'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, July 05, 2011
இஸ்லாம் அடிமைகளை நடத்திய விதம்!
'எனக்கு சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் பல நேரங்களில் பொய் சொல்கிறார்கள். கொடுத்த வேலையைச் செய்யாமல் ஏமாற்றுகிறார்கள். ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசுகிறார்கள்'
இது புகார் அல்ல. முகமது நபி அவர்களிடம் சந்தேகம் கேட்க வந்த ஒரு நபித் தோழர் கூறிய வார்த்தைகள்.
அடிமைகளுடன் தனக்குள்ள பிரச்னையை அவர் நபியிடம் எடுத்துக் கூறினார். தன்னுடைய அடிமைகளுடன் கடினமாக நடந்து கொள்வதால் அவர் அமைதியின்றி தவித்தார். அவர் முகமது நபியிடம தொடர்ந்தார்:
'அவர்களிடம் கடுமையாகப் பேச வேண்டி இருக்கிறது. சில சமயங்களில் வரம்பு மீறிய வார்த்தையையும் நான் கூறி விடுகின்றேன். கட்டுப் படுத்த முடியாத கோபம் வரும் போது அடிக்கவும் செய்வேன். நான் இப்படி நடந்து கொள்வது சரியா?”
ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் சந்திக்கும் இது போன்ற நிகழ்வுகள் அவரது மனதை பாதித்ததனால் முகமது நபியிடம் விளக்கம் கேட்க வந்திருக்கிறார். இதற்கொரு மாற்றம் வேண்டும் என்று கருதித்தான் அவர் நபியைக் காண வந்தார்.
இறைவனின் தூதர் அந்த தோழருக்கு பின் வருமாறு அறிவுரை கூறினார்கள்:
'நாளை மறுமையில் இறுதித் தீர்ப்பு நாளில் உங்களுக்கும் அடிமைகளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கணக்கெடுக்கப்படும். அடிமைகள் உங்களை ஏமாற்றி மோசடி செய்ததும், பொய் சொன்னதும், உங்களுக்கெதிராக வேலை செய்ததும், தராசின் தட்டில் வைக்கப்படும்.
தாங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும், அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்ததும் இன்னொரு தட்டில் வைக்கப்படும். இரண்டும் சமமாக இருந்தால் யாருக்கும் ஒன்றும் இல்லாமல் பிரச்னை சுமூகமாக தீரும்.
நீங்கள் அளித்த தண்டனை அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுத்து உங்களுக்குத் தரப்படும். தண்டனை அதிகம் என்றால் உங்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும்.'
அந்த நபித் தோழருக்கு அச்சம் தோன்றி விட்டது. அந்த இடத்தை விட்டகன்ற அவர் அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட இறைத் தூதர் அவர்கள் அவரிடம் சென்று கீழ்க் கண்ட இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
'மீண்டும் உயிர்த்தெழும் நாளில் நீதியின் தராசை நாம் முன்பு வைப்போம். யாரும் ஒரு சிறிது கூட அநீதம் செய்யப்பட மாட்டார்கள். கடுகு போல் ஒரு சிறிய நன்மை செய்திருந்தாலும் அன்று நாம் அதனை வெளியே கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நான் போதுமானவனாகவே இருக்கிறேன்.'
-குர்ஆன் 21:47
இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித் தோழர் பிரச்னைக்குரிய அடிமைகளை விடுதலை செய்வதே தனக்கும் அவர்களுக்கும் நல்லது என்று எண்ணலானார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
30. 'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.
Volume :1 Book :2
97. மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
"இதை எந்தப் பகரமும் இல்லாமல் உமக்கு நாம் வழங்கி விட்டோம். முன்னர் இதை விடச் சின்னப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு" என்று (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்டு வந்தவரிடம்) ஆமிர் கூறினார்.
