Followers

Showing posts with label பி.ஜெய்னுல்லாபுதீன். Show all posts
Showing posts with label பி.ஜெய்னுல்லாபுதீன். Show all posts

Saturday, November 07, 2015

பிஜே வரவுக்கு இலங்கை ஜமாத்துல் உலமாவின் கண்டன கடிதம்!



ACJU வின் கடிதம் >>>>>>
2015-11-05

ஊடக அறிக்கை:
தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது.

கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும் சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் மேற்படி காரணங்களை கருத்திற் கொண்டு அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்பதையும் நாட்டு மக்களுக்கு அறியத் தருகிறோம்.

அத்துடன் அவர் கூறும் சில கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருப்பதாலும் இது விடயத்தில் சகலரும் மிக அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

இது தொடர்பாக குறித்த ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சகோ. ஆதம் அலி
பிரதம நிறைவேற்று அதிகாரி

---------------------------------------------------------------------

SLTJ பதில் >>>>>>

கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும்? – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.
05.11.2015

தலைவர் / செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு – 10

நேர் வழியை பின்பற்றுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!!!

அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் மட்டுமே நேர்வழி காட்டி. அதை மாத்திரம் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

எதிர்வரும் 08.11.2015 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வில் தென்னிந்திய மார்க்க அறிஞர் மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் (உலவி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்வது ஆரோக்கியமற்றது என்று கூறி அதனை தவிர்ந்து கொள்ளுமாறு எமக்கு ACJU சார்பில் கடிதம் எழுதியுள்ளீர்கள்.

உங்களின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக அவரது 2005 ஆம் ஆண்டு வருகையின் போது ஏற்பட்டது போன்ற சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குழைக்கும் விதமான சம்பவங்கள் (?) ஏற்பட்டு விடும் என்ற காரணத்தை முன்வைத்து, அவரது விஜயம் ஆரோக்கியமற்றதால் அதனை தவிர்ந்து கொள்ளுமாறு பல அமைப்பினரும், அரபுக் மத்ரஸாக்களும், நிறுவனங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் குறிப்பிட்டு, அது தான் ஜம்இய்யாவின் நிலைப்பாடும் கூட என்றும் அறிவித்துள்ளீர்கள்.

முதலில், 2005 ஆம் ஆண்டில் மவ்லவி P.J அவர்களின் வருகையினால் சமூக ஒற்றுமைக்கோ, சகவாழ்வுக்கோ எவ்வித பாதிப்பும் அவர் தரப்பாலோ, அவரை அழைத்து வந்த எமது ஜமாஅத் சார்பாகவோ ஏற்படுத்தப்படவில்லை. வஹியின் செய்திகள் ஆதாரபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சமூக தளத்தில் முன்வைக்கப்பட்டது மாத்திரமே நிகழ்ந்தது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளும் குர்ஆனிய பண்பாடும், சமூக நாகரீகமும் அறியாத சில அறிவீனர்களால் தான் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு அவரது வீஸா இரத்துச் செய்யப்பட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மார்க்க பணி செய்வதற்கு இலங்கை வருபவர்கள் எடுக்கு வேண்டிய வீஸா எடுக்காமல் மார்க்க பிரச்சாரம் செய்கிறார் என்று அன்று ஆளும் தரப்பிலிருந்துக் கொண்டு மார்க்கத்தை விலை பேசிய சில அரசியல்வாதிகளும் மார்க்க அறிஞர்களும் (?) செய்த சூழ்ச்சியே அவரது வீஸா ரத்து செய்வதற்கு காரணமாக அமைந்ததே தவிர அறிஞர் மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் (உலவி) அவர்களின் இலங்கை வருகை சக வாழ்விற்கோ சமூக ஒற்றுமைக்கோ எந்தவொரு பாதிப்பையும் உண்டாக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கைக்கு பல கொள்கைகளுடையவர்கள் அவர்களது மக்களால் அறிஞர்களாக கருதப்படுபவர்களை அழைத்து வருகிறார்கள். உதாரணமாக காதியானி மதத்தைச் சேர்ந்தவர்கள், ஷீஆக்களின் தலைவர்கள், அத்வைதத்தை போதிப்பவர்கள், கப்ருகளை வணங்குபவர்கள் எல்லாம் இலங்கைக்குள் வரவழைக்கப்படுகிறார்கள். அண்மையில் காதியானிகள் தமது குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை வெளியிட்டார்கள். போராக்கள் யாழ்பானத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். மேலும் ஓட்டமாவடியில் ஷீஆக்களின் மத்ரஸா நடைபெறுகின்றது. குறித்த மத்ரஸாவில் இருந்து 60 க்கும் அதிகமான ஷீயா மத அறிஞர்கள் வெளியேறி நாடு முழுவதும் ஷீஆ கொள்கையை பரப்புகின்றார்கள். இஸ்லாமிய ஷரீஆவில் காபிர்கள் என்று அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் இத்தகையவர்கள் இலங்கை வர முடியும் என்றால் மார்க்கத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் போதிக்கும் ஒரு மார்க்க அறிஞரை இலங்கைக்கு அழைத்து வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை நீதியானதல்ல, சமூக அக்கறை கொண்டதல்ல, நாகரீகமானதல்ல, ஜனநாயகத்திற்குட்பட்டதுமல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.

