Followers

Sunday, July 31, 2011

ரமலானை வரவேற்போம்!





ரமலானை வரவேற்போம்!

ஆண்டான் - அடிமை, தலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன், கருப்பன்- சிவப்பன் என்ற அடிமை விலங்கை உடைத்தெறிந்து ஆதமின் மக்கள் அனைவரும் சமமே என்று முழங்கிய திருமறைக் குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

பெண் சிசுவை உயிருடன் புதைத்து, பெண் இனத்திற்கு ஆன்மா உண்டா ? என்று ஆய்வுக்குட்படுத்திய பெண்ணடிமைத் தனத்தை உடைத்தெறிந்து ஆணும் - பெண்ணும் ஓரினமே என்று முழங்கிய நீதமிகு குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்து மனிதனை மனிதனாக வாழச் செய்ய நேர்வழிக் காட்டிய மகத்துவமிக்க குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் நெருங்கி விட்டது.

நிரந்தர மறுமை வாழ்வின் இன்பத்தை மறந்து நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு மறுமை வாழ்வின் இன்பத்தை நிணைவூட்ட நெருங்கி விட்டது ரமளான் மாதம்.

கல் நெஞ்சை கரையச் செய்து இறக்க குணத்தை வளரச் செய்த ஈகை மிகு மாதம் நெருங்கி விட்டது.

பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகள் குவிக்கப்படும் பாக்கியமிக்க மாதம் நெருங்கி விட்டது.

நரக வாயில்கள் பூட்டப்பட்டு சுவன வாயில்கள் திறக்கப்படும் நன்மையின் மாதம் நெருங்கிவிட்டது.

அமல்களின் வாசல்கள் திறக்கப்படும் அருள் மிகு மாதம் நெருங்கி விட்டது.

அருள்மிகு மாதத்தில் அமல்கள் அதிகம் செய்து அளவற்ற அருளாலனின் நிகரற்ற அன்பை அடைந்து கொள்வோம் வாருங்கள்.


சவுதியைப் பொறுத்த வரையில் ரமலானை மிகச் சிறப்பாக வரவேற்பார்கள். வேலை நேரம் 6 மணி நேரமாக குறைக்கப்படும். சில வேலை இடங்களில் இரவு வேலை மாத்திரமே! எங்கள் அலுவலகத்தைப் பொறுத்த வரை இரவு தொழுகை முடிந்தவுடன் 10 மணிக்கு வேலை ஆரம்பித்தால் காலை 4 மணி வரை வேலை தொடரும். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு காலை தொழுகையை முடிப்போம். அதன் பிறகு நீண்ட ஒரு தூக்கம். 11 மணிக்கு எழுந்து குளித்து விட்டு மதிய தொழுகை. சிறிது நேரம் இணையத்தில் காரசார விவாதம். அதன் பிறகு ஒரு சிறிய தூக்கம். பிறகு மாலை நேர தொழுகைக்கு பிறகு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் என்று ஒரு மாதம் போவதே தெரியாது.

சிலர் பள்ளிக்கு சென்றும் நோன்பு திறப்பார்கள். அங்கும் அரசு செலவிலும் சில தனியார் கம்பெனிகளும் நோன்பு திறக்கும் ஏற்பாடுகளை அனைவருக்கும் இலவசமாக செய்து கொடுப்பார்கள். மொத்தத்தில் ரமலான் வந்து விட்டால் சவுதியில் உள்ளவர்களின் வாழ்க்கை முறையே மாறி விடும்.

நோன்பின் சட்டங்களை அறிய இங்கு செல்லவும்

10 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புள்ள சகோ.சுவனப்பிரியன்..!

