Followers

Showing posts with label மூடப்பழக்கங்கள். Show all posts
Showing posts with label மூடப்பழக்கங்கள். Show all posts

Friday, January 08, 2016

எச்சில் இலையில் புரண்டால் நோய் தீர்ந்து விடுமா?



கர்நாடகாவில் பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு கோவில் இது.

இந்த கோவிலின் சிறப்பம்சம்... பிராமணர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலை மீது பிற ஜாதியினர் படுத்து உருண்டால் அவர்களுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் வராது என்று இந்த கோவிலை நிர்வகிக்கும் பிராமணர்கள் எழுதி வைத்துள்ள ஐதீகமாம். பிராமணர் அல்லாத பிற ஜாதியினர் வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வந்து எச்சில் இலை மீது படுத்து உருண்டு விட்டு செல்கிறார்கள்.

இதை தவறு என்று விளங்காமல் உலகில் எவ்வளவு பெரிய படிப்பை நீ படித்து இருந்தாலும் நீ ஒரு முட்டாளே. நாங்கள் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ள கூடிய எந்த இந்துத்வா அமைப்பும் இதை கண்டிக்காது. காரணம் இது பிராமணர் நலன் சார்ந்த விஷயம்.

இந்த கொடுமையை, கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் பகுத்தறிவுவாதி மட்டும் தான் கண்டிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆறறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனும் இதை கண்டிக்க வேண்டும்.

- அருண்குமார்

-------------------------------------------------

சுய மரியாதையுடைய இந்துக்கள் இது போன்ற பழக்கங்களால் வெறுப்புற்று இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இதனை பார்த்து வெறுப்புற்ற இந்துத்வாவினர் இஸ்லாமியரின் மீது வன்முறையை ஏவுகின்றனர்.

இந்துத்வாவாதியினரே! உங்கள் மதத்தில் உள்ள குறைகளை களைந்து விட்டாலே மத மாற்றங்களை தடுத்து விடலாம். ஆனால் அதனை செய்ய மாட்டீர்கள். ஏனெனில் காலாகாலத்துக்கும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டுமென்பதே பார்பனியத்தின் நோக்கம். இந்த நோக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மதமாற்றங்களை உங்களால் தடுக்க முடியாது.

Tuesday, September 08, 2015

இந்துக்களின் கடவுள் கொள்கை பற்றி ஒரு அலசல்!

இந்துக்களின் கடவுள் கொள்கை பற்றி ஒரு அலசல்!

//ஒரு இந்துவாகப்பட்டவர், எச்சமயத்தவர் கருத்தையும் — அது உகந்ததாக இருந்தால் ஏற்றுக்கொள்வார். சமயத்தை நோக்கமாட்டார். அவரைப் பொதுச்சமயத்தார் என்று முலாம் பூசவும் மாட்டார்.
அப்படி நோக்கினால் — வேளாங்கண்ணிக்கோ, நாகூர் தர்க்காவுக்கோ இந்துக்கள் செல்ல மாட்டார்கள்.
— சந்த கபீர், ஷீரடி சாயிபாபா போன்றவர்கள் இந்துக்களால் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.//

அய்யா அரிசோனரே! இந்துக்களாகிய உங்களுக்கு ஒரு தீர்க்கமான கடவுள் கொள்கை இல்லாததால் கண்ட இடத்திலும் கையை தூக்கி கும்பிட்டுச் செல்கிறீர்கள்.தாங்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த கல்வி என்னும் பகுத்தறிவை வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.சரியான உண்மையானா ஒரே கடவுளை அடையாளம் காண உங்கள் பகுத்தறிவு தவறியதால், வேளாங்கன்னி,நாகூர் என்று ஓடுகிறீர்கள்.எம்மதமும் சம்மதம்,எல்லா நதிகளும் முடிவில் கடலுக்கே செல்கின்றன என்ற முரண்பாடான கொள்கைகளை சரி காண்கிறீர்கள்.

ஓர் இறைவனை வணங்குவதும் இந்துமதம், பல தெய்வங்களை வணங்குவதும் இந்து மதம்,உருவத்தை வணங்குவதும்,அருவத்தை வணங்குவதும் இந்து மதம்.தெய்வமே இல்லை எனும் நாஸ்திகனும் இந்துதான்.அழியக்கூடிய பலவீனமான மனிதர்களுக்கு தேவைப்படும் மனைவி,குடும்ப சுகம்,மக்கள் செல்வம் அனைத்தையும் எல்லாம் வல்ல கடவுள்களிடமும் காண முடிகிறது.படைத்தவனுக்கும் படைப்பினங்களும் எந்த வேறுபாடும் இல்லை.செத்து மடியும் ஜென்மங்களும் ,என்றும் நித்திய ஜீவிதமாக இருக்கக்கூடிய சிருஷ்டி கர்த்தாவும் ஒன்றாக இருக்க முடியுமா?உங்களுக்கு எல்லாமே ஒன்று.ஆம்! பகுத்தறிவுக்கு விடுதலை கொடுத்து விட்டால் இது சாத்தியமே!

//பலமுறை சிவபெருமான் பெயர் குறிப்பிடப்படும் திருமந்திரத்தில் கடவுள் பெயர், குறிப்பிடப்படவில்லை என்னும் நீங்கள் திருமந்திரத்தையே படிக்கவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது.//

அய்யா அரிசோனரே! தாங்கள் சைவம் என்ற ஒரு சமயத்தை திருமூலர் பேசுவதாக கூறுகிறீர்கள்.ஆனால் திருமூலர் ஒரு சமயம் நன்று மற்றது தீது என்கிற வாதத்தை “மாய மனிதர் மயக்க மதுமொழி” என்கிறார். சமயங்களின் அடிப்படையில் பேசுபவர்கள் இறைவனை உள்ளவாறு உணர்ந்தவர் அல்லர். இறைவன் சமயங்களுக்கு அப்பாற்பட்டவன். ஆகவே அறுசமயங்களால் முடிவான பொருள் என்று கூறப்படும் தன்மை இல்லாதவன், இதைப்பற்றி நாம் ஆராயும்பொழுது கிடைக்கும் தெளிவு நமக்கு, நிலையான வீட்டின்பத்தை அளிக்கும்.

“ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே” (திருமந்திரம் – 1533)

சமயங்களின் நோக்கம் முடிவான பரம்பொருளை அடையும் வழியைத் தொட்டுக் காட்டுவதுதான். அதற்கு மாறாக சமயவாதிகள் தத்தம், சமயங்களே சிறந்தது என்றும் மற்றவை தாழ்ந்தது என்றும் கூறுவார்களேயானால் அவர்கள் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயைப் போல் இருப்பர் என்று கூறுகிறது நீங்கள் படித்த திருமந்திரம்.

“ஒன்றது பேரூர் வழியா றதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையத் தார்களே”. (திருமந்திரம் – 1558)

ஆகவே,திருமூலரை சைவராக்கி நீங்கள் குன்று குரைத்தெழு நாயாக வேண்டாம்.

-ஷாலி





Sunday, May 17, 2015

தொப்பி போட்டு தொழுதால் கண்ணியமாக இருக்குமே!










சில நாட்களுக்கு முன் ஃபஜ்ர் (காலை நேர தொழுகை) தொழுகைக்கு சுன்னத் ஜமாத் பள்ளிக்கு தொழச் சென்றேன். அந்த பள்ளியில் சுன்னத் தொழுது கொண்டிருந்தேன். தற்காலிகமாக தொழ வைக்க வந்துள்ள இமாம் எனது அருகில் வந்து அவரும் சுன்னத் தொழுகை தொழுதார். தொழுது முடித்தவுடன் என்னிடம்....

'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றார்....

'வஅலைக்கும் சலாம்' என்று பதிலளித்தேன். உடன் அவர் என்னிடம்

'தொப்பி போட்டு ஏன் நீங்கள் தொழுவதில்லை?' என்று கேட்டார்.

'தொப்பி போட்டுத்தான் தொழ வேண்டும் என்று மார்க்க சட்டம் ஏதும் இருக்கிறதா?' என்றேன்.

'அப்படி ஏதும் இல்லை'

'குர்ஆன் ஹதீஸில் இதற்கு ஆதாரம் தர உங்களால் முடியுமா?'

'ஆதாரம் இல்லைதான். ஆனால் பார்க்க கண்ணியமாக இருக்குமே... உலமாக்கள் தொப்பி போடுதல் அவசியம் என்று சொல்கிறார்களே'

'எது கண்ணியம் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் சொல்ல வேண்டும். உலமாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் ஆகி விடாது. இதே உலமாக்கள்தான் தர்ஹா வணக்கம், கத்தம், கந்தூரி, மௌலூது, சலாதுன் நாரியா என்று மார்க்கம் சொல்லாததை எல்லாம் மார்க்கமாக ஆக்கி வைத்திருந்தனர்.'

'அதெல்லாம் தவறுதான். அதனை சரி என்று நான் சொல்லவில்லையே'

'நீங்கள் குறிப்பிடும் அந்த பெரிய ஆலிம்களிடம் என்றாவது இதெல்லாம் தவறு என்று என்னிடம் கேட்டது போல் கேட்டிருக்கிறீர்களா?'