பி.ஜெ அவர்கள் இலங்கை வருவதை எதிர்த்து எச்சரிக்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா காதியானிகளின் தலைவர்கள், பிரச்சாரகர்கள், போதகர்கள் இலங்கை வருகின்ற நேரங்களிலெல்லாம் இப்படி எச்சரித்ததுண்டா?
ஷீயாக்களின் இமாம்கள், பேச்சாளர்கள், போதகர்கள் இலங்கை வருகின்றார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். நபித்தோழர்களை காபிர்கள் என்று வசை பாடுகின்றார்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை விபரச்சாரி என்று பகிரங்க பிரச்சாரம் செய்கின்றார்கள் இவர்களுக்கு எதிராக எச்சரித்து இலங்கை வருகையை நிருத்துவதற்கு ஜம்மிய்யதுல் உலமா ஏன் பாடுபடவில்லை?
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக மியன்மாரில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொத்து கொத்தாய் கொண்று குவித்த அஷின் விராதோ தேரர் கடந்த காலங்களில் இலங்கை வர வழைக்கப்பட்டார். இனவாதம் மேலோங்கியிருந்த ஒரு கால கட்டத்தில் இனவாத தீயை பரப்புவதற்காகவே அத்தேரர் இலங்கை கொண்டு வரப்பட்டார். அவர் இலங்கை வருவதை தடுப்பதற்கு நீங்கள் என்ன முயற்சிகளை எடுத்தீர்கள்?

குறைந்த பட்சம் அதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டீர்களா?

சமூக பொறுப்புள்ளவர்கள் கட்டாயம் செய்தே தீர வேண்டிய இத்தனை பணிகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து அறிஞர் பீ. ஜெயினுலாப்தீன் அவர்களின் வருகையை மாத்திரம் தவிர்ந்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. சிந்திப்பீர்களா?

பி.ஜெ விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிக்கை விட்டுள்ளீர்கள். அப்படி அவர் இஸ்லாமிய அடிப்படையின் எந்த பகுதிக்கு மாற்றமாக கருத்து வெளியிட்டார்? அவர் வெளியிட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் எங்களிடம் தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தயாரா?

ஒருவரின் கருத்துக்களைப் பற்றிய எந்த வித புரிதலையும் மக்கள் மன்றில் முன் வைக்காது, வெறுமனே இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றம் என்று மாத்திரம் கூறிவிடுவதினால் கடமை முடிந்து விட்டாதாக எண்ணிக் கொள்கின்றீர்கள் போலும். உண்மையில் பி.ஜெ யின் கருத்துக்களில் மார்க்கத்திற்கு மாற்றமான கருத்துக்கள் இருந்தால் அதனை எங்களிடம் நீங்கள் முன் வைத்திருக்கலாமே? ஏன் அதனை செய்ய ஜம்மிய்யா முன்வரவில்லை?

சிங்கள மொழி மூல அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பில் ஜம்மிய்யதுல் உலமா சபையுடன் சந்திப்புக்கான நேரம் தாருங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் வேண்டுகோள் விடுத்த போது, “தலைவர் நாட்டில் இல்லை. வெள்ளிக்கிழமை தான் வருகின்றார் வந்தவுடன் நேரம் தருகின்றோம்.” என்று பொய் சொல்லி காலம் கடத்தி விட்டு இப்போது பி.ஜெ வருகையை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று எமக்கு கடிதத்தை அனுப்பி விட்டு கடிதம் படிக்கப்படும் முன்பே ஊடகங்களுக்கு அவசர அவசரமாக குறித்த கடிதத்தை அனுப்பி வைத்ததின் மர்மம் என்ன?

இப்போது உங்கள் தலைவர் என்ன ஆனார்? இந்தக் கடிதம் எழுதுவதற்கும், ஊடகங்களுக்கு அனுப்புவதற்கும் தலைவர் நாட்டில் இல்லையே? ஏன் இந்த இரட்டை நிலை? இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் உலமாக்கள் சபை என்று சொல்லிக் கொண்டு இப்படி நயவஞ்சக வேடம் போடுவது நபிகளாரின் வாழ்வுக்கு மாற்றமில்லையா?

08.11.2015 அன்று நடைபெறவுள்ள நிகழ்வானது, திருமறைக்குர்ஆனின் சிங்கள மொழியிலான தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வாகும். இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களின் மனங்களுக்கு படைப்பாளன் அல்லாஹ்வின் செய்திகளை எளிய நடையில், அறிவுபூர்வமாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியின் வெளியீட்டு நிகழ்வாகும். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் மிகவும் எளிய நடையில் அதிகமான விளக்கங்களுடன் வெளியிடப்பட்ட தமிழாக்கத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை தான் நாங்கள் வெளியிடுகிறோம். அதன் முக்கியத்துவத்தையும், பெருமதியினையும் அதனை நீங்கள் படித்திருந்தால் அறிந்துக் கொள்வீர்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் அல்-குர்ஆன் தொடர்பாகவும், இஸ்லாம் பற்றியும் பரப்பப்பட்ட அனைத்து தவறான கருத்துக்களும் ஆதாரப்பூர்வமான, அறிவுப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டே எமது குர்ஆன் மொழியாக்கம் சிறப்புர செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த மொழியாகத்தை படித்தால் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அல்லாஹ்வின் அருளால் கண்டிப்பாக நல்லெண்ணம் கொள்வார்கள். எனவே முஸ்லிம் சமுதாயம் சார்பாக செய்யப்பட்ட இத்தகைய மிக முக்கியமான பணியை முடக்கும் விதமாக அறிஞர் பீ. ஜெயினுலாப்தீன் அவர்களின் இலங்கை வருகையை தவிர்ந்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உங்கள் அமைப்பின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இன்னும் குறைத்து விடும் என்பதை நீங்கள் சிந்திக்க தவறியதை நினைத்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

காலத்தின் அவசியத் தேவை கருதி நடைபெறும் இத்தர்ஜுமா வெளியீட்டினால் சமூக சகவாழ்வு கட்டியெழுப்பப்படும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். மேலும் அறிஞர் பீ. ஜையனுலாப்தீன் அவர்களின் வருகையையும் சிறப்புரையையும் எதிர்பார்த்து பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். எனவே இந்நிகழ்வை எதிர்க்காமல் தாங்களும் கலந்து அவரது சிறப்புரையை செவியேற்குமாறு தயவாய் கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லம் வல்ல அல்லாஹ் எம் பணிகளை பொருந்திக் கொள்வானாக!