Volume :1 Book :3
வேலை ஆட்கள் விஷயத்தில் இஸ்லாம் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்க ஒரு சில சவுதிகள் பணிப் பெண்களை நடத்தும் விதம் மிகவும் அருவறுக்கத்தக்கதாக உள்ளது. நம்மிலே கூட பலர் வேலையாட்களை நடத்தும் விதத்தில் நேர்மையாளர்களாக இருப்பதில்லை. ஐந்து வேளை தொழுகிறார்கள். நோன்பு வைக்கிறார்கள். ஆனால் வேலை ஆட்களை சரி சமமாக நடத்துவதில்லை. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பாதிப்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை.
இறைவனின் கேள்விகளுக்கு பயந்து நமக்கு கீழுள்ள வேலையாட்களை முடிந்த வரை சமமாக நடத்தும் மன வலிவை இறைவன் உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக!
டிஸ்கி: மேலே உள்ள படம் அன்றைய அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு அடிமைகளை நடத்தியது என்பதை விவரிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//வேலை ஆட்கள் விஷயத்தில் இஸ்லாம் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்க ஒரு சில சவுதிகள் பணிப் பெண்களை நடத்தும் விதம் மிகவும் அருவறுக்கத்தக்கதாக உள்ளது. நம்மிலே கூட பலர் வேலையாட்களை நடத்தும் விதத்தில் நேர்மையாளர்களாக இருப்பதில்லை. ஐந்து வேளை தொழுகிறார்கள். நோன்பு வைக்கிறார்கள். ஆனால் வேலை ஆட்களை சரி சமமாக நடத்துவதில்லை. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பாதிப்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. //
இதைத்தானே கரடியா கத்தி எனது இடுகைகளில் சொல்லவந்தேன், பின்னூட்டங்களில் என்ன வந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்... சுய ஒழுங்கங்கள் வருவதற்கு வளர்ப்பு, சூழல், கல்வி, பெற்றோர் இப்படி பல காரணிகளில் மதம் என்னை பொறுத்தவரையில் கடைசியில்தான் வருகிறது. என்னை சுற்றி உள்ள நூறு சதவீதத்தினர் ஒரு பிரச்னைக்கு அவர்களை பாதிக்கதமாதிரியான முடிவை எடுக்கிறார்களே தவிர, குரானை வைத்து அல்ல, அது ஆராதிப்பதர்க்கும், இக்பால் செல்வன் போன்றவர்களிடம் வாதிடுவதர்க்குமாக இருக்கிறது என்பதே எனது வாதம்.
ஒரு வேளை நபி (ஸல்) திரும்பி வந்து இஸ்லாமியத்தை போதிக்க விரும்பும் இடம், சிங்கப்பூர், அமெரிக்க, ஆஸ்திரேலியா , ஐரோப்பா என்றுதான் இருக்கும், காரணம் வாழ்வியல் நெறிமுறைகளை நம்மை விட அவர்கள் அதிகம் பின்பட்ட்ருகிரார்கள், மதத்தை சொல்லிகொடுப்பது மட்டும் தான் பாக்கி, இங்கே ஆசிய கண்டத்தில் இஸ்லாமியர்களை திருத்த்வதர்க்கே நேரம் போதாது.
//வேலை ஆட்கள் விஷயத்தில் இஸ்லாம் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்க ஒரு சில சவுதிகள் பணிப் பெண்களை நடத்தும் விதம் மிகவும் அருவறுக்கத்தக்கதாக உள்ளது.//
உண்மைதான், கை விட்டு எண்ணும் அளவில். சவுதியில் மட்டும் அல்ல தனிமையில் பெண்கள் எங்கு சிக்கினாலும் ஆண்களால் சூறையாட படுகின்றனர், அரபு தேசம் என்பதால் இதன் எண்ணிக்கை குறைவு.
பெண்களை வீட்டு வேலைக்கு செல்வதற்கு எகிப்து போன்ற நாடுகள் தடை விதித்து விட்டன.இதையே இலங்கை இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகள் செய்யுமானால்,பெண்களின் இந்த அவல நிலை குறையும்.