எனது வரிசையான கேள்விகளால் நிலை குலைந்த அந்த ஆலிம் பதில் என்ன சொல்வது என்று திகைத்தார். அதற்குள் கடமையான தொழுகைக்கான நேரம் வரவே தொழ வைக்க அவர் எழுந்து சென்று விட்டார். நானும் அவரை பின் பற்றி தொழ தயாரானேன்.

இஸ்லாம் சொல்லாத இந்த தொப்பி அணியும் முறையை யார் மார்க்கத்தில் புகுத்தியதோ தெரியவில்லை. யூதர்களுக்கு தொப்பி அணிவது கடமை. பள்ளிக்கு அவர்கள் வரும் போது அவசியம் தொப்பியுடன்தான் இருப்பார்கள். கிருத்தவர்களின் போப் ஆண்டவரும் அவசியம் தொப்பி அணிந்திருப்பர். யூத கிருத்தவ கலாசாரமான இந்த தொப்பி அணியும் முறையை இஸ்லாத்திலும் புகுத்தி 'தொப்பி அவசியம் அணிந்து தொழுங்கள்' என்று சில பள்ளிகளில் போர்டு வைக்கும் நிலைக்கு சென்றுள்ளார்கள். அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளிகளிலும் ஒரு அட்டைப் பெட்டியில் பிளாஸ்டிக்கால் ஆன தொப்பிகள் வைத்திருப்பர். அதனை வேண்டா வெறுப்பாக சிலர் போட்டுக் கொள்வர். தொழுகையில் நெற்றியை தலையில் வைக்கும் போது அந்த தொப்பியானது பலரது தலையில் இருக்காமல் நழுவி விழுந்து விடுகிறது. அதனை எடுத்து திரும்பவும் போட்டுக் கொள்வார்கள். இது பல முறை நடைபெறும். எதற்கு இந்த வேண்டாத கட்டாய தொப்பி அணியும் முறை? ஹதீஸிலோ குர்ஆனிலோ 'தொப்பி' என்ற வார்த்தையை எங்குமே காண முடியாது. நபிகள் நாயகம் வலியுறுத்தாத ஒரு பழக்கத்தை நாம் எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும்?

'யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் நமக்கு அறிவுறுத்தியிருக்க யூதர்களின் பழக்கமான தொப்பி அணியும் முறையை இனியும் கட்டாயப்படுத்துவது சரியாகுமா? என்று யோசிக்க வேண்டும்.

அரபு நாடுகளில் கடும் பனி, கடும் வெயில், பாலைவனப் புயல் போன்ற வற்றிலிருந்து தங்கள் தலையைக் காத்துக் கொள்ள தொப்பி அணிந்து அதற்கு மேல் துண்டையும் சுற்றி கட்டிக் கொள்வர். அது அரபு நாடுகளுக்கு சரி. அது அரபு கலாசாரம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அதனையே தமிழகத்திலும் கடை பிடிக்கச் சொல்வது அதனை கட்டாயப்படுத்துவது என்பது மார்க்க அறிவின்மையே ஆகும்.

தற்போது இந்த தொப்பியானது விஜயகாந்த், மு க ஸ்டாலின் போன்றோர் அணிந்து கொண்டு நோன்பு கஞ்சி குடிப்பதற்கும் ஓட்டு அறுவடை செய்வதற்கும் சினிமாவில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கு ஒரு அடையாளமாகவும் தான் பயன்படுகிறது :-)

Sunday, May 03, 2015

பாகிஸ்தான் மாட்டுக் கறியை மட்டும் உதவியாக தந்ததா?





பாகிஸ்தான் அரசு நேபாளத்தக்கு அனுப்பப்பட்ட உதவிப் பொருட்களில் மாட்டுக் கறியும் கலந்து இருந்ததாக இந்திய பத்திரிக்கைகள் குற்றம் சாட்டியிருந்தன. இதனை மறுத்து கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் உயர் அதிகாரி தஸ்னிம் ஆலம் தனது மறுப்புரையில் 'இந்திய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை உதவி வழங்குதலிலும் ஏற்படுத்தியுள்ளன. பலதரப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் 'பீஃப் மசாலா'. அந்த பாக்கெட்டின் மேல் தெளிவாக 'பீஃப் மசாலா' என்றும் குறிப்பிட்டிருந்தோம். நாங்கள் அனுப்பிய உணவுப் பொருட்கள் மிகவும் ருசியாக இருந்ததாகவும் மேற் கொண்டு உதவியும் தேவைப்படுவதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்து இருக்க தேவையற்ற சர்ச்சையை இந்திய ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன' என்று வருத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சார்பில் அனுப்பட்ட ஒவ்வொரு உணவுப் பட்டியலில், 22 வகையான சாப்பிடத்தயாரான உணவு வகைகள் இருந்தன. அதில் அரிசி, உணவு, கோதுமை, ரொட்டி, பிரட், ஜாம், பால், தயிர், பருப்பு, கேசரி, உள்ளிட்ட பலவகையான சிறிய பாக்கெட்கள் இருந்தன, அதில் ஒன்று தான் 'பீஃப்' மசாலா. மேற்படி உணவுப் பட்டியலில், தேவையானதை சாப்பிடவும் பிடிக்காததை தவிர்ந்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாக்கெட்டின் மீதும் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் இது இன்ன பொருள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியை சாப்பிடுவார்களோ அதேப்போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டி திருவிழா நடத்துவார்கள்.

உணவுக் கிடைக்காமல் உயிர் வாழவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான நேரத்திலும் மதத்தை நுழைத்து அதில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் இந்துத்வாதிகளின் மனோ நிலையை என்னவென்பது?

Thursday, April 30, 2015

'ஆண் குழந்தைக்கான லேகியம்' விற்றுக் கொண்டிருக்கும் பாபா ராம்தேவ்!



ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 'புத்ரஜீவக் பீஜ்' (ஆண் குழந்தையை தரும் லேகியம்) பாபா ராம் தேவ் ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டில் விநியோகிக்கப்படுகிறது. பாபா ராம் தேவ் ஹரியானா மாநிலத்தின் விளம்பர தூதுவராகவும் பிஜேபி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படுகிறது. பிறந்த பெண் குழந்தைகள் வறுமைக்கு பயந்து கழுத்து நெரித்து கொல்லப்படுகின்றன. இந்த நிலையில் அரசின் தூதுவர் ஒருவரே ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது பலரின் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெண் குழந்தைகளை காக்க வேண்டும் என்று ஒரு பக்கம் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்க மறுபுறம் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது எந்த வகை நியாயம். பெண் குழந்தை பெற்றுக் கொள்வது பாவம் என்பது பாபா ராம் தேவின் எண்ணமா? அறிவியல் ரீதியாகவும் இது மக்களை ஏமாற்றும் புரட்டு வேலை. பாராளுமன்றத்தில் ஜனதா தள் மூத்த தலைவர் தியாகி தான் ஒரு மருந்து கடையில் இந்த லேகியம் வாங்கியதாக அனைவருக்கும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் அந்த மருந்து பாக்கெட்டை சுகாதார மந்திரி நத்தாவிடம் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும் போது 'ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகள் கொடுமை படுத்தப்படும் சூழலில் அதனை தடுக்க வேண்டிய அரசு அதற்கு எதிர் மறையாக செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது' என்றார். இந்த மூடப்பழக்கத்தை உடன் நிறுத்த வேண்டும் என்று பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

ஹரியானாவில் இந்த மருந்தை வாங்க பலரும் போட்டியிடுகின்றனர். மருந்து கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. பாபா ராம் தேவ் மக்களின் மூடப் பழக்கத்தை பயன் படுத்தி அருமையாக கல்லா கட்டுகிறார். :-)

சாமியார்களின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் கோமாளித் தனங்கள் நிறைவேறப் போகிறதோ பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி
ஜீ நியூஸ்
30-04-2015

http://www.financialexpress.com/article/industry/companies/controversy-hits-ramdev-drug-promising-birth-of-male-child-hits-modis-beti-bachao-campaign/68323/

http://zeenews.india.com/news/india/uproar-in-rajya-sabha-over-baba-ramdevs-infertility-medicine-divya-putrajeevak-seed_1587536.html

Saturday, April 25, 2015

நபி வழியில் உடலை அடக்கம் செய்ய மறுத்த நிர்வாகம்!













24-04-2015 அன்று இரவு தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் உள்ள செக்கடித் தெருவில் சகோதரர் அப்பாஸ் அவர்களின் தாயார் மும்தாஜ் அம்மாள் அவர்கள் சுகவீனம் காரணமாக இறந்து விட்டார். மறுநாள் காலையில் உடலை அடக்கம் செய்ய வேண்டும். இறந்தவர் உயிரோடு இருக்கும் போது 'தன்னை நபி வழியில் அடக்கம் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார். சகோதரர் அப்பாஸ் ஓரிறைக் கொள்கையை (ஏகத்துவம்) ஏற்றுக் கொண்டிருப்பதால் தனது தாயாருக்கு தானே தொழ வைப்பதாக சொல்லியுள்ளார். இதனை ராஜகிரி பெரிய பள்ளி நிர்வாகிகள் ஒத்துக் கொள்ளவில்லை. பள்ளியின் இமாம் தொழ வைத்தால்தான் மையவாடி (கபுர்ஸ்தான்) யில் அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்பது பள்ளி நிர்வாகிகளின் வாதம்.