இப்படிக்கு,
ஆர். அப்துர் ராஸிக் B.com
பொதுச் செயலாளர் – SLTJ

பிஜே இலங்கை வருவதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?



இந்த கூட்டம் எதற்காக இத்தனை ஆக்ரோஷத்துடன் பிஜே வருகைக்கு இலங்கையில் எதிர்ப்பு தெரிவிக்கிறது?

இஸ்லாமியரிடத்தில் இருந்த வரதட்சணை கொடுமையை துடைத்தெறிந்தாரே..... அதற்காகவா?

கமலுக்கு ரஜினிக்கும் ரசிகர் மன்றம் வைத்தவனை நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொள்ள வைத்தாரே.... அதற்காகவா?

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ரத்த தானத்தில் முதலிடத்தை பெற்றுள்ள தவ்ஹீத் ஜமாத்தை இன்று வரை கட்டிக் காத்து வருகிறாரே.... அதற்காகவா?

தமிழக இஸ்லாமியருக்கென்று ஒரு தனி தமிழ் நடை இருந்ததை உடைத்து மாற்று மதத்தவரும் குர்ஆனை எளிதில் விளங்கும்படி விளக்கவுரை எழுதியுள்ளாரே...... அதற்காகவா?

மந்திரம், தட்டு, தாயத்து என்று புரோகிதர்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியர்களை ஐந்து வேளை தொழுகையாளிகளாக மாற்றி குர்ஆனை கையில் எடுக்க வைத்துள்ளாரே..... அதற்காகவா?

கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீதம் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்துள்ளாரே.... அதற்காகவா

நாகூர் தர்ஹா, ஏர்வாடி தர்ஹா என்று மன நிம்மதி இன்றி அலைந்து திரிந்த பல லட்சக்கணக்கான இஸ்லாமியரை ஐந்து வேளை தொழுகையாளிகளாக மாற்றி ஏகத்துவத்தின் பால் கொண்டு வந்துள்ளாரே.... அதற்காகவா?


இரண்டு எம் எல் ஏ சீட்டுக்கும் ஒரு எம் பி சீட்டுக்கும் தன் மானத்தை அடகு வைத்து கோபாலபுரத்திலும் போயஸ் தோட்டத்திலும் வீழ்ந்து கிடந்த நம் மக்களுக்கு உண்மையை விளக்கி திமுக அதிமுக தலைவர்களை அரண்மனைக் காரன் தெருவை நோக்கி வரவழைத்திருக்கிறாரே.... அதற்காகவா?

இந்தியா முழுக்க இந்துத்வா வளர்ந்து கொண்டிருக்க தமிழகத்தில் தேய்ந்து வருகிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்து முஸ்லிம் முறுகல் நிலையை நீர்த்துப் பொகச் செய்துள்ளாரே..... அதற்காகவா?

காதியானிகள், கபுர் முட்டிகள், மத்ஹப் மாயையில் தவழும் சாதி வெறியர்கள் அனைவரையும் நேரடி விவாதத்துக்கு அழைத்து அனைவரையும் ஏகத்துவத்தின் பால் மண்டியிட வைத்துள்ளாரே.... அதற்காகவா?

எதற்காக எதிர்க்கிறீர்கள்? அதற்கான காரணத்தை சொல்லி விட்டு எதிர்க்க கிளம்புங்கள்..... உங்களின் இந்த எதிர்ப்பு ஏகத்துவத்தை மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கும். அதனை வருங்காலம் உணர்த்தும். இதனை நானும் நீங்களும் பார்க்கத்தான் போகிறோம் இறைவன் நாடினால்....

Friday, November 06, 2015

சமாதி வழிபாட்டினர் மத்ஹப் என்ற சாதி வெறியினரின் கூத்துக்கள்!



சமாதி வழிபாட்டினர், மத்ஹப் என்ற சாதிப் பிடியில் வீழ்ந்தவர்கள், புரோகிதத்தால் வயிறு வளர்ப்பவர்கள் என்ற ஒரு பெருங் கூட்டம் இலங்கையில் பிஜேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு அளித்த அனுமதியை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோஷமிட்டனர் மதியிழந்தவர்கள். ஆனால் இலங்கை அரசு அனுமதியை திரும்பப் பெறவில்லை. இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்று இலங்கை சென்றடைந்தார் சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன்.

அன்றிலிருந்து இன்று வரை ஏகத்துவ பிரசாரம் எதிர்ப்பில்தான் வளர்ந்துள்ளது. இலங்கையிலும் இறைவன் நாட்டப்படி ஏகத்துவ பிரசாரம் மேலும் தழைத்தோங்கும். அண்ணன் பிஜே அவர்களுக்கு இறைவன் பூரண உடல் நலத்தை தந்தருள்வானாக!

எல்லா புகழும் இறைவனுக்கே!

Tuesday, November 03, 2015

இலங்கை செல்கிறார் பி.ஜே......



சிங்கள மொழியில் குர்அனின் மொழி பெயர்ப்பை வெளியிடுவதற்காக வரும் 8 ம் தேதி இலங்கை செல்கிறார் பிஜே. இது பற்றிய செய்தியை பிரபல இலங்கை நாளிதழ் 'நவமணி' செய்தியாக கொடுத்துள்ளதை நாமும் படிப்போமே.....