அல்லது பிரசாரத்தின் மூலன் வீட்டு வேலைக்கு செல்வோர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
//ஒரு வேளை நபி (ஸல்) திரும்பி வந்து இஸ்லாமியத்தை போதிக்க விரும்பும் இடம், சிங்கப்பூர், அமெரிக்க, ஆஸ்திரேலியா , ஐரோப்பா என்றுதான் இருக்கும், காரணம் வாழ்வியல் நெறிமுறைகளை நம்மை விட அவர்கள் அதிகம் பின்பட்ட்ருகிரார்கள், //
தன்னுடைய சுய லாபத்திற்காக இரண்டு லட்சத்திற்கும் மேலானா மனிதர்களை ஈராக் ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவிப்பது தான் வாழ்வியல் நெறிகளை அதிகமாக பின்பற்றுவதற்கு உதாரணமா?
இது அமெரிக்க ஐரோப்பா நாடுகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல, இந்த நாடுகளால் பாதிக்க படாத நாடுகளே உலகில் இல்லை எனலாம், அந்த அளவிற்கு இவர்களின் அட்டகாசம், பிற நாட்டு மக்களை கொன்று அதில் வரும் லாபத்தை வைத்து தன்னுடைய மக்களை சுக போகமாக வாழ வைப்பதே வாழ்வியல் நெறிமுறைகளை அதிகமாக பின்பற்றுவதற்கு உதாரணமா?
ஷர்புதீன்!
//இதைத்தானே கரடியா கத்தி எனது இடுகைகளில் சொல்லவந்தேன், பின்னூட்டங்களில் என்ன வந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்... சுய ஒழுங்கங்கள் வருவதற்கு வளர்ப்பு, சூழல், கல்வி, பெற்றோர் இப்படி பல காரணிகளில் மதம் என்னை பொறுத்தவரையில் கடைசியில்தான் வருகிறது.//
மனிதன் படைப்பிலேயே பலஹீனனாக படைக்கப்பட்டுள்ளான். நம்மிடம் உள்ள சைத்தான் நமக்கு பல தவறுகளை அழகாக்கிக் காட்டுகிறான். எங்கெல்லாம் தவறான நடவடிக்கை இருக்கிறதோ அதை நோக்கியே மனித மனம் ஈர்ப்படைகிறது. இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள சில சட்டதிட்டங்கள் நமக்கு தேவைப்படுகிறது. சிலர் சுயமாக தாங்களாகவே சட்டத்தை வகுத்துக் கொள்வர். பலர் இறைவன் கொடுத்த கட்டளையை பின்பற்றுகிறோம் என்று சொல்வர். இந்த இரண்டு சட்டங்களிலும் மனித குலத்துக்கு நன்மை பயக்கும் சட்டம் எது என்பதை சீர்தூக்கிப் பார்க்க கடமை பட்டுள்ளோம்.
நமது நாட்டை எடுத்துக் கொள்வோம்: மனிதர்கள் எவ்வளவுதான் கரடியாக கத்தினாலும் தீண்டாமையை சமூகத்திலிருந்து ஒழிக்க முடிகிறதா? படித்தால் எல்லாம் சரியாகி விடும் என்ற ஒரு வாதம் வைக்கப்பட்டது. இந்து மதத்தில் படித்தவர்களிடம்தான் சாதி வெறி அதிகமாக தலை தூக்கியிருக்கிறது. இணைய தொடர்பு உடையவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். எவ்வளவு முயற்சி செய்தும் பெரியாரால் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வர முடிந்ததா? இல்லை.
//என்னை சுற்றி உள்ள நூறு சதவீதத்தினர் ஒரு பிரச்னைக்கு அவர்களை பாதிக்கதமாதிரியான முடிவை எடுக்கிறார்களே தவிர, குரானை வைத்து அல்ல, அது ஆராதிப்பதர்க்கும், இக்பால் செல்வன் போன்றவர்களிடம் வாதிடுவதர்க்குமாக இருக்கிறது என்பதே எனது வாதம்.//
உங்களைச் சுற்றி மாத்திரமே பார்த்துக் கொண்டிருக்காமல் சற்று உலகத்தையும் பாருங்கள். அன்றைய அரபுலகமும் தற்போதய அரபுலகத்தையும் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள். குர்ஆனையே தனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்ட பல சவுதிகளை நான் அறிவேன். சில சவுதிகள் தவறு செய்கிறார்கள் என்றால் அது அந்த மனிதர்களின் தவறு. அதற்கு நாம் குர்ஆனை எப்படி குறை காண முடியும்?