தகடு, தாயத்து, மவுலூது, கபுர் வணக்கம், ஃபாத்திஹாக்கள் என்று இணை வைப்பிலும் மூடப்பழக்கத்திலும் மூழ்கி திளைத்துக் கொண்டு அதனை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை பின்பற்றி நான் எப்படி தொழுவது? என்பது சகோ அப்பாஸின் வாதம். எனது தாயாருக்கு கடைசி மரியாதையான பிரார்த்தனை தொழுகையை என்னை தொழ வைக்க அனுமதியுங்கள் என்று அப்பாஸ் அலி பிடிவாதமாக இருக்க பள்ளி நிர்வாகிகளும் அனுமதி தர மாட்டோம் என்று சொல்ல விஷயம் காவல் துறை வரை சென்று விட்டது. பிறகென்ன... ராஜகிரி கடைத் தெரு முழுக்க காவல்துறையினர்தான். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு வந்தனர். பிறகு காவல் துறை ஆய்வாளர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரண்டு பக்கத்திலும் ஐந்து ஐந்து பேராக அமர்ந்து காரசாரமான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதற்கிடையில் நேரமாகிக் கொண்டே செல்வதால் சகோ அப்பாஸ் அவர்களின் வீட்டில் எல்லோரும் குழுமி தொழுகை நடத்த தயாரானோம். இறந்து போன தனது தாயார் யாருக்கும் கடன் பாக்கி வைத்திருந்தால் அதற்கு தான் பொறுப்பேற்பதாக சகோ அப்பாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு தனது தாயாருக்காக பிரார்த்தனை தொழுகையை சகோதரர் அப்பாஸ் அவர்களே நடத்தினார். அதிக எண்ணிக்கையில் மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்ய மையவாடியை நோக்கி பயணித்தோம். மையவாடிக்கருகில் உடலை கொண்டு வந்தவுடன் 'பேச்சு வார்த்தை முடியவில்லை. அதற்குள் உடலை ஏன் கொண்டு வந்தீர்கள்' என்று காவல் துறை ஆட்சேபணை தெரிவிக்கவே அனைவரும் உடலை எடுத்துக் கொண்டு ராஜகிரி மெயின் ரோட்டுக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 நிமிடத்துக்கு போக்குவரத்து தடைபட்டது. உடன் காவல் துறையினர் குறுக்கிட்டு 'உடலை அடக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். தயவு செய்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டதற்கினங்க உடலை ஓரமாக வைத்து போக்குவத்துக்கு வழி விட்டனர்.

இதன்பின் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு 'மூன்று மாதத்துக்குள் அடக்கத் தளம் உங்களுக்கு தனியாக ஒதுக்கித் தருகிறோம்' என்ற உத்தரவாதத்தின் பேரில் உடலை அடக்க பள்ளி நிர்வாகம் அனுமதி தந்தது. அடக்கத்தளத்தின் பூட்டும் திறக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் குழி வெட்டி முடிக்கப்பட்டு சகோ அப்பாஸ் விரும்பியபடி நபி வழியில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நின்ற அனைவரும் அவரின் தாயாருக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக களைந்து சென்றோம்.

பள்ளி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகள்...

வட்டி வாங்கி வாழ்வை ஓட்டுபவன், விபசாரம் செய்பவன், பள்ளி வாசல் சொத்தை திருடி தின்பவன், பங்காளிக்கு துரோகம் செய்பவன், சாராயம் குடிப்பவன் என்று இவர்களை அடக்கம் பண்ணுவதற்கு உங்கள் நிர்வாகம் எந்த தடையும் விதிப்பதில்லை. ஆனால் நபி அவர்களும் குர்ஆனும் காட்டித் தந்த வழியில் ஒருவன் வாழ முயற்சித்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த தொல்லைகளை தருகிறீர்கள். தாயை இழந்து ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கையாளனை மேலும் மன உளைச்சலைக் கொடுத்து சந்தோஷப்படுகிறீர்கள். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். ஒரு நரம்பை இறைவன் பிடித்து இழுத்தான் என்றால் உங்கள் கதி அதோ கதி தான். இறைவனின் கோபம் மிகக் கடுமையானது. சிறிதாவது மார்க்கத்தை விளங்க முயற்சி செய்யுங்கள். இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக!

Thursday, April 23, 2015

ஆப்கானிஸ்தானில் மதத்தின் பெயரால் பெண் கொடுமை!



ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே சோவியத் ரஷ்யாவாலும், அமெரிக்கர்களாலும் சிக்கி நிம்மதியிழந்து தவிக்கிறது. இது போதாதென்று இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக விளங்காத பல முல்லாக்கள் வேறு அந்த மக்களை கொடுமைபடுத்தி வருகின்றனர். அந்நாட்டு மக்களின் இஸ்லாமிய நம்பிக்கையை சில முல்லாக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்த போர் காரணமாக பெரும்பாலான மக்களிடம் படிப்பறிவும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிவும் இல்லை. மந்திரம், தாயத்து போன்ற மூடப் பழக்கங்களில் அந்த மக்கள் மூழ்கி திளைக்கின்றனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மார்க்க அறிஞர்களோ மூடப்பழக்கங்களை மேலும் வளர்கின்றனர்.

சென்ற மாதம் 27 வயதே நிரம்பிய ஃபக்ருந்தா என்ற இளம் பெண்ணின் மேல் அபாண்டமாக பழியை சுமத்தினார் தாயத்துகளை விற்று பிழைப்பு நடத்தும் ஒரு மத வியாபாரி. இவரின் பேச்சை நம்பிய அந்த கிராமத்து மக்கள் அந்த பெண்ணை அடித்தே கொன்று விட்டனர். இது ஆப்கானிஸ்தான் முழுக்க சமூக ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குர்ஆனை விளங்காத மார்க்க அறிஞர்களின் ஃபத்வாக்களால் ஆப்கானிஸ்தானில் பல பெண்களின் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.

முகத்தை முழுவதுமாக மூட வேண்டும்: கல்லூரிக்கு செல்லக் கூடாது: ஆண்களோடு பேசக் கூடாது என்று சகட்டு மேனிக்கு ஃபத்வாக்களை வாரி வழங்குவதில் இந்த முல்லாக்கள் கில்லாடிகள். இதற்கு குர்ஆனின் ஆதாரத்தையோ, நபிகளின் கட்டளைகளையோ சமர்ப்பிப்பதில்லை. இவர்களின் அடாவடிகளை தட்டிக் கேட்டால் இஸ்லாமிய நிந்தனையாகி விடுமோ என்ற அச்சத்தில் பலர் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

'தாடியும் பெரிய தலைப்பாகையும் கட்டியவர்கள் எல்லாம் மார்க்க அறிஞர்களாகி விட முடியாது. குர்ஆனை சரியான முறையில் விளங்கியவர்களே மார்க்க அறிஞர்களாக முடியும். இதனை பொது மக்கள் நன்கு உணர வேண்டும்' என்று ஆப்கானின் மத விவகாரங்களுக்கான துணை மந்திரி தையுல் ஹக் ஆபித் மக்களுக்கு அறிவுருத்தி உள்ளார். படத்தில் அமர்ந்துள்ள கள்ள முல்லா ஜூம்மா கான் தனனை நாடி வரும் பக்தர்களுக்கு சகட்டு மேனிக்கு தட்டு தாயத்துகளை எழுதிக் கொடுத்த வண்ணம் உள்ளார். சிலருக்கு வெள்ளை பச்சை துணிகளில் அரபியில் எதையோ எழுதி ஊதி விட்டு தலையில் கட்டி விடுகிறார். மார்க்க அறிவு இல்லாத அந்த மக்களும் இதனை உண்மை என்று நம்பி தங்களின் பொருளாதாரத்தை இழக்கின்றனர்.

இதே போன்ற நிலைதான் முன்பு தமிழகத்திலும் இருந்தது. கடந்த 25 ஆணடுகளாக தொடர்ந்த பிரசாரத்தின் காரணமாக இன்று ஓரளவு மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது எனது வீட்டிலேயே தட்டு தாயத்துகள் எல்லாம் பிரபலம். நாகூர் தர்ஹாவுக்கும் வருடம் ஒருமுறை பெண்கள் சென்று வந்து விடுவர். இன்று அந்த நிலை எனது தீவிர முயற்சியால் 90 சதவீதம் மாற்றப்பட்டு விட்டது. இதே போன்று ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய குடும்பங்களில் சத்தமில்லாத ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. மார்க்க அறிஞர்கள் எதைச் சொன்னாலும் அதற்கு குர்ஆனின் ஆதாரத்தை கேட்கும் மக்களாக தமிழக முஸ்லிம்கள் மாறி உள்ளனர். இதே போன்ற ஒரு எழுச்சி ஆப்கானிஸ்தானத்தில் ஏற்படாத வரை அந்த நாட்டுக்கு எந்த அரசியல் கட்சிகளாலும், அல்லது எந்த அண்டை நாடுகளாலும் விமோசனம் ஏற்பட வாய்பில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
23-04-2015

Monday, April 13, 2015

உபியில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு திருமணம்!



உத்தரப்பிரதேசத்தில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு நடக்கவிருந்த வினோத திருமணம் போலீஸார் தலையிட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டது.