Monday, October 26, 2015

ஜூனியர் விகடன் கேள்விகளுக்கு பி.ஜைனுல் ஆபிதீன் பதில்!



ஜூனியர் விகடன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பாளர் பி.ஜைனுல் ஆபிதீன்........

"பாகிஸ்தான் தீவிரவாதியை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தாதீர்கள்!"_ பீ.ஜைனுல் ஆபிதீன்

''இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப் படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''

''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை.

கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக் கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.

''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?''

''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது.
நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ் நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.

அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும் போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''

''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''

''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது.

நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச் செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்த போதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைது செய்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் தான், தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.

தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது.
பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம்.

இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''

''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்த வர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது.
ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பா ன்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்?

நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலை செய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.''

Friday, June 26, 2015

பிஜேயின் புத்தகங்கள் சவுதி அரேபியாவில் இலவசமாக!





நான் ரியாத்தில் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு பக்கத்தில்தான் 'சவுதி அழைப்பு வழிகாட்டுதல் மையம்' கிளை ஒன்று அமைந்துள்ளது. உலகத்தின் பல மொழிகளில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அதில் பிரதானமாக நமது தமிழகத்தின் மார்க்க அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீனின் பல புத்தகங்கள் ஆங்கிலம், அரபி, பிலிப்பைன், இந்தோனேஷியா, உருது, பெங்காள் போன்ற பல மொழிகளில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தாவா சென்டர் நடத்தும் பல போட்டிகளுக்கு பிஜே அவர்களின் புத்தகத்தையே அங்குள்ள ஆலிம்கள் தேரிவு செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. 'திருமறையின் தோற்றுவாய்' 'பித்அத் ஓர் ஆய்வு' போன்ற புத்தகங்களை நானே பல இஸ்லாம் அல்லாத நண்பர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளேன்.

அமெரிக்காவுக்கு ஆதரவாக சவுதி அரசு எடுக்கும் பல முடிவுகளை பகிரங்கமாக எதிர்த்தவர் பிஜே. அப்படியிருந்தும் அவரது ஆய்வுத் திறனை மதிப்பில் எடுத்து அவரது புத்தகங்களை இலட்சக் கணக்கில் அச்சடித்து விநியோகிக்கிறது சவுதி அரசு. இவ்வாறு பதிப்பிட்டு வெளியிடுவதற்கு ராயல்டியாக லட்சக் கணக்கில் பிஜேக்கு பணம் வர வேண்டும். ஆனால் அந்த பணத்தையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார் பிஜே. இது சவுதி ஆலிம்களை பிஜேயை பற்றிய மதிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. மதினா பல்கலைக் கழகத்தில் பிஜேயின் புத்தகங்களை மாணவர்கள் ஆய்வு படிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு பிஜே அவர்களை கௌரவ விருந்தினராக ஹஜ் கிரியைகளுக்காக முன்பு ஒரு முறை அழைப்பு விடுத்திருந்தது சவுதி அரசு. ஆனால் அந்த நேரத்தில் தமிழகத்தில் பிஜேயின் நிகழ்ச்சிகள் பல இருந்ததால் அந்த அழைப்பை பிஜே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இவரின் அருமை தெரியாமல் தமிழக இஸ்லாமியர்களில் பலர் பிஜே யை வைத்து இல்லாததும் பொல்லாததும் சொல்லி தங்களை முன்னிலைப்படுத்தப் பார்க்கிறார்கள். ஷைபுதீன் ரஷாதி, ஜமாலி, போன்றவர்கள் பிஜேயை எதிர்த்தே பிரபலமானவர்கள் :-) இங்கு பிஜேயை வைத்து பிரபலமடையலாம். நாளை மறுமையில் எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டே மக்களை வழி கெடுத்தாயே என்று ஷைபுதீன் ரஷாதியையும், ஜமாலியையும் இறைவன் உலுக்கி கேட்கும் பொது என்ன பதிலை வைத்துள்ளார்கள்?

இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

Wednesday, June 17, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!



இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

- ரமலான் தொடர் சொற்பொழிவு - 2015

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

வஹீ அல்லாததை பின்பற்றுவது வழிகேட்டில் சேர்க்குமா?

மத்ஹபு சட்டங்களை பின்பற்றுவது மார்க்கமாகுமா?

ஸலஃபுக் கொள்கை சரியானதா?

சஹாபாக்களுக்கு வஹீ வருமா? அவர்களை பின்பற்றலாமா?

சஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடா?

முன்னோர்கள் வழியில் சென்றால் நரகமா?

இமாம்கள் சொன்னால் அது இறைவனின் வழிகாட்டுதல் ஆகிவிடுமா?

குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுக்கலாமா?

அப்படி முரண்படக்கூடிய செய்திகளை மறுத்து நாம் காஃபிராகிவிட்டோமா?.

நாம் அறிவுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுக்கின்றோமா?

திருக்குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுத்தது நாம் மட்டும் தானா?

இவ்வாறு மறுப்பதன் மூலம் மனோஇச்சையை பின்பற்றுகிறோமா?

இவ்விஷயத்தில் மத்ஹபு இமாம்களின் நிலை என்ன?

மற்ற மார்க்க அறிஞர்களின் நிலை என்ன?

ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

திருக்குர்ஆனோடு முரண்படக்கூடிய செய்திகளுக்கு விபரீதமான வியாக்கியானங்கள் கொடுத்து உண்மையிலேயே அந்த செய்திகளை மறுப்பவர்கள் யார்?

