பாடு.
பொருள் முதல்வாதத்தை வாழ்வியல் ஆதாரத்துக்குரிய முதல் தகுதியாக இஸ்லாம் வைக்கவில்லை. வாழ்க்கைக்குரிய தேவைகளில் பொருளாதாரமும் ஒன்று என்ற கண்ணோட்டம் தான் இஸ்லாமிய பொருளியல் கண்ணோட்டமாகும். அதனால் தான் கணவன் மனைவி இருவரும் சேர்ந்த பொருள் திரட்ட வேண்டும் என்ற கொள்கையை இஸ்லாம் மொழியவில்லை. மன அமைதி தவழ வேண்டிய குடும்பம் என்ற பூங்காவிற்கு மனைவியை பொறுப்புதாரியாக்கி பொருள் திரட்டும் பொறுப்பை கணவனிடம் இஸ்லாம் ஒப்படைத்துள்ளது.
பெண்களுக்கு உழைக்கும் தகுதி இருந்தாலும் கணவன் கையால் கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் கூலியோ சம்பளமோ ஈடாகாது என்பது அவர்களின் மனநிலையாகும். அதாவது பெண்ணிய இயல்பாகும்.
குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத்தை திரட்ட வேண்டியுள்ளதால் ஆண்களுக்கு கூடுதல் கடமையும் உழைக்கும் தகுதியும் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. 'ஆண்களுக்கு ஒருபடி உயர்வு உண்டு' என்பது இந்த கருத்தோட்டத்தில் சொல்லப்பட்டதாகும்.
எனவே அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதும்
ஆணுக்கு ஒருபடி உயர்வு உண்டு என்பதும் முரண்பாடானவையல்ல என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளங்கட்டும்.
--நன்றி: எதிரொலி
இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
ஜூலை 08,2011
இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ? மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது.
இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது. பசுவின் சாணத்துக்கு (ஆண்டி - இன்பெக்ஷன்) குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது.
அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர். சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.
பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர், மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன் ? ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது. மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன் ? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார்.
மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ? நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி... கடவுள் ஒன்றுதான் ! இந்து மதம் ஒரு சனாதன தர்மம், சமதர்ம சமுதாயத்தையே அது சிருஷ்டித்தது என்பதற்கு இதுவும் ஒரு நிரூபணம்.
-Dina Malar
http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/
சரியான விளக்கத்துடன் வந்த கட்டுரை. பல சந்தேகங்கள் தீர்ந்தது. இவ்வளவு அருமையான பாட திட்டத்தை ஜெயலலிதா ஏன் எதிர்க்க வேண்டும்? கருணாநிதி கொண்டு வந்ததுதான் பிரச்னை என்றால் அவர் சம்பந்தப்பட்ட பாடங்களை நீக்கி விட்டு மற்றவற்றை வெளியிடலாமே!
அஸ்ஸலாமு அலைக்கும்
தயவு செய்து உங்களுக்கு நேரம் இருந்தால் எங்கள் ஊர் வலைப்பூ வாகிய Kadayanallur.org வந்து அதில் இந்த செங்கொடி யின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும். இந்த செங்கொடி என்பவரை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அவர் எங்க ஊர் காரர் ஆகையினால் இந்த தளத்தில் வந்து இஸ்லாத்தை தூற்றுகிறார்.
//அஸ்ஸலாமு அலைக்கும்
தயவு செய்து உங்களுக்கு நேரம் இருந்தால் எங்கள் ஊர் வலைப்பூ வாகிய Kadayanallur.org வந்து அதில் இந்த செங்கொடி யின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும். இந்த செங்கொடி என்பவரை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அவர் எங்க ஊர் காரர் ஆகையினால் இந்த தளத்தில் வந்து இஸ்லாத்தை தூற்றுகிறார்.//
வஅலைக்கும் சலாம்! சகோ பேட்!
செங்கொடியைப் பொறுத்த வரை நம்முடைய வாதங்களில் உள்ள நியாயத்தை ஒத்துக் கொள்ளாமல் தனது கருத்தையே திணிக்க முயற்ச்சிப்பவர். பரிணாமம சம்பந்தமாக சகோ ஆஷிக் அவர் தளத்தில் வைத்த கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. எனவே இவர்களைப் போன்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நமது பணியைச் செய்து கொண்டிருப்போம.
Post a Comment