http://suvanappiriyan.blogspot.com/2011/03/blog-post_21.html
இந்த பதிவையும் படித்துப் பாருங்கள். குர்ஆனின் சட்டத்தை அந்த அரபி பின்பற்றியிருக்கா விட்டால் ஒருவனின் வாழ்வே முடிந்து போயிருக்கும்.
நமக்கு தெரிந்து 25 வருடத்துக்கு முன்னால் தர்ஹா வணக்கமும் வரதட்சணை கொடுமையும் எந்த அளவு தலை விரித்தாடியது தமிழகத்தில் என்பது உங்களுக்கே தெரியும். குர்ஆன் ஹதீஸின் பிரசாரம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நடைபெறுவதன் மூலம் வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுத்த மணமகனை நான் அறிவேன். இவை அனைத்தும் குர்ஆனின் வழிகாட்டுதல் அல்லவா!
//ஒரு வேளை நபி (ஸல்) திரும்பி வந்து இஸ்லாமியத்தை போதிக்க விரும்பும் இடம், சிங்கப்பூர், அமெரிக்க, ஆஸ்திரேலியா , ஐரோப்பா என்றுதான் இருக்கும், காரணம் வாழ்வியல் நெறிமுறைகளை நம்மை விட அவர்கள் அதிகம் பின்பட்ட்ருகிரார்கள்,//
அதற்கு கார்பன் கூட்டாளியின் பின்னூட்டத்தைப் படித்துப் பார்க்கவும்.
கார்பன் கூட்டாளி!
//உண்மைதான், கை விட்டு எண்ணும் அளவில். சவுதியில் மட்டும் அல்ல தனிமையில் பெண்கள் எங்கு சிக்கினாலும் ஆண்களால் சூறையாட படுகின்றனர், அரபு தேசம் என்பதால் இதன் எண்ணிக்கை குறைவு.//
ஊடகங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் எதிரிகளாக இருப்பதால் இது போன்ற ஒன்றிரண்டு சம்பவங்கள் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றது. அரபுகள் இது போன்ற தவறுகள் செய்வதை முஸலிம்கள் அனைவரும் ஒருமித்து எதிர்க்கிறோம்.
ஆனால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கொலைகள் கற்பழிப்புகள் சாதாரணமாகி விட்டதால் அது ஊடகத்தினுள் வருவதில்லை. வீட்டு வேலைக்கு பெண்களை அனுப்புவதை தடை செய்தால் இந்த குற்றங்களும் தடுக்கப்படும். பெண்களை தனியாக வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதும் இஸ்லாமிய பார்வையில் தவறே! எனவெ தக்க துணையோடு பாதுகாப்போடு அல்லாது வீட்டு வேலைக்கு பெண்கள் வர வேண்டாம் என்பதே நமது விருப்பம்.
//பெண்களை வீட்டு வேலைக்கு செல்வதற்கு எகிப்து போன்ற நாடுகள் தடை விதித்து விட்டன.இதையே இலங்கை இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகள் செய்யுமானால்,பெண்களின் இந்த அவல நிலை குறையும்.
அல்லது பிரசாரத்தின் மூலன் வீட்டு வேலைக்கு செல்வோர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.//
சிறந்த ஆலோசனை.
//தன்னுடைய சுய லாபத்திற்காக இரண்டு லட்சத்திற்கும் மேலானா மனிதர்களை ஈராக் ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவிப்பது தான் வாழ்வியல் நெறிகளை அதிகமாக பின்பற்றுவதற்கு உதாரணமா?//
ஷர்புதீனுக்கு சரியாக விளக்கினீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!