உ.பி.யின் மத்தியப் பகுதியில் உள்ள பூல்பூர் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் பத்வாபூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் கடந்த வாரம் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியி ருந்தனர். மனிதனாக மாறியுள்ள இச்சாதாரி பாம்பு என்று தன்னை கூறிக்கொண்ட 27 வயது சந்தீப் பட்டேலுக்கு அங்கு திருமணம் நடைபெற இருந்தது.

இது வழக்கமான திருமணமாக இல்லாமல், மணப்பெண்ணாக நாகப்பாம்பு இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பண்டிதர் ஒருவரும் அருகில் அமர்ந்து வேத மந்திரம் ஓத, பாம்புக்கு இளைஞன் தாலி கட்டும் நேரத்தில் வில்லன் போல் அங்கு போலீஸார் புகுந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி யுள்ளனர்.

இது குறித்து பூல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சீவ்குமார் மிஸ்ரா ‘தி இந்து’விடம் கூறும் போது, “இந்த வினோத திருமணம் குறித்து ஒருநாள் முன்னதாக அறிந்து, சந்தீப் வீட்டுக்குச் சென்று விசாரித்தோம். அப்போது அவரது குடும்பத்தினர், கிராமத்தின் அமைதி கெடும் வகையில் எதையும் செய்ய மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். ஆனால் அந்த உறுதி மீறப்பட்டதால் தந்தை மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

பத்வாபூரில் வசிக்கும் தயா சங்கர் என்ற விவசாயியின் மகனான சந்தீப், சூரத்தில் பணியாற்றி வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த பிப்ரவரி 17- தேதி சொந்த ஊர் திரும்பினார். இங்கு வந்ததில் இருந்தே தான் மனிதனாக மாறியுள்ள இச்சாதாரி பாம்பு என்று கூறி வந்துள்ளார். இதனால் கிராம மக்கள் அவரை இச்சாதாரி என்றே அழைத்து வந்துள்ளனர். இதனிடையே சந்தீப் அங்குள்ள சிவன் கோயிலில் தான் ஒரு பெண் நாகத்தை சந்தித்ததாகவும், அது முற்பிறவியில் தனக்கு ஜோடியாக இருந்ததை நினைவூட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் அதே பெண் நாகத்தை அந்த சிவன் கோயிலில் ஏப்ரல் 5-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கி கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி யுள்ளனர். கூட்டத்தில் சில பெண்கள் சாமியாடவும் செய்து பக்தி பரவசப்படுத்தியுள்ளனர். இக்கூட்டத்தை கலைக்க சுற்றி யுள்ள காவல் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீ ஸார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தில் பலர் சந்தீப்புக்கு ஆதரவாக போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாளித்து சந்தீப் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய போலீஸாருக்கு மதியம் 3 மணி வரை ஆகியுள்ளது.

சூரத் மருத்துவமனையில் சந்தீப் சிகிச்சை பெற்ற மருத்துவக் குறிப்புகளை போலீஸார் ஆராய்ந்த போது, அவர் மனநலம் பாதிக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது.

பாம்புகள் தொடர்பான மூட நம்பிக்கைகள் உ.பி.க்கு புதிதல்ல. அலிகருக்கு அருகில் உள்ள பிசாவா என்ற கிராமத்தில் கடந்த 1995-ம் ஆண்டு டிராக்டர் ஓட்டிச் சென்ற விவசாயி ஒருவர் வழியில் 2 பாம்புகளை கொன்றுவிட்டார். அப்போது ஊருக்குள் பாம்பு குற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும் பாம்புகள் படை எடுத்து வந்து ஊரையே பழி வாங்கும் என்றும் பீதி கிளம்பியது.

சில தினங்களில் கிராமத்தில் தானியப் பயிர்களின் இலைகளில் பாம்பு போல் வளைந்த கோடுகள் உருவானது. “இறந்த பாம்புகளின் ஆவிதான் இப்படி பயிரில் கோடு போடுகின்றன. அடுத்து பாம்புகள் படையெடுத்து வந்து ஊரையே அழித்துவிடும். இதற்கு நாகபூஜை செய்து பரிகாரம் தேட வேண்டும்” என்று மக்கள் புரளி கிளப்பினர். ஆங்காங்கே பலர் நாக பூஜைகள் செய்யத் தொடங்கினர்.

இந்தப் பிரச்சினையில் தலையிட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை, “அந்தப் பகுதியில் பயிர்களின் இலைகள் மீது பரவியுள்ளது ஒரு வகை வைரஸ்” என்று கூறியது. மேலும் ஆய்வில் ஈடுபட்டு சில மாதங்களில் அதற்கான மருந்தையும் கண்டுபிடித்தது. அதன் பிறகே அடங்கியது பாம்பு பீதி.

இது நடந்த 2 மாதங்களில் ஆக்ரா - அலிகர் இடையில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புடன் ஒரு பெண்ணுக்கு காதல் உண்டாகி விட்டதாக ஒரு செய்தி கிளம்பியது. அந்தப் பாம்பு அடிக்கடி வந்து அந்தப் பெண்ணை அன்பாக கொத்திவிட்டுச் செல்வதாகவும், ஆனால் விஷம் கக்குவதில்லை எனவும் மக்கள் பேசினர். பிறகு சில நாட்கள் கழித்து அது விஷமில்லாத பாம்பு எனவும் அந்தப் பெண், தான் பிரபலம் அடைவதற்காக கிளப்பிய புரளி இதுவென்றும் குட்டு வெளிப்பட்டது. இதுபோல் இன்னும் பல கதைகள் உ.பி.யில் நிலவுகின்றன.

திருமண முயற்சிக்கு முன் சடங்குகளில் ஈடுபட்ட சந்தீப் பட்டேல் மற்றும் அவரது உறவினர்கள். அடுத்த படம்: வேடிக்கை பார்க்கும் கிராம மக்கள்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
13-04-2015

ஒரு மதமாகட்டும், அல்லது ஒரு மார்க்கமாகட்டும், அதன் சட்டதிட்டங்கள் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாவிட்டால் அந்த சமூகம் இது போன்ற மூடப் பழக்கங்களில் வீழ்ந்து தங்களின் அறிவை இழந்து விடுவார்கள் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

Saturday, March 07, 2015

பொதக்குடி இஸ்லாமிய கிராமத்தில் நடக்கும் கூத்துக்கள்.



பொதக்குடி இஸ்லாமிய கிராமத்தில் நடக்கும் கூத்துக்கள்.

நாளை எங்கள் ஊரில் நடக்கும் சந்தன கூடு என்னும் தேர் திருவிழாவில் இஸ்லாத்தின் பெயரால் நடைபெரும் அனாச்சாரங்கள் சில....

ராக மாலிகாவின் மாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி...

அசத்த போவது யாரு புகழ் சதிஸ், சங்கர் etc வழங்கும் இதய ராகம் மாபெரும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி...

கண்ணதாசனின் அதி நவீன வான வேடிக்கை...

சிவாஜி ராவ் குழுவினரின் மயில் டான்ஸ், பொம்மலாட்டம் மற்றும் கிராமிய நிகழ்ச்சி?...

முத்துசுவாமி குழுவினரின் நாதஸ்வரம்...சந்தன கூடு ஊர்வலத்துடன்

திருச்சி கிளிஸ்டன் குழுவின் பேண்ட் வாத்தியம்..

கடந்த சில வருடங்களாக நமதூரில் மிகச் சிறப்பாக சந்தன கூடு திருவிழாவை நடத்தி வரும் முஹல்லா ஒருங்கிணைப்பு கமிட்டி / மூன்று பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்...

குறிப்பு:

இது நமதூரில்தான் நடக்கிறது. ஆனால் நமதூர் ஓர் "முஸ்லிம் கிராமம்"

அதிகமான ஆண்களும் / பெண்களும் வர வேண்டும் என்பதற்காக
பள்ளி வாசல் நிர்வாகிகளால் நடத்த படுகிறது - முற்றிலும் மார்கத்திற்கு சம்பந்தம் இல்லாத நிகழ்சிகள் .

ஆனால் ஐந்து வேளை தொழுகைக்கு ஒரு வரிசைக்குமேல் கூட்டம் இல்லை - அதர்க்காக யாரும் எந்த முயர்ச்சியும் எடுத்ததில்லை...!!

அல்லாஹ் தான் அனைவருக்கும் நேர்வழி காட்டவேண்டும்..

நன்றி: சகோ ஆப்பிள் ஆஷிக்

-Apple Ashik

பள்ளி வாசல் நிர்வாகிகளே... ஊர் பிரமுகர்களே.... தர்ஹா டிரஸ்டிகளே..... உங்கள் அனைவருக்கும் இறைவனின் முன்னால் கடுமையான கேள்வி கணக்குகளும் தண்டனைகளும் உண்டு என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். இஸ்லாம் காட்டித் தராத இந்த கூத்துக்களை மகானின் பெயரால் அரங்கேற்றுகிறீர்களே? குர்ஆனின் சட்டமும் நபிகளின் போதனையும் எங்கு சென்றது?

சிந்தியுங்கள். இறைவனின் கோபம் மிக கடுமையானது.

Thursday, March 05, 2015

நாகூர் தர்ஹாவை நீங்களே இடித்து விடுவீர்களா?

நாகூர் தர்ஹாவை நீங்களே இடித்து விடுவீர்களா?

திரு அரிசோனன்!