இவ்வருட புனித ரமலானின்முதல் நோன்பினை எதிர் நோக்கியிருக்கும் தங்களுக்கும்...
அனைத்துலக முஸ்லிம் சகோதர பெருமக்களுக்கும்...
இந்த அருட்கொடை மாதத்தில் அதிக நல்லமல்கள் செய்து பன்மடங்கு நன்மைகளை அல்லாஹ்விடம் டெபாசிட் செய்துகொள்ள...
எனது இதயங்கனிந்த
நல்வாழ்த்துக்கள்..!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//தங்களுக்கும்...
அனைத்துலக முஸ்லிம் சகோதர பெருமக்களுக்கும்...
இந்த அருட்கொடை மாதத்தில் அதிக நல்லமல்கள் செய்து பன்மடங்கு நன்மைகளை அல்லாஹ்விடம் டெபாசிட் செய்துகொள்ள...
எனது இதயங்கனிந்த
நல்வாழ்த்துக்கள்..!//

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் மற்றும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//பிற மதத்தினர் “கடவுளக்கு நான்கு கைகள் உண்டு,கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்’ என்று கருதினால் உங்களுக்கு என்ன பிரச்சினை?
எதற்கு அதை மறுக்க வேண்டும் ? அவர்கள் கும்பிட்டு போகிறார்கள் என்று சகஜமாக அமைதியாக இருக்க வேண்டியதுதானே!//

மலர் மன்னனின் இந்த பதிவின் நோக்கம் என்ன? இந்து மதத்தின் தொன்மை புரியாமல் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் இந்தியாவில் இந்து மதத்திலிருந்து வெளியேறி விட்டனர். எனவே அவர்களுக்கு இந்து மதத்தின் உண்மையை விளக்கி திரும்பவும் எங்களை இந்துக்களாக மாற்ற வேண்டும் என்பதே திரு மலர் மன்னனின் பதிவின் சாரம். நல்ல முயற்சிதான்.

அதே சமயம் நான் திரும்பவும் இந்து மதத்துக்குள் நுழைய வேண்டுமானால் அதன் கடவுள் தன்மை: வேதத்தின் உண்மை: வழிபாட்டின் தெளிவு போன்றவற்றில் இஸ்லாத்தைப் போன்ற தெளிவோ அல்லது இஸ்லாத்தை விட சிறந்த ஒரு தெளிவை இந்து மதம் வழங்கினால்தான் என்னால் பழைய மதத்தில் நுழைய முடியும். எனவே அந்த மதத்தில் எனக்குத் தெரியும் முரண்பாடுகளை பட்டியலிட்டால்தான் ஒரு தெளிவு எனக்குள் பிறக்கும். எனவேதான் இந்து மக்களின் வழிபாட்டு முறையைப் பற்றிய எனது கேள்வியை வைக்கிறேன்.

//இஸ்லாமியர்கள் மெக்கா இருக்கும் திசையை நோக்கி தொழுகின்றனர், இதை உலகில் யாரவாது மறுக்கிறார்களா? கடவுள் அந்த திசையில் மட்டும்தான், அந்த இடத்தில் மட்டும் தான் இருக்கிறாரா என்று கேட்கிறார்களா? நீங்கள் எப்படிக் கும்பிட்டாலும் பிறர் அதை வெறுக்கவோ, மறுக்கவோ இல்லை.//

//2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

இதற்கு இறைவனே குர்ஆனில் அழகாக பதிலளிக்கிறான். கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ முகத்தை திருப்பி தொழுவதால் எந்த புண்ணியமும் இல்லை. புண்ணியம் என்பது சொந்தங்களை நேசிப்பது: ஏழைகளுக்கு உதவுவது: வழிப்போக்கர்கள், யாசிப்பவர்கள் போன்ற தேவையுடையவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தர்மங்களை செய்தல்: தூதர்களை நம்புதல்: வானவர்களை நம்புதல்: மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவைகளே புண்ணியம் என்கிறான் இறைவன். ஒருவன் மேற்கு நோக்கி ஐந்து வேளை விடாது தொழுது வந்து மேலே கூறிய எந்த நல்ல அமல்களையும் செய்யவில்லை என்றால் அவன் தொழுது ஒரு புண்ணியமும் இல்லை என்கிறான் இறைவன். அதாவது மனிதனுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் வணக்கமாகும் என்கிறான் இறைவன்.

Rabbani said...

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரமலான் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

Assalamu Alaikkum brother,
I dont see you active nowadays. Is it because of Ramadhan?

Take care.
Shab

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்! தற்போது இரண்டு மாத விடுப்பில் தமிழகம் வந்துள்ளேன். எனவே பதிவுகள் வர தாமதமாகும்.

என்னை அலை பேசியில் தொடர்பு கொள்ள 9942928126.

வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் said...

ரமலான் வாழ்த்துக்கள் சகோ .நன்றி பகிர்வுக்கு .......

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 4

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்