தூத்துக்குடி,ஜூலை. 4 தூத்துக்குடி ஜோதிபாசுநகரை சேர்ந்தவர் வேல்ராஜ். மளிகை கடை வைத்துள்ளார். அங்குள்ள கருமாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகன் குணா என்ற குணசேகர் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம்வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை வழக்கம் போல் டீயூசனுக்கு செல்வதாக கூறி சென்றான். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர் டியூசன் சென்டருக்கு சென்று விசாரித்தனர். டியூசன் ஆசிரியர் குணசேகர் டியூசனுக்கு வரவில்லை என்று கூறியதால் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து குணசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தாளமுத்து நகர் போலீசில் வேல்ராஜ் புகார் செய்தார். போலீசாரும் வேல்ராஜை தேட ஆரம்பித்தனர்.
இந்தநிலையில் வேல்ராஜ் வீட்டின் அருகே உள்ள காளி கோவில் கிணற்றில் சிறுவன் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் குணசேகரின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் கிணற்றை பார்வையிட்டனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது குணசேகர் என்பது தெரியவந்தது.
பின்னர் கிணற்றில் இருந்து உடல் மீட்கப்பட்டு பார்த்த போது குணசேகர் கையில் வெட்டுக்காயம் இருந்தது. இதனால் குணசேகர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாக கருதி அப்பகுதி பொதுமக்கள் காளி கோவிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
மேலும் கோவிலுக்கு தீயும் வைத்தனர். . உடனே போலீசார் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வேல்ராஜ் நிர்வகித்து வரும் கருமாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் கும்பாபிஷேகம் நடந்தது. இது தொடர்பாக அவருக்கும், அவரது வீட்டருகே காளி கோவில் வைத்திருக்கும் ஆறுமுகம் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆறுமுகம், குணசேகரை நரபலி கொடுத்திருக்கலாம் என கருதி பொதுமக்கள் கோவிலை சூறையாடினர். காளி கோவில் நிர்வாகி ஆறுமுகம், அவரது மனைவி நாச்சியார், மகன்கள் லட்சுமணபாண்டியன்(வயது 20), ராமர்பாண்டியன்(20), திருமூர்த்தி(18) ஆகிய 5 பேரையும் சரமாரி தாக்கினர். உடனே போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலை சூறையாடிய பொதுமக்களை போலீசார் தடுத்ததனர். எனினும் நிலைமை கட்டுக்குள் வராததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நள்ளிரவு 1மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி. சோனல் சந்திரா விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று காலை பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குணசேகர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு காரணமான ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். குணசேகர் சாவு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவ மனைக்கு எதிரே புத்தர் சிலை இருந்தது - பழைய பதிவேடுகளிலும் அச் சிலை புத்தர் டிரஸ்டுக்குச் சொந்த மானது என்றே உள்ளது.
இப்பொழுது அது தலை வெட்டி முனியப்பன் கோவிலாக மாறிவிட்டது. அல்ல, அல்ல மாற்றப்பட்டது. பழைய ஆவணங்கள் கிழிக்கப்பட்டு, திருத்தப்பட்டுள்ளன என்கிறார் புத்திஸ்ட் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன்.
இந்தச் சிலையும் தலைவாசல் அருகே உள்ள நாராயணம்பாளையம் தியாகனூர் புத்தர் கோவில், ஆத்தூர் தாலுகா அலவலகத்தில் உள்ள புத்தர் சிலை எல்லாம் இந்த சொசைட்டிக்குச் சொந்தமானது என்றும் விவரித்துக் கூறுகிறார்.
இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரே இருந்த புத்தர் சிலையை தலைவெட்டி முனியப்பன் கோயில் என்று கூறி கோழி, கிடாவெட்டி அபிஷேகம் செய்கின்றனராம்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான பவுத்த விகாரங்களை இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் பார்ப்பனர்கள் - அரசர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு இந்த அடாத காரியத்தைச் செய்தனர். எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொல்லவில்லையா? இப் பொழுதும் ஆண்டுதோறும் மதுரையில் இந்த நாளுக் கென்று தனிக் கோயில்விழா நடத்தவில்லையா?