//ஆக, தனக்குப் பிடிக்காத எதையும் இடித்துத் தரைமட்டமாக்குங்கள் என்றுதான் நபிகள் நாயகம் போதனை செய்தாரா? //

இஸ்லாம் ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று சொல்கிறது. ஆனால் நாகூர் தர்ஹாவிலும் அஜ்மீர் ஷரீஃபிலும் எனது தலையை சாய்ப்பேன் என்று ஒரு முஸ்லிம் சொன்னால் குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டவரை திருத்த முயல வேண்டும். தனி மதமாக தங்களை அறிவித்துக் கொண்டு நாகூர் தர்ஹாவைப் போல் இன்னும் 10 கட்டிக் கொண்டாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக நடக்க ஒரு முஸ்லிமுக்கு அதிகாரம் இல்லை என்பதனையே நான் சொல்ல வந்தேன்.

குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக இருப்பதால் தான் நபிகள் நாயகம் தனது மருமகனிடம் 'தரை மட்டத்துக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் எந்த சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே' என்று சொன்னார். அதே நேரம் ஏசு, மோசே, ஆப்ரஹாம் போன்ற இறைத் தூதர்களைவிட உயர்வாக தன்னைப் புகழ வேண்டாம் என்றும் தடுத்துள்ளார்கள்.

//அப்படி என்றால், மக்காவில் இருக்கும் காபாவில் உள்ளே உள்ள பழைய அரபுத் தெய்வங்கள் ஏன் உடைத்து எறியப்படவில்லை? காபாவுக்கு மட்டும் ஏன் அந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்று சான்று காட்ட இயலுமா, சுவனப்பிரியன்?//

கஃபாவின் உள்ளே இன்றும் சிலை இருக்கிறது என்று உங்களுக்கு யார் சொன்னது? இதற்கு ஆதாரத்தைக் காட்ட முடியுமா?

நபிகள் நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை அன்றைய அரபு மக்களிடம் போதிக்கும் போது அந்த மக்கள் தினம் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர். கஃபாவை சுற்றி 365 சிலைகள் இருந்ததாம். அதில் ஆப்ரஹாம், இஸ்மாயீல், ஏசு போன்ற நபிமார்களின் சிலைகளையும் அந்த மக்கள் வணங்கி வந்தனர். மக்கா இஸ்லாமிய ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை சிலைகளையும் அப்புறப்படுத்த நபிகள் நாயகம் கட்டளையிட்டார். அதன்படி அந்த சிலைகள் அகற்றப்பட்டன. நான்கு சதுரமான கஃபா கட்டிடத்துக்குள் வேறு எந்த சிலைகளும் இன்று வரை இல்லை. தமிழர்கள் பலரும் கஃபாவின் உள்ளே சென்று தூய்மைபடுத்தியுள்ளார்கள். பல உலக முஸ்லிம்களும் உள்ளே சென்றுள்ளனர். அது சதுர வடிவில் கட்டப்பட்ட ஒரு செங்கல் கட்டிடமே.

//தாங்கள் கூறுவதைப் படித்தது என்னுள் ஒரு மயிர்க்கூச்சர்ப்பு ஏற்பட்டது. தங்கள் கையில் அதிகாரம் இருந்த்திருந்தால் நாகூர் தர்கா மட்டுமா, மற்ற தர்காக்களும் தரை மட்டமாக அல்லவா ஆகி இருக்கும்!//

இதனை எந்த ஒரு தனி மனிதனும் செய்து விட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இஸ்லாமிய அரசு செய்ய வேண்டிய வேலை அது. உடைக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது. ஆனால் தர்ஹா வணக்கம் தவறு என்று முஸ்லிம்களிடம் பிரசாரம் பண்ணலாம். அந்த உரிமை எனக்கிருக்கிறது. அதனை நான் தொடர்ந்து செய்து வருவேன். இன்றில்லா விட்டாலும் இன்னும் சில ஆண்டுகள் கழித்தாவது அந்த மக்கள் நேர் வழியைப் பெறுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது.



Monday, February 23, 2015

காரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி!



"அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி எனக்கு நானே சிலுவையில் அறைந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன்.”

-கராத்தே வீரர் ஹூசைனி

முதலில் கால்களில் ஆணியை ஹூசைனி அடித்துக் கொண்டார். பின்னர் அவரது மாணவர்கள், ஹூசைனியின் மற்றொரு கையில் ஆணியை அடித்தனர். பின்னர் இரண்டு கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டது. இதையடுத்து சிலுவை நேராக தூக்கி நிறுத்தப்பட்டது.

முதல்வரிடமிருந்து இதன் மூலம் பிறகு காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று எடுத்த நாடகமே இந்த முடிவு. ஷியா முஸ்லிமான ஹூசைனி இப்படி கிறுக்குத் தனமாக ஏதாவது செய்வது நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. என்றோ இறந்து போன நபிகளின் பேரனின் நினைவாக இன்றும் தங்கள் உடம்பை கீறிக் கொண்டும், ரத்தத்தை வெளியாக்கிக் கொண்டும் இருக்கும் ஷியாக்களின் மூட கொள்கையையே ஹூசைனியும் பிரதிபலிக்கிறார்.

இவர் தனது தவறை திருத்திக் கொண்டு நேர் வழி பெற பிரார்த்திப்போம். இந்த கிறுக்குச் செயலை முதல்வர் ஜெயலலிதா அவர்களும் விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். இது போன்ற கிருக்கர்களை அந்த இடத்திலேயே காட்டமாக கண்டித்து அறிக்கை விட்டால்தான் மூடப் பழக்கங்கள் சமூகத்தில் குறையும்.



Thursday, January 22, 2015

இதற்கு பெயர்தான் அதீத பக்தியோ!



மேலும், ‘இறைவன் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

-குர்ஆன் 2:170

Saturday, January 03, 2015

நாகூரில் கொடியேற்றி ஃபாத்திஹா!



நாகூர் தர்ஹா கோபுரத்தில் கொடியேற்றிய பின்பு பாத்திஹா என்ற பெயரில் சிறப்பு பூஜை செய்யும் புரோகிதர். :-)

இதற்கு என்ன ஆதாரம்? குர்ஆனில் இப்படி சொல்லப்பட்டுள்ளதா? அல்லது முகமது நபிதான் இது போன்ற வழி முறையை காட்டித் தந்தாரா? பச்சை கலரில் ஜிப்பா. பச்சை கலரில் பெரிய தலைப்பாகை. இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? எங்கிருந்து படித்தீர்கள் என்றும் கேட்கக் கூடாது? உயரமாக கட்டப்படும் சமாதிகளை இடித்து தரை மட்டமாக்குங்கள் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டுள்ளாரே! அதற்கு மாற்றமாக சமாதியை கட்டி மூடப்பழக்கங்களை வளர்க்கிறீர்களே... என்று இவரிடம் கேட்டால் நம்மைப் பார்த்து முறைப்பார். 'நீ எல்லாம் வஹாபி' என்று திட்டுவார். நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார். அப்படி சொல்லி விட்டால் அவரது வருமானம் பாதிக்கப்படும்.

இவரது குழந்தைகளையாவது அரசு பள்ளிக் கூடங்களில் சேர்த்து விட்டு உலக கல்வி கற்று சிறந்த கல்வி மான்களாக மாற்றட்டும். கேவலமான மார்க்கம் தடுக்கும் இது போன்ற பாத்திஹாக்களை விட்டு இவரது வாரிசுகளாவது வெளியேறி உழைத்து சம்பாதிக்கட்டும்.

Wednesday, December 31, 2014

பிகே சினிமாவை எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்?

"உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்றால் பலிகொடுப்பது அவசியம் என்று பெண் மந்திரவாதி கூறியதால் பெற்ற தாயையும், இரு சகோதரர்கள் கொன்றனர்."

அக்டோபர் 30-31 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பலியிடப்பட்ட இரண்டு பேர்களின் உடல்கள் திரம்பகேஸ்வரில் உள்ள தேகிஹார்ஷ் என்ற கிராமத்தில் கிடைத்ததையடுத்து துப்பு துலக்கப்பட்டு இந்தச் செய்தி இரண்டு சகோதரர்களை கைது செய்த பிறகே வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தாயாரின் பெயர் புதாபய் டோரி (65), இவரது உறவினர் காஷிபாய் வீர் (வயது 80).

இந்த பயங்கரக் கொலைகள் தொடர்பாக போலீஸார் தாயைக் கொலை செய்த 2 சகோதரர்கள் உட்பட 10 பேரை கைது செய்து, பல்வேறு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பு கூறுவதாவது: காசிநாத், கோவிந்த் டோரி என்கிற 2 சகோதரர்கள் பொருளாதார அளவில் கஷ்டமான காலத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து யார் யார் பேச்சையோ கேட்டு பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கே என்பவரைச் சென்று சந்தித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம் உட்பட அனைத்தையும் அந்த பெண் மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மந்திரவாதி உடனே, சகோதரர்களின் தாயார் புதாபாய் டோரி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடையே தீயசக்திகள் உள்ளன. அத்தீய சக்திகளை ஒழித்தால் மட்டுமே உங்கள் கஷ்டம் நீங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சகோதரர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

“பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கேயின் அறிவுரையின் படி சகோதரர்கள் தன் தாயார் புதாபாய் டோரியையும் அவரது சகோதரி ராஹிபாய் பிங்ளி என்பவரையும் அழைத்து வந்தனர். 80 வயது உறவினர் காஷிபாய் வீர் என்பவரும் உடனிருந்துள்ளார். பூஜை செய்வதான பாவனையுடன் தொடங்கியது பரிகாரம்.