சஹாபாக்களால் மறுக்கப்பட்ட செய்திகள் அறிஞர்களால் மறுக்கப்பட்ட செய்திகள் வஹீச் செய்திக்கு முரணான கட்டுக்கதைகளை மறுக்க காரணங்கள் என்ன?

அத்தகைய முரண்படக்கூடிய செய்திகளின் பட்டியல் என்ன?

அதற்கான விளக்கங்கள் என்ன?

உள்ளிட்ட செய்திகளுக்கு விளக்கமளிக்கும் உரை :

தலைப்பு : இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

ரமலான் மாதம் முழுவதும்....

ஆன்லைன் பீஜே (onlinepj.com) இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

நேரம் : இரவு 10.00மணி முதல் 11மணி வரை இன்ஷா அல்லாஹ்...

Monday, June 01, 2015

மேலப் பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய ஒரு மாநாடு!







நேற்று மேலப் பாளையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் வரலாற்று சிறப்பு மிக்க மாநாட்டையே நாம் பார்கிறோம்.

இதே மேலப் பாளைத்தில் 20 வருடங்களுக்கு முன்பு ஏகத்துவத்தை சொன்ன காரணத்திற்காக சமாதி வழிபாட்டாளர்களாலும், புரோகிதர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப் படை பிஜே அவர்களை அரிவாளைக் கொண்டு வெட்டியது. ஏகத்துவத்தை இந்த கொலையின் மூலம் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பது எதிரிகளின் திட்டம். அப்போது அந்த கூட்டத்தில் 50 பேர் கூட இருந்திருக்கவில்லை. இறைவன் கிருபையால் அன்று பிஜே அந்த கொலை முயற்சியிலிருந்து தப்பி விட்டார்.

ஆனால் அதே இடத்தில் நேற்று ஏகத்துவத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவை பார்க்கிறீர்கள். இந்த கூட்டம் பிரியாணி பொட்டலத்துக்கு ஆசைப் பட்டு வந்த கூட்டமல்ல. ஏகத்துவத்தை தமிழகம் தாண்டி அகில உலகுக்கும் எடுத்துச் செல்வோம் என்று சூளுரைக்க வந்த கூட்டம். தங்களின் சொந்த கை காசை போட்டு வெளியூர்களில் இருந்து வந்து குழுமிய கூட்டம். இந்த கூட்டத்தை எங்களின் கிராமத்திலும் காணொளியாக காட்டப்பட்டது. காணொளியைக் காணுவதற்கும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, April 18, 2015

ஜமாலியின் புகாரை வாங்க மறுத்த கமிஷனர் ஜார்ஜ்!





நபிகள் நாயகத்தின் அடக்கத்தலத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள பச்சை நிற டூம் அன்னை ஆயிஷா அதனை வீடாக பயன்படுத்தியபோது இருக்கவில்லை. இது போன்று தனது அடக்கத்தலத்துக்கு மேல் கட்டடம் கட்டச் சொல்லி இறைத் தூதரும் சொல்லவில்லை. அதற்கு எதிராகத்தான் சொல்லியுள்ளார்கள். அவ்வாறு கட்டுபவர்களை நபிகள் நாயகம் சபித்துள்ளார்கள். முதன் முதலாக சுல்தான் கலாவூன் சாலிஹி என்ற ஆட்சியாளர் ஹிஜ்ரி 678ல் மரியாதை நிமித்தமாக மரத்தால் ஆன ஒரு டூமை நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தின் மேல் கட்டுகிறார். அதன் பிறகு சிமெண்டால் கட்டப்பட்டு வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு ஹிஜ்ரி 1253ல் துருக்கி உதுமானிய சுல்தான் அப்துல் அல் ஹமீத் அந்த டூமின் மேல் பச்சை வர்ணத்தை பூசுகிறார். அதுவே இன்று வரை தொடர்கிறது. தற்போதய ஆட்சியாளர்களிடம் சவுதி அரேபியாவை ஒப்படைக்கும் போது 'தாங்கள் செய்வித்த மாற்றங்களை இடிக்க வேண்டாம் அப்படியே விட்டு வைத்திருங்கள்' என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். தராவீஹ் மெக்காவில் இருபது ரக்ஆத்துகள் தொழ வைக்கப்படுவதும் இதனை பின் பற்றியே. அந்த ஒப்பந்தத்தை மீற முடியாமல்தான் சவுதி அரசு அந்த பச்சை நிற டூமை தகர்க்காமல் விட்டு வைத்துள்ளார்கள். காவலர்களையும் அங்கு நிறுத்தி வணங்க முற்படுபவர்களை தடுத்து நிறுத்தி பள்ளிக்கு தொழ அனுப்புவார்கள். எனவே மதினாவில் உள்ள அந்த டூமுக்கு எந்த புனிதத்துவமும் இல்லை என்பதை இதிலிருந்து விளங்குகிறோம். இதை சுட்டிக் காட்டித்தான் டிஎன்டிஜே யின் தலைவர் சையது இப்றாஹிம் 'இஸ்லாமிய சட்டங்களின் படி அந்த டூம் இடிக்கப்பட வேண்டும்' என்று கூறியது. இதனை இவர் இன்று புதிதாக சொல்லவில்லை. பல அறிஞர்கள் இதற்கு முன்பே மதினாவில் உள்ள டூமை இடிக்க வேண்டும் என்ற மார்க்க கட்டளையைக் கொடுத்துள்ளனர்.