சாத்தன், சாஸ்தா, விநாயகர் என்பதெல்லாம் கவுதமப் புத்தருக்கான பெயர்கள். இந்தப் பெயர்களையே திரிபு செய்து சாத்தனார், அய்யனார் என்று கிராம தெய்வங் களாக்கினர் என்று ஆய்வாளர் மயிலை சீனிவெங்கட சாமி அவர்கள் பவுத்தமும் - தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலே புத்தரின் நின்ற திருக்கோலம் என்று ஆய்வு கள் வெளிவந்துள்ளன.
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில், கச்சீஸ்வரர் கோயில்கள் ஒரு காலத்தில் புத்தர் கோயில்களாகத் திகழ்ந்தன என்பதையும் ஆதாரத்துடன் கூறுகிறார் மயிலை சீனி. வெங்கடசாமி. இக்கோயில் உள்ள வீதி புத்தேரித் தெரு, ஏரி புத்தேரி என்று பெயர்களைத் தாங்கியுள்ளன.
இவ்வளவுப் பெரிய கோயில்களையெல்லாம் உரு மாற்றி இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் சேலத்தில் ஒரு புத்தர் சிலையை தலைவெட்டி முனியப்பனாக ஆக்கியதில் ஆச்சரியம் என்ன?
யாகத்தில் மாடுகளையும், ஆடுகளையும் பலியிட இருந்ததைத் தடுத்து உங்களுக் குச் சொர்க்கம் செல்ல ஆவல் இருந்தால், நீங்களேயல்லவா பலி பீடத்தில் கழுத்தை வைக்கவேண்டும். உங்களுக்குத் தேவையானது சொர்க்கமா? சோமபானமும், ஆடு மாடுகளின் இறைச்சியா? என்று கேட்ட புத்தரை தலை வெட்டி முனியப்பனாக்கி ஆடு, கோழிகளைப் பலி கொடுத்து அபிஷேகம் செய்யும் கொடுமையை என் சொல்ல!
கடித்த உடனேயே சாகடிக்கும் பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர் சூட்டியுள் ளனர் - பார்ப்பனர்களும் அப்படியே!
----------- மயிலாடன் அவர்கள் 6-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
//அன்றைய அரபுலகமும் தற்போதய அரபுலகத்தையும் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள். குர்ஆனையே தனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்ட பல சவுதிகளை நான் அறிவேன். சில சவுதிகள் தவறு செய்கிறார்கள் என்றால் அது அந்த மனிதர்களின் தவறு. அதற்கு நாம் குர்ஆனை எப்படி குறை காண முடியும்?//
மீண்டும் மீண்டும் சொல்கிறேன், மத நம்பிக்கைகளில் மிக நம்பிக்கை வைத்தவர்களே., தான் நம்பிக்கை வைத்த மதத்தின் சட்டத்தின் சட்ட விதிகளை பின்பற்றாமல் இருக்கும்போது., (உதாரணம் - பி.ஜே மற்றும் ஜவாஹிருல்ல சண்டைகள் ) என்னை போன்ற அரைகுறைகள் அப்படி இருப்பதில் என்ன தப்பு என்பதைத்தான் பி.ஜே க்களிடமே கேட்கிறேன்.
மிக மிக கடுமையான , என் வாழ்வின் மிக அதிகபடியான குடும்ப மன உளைச்சலில் கடந்த பத்து நாட்களாக இருக்கிறேன், இதற்க்கு தீர்வு கொண்டு வருபவர்களில் எவருக்கு இஸ்லாமிய சிந்தனைகள் வரவில்லை.,. குரானை கொண்டு அதனை தீர்க்கவும் ஆளில்லை., யோசிக்கப்படும் தீர்வுகளால் எல்லாம் பக்கத்து வீட்டுக்காரனின் ( மற்றும் சமூகம்) பார்வையில் என்னவாக நினைக்கப்படும் என்ற அளவிலேயே சிந்திக்கபடுகின்றன.