திடீரென அந்தப் பெண் மந்திரவாதி சகோதரர்களின் தாயார் புதாபாயையும், 80 வயது காஷிபாய் மற்றும் ராஹிபாய் பிங்ளி ஆகியோரை தாறுமாறாக அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதில் 65 வயது தாயார் புதாபாய் மற்றும் 80 வயது காஷிபாயும் கொலை செய்யப்பட, ரிஷிபாய் பிங்கிள் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்”என்று நாசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் மோஹித் கூறினார்.

கொலை செய்ததோடு புதாபாயின் கண்களையும் எடுத்துள்ளார் பெண் மந்திரவாதி. நவம்பர் 1ஆம் தேதி தாயார் மற்றும் காஷிபாய் உடல்களை சகோதரர்கள் கிராமத்தில் இருந்த வயல் ஒன்றில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற ராஹிபாய் பிங்ளி பிற்பாடு மூடநம்பிக்கை ஒழிப்பு சமூக ஊழியர் பக்வான் மாதே என்பவரைச் சந்தித்து கடந்த வாரத்தில்தான் நடந்த பயங்கரத்தைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடநம்பிக்கைத் தடுப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால், சட்டத்தின் மூலம் மூடநம்பிக்கையை தடுத்து விட முடியுமா, மூடத்தன பயங்கரவாதத்திற்கு மகாராஷ்டிராவில் பலியாவோருக்கு அரசின் பதில் என்ன? போன்ற கேள்விகள் அங்கு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2014

Sunday, December 14, 2014

எச்சில் இலையில் உருளுவதற்கு உச்ச நீதி மன்றம் தடை!



நேற்று முக்கியமான ஒரு நிகழ்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. உருளு சேவா. கேள்விப்பட்டிருக்கக் கூடும். கர்நாடகாவின் கடற்கரையோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடக்கும் உற்சவம். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்நிகழ்வில் பார்பனர்களுக்கு பந்தி வைப்பார்கள். அவர்கள் வரிசையாக அமர்ந்து போஜனம் முடித்தவுடன் எச்சிலையை எடுக்க மாட்டார்கள். அப்படியே வரிசையாகக் கிடக்கும் இந்த இலைகளின் மீது பார்பனர் அல்லாதவர்கள் படுத்து உருள்வார்கள். இது வேண்டுதல். பிரம்மஹத்தி தோஷமோ அல்லது பாம்பைக் கொன்ற தோஷமோ இருந்தால் விலகிவிடுமாம். இந்தப் பாவங்களினால் உருவாகும் தோல் நோய்களிலிருந்து விடுபடவும் இந்த நேர்த்திக்கடன் முக்கியம் என நம்புகிறார்கள்.

கிட்டத்தட்ட ஐந்நூறு வருட நம்பிக்கை இது.

சூரசம்ஹாரத்தை முடித்துவிட்டு முருகர் இந்த இடத்துக்குத்தான் வந்திருக்கிறார். இங்குதான் தெய்வானைக்கும் முருகருக்கும் திருமணம் நடக்கிறது. இங்கிருக்கும் குகையில்தான் கருடனிடமிருந்து தப்பிப்பதற்காக வாசுகி பாம்பு தவம் புரிந்திருக்கிறது. முருகன் வாசுகிக்கு தரிசனம் கொடுத்து காத்தாராம். அதனால்தான் பாம்பைக் கொன்ற தோஷத்தை போக்குவதென்றால் இங்கே வந்து உருள்கிறார்கள்.



அது ஏன் பார்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிற்படுத்தப்பட்ட தலித் மக்கள் உருள வேண்டும்? பார்பனர்கள் ஏன் தலித் மக்கள் சாப்பிட்ட இலைகளில் உருளுவதில்லை என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. :-)

தங்களுக்குள்ள வியாதிகள் எல்லாம் இந்த எச்சில் இலைகள்மீது புரண்டால் தானே குணமாகி விடும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக இப்படிச் செய்து வரும் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜாத்ரா (விழா)வாக அக்கோயில் கொண்டாடும் வழக்கம்.
இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது.

அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு - அப்பீல் செய்தது அதன்மீது தான் உச்சநீதிமன்றம் கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வழங்கியது. இது மாதிரி கர்நாடகத்தில் மூன்று கோயில்களில் எச்சில் இலைமீது உருளும் திருவிழா நடைபெறுகிறது; இது 500ஆண்டு கால பழைய பழக்க வழக்கம். எனவே இதனை நிறுத்தக் கூடாது என்று இக் கோயில்கள் சார்பாக வழக்குரைஞர்கள் வாதித்தனர்.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி

அதற்கு உச்சநீதிமன்றம் நன்றாக ஒரு கேள்வியைக் கேட்டது. தீண்டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

இது மிகவும் பாராட்டத்தகுந்த முற்போக்குக் கருத்துள்ள, மனிதநேயத் தீர்ப்பாகும். நீதிபதிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.

பார்பனீயம் இந்த அப்பாவி இந்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் தனது மேட்டுக்குடி இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள என்னவெல்லாம் தந்திரங்களை கையாள்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

உச்ச நீதி மன்றத்தின் தடை அமுல்படுத்தி இந்த விழாவை ரத்து செய்கிறார்களா? அல்லது பார்பனர்களின் எச்சில் இலையில் மற்ற சாதியினர் உருளப் போகிறார்களா என்று டிசம்பர் 27 ஆம் தேதி தெரிந்து விடும். பொறுத்திருந்து பார்போம்.

ஜோதிடத்தை நம்பி கணவனை கொன்ற மனைவி!



பெரியபாளையம் கன்னிகைப் பேரை சேர்ந்தவர் கதிர்வேல் (70). அரிசி மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (60). மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கதிர்வேல் தனது பேத்தியிடமும் மருமகளிடமும் பாசத்துடன் இருந்தார். இது விஜயலட்சுமிக்கு பிடிக்க வில்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜோசியம் பார்க்கச் சென்றார். அப்போது ஜோசியர், உன் கணவர் உன்னை விட்டு சென்று விடுவார். அவருக்கு இன்னொரு மனைவி பாக்கியம் உள்ளது’ என்று கூறினாராம்.

இதனால் மன உளைச்சல் அடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 5 மணிக்கு எழுந்த விஜயலட்சுமி அரிவாளை எடுத்து தூங்கிக் கொண்டு இருந்த தனது கணவரை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஜோசியம் போன்ற மூட நம்பிக்கையால் இப்படி ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரியபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-12-2014

உங்கள் ராசி என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உண்மையில் உங்கள் ராசி இல்லை. எப்படி? உங்கள் பிறப்பின் போது சூரியன் எந்த ராசி சின்னத்தில் சஞ்சரிக்கிறானோ அந்த சின்னத்தின் இயல்புகளைப் பெறுகிறான் என்பது ஜோதிட நம்பிக்கை.

விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து சந்திரனும் இதர கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த விண்வெளிப் பாதையை 'சோடியாக்' என்றழைக்கின்றனர். இந்த பாதையைக் கடக்க சூரியனுக்கு ஓர் ஆண்டு காலம் பிடிக்கிறது. இதைப் பழங்கால ஜோதிடர்கள் 12 பிரிவுகளாக்கினர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு மாதமாகும். மார்ச் 21ந்தேதி வசந்த காலம் ஆரம்பம் ஆகும் போது மேஷத்தில் சூரியன் சஞ்சரிப்பான். இதை மேலை நாட்டில் 'ஏரிஸ்' என்பர். இந்த ஆடு போன்ற சின்னத்தில் சூரியன் இருக்கும் போது பிறந்த நபர் ஆட்டுக்குரிய குணாதிசியங்களுடன் இருப்பார் என்பதும் ஜோதிடக் கோட்பாடு. இந்த ஆட்டைப் போலவே சூரியன் சஞ்சரிக்கும் ஒவ்வொரு ராசிக்கும் அந்தந்த நட்சத்திரங்கள் ஏறத்தாழ பிரதிபலிக்கும் ஒரு உருவத்தை சின்னமாக அளித்திருக்கின்றனர். இப்படி அளிக்கப்பட்ட சின்னங்கள்தான் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற ராசிகள்.

இப்படி பல்வேறு சின்னங்களில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் இன்ன இன்ன குணாதிசியங்களுடன் இருப்பர் என்று வரையறுத்திருக்கின்றனர். இந்த விண்வெளி கிரகங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வேகமும் சுறுசுறுப்பும் இப்போது இல்லை. தங்கள் சுழற்ச்சியில் வேகம் குறைந்து சற்று சோம்பேறியாகி விட்டன. புவியின் சுழற்ச்சியில் மந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். சூரியனும் தன் பழைய வேகத்திலிருந்து 'டல்' லாகவே சுற்றுகிறதாம் இப்போது சூரியன் தன் சுழற்ச்சியில் ஒரு மாத காலம் பின் தங்கி இருக்கிறதாம். ஆக முந்தய கணக்குப்படி மார்ச் 21 ஆம் தேதி வசந்தகாலம் ஆரம்பிக்கும்போது சூரியன் இப்போது ஆட்டில்(மேஷத்தில்) இருக்க மாட்டான். அதனுடைய முந்தய ராசியான மீனில்(மீனத்தில்) இருப்பான்.