தர்ஹாக்களை வைத்தே பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் மார்க்க கோமாளி ஜமாலி கமிஷனர் ஜார்ஜிடம் சென்று சையது இப்றாஹிமை கைது செய்ய புகார் அளித்தாராம். ஆனால் அதற்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். வெளி நாட்டில் உள்ள ஒரு கட்டிடத்தை பற்றிய விமரிசனங்களுக்கெல்லாம் இங்குள்ள காவல்துறை எதன் அடிப்படையில் கைது செய்யும் என்ற அடிப்படை அறிவு கூட ஏழு வருடம் மதராஸாவில் ஓதிய இந்த மார்க்க கோமாளிக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. :-) இது போன்ற இரண்டாந்தர ஆலிம்களிடம் மார்க்க அறிவும் இல்லை. உலக அறிவும் இல்லை. ஜமாலி போன்றவர்கள் மார்க்கத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் என்பது தெரிந்தும் இவருக்குப் பின்னாலும் இன்னும் ஒரு சிலர் இருந்து வருவது மேலும் ஆச்சரியத்தை தருகிறது.

சையது இப்றாஹிம் சில நேரம் வார்த்தைகளை சற்று கடுமையாக பிரயோகிப்பதை நானும் ஆதரிக்கவில்லை. அதனை பல பதிவுகளில் சுட்டிக் காட்டியும் இருக்கிறேன். ஆனால் அதனை காரணமாக வைத்து அவர் சொல்லும் எல்லாவற்றிலும் குறை கண்டு அதனை பதிவுகளாக்கி சிலர் மகிழ்கின்றனர். ஒருவர் தனது பின்னூட்டத்தில் 'உணர்வு அலுவலகத்தில் பத்திரிக்கை பண்டல் போட்டுக் கொண்டிருந்தவர் சையது இப்றாஹிம்' என்று கிண்டலடிக்கிறார். பத்திரிக்கை பண்டல் போட்டுக் கொண்டிருந்தவர் மார்க்கம் சொல்லக் கூடாதா? இது போன்ற சாமான்யர்களையும் மார்க்க மேதைகளாக மாற்றியது குர்ஆனின் எளிய நடை என்றால் மிகையாகாது. எனவே விமரிசனம் வையுங்கள். அது ஆக்கபூர்வமாக இருக்கட்டும்.

வீண் அபாண்டங்களையும் பழிச் சொற்களையும் சுமத்தி தவ்ஹீத் ஜமாத் பிரசாரகர்களுக்கு மேலும் நன்மையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை. :-) தவறிலும் ஒரு நன்மை என்று இதனை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

Tuesday, January 06, 2015

கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்!

கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்!



கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில் கண்ட அனுபவம்.
கடந்த 01.12.2014 அன்று நானும் ஜமாத்தின் துணை தலைவர் சகோதரர் பர்சான் அவர்களும் சென்னையில் இருந்து இலங்கை வரும் வழியில், சென்னை விமான நிலையத்தில் சோதனை பகுதியில் விசாரனைக்காக நான் தடுத்து நிறுத்தப்பட்டேன்.

நமது ஜமாத் (SLTJ) வக்கீல் சகோ. ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்குத் தேவையான சில மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அதன் மொத்தப் பெருமதி 25,000ம் இந்திய ரூபாய்கள். இதற்காகவே நான் சோதனை பகுதியில் தமிழ் பேசும் ஓர் அதிகாரியினால் நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டேன்.

அப்போது, மேலதிக விசாரணைக்காக உயர் அதிகாரி ஒருவர் வந்து என்னை அழைத்து சென்றார். மாலை 4.00 மணி ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வர வேண்டும். சரியாக 2.00 மணிக்கெல்லாம் என்னை விசாரிக்க குறித்த உயர் அதிகாரி அழைத்து சென்றார்.

நான் வாங்கிய மருந்துகளுக்கான அனைத்து ரிசிப்ட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் கையில் இருந்ததினால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஆனால் அது எனக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் என்றே நினைக்கின்றேன். - அல்ஹம்து லில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே!). ஆம் குறித்த அதிகாரி என்னை விசாரிக்க அழைத்து சில அடிப்படையான கேள்விகளை முன்வைத்தார்.

# எதற்காக தமிழகம் வந்தீர்கள்?

# யாரை சந்தித்தீர்கள்?

# எங்கு தங்கினீர்கள்?

# இலங்கையில் என்ன செய்கின்றீர்கள்?

இப்படி பல விதமான அடிப்படையான கேள்விகளை அவர் கேட்கும் போது யாரை சந்தித்தீர்கள்? எங்கு தங்கினீர்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்குமான எனது பதில் அவருடைய விசாரனையை நட்பு ரீதியிலான சந்திப்பாக மாற்றியது.

அதிகாரி : ‪#‎யாரை‬ சந்தித்தீர்கள்?

நான் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை சந்தித்தேன்.

அதிகாரி : எங்கு தங்கினீர்கள்?

நான் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகத்தில் தங்கினேன்.

அதிகாரி : அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

நான் குறித்த அதிகாரிக்கு விபரமாக தெளிவு படுத்த ஆரம்பித்தேன். அப்போது குறுக்கிட்ட அவர், தவ்ஹீத் ஜமாத் தொடர்பில் நான் கடந்த ஒரு மாதமாகவே நன்றாகவே படித்துக் கொண்டேன், அந்த அமைப்பின் தலைவரின் உரைகளை பார்த்திருக்கின்றேன். தமிழகத்தில் நான் மரியாதை வைக்கும் அரசியல் தலைவர்களில் முதலிடம் அவருக்குத்தான் என்று ஜமாத்தை பற்றி பேசலானார்.
நான் வாயடைத்து மௌனமாக அமைதி காத்தேன். நான் அவருக்கு ஜமாத்தைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ அதைவிட அதிகமாகவே அவர் என்னிடம் சொல்லிவிட்டார். - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

தொடர்ந்து பேசிய அவர் சொன்ன ஒரு செய்தி கண் கலங்க வைத்தது. “தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கடந்த மாதம் நடத்திய தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை 10 வருடங்களுக்கு முன் நடத்தியிருந்தால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற சிறு எண்ணம் கூட இந்திய அளவில் ஏற்பட்டிருக்காது. - இந்தப் பிரச்சாரத்தை தமிழகத்தினை தாண்டி இந்திய அளவில் அவர்கள் செய்ய வேண்டும் அதுதான் எனது ஆசை.

"நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன்" என்று கூறி தான் வணங்கி வரும் ஒரு நபரின் புகைப்படத்தை காண்பித்தவர் - "தற்போது இவர் விஷயத்தில் சந்தேகம் எனக்குள் உண்டு. நான் இணையதளங்களில் இஸ்லாம் பற்றி படித்து வருகின்றேன். இங்கு கடமையில் இருக்கும் போது நிறைய பாதிரியார்களை சந்தித்திருக்கின்றேன். கிருத்தவம் தொடர்பில் கேட்டிருக்கின்றேன். இன்று தான் இஸ்லாம் மார்க்கம் தொடர்பில் நேரடியாக கேள்வி கேட்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சில கேள்விகள் கேட்கலாமா?" என்று அவருக்கே உரிய பணிவுடன் வினவினார். தாராளமாக கேளுங்கள் என்ற போது, சில கேள்விகளை அடுக்கினார்.

‪"‎ISIS‬ , அல்காயிதா போன்ற இயக்கங்கள் சுவர்க்கம் செல்வார்களா?"

‪"ஜுப்பா‬ அணிந்து கொள்வது ஏன்?"

‪"மார்க்கம்‬ பேசும் நீங்கள் ஜுப்பா அணியவில்லையே அது ஏன்?"

‪"நான்‬ குர்ஆன் படிக்க அனுமதியுண்டா?"

‪"LTTE‬ யினர் இலங்கையில் செய்த யுத்தம் ஜிஹாதாகாதா?"

போன்ற பல கேள்விகளை முன்வைத்தார்.

இவற்றுக்கு நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது.... விமானத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு அதிகாரி உள்ளே வந்து விமானத்திற்கு இவரை அனுப்ப முடியுமா? என்று கேட்டார்.

"நான் இவரை அழைத்து வருகின்றேன். நீங்கள் போகலாம்" என்று பதில் அளித்து குறித்த அதிகாரியை அனுப்பியவர். தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். இரத்த தானத்தில் தொடர்ச்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 08 வருடங்களாக முதல் இடம் பிடித்துள்ளது என்ற தகவலை சொன்ன போது ஆச்சரியப் பட்டவர் - சிறந்த காரியம், சிறந்த காரியம் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். ‪#‎சற்று‬ நேரத்தில் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்” என்று கூறிவிட்டு வெளியில் சென்றவர். இன்னொரு அதிகாரியை அழைத்து வந்தார். அவரை என்னிடம் இவ்வாறு அறிமுகம் செய்தார்.

“இவர் எனது நண்பர், இவர் தான் எனக்கு தவ்ஹீத் ஜமாத் பற்றிய வீடியோக்களை அறிமுகம் செய்தார். அறிஞர் ஜெய்னுலாப்தீன் உரைகளை அடிக்கடி எனக்கு அனுப்பித் தருவார்" என்றார். அப்போது “ஹாய்” என்று கூறி என்னிடம் பேசிய குறித்த அதிகாரி “நாங்கள் உங்களுக்கு ஸலாம் சொல்லலாம் தானே?” என்று கேட்டார். - அப்போது தான் அவரும் ஒரு மாற்று மத சகோதரர் என்று புரிந்தது. - “தாராளமாக நீங்கள் சொல்லலாம், நாங்கள் பதில் சொல்வோம்” என்ற போது, என்னிடம் கை நீட்டி முஸாபஹா செய்து கொண்டார். பின்னர் பேசிய அவர், “எனது நண்பர் ஒருவர் எனக்கு இந்த வீடியோக்களை அனுப்பித் தருகின்றார். நான் நினைக்கின்றேன் அவர் தவ்ஹீ்த் ஜமாத் உறுப்பினர்", என்று கூறினார்.

சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் பின் எனது தொலை பேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட குறித்த மேலதிகாரி அவர்கள் "மீண்டும் நீங்கள் சென்னை வரும் போது கண்டிப்பாக என்னை சந்திக்க வேண்டும்". என்று அன்பாய் கோரிக்கை வைத்தவர்.

"வாருங்கள் உங்களை கொண்டு போய் விடுகின்றேன்" என்றார். "வேண்டாம் நான் போகின்றேன்" என்று அவரிடம் கூறிய போது "இல்லை, நானும் கூட வருகின்றேன்" என்று கடைசி செக்கிங் முடிக்கும் வரை கூடவே வந்தார். எந்தவொரு அதிகாரியும் அவரைத் தாண்டி நான் கையில் எடுத்து வந்த மருந்துகளை பற்றி விசாரிக்காத வண்ணம் கடைசி வரை என்னை அழைத்து வந்து விட்டார். மிக அருமையாக நடந்து கொண்ட அந்த அதிகாரிக்கு அல்லாஹ் நேர் வழியைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தேன்.