////உங்களைச் சுற்றி மாத்திரமே பார்த்துக் கொண்டிருக்காமல் சற்று உலகத்தையும் பாருங்கள். ////
நான் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் - காயல்பட்டினத்தில் வாழ்கிறேன், ஊரில் இருக்கும்போது லுங்கிதான் உடுத்துவேன், அரபு நாடுகள் போகும்போது லுங்கி உடுக்க கூடாது என்பது மட்டும் புரிகிறது!
நான் வாழ்கின்ற ஊரில் எனக்கு என்ன நியாயம் கற்பிக்கபடுதோ, அங்கேதான் நான் போராட முடியும்., அல்லாஹு அக்பர் என்று நரம்பு புடைக்க பொதுகூட்டத்தில் கத்திக்கொண்டு இருப்பவனின் பெற்றோர்களிடமும், மனைவியிடமும் கேட்டுபாருங்கள், அவர்களது யோக்கியம் புரியும்! இப்படி எழுதும் நான் ஒன்றும் யோக்கியன் இல்லை, மனைவியிடம் தண்ணீர் எடுத்த தா என்பதை எந்த மாதிரி கேட்டால் அவருக்கு பிடிக்கும் என்று யோசித்தாலும் , சில நேரங்களில் "நான்" ஜெயத்துவிடுகிறேன்.
இங்கே இஸ்லாமியர்களிடம் நான் காண்பது எல்லாம் அநேகம் போலிதான்., இவை அவர்களின் தவறு எனினும், வருசையில் நிற்காத பஸ் நிறுத்தத்தில் என் இளமையை பயன்படுத்தி சீட் பிடிப்பதை நிறுத்த என்னால் நிறுத்த முடியாது!
அந்த வெளிநாட்டு விமர்சனம் குறித்த விசயத்திருக்கு பதிலளிக்க மறந்துவிட்டேன்.,
நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் உண்மை!
அதுதான் சரியான பதிவ்ளும் கூட! ஏதோ வேகத்தில் தெரிந்ததை போல் எழுதிவிட்டேன்!
அன்புள்ள இஸ்லாமிய நண்பர்களுக்கு!
இனி எந்த சூழலிலும் இஸ்லாமியம் குறித்தோ, அல்லது இஸ்லாமியர்களிடம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எந்த ரூபத்திலும் இஸ்லாமிய சம்பந்த பட்ட பேச்சுக்களை பேசக்கூடாது, எழுத கூடாது என்று கடந்த ஜூன் 28 அன்று முடிவு எடுத்துதான் அதன் பின் நான் கண்ட இடுக்கைகளை படிப்பதும், கமெண்டுகள் என்னவென்று படிப்பதுமாக "திருத்தி " கொண்டிருந்தேன்!
உங்களது இந்த இடுக்கை என் சொந்த வாழ்வின் நிகழ்ந்த ஒரு கோப சம்பவத்தில் சம்பந்தம் இருப்பதாக தோன்றியதால் ஏதோ கமென்ட் இட்டுவிட்டேன்., அவைகளை அழிக்கலாம் என்றுதான் நினைத்தேன், வேண்டாம் என்று விட்டுவிட்டேன்., இப்பொழுதும் காலம் கெட்டுவிடவில்லை என்றுதான் இன்றில் இருந்தாவது அதனை கடைபிடிப்போம் என்று கடைசி கமெண்டாக இது யுர்க்கட்டும் என்று சபையிலேயே தெரிவிக்கிறேன்.
எல்லோருக்கும் நன்றி!
சகோ ஷர்புதீன்!