சிம்மத்தில் பிறந்த ஒருவன் சிங்கம் போன்ற வீரத்துடன் இருப்பான் என்பர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு 'லியோ' என்று சொல்லப்படும் சிம்ம ராசி. இப்போது 'சிம்மம்' என்று நாம் நினைப்பது உண்மையில் 'நண்டு' என்கிறார் பால் கூடற்க் என்ற பிரபல பிரெஞ்சு வானியல் நிபுணர். 'நண்டு' என்பது சிம்மத்திற்கு முந்தய ராசியான கடகத்தைக் குறிக்கும். எனவே இன்றைய கிரக சஞ்சாரப்படி நமது ராசிகளே அடியோடு மாறி விடுகின்றன. இது போன்ற ஜோதிடத்தில் படித்தவர்களும் வீழ்ந்து தங்களின் வாழ்க்கையை வீணாக்குவதுதான் விந்தை.

இனி இஸ்லாம் இது பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

முகமது நபி கூறுகிறார், 'எவன் ஜோதிடன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முகம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான்.

ஆதாரம்: அஹமத்

பத்தரிக்கைகளில் வரும் ராசி பலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையை சேர்ந்ததுதான். அதிலுள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் அமைந்த வான சாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இறை மறுப்பாளன் ஆகிறான். இதைப்பற்றி முகமது நபி கூறும் போது,

'இறைவனின் அருளாலும், அவனுடைய கருணையாலும்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறைவனை நம்பியவர் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறை நிராகரிப்பாளரும், நட்சத்திரத்தையே வணங்கியவராவார்' என்றார்.

ஆதாரம்: புகாரி

'யார் தாயத்தைக் கட்டி தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்' என்பது நபி மொழி.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்நூல்:அஹ்மத்


Thursday, December 04, 2014

'டிஸ்கோ முல்லா' கைது செய்யப்பட்டார்!





'டிஸ்கோ சாந்தி' கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன 'டிஸ்கோ முல்லா'! அதாவது பாகிஸ்தானில் ஜூனைத் சம்சாத் என்ற பாப் இசை பாடகன் ஒருவன் இருந்தான். பல ஆல்பங்கள் இவனது பெயரைக் கொண்டு மிக அதிகமாக விற்று தீர்ந்தது. கராச்சி மாகாணத்தை சேர்ந்தவன். 2001 ம் ஆண்டு பாப் இசை தொழிலை விட்டு விட்டு இஸ்லாத்தின் மூலம் புரோகித தொழிலை தொடங்கினான். தப்லீக் ஜமாத்தில் மிக ஆர்வமாக பணியாற்றினான். முரீது கும்பலை சேர்ந்தவன். இங்கும் நல்ல வருமானம். முரீது கொடுக்கும் போது தனது பழைய பாப் நடனத்தையும் கூடவே சேர்த்துக் கொண்டான். இது மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானது. கிறித்தவர்கள் 'ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக' என்று நெற்றியில் ஒரு தட்டு தட்டினால் அந்த மக்கள் எப்படி துடித்து துள்ளி விழுகிறார்களோ அதே போன்ற ஒரு ட்ரிக்தான் இந்த ஆட்டமும். இஸ்லாத்துக்கு எதிராக வேலை செய்ய யூதர்களால் தயாரிக்கப்பட்டவனாகவும் இருக்கலாம். காணொளியை பார்த்து நம்ம மவுலவி என்ன ஆட்டம் ஆடுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். :-)

தற்போது தனது பிரசாரத்தில் நபிகள் நாயகம் மனைவியரில் ஒருவரை தவறாக பேசி அதனால் சர்ச்சை ஏற்பட்டு கோர்ட்டினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளான். தண்டனை கிடைத்தவுடன் தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளான். 'நான் எனது அறிவை இழந்து என்ன பேசுகிறேன் என்று விளங்காமல் பேசி விட்டேன். என்னை முஸ்லிம்கள் மன்னித்து தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை அளித்துள்ளான். தற்போது வழக்கு கோர்ட்டில் உள்ளது.

இறைவனும் அவரது தூதரும் காட்டித் தராத எந்த வணக்கமும் முடிவில் சம்பந்தப்பட்டவர்களை படுகுழியில் தள்ளி விடும் என்பதற்கு ஜூனைத் சம்சாத் என்ற இந்த கிறுக்கு மவுலவியின் முடிவு ஒரு சிறந்த உதாரணம்.

நம் தமிழகத்திலும் முரீது கோஷ்டிகள் ஆங்காங்கே உண்டு. ஜமாலி போன்ற கிறுக்கர்கள் இதனை ஆதரிக்கக் கூடியவர்களே. தவ்ஹீத் வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்போது ஓரளவு இந்த மூடர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். உங்கள் ஊர்களில் இது போன்று மூரீது கும்பல்கள் யாராவது தென்பட்டால் உடன் விளக்கத்தைக் கேட்டு அவர்களை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுங்கள். உங்களையும் என்னையும் இறைவன் குர்ஆனின் நேரான வழியிலும் நபிகள் நாயகம் காட்டித் தந்த வாழ்வு முறையிலும் கடைசி வரை இருந்து மரணிக்கச் செய்வானாக!

ஏ ஆர் ரஹ்மானுக்கும், யுவன் சங்கர் ராஜாவுக்கும்(அப்துல்லா) நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இசையை ஒரு தொழிலாக செய்து கொள்ளுங்கள். அது சரியா தவறா என்பதை இறைவன் தீர்மானித்துக் கொள்வான். ஆனால் அந்த இசையை வணக்கமாக்குகிறேன் என்ற பெயரில் ஏடா கூடமாக எதையாவது செய்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள்.

தகவல் உதவி
அல்ஜஜீரா
04-12-2014

Sunday, November 23, 2014

மதுவின் மயக்கத்தை தனக்கு சாதகமாக்கும் சாமியார்கள்!

மதுவின் மயக்கத்தை தனக்கு சாதகமாக்கும் சாமியார்கள்!



ஆந்திர மாநிலம் தடா அருகே இருக்கிறது அந்த கிராமத்தை ஒட்டிய வனப்பிரதேசம். அமாவாசையானால் அங்கு ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. புளிய மரத்தடியில் அமர்ந்திருந்தார் சாமியார். அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்தால் இயல்பானவர்களாகத் தெரியவில்லை. சிலர் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் சிலர் தலைவிரி கோலமாக ‘ம்... ம்... ம்...’ என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்தார்கள். பேய் ஓட்டும் இடமாம் அது.
கண்ணாடியில் தெரியும் பிசாசு!

வயதான தம்பதியர் வாலிபர் ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள். அழைப்பு வந்ததும் சாமியாரிடம் சென்றார்கள். கட்டைப் பையிலிருந்து உயிருள்ள கோழி, வாழைப்பழம், பூ இவற்றுடன் சேர்த்து முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றையும் சாமியாரிடம் கொடுத்தார்கள். பெற்றோரைக் கொஞ்சம் தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு அந்த வாலிபரிடம் பேச்சுக் கொடுத்தார் சாமியார். வாலிபர் சாந்தமாக, சில சமயம் சிரித்தும்கூட பேசிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரியவில்லை. திடீரென்று சாமியார் கண்ணாடியை எடுத்து வாலிபரின் முகத்துக்கு முன்பாகப் பிடித்தார். அவ்வளவுதான். தனது முகத்தைப் பார்த்தவர், பயங்கரமாக அலறினார். கண்ணாடியை உடைக்கப் பார்த்தார். முகத்தைப் பொத்திக்கொண்டார். எழுந்து ஓட முயற்சித்தவரை சாமியாரின் உதவியாளர்கள் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கடுமையாக முயற்சித்து, கைகளை விலக்கி மீண்டும் கண்ணாடியில் முகம் பார்க்க வைத்தார்கள். ஒருகட்டத்தில் அவர் மயங்கிச் சரிந்தார். ஏதோ மந்திரம்போல உச்சரித்து, நெற்றில் குங்குமமிட்டு, உச்சந்தலையின் முடியைக் கொத்தாக வெடுக்கென்று பிடுங்கினார்கள். மீண்டும் அலறி எழுந்தார் அவர். பெற்றோரை அழைத்த சாமியார், “வொச்சே நெல அமாவாசைக்கு பிளிச்சிங்கின்னி ரா” என்று அனுப்பி வைத்தார். அவர்கள் அடுத்த மாதம் இதே அமாவாசை அன்று மீண்டும் இங்கு வர வேண்டுமாம். மயங்கிய வாலிபரின் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள்.