//மிக மிக கடுமையான , என் வாழ்வின் மிக அதிகபடியான குடும்ப மன உளைச்சலில் கடந்த பத்து நாட்களாக இருக்கிறேன், இதற்க்கு தீர்வு கொண்டு வருபவர்களில் எவருக்கு இஸ்லாமிய சிந்தனைகள் வரவில்லை.,. குரானை கொண்டு அதனை தீர்க்கவும் ஆளில்லை., யோசிக்கப்படும் தீர்வுகளால் எல்லாம் பக்கத்து வீட்டுக்காரனின் ( மற்றும் சமூகம்) பார்வையில் என்னவாக நினைக்கப்படும் என்ற அளவிலேயே சிந்திக்கபடுகின்றன.//
ரொம்பவும் குழம்பியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிரச்னை யாருக்குத்தான் இல்லை. சிலருக்கு பணம், சிலருக்கு சொந்த பந்தங்கள், சிலருக்கு பணி சய்யும் இடங்கள், சிலருக்கு பின் பற்றும் கொள்கைகள் என எங்கு திரும்பினாலும் பிரச்னைகள்தான். அப்படி பிரச்னைகள் இல்லா விட்டாலும் வாழ்வு சுகிக்காது நண்பரே. நிழலின் அருமை வெயிலில் நிற்கும் போது நாம் உணருவதில்லையா? இது போன்ற நேரங்களில் இறைவன் கூறும் ஒரு வழியை பின் பற்றுங்கள்.
'நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்து தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.'
-குர்ஆன் 2:277
மேற்கண்ட இறை கட்டளையை வாழ்வில் செயல்படுத்திப் பாருங்கள். முதலில் தொழுகையை விடாமல் தொழ முயற்ச்சி செய்யுங்கள். எல்லா பிரச்னைகளும் விதியின் படி நமக்கு முன்பு விதிக்கப்பட்டதே நடந்துள்ளது. இனி நடக்கப் போவதைப் பற்றி நல்லதையே நினைத்து இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள். மன பாரம் குறையும். தெளிவு பிறக்கும். ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் நின்று கொண்டிருந்தால் கரை சேருவது சிரமம்.
//(உதாரணம் - பி.ஜே மற்றும் ஜவாஹிருல்ல சண்டைகள் )//
//இங்கே இஸ்லாமியர்களிடம் நான் காண்பது எல்லாம் அநேகம் போலிதான்.,//
அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனையை இறைவனிடம் அவர்கள் அடைந்து கொள்வார்கள். ஒருவர் சொல்லும் நல்ல விஷயங்களை நம் அறிவுக்கும் குர்ஆனுக்கு மாற்றமில்லாமலும் இருந்தால் எடுத்துக் கொள்கிறோம். அதில் தவறும் பொழுது யாராக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுகிறோம். இந்த நிலை எடுத்தால் எந்த குழப்பமும் இல்லை.
//மிக மிக கடுமையான , என் வாழ்வின் மிக அதிகபடியான குடும்ப மன உளைச்சலில் கடந்த பத்து நாட்களாக இருக்கிறேன்,//
இறைவனிடம் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். ஐந்து நேரத் தொழுகையையும் இன்றிலிருந்து தொடருங்கள்.
//ஏதோ வேகத்தில் தெரிந்ததை போல் எழுதிவிட்டேன்!//
//இப்பொழுதும் காலம் கெட்டுவிடவில்லை என்றுதான் இன்றில் இருந்தாவது அதனை கடைபிடிப்போம் என்று கடைசி கமெண்டாக இது யுர்க்கட்டும் என்று சபையிலேயே தெரிவிக்கிறேன்.//
'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க!இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
-குர்ஆன் 13:28
(சேலம் அரசு மருத்துவ மனைக்கு எதிரே புத்தர் சிலை இருந்தது - பழைய பதிவேடுகளிலும் அச் சிலை புத்தர் டிரஸ்டுக்குச் சொந்த மானது என்றே உள்ளது..............)
அப்படியே இஸ்லாமியர்களால் கொள்ளையடிக்கப்பட்ட இந்து கோவில்களின் சொத்து விபரங்கள், இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட இந்துக்கள் மற்றும் இந்து கோவில்களின் விபரங்கள் போன்றவற்றையும் சேகரித்து தந்தீர்கள் என்றால் கொஞ்சம் பொது அறிவுவளரும்
Post a Comment