சாமியாரின் உதவியாளரிடம் கேட்டேன். “ஆ மனுஷிக்கு அத்தம்ல மூத்தி ச்சூசா பிசாசு தெலுசாந்தி” என்றார். அந்த வாலிபர் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அவர் உருவத்துக்குப் பதிலாக பிசாசு தெரிகிறதாம். டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் பேசினேன். “பேய் பிடித்திருக்கிறது என்பதெல்லாம் மூட நம்பிக்கை. அவற்றில் 80 சதவீதம் விதவிதமான குடிநோய்களே. மீதம் 20 சதவீதம் குடிநோய் அல்லாத மனநோய்கள். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெரும்பான்மையோர் சாராயம், பிராந்தி, கோழிக்கறி கேட்பதன் சூட்சுமம் இதுதான். நீங்கள் குறிப்பிடும் அந்த வாலிபருக்கு தீவிரமான மனச்சிதைவு நோய் (Schizophrenia).இன்னும் சிலர் அடிக்கடி அருள் வந்ததுபோல சாமியாடுவார்கள். இதனை மனச்சிதைவு என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட சூழல்களால் ஏற்படும் அதீத உத்வேகம் என்றும் கொள்ளலாம். இதனை மனநல மருத்துவம் பொசஷன் அட்டாக் (Possession attack) என்கிறது. மனச்சிதைவு நோய் கொண்டவர்களுக்கு விஷுவல் ஹாலுசினேஷன் (Visual hallucination) இருக்கக்கூடும். அதாவது கண் முன் தோன்றும் மாயத்தோற்றங்கள். கண்ணாடியில் முகம் பார்த்தால் அங்கு பிசாசு தெரிவதற்கு அதுவே காரணமாக இருக்கக் கூடும். இது பொதுவான கருத்து. அவரை மருத்துவச் சோதனை செய்தால் மட்டுமே அவரது பிரச்சினையை சரியாகச் சொல்ல முடியும்.

சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஒருசில விஷயங்கள் மீது பயம் இருக்கும். பெரும்பாலானோருக்குப் பேய், பிசாசு என்றால் அச்சம். சிலர் அந்த பயத்தினூடேயே அவை குறித்து அதீத ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் பேச்சில் அமானுஷ்ய விஷயங்கள் ஆக்கிரமித்திருக்கும். இதுபோன்றவர்கள் குடிநோயில் சிக்கும்போது அவர்களின் மூளையை அது பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வாலிபரின் பிரச்சினையும் அதுதான். குடிநோயின் எதிர்மறையான எண்ணங்கள் அந்த வாலிபருக்குச் சுய வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. தன்னையே வெறுக்க தொடங்கும் அவர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் பார்க்கச் சகிக்காமல் திட்டிக்கொள்வார். காலப்போக்கில் அவரது பிம்பமே அவருக்கு பிடிக்காத, அதேசமயம் அதீத ஆர்வம் கொண்ட பேய், பிசாசு போன்ற உருவங்களாக தோன்றியிருக்கலாம்.

உன்னைப் போல் ஒருவன்!

விஷுவல் ஹாலுசினேஷனில் நிறைய உட்பிரிவுகள் இருக்கின்றன. என்னிடம் வந்த ஒரு குடிநோயாளி படுக்கையில் எழுந்து அமர்ந்து அவருக்கு பக்கத்தில் ஒரு நாற்காலியை போட்டுக்கொள்வார். நாற்காலியுடன் தனியாகப் பேசுவார். ஒருகட்டத்தில் கடும் விவாதம் நடக்கும். பின்பு காற்றுடன் சண்டையிடுவார். அதாவது, அவரே அங்கு இரு நபர்களாக உருவெடுக்கிறார். நம் கண்ணுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவரது கண்ணுக்கு அவரைப் போலவே உண்மையான நபர் தெரிவார். “நீ செய்வது எல்லாம் சரியா?” என்றரீதியில் அவரைப் போன்ற எதிராளி அவரிடம் பேச ஆரம்பித்துக் கடுமையாக வாக்குவாதம் புரிவார். சில நேரங்களில் இருவரும் பாசமழை பொழிவார்கள். அழுவார்கள், சிரிப்பார்கள். இப்படி ஒருவர் இருவராக உருவகமாவதை ‘ஆட்டோஸ்கோபி’ (Autoscopy) என்போம்.

இதுமட்டுமல்ல, தென் மாவட்டத்திலிருந்து சிகிச்சைக்கு வந்த ஓர் இளைஞர் அடிக்கடி தன் முன்பாகத் தோன்றும் காளை மாட்டுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பார். ஜல்லிக்கட்டு வீரர் அவர். சிலருக்கு சிங்கம், புலி நேரில் வந்து பயமுறுத்தும். சிலருக்கு அவர்களுக்குப் பிடிக்காத நபர்கள், எதிரிகள் வந்து திட்டுவார்கள்; சண்டையிடுவார்கள். சிலருக்கு அவர்களுக்குப் பிடித்தமான கடவுள் தோன்றுவார். சிலருக்கு இவ்வாறான உருவங்களாக இல்லாமல் விதவிதமான ஒளிகள், கசாமுசாவென பிம்பங்கள் என்று வந்து பார்வையை மறைக்கும். சிலருக்கு வாகனம் ஓட்டும்போது, நடந்து செல்லும்போது இதுபோன்ற மாயத்தோற்றங்கள் கண்ணில் ஏற்பட்டு மயங்கிச் சரிவார்கள்.

பார்வையைப் பறிக்கும் மது!

தொடர்ந்த அதீத மதுப்பழக்கத்தால் மூளை - கண் பார்வை நரம்புகள் கடுமையாகச் சேதம் அடைவதே இதற்குக் காரணம். இவை மட்டுமில்லாமல் குடிப் பழக்கத்துக்கும் கண் பார்வைக் கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான் கள்ளச்சாராயம் போன்ற எரிசாராய வகையறாக்களை சாப்பிடும் நபர்களுக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே பார்வை பறிபோகிறது. நிறையப் பேர் நினைப்பதுபோல் மதுப்பழக்கம் கல்லீரல், குடல், மூளையை மட்டும் பாதிப்பதில்லை. கண் பார்வையையும் நாளுக்கு நாள் மங்கச் செய்கிறது” என்றார்.
(தெளிவோம்)

-டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in


நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
24-11-2014

இதே போன்று முஸ்லிம்களிலும் ஒரு சில புரோகிதர்கள் நாகூர், ஏர்வாடி போன்ற தர்ஹாக்களில் மன நோயாளிகளை பேய் ஓட்டுகிறேன் என்று சொல்லி பணத்தை கறக்கும் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனை இஸ்லாமியர்கள் கண்டித்து அந்த நபர்களை மனநல மருத்துவ மனையிவ் அனுமதிக்க ஆவண செய்ய வேண்டும். ஏனெனில் குர்ஆனும் நபி மொழிகளும் பேய் பிசாசுக்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறது. நாம் வாழும் உலகில் இறந்த மற்றவர்களின் ஆன்மா வாழும் ஒருவரின் ஆன்மாவில் புகுந்து கொள்ள சாத்தியமே இல்லை என்று தெளிவாக சொல்லி விடுகிறது. அறிவியலும் இதனையே மெய்ப்படுத்துகிறது. இதைக் கருத்தில் கொண்டு மூட புரோகிதர்களை இனம் கண்டு அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்க முயற்சிப்போமாக!

Wednesday, September 17, 2014

மாணவர்களின் மூடப் பழக்கத்தால் கைகளில் காயம்!



பணத்தை திருடியது யார்? கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த மாணவர்களுக்கு தீக்காயம்!

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடியில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த விடுதியில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. ஒரு அறையில் 7–ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெயபிரகாசின் 110 ரூபாய் அவனது பெட்டியில் இருந்து திடீரென திருட்டு போனதாக தெரிகிறது.

பணம் காணாமல் போனது பற்றி தன்னுடன் அறையில் தங்கியிருந்த சக மாணவர்களிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளான். அதன்பிறகு தன்னுடன் தங்கியிருந்த 12 மாணவர்களையும் கற்பூரத்தை கையில் ஏற்றி சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி முதலில் என்னுடைய பணத்தை நான் எடுக்கவில்லை என்று மாணவர் ஜெயபிரகாஷ் தனது கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளான்.

இதையடுத்து அறையில் உடன் தங்கியிருந்த மாணவர்கள் தனசேகர், ராம்கி, கண்ணன், கார்த்தி, பிரகாஷ், ராமமூர்த்தி, பிரபு, கலையரசன் உள்பட 12 மாணவர்களும் அடுத்தடுத்து தங்களது கையில் கற்பூரத்தை ஏற்றி பணத்தை நாங்கள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்தனர். இதனால் கையில் கற்பூரம் ஏற்றிய 12 மாணவர்களின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோர்களுக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, ஆத்தூர் உதவி கலெக்டர் ஜெய்ராம், தாசில்தார் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட அரசு மாணவர் விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் (பொறுப்பு) தலைமையில் அதிகாரிகளும் தலைவாசல் அரசு விடுதிக்கு சென்று விடுதி காப்பாளர் தங்கமாரியப்பன், சமையலர்கள் செல்வராஜ், அம்பாயிரம், துப்புரவு பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 12 பேரையும் அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்காக தலைவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் கூறுகையில், விடுதியில் உள்ள ஒரு அறையில் பணம் திருட்டு போயுள்ளது. இதனால் பணத்தை எடுத்தது யார்? என்று மாணவர்களிடையே கண்டுபிடிக்க கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கையில் கற்பூரம் ஏற்றி தீக்காயம் அடைந்த மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினோம். இது தொடர்பான அறிக்கை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நன்றி: நக்கீரன்
09-09-2014

http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=128491