தவ்ஹீத் ஜமாத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் யார் காதுகளில் எல்லாம் எட்ட வேண்டும் என்று நினைத்தோமோ அவர்களின் காதுகளில் எல்லாம் தாராளமாக எட்டியுள்ளது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

- Rasmin Misc. Sltj Rakwana

Wednesday, December 03, 2014

பிஜே தொழாமல் தன் கடையில் கல்லா கட்டுகிறாரா?

பிஜே தொழாமல் தன் கடையில் கல்லா கட்டுகிறாரா?

திரு சாரங்கன்!

//இவ்வளோ செய்த தவ்ஹீத் அண்ணன், ஏன் கள்ளக்கடத்தலையோ, பாம் செய்வதையோ, ஹிந்து தலைவர்களை கேவேலமாக வெட்டிக் கொள்வதையோ தடுக்க முடியல.//

உலகில் எங்கோ எவனோ செய்யும் சில கிறுக்குத்தனங்களுக்கு தவ்ஹீத் ஜமாத்தின் அண்ணன் பிஜே எப்படி பொறுப்பேற்க முடியும். உங்கள் மதத்திலும் பிரக்யாசிங், ஜெனரல் புரோகித், அசீமானந்தா, சாமியார் ராம்பால் என்று இன்று வரை பட்டியல் நீளுகிறதே அதற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? அல்லது ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி என்ன செய்துள்ளது என்று நானும் கேட்கலாமே....

அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை ஒரு மாதம் முழுக்க தமிழகமெங்கும் தீவிரவாதத்துக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதை நீங்கள் அறியவில்லையா? புதிய வாழ்வியல் இதழில் வந்த இந்த பேட்டியை படித்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
http://www.tntj.net/290312.html
தீவிரவாதத்தை இன்றும் என்றும் கடுமையாக எதிர்ப்போம். அதில் மாற்றுக் கருத்தில்லை.

//தொழுகைக்கே போகாம கல்லா கட்டும் அண்ணனை வழி நடந்து செல்லும் தவுஹீத் ஜமாத் வால்க//

ஏதோ பீஜே அண்ணனுக்கு செகரட்டரி போல் பேசுகிறீர்கள்? அவர் தொழுவதில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? அவர் தனது மேடைப் பேச்சுகளுக்கு எந்த சன்மானமும் வாங்குவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊருக்கு அவர் வந்த போது அதிக பணம் நாங்கள் கொடுத்தும் போக்குவரத்து செலவுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு பாக்கியை திருப்பி தந்து விட்டார். அதுவும் எளிமையாக பேரூந்தில்தான் வந்தார்.

அமெரிக்காவில் நாசாவில் பணியிலிருக்கும் விஞ்ஞானி ஆத்மராம் என்ற பிராமணர் அண்ணன் பிஜேயின் சொற்பொழிவுகளை இணையத்தின் மூலமாக கேட்டு தெளிவடைகிறார். சென்னை வந்த அவர் அண்ணன் பிஜேயை அலுவலகத்தில் நேரில் சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை தருகிறார்.

'என்ன இது?' - பிஜே

'எங்கள் வழக்கப்படி இது குரு தட்சணை. இறைவனை எவ்வாறு நெருங்குவது அதன் வழி முறைகள் என்ன என்பதை பல இடங்களில் தேடி அலைந்தேன். எங்கு சென்றாலும் எனது மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது. முடிவில் உங்களின் ஆன்லைன்பிஜே வெப் சைட் கிட்டியது. அதன் மூலம் பல அரிய உண்மைகளை தெரிந்து கொண்டேன். எங்கள் மதத்தில் எங்களின் வேத புத்தகத்தில் உள்ள பல செய்திகள் குர்ஆனிலும் இருப்பதை தெரிந்து கொண்டேன். குழப்பமடைந்த என் மனம் இன்று ஒரு தெளிவான நிலைக்கு வந்துள்ளதென்றால் அதற்கு நீங்களும் ஒரு காரணம். எனவே இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்' - ஆத்மராம்.

'நான் இது போன்ற அன்பளிப்புகளை வாங்குவதில்லை. உங்களுக்கு ஏதும் கொடுக்க விருப்பமிருந்தால் அனாதை இல்லம், முதியோர் இல்லம் போன்ற இல்லங்களை தவ்ஹீத் ஜமாத் என்ற எங்கள் இயக்கம் மூலம் நடத்தி வருகிறோம். அதற்கு இந்த தொகையை கொடுத்து ரஷீது பெற்றுக் கொள்ளுங்கள்' - பிஜே

இதனை சற்றும் எதிர் பார்க்காத ஆத்மராம் பிஜே யின் மதிப்பு தன் அளவில் மேலும் உயர்ந்துள்ளதாக கூறியதைப் பார்க்கிறோம். புத்தகங்களின் மூலம் வரும் வருமானமும், சென்னை மண்ணடியில் அவர் வைத்துள்ள கடையின் வருமானமும் தான் அவரது குடும்பத்தை நடத்துகிறது. அந்த கடையின் மூல தனம் கூட தொண்டியில் உள்ள தனது பூர்வீக சொத்தை விற்று அந்த பணத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார். எனவே இந்த அளவு கை சுத்தமானவரை நெஞ்சறிந்து எவ்வாறு உங்களால் பொய்யுரைக்க முடிகிறது?

//ஒன்றே குலம் அது இஸ்லாம்தான் இருக்கணும் இல்லாட்டி அங்கு ரத்தக் குளம் தான் மிஞ்சும். இது தானே இஸ்லாத்தின் கொல்கை.//

'இம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது'

-குர்ஆன் 2:256

எவரையும் வற்புறுத்தி இந்த மார்க்கத்தில் இணைக்கும்படி குர்ஆன் எங்களுக்கு கட்டளையிடவில்லை.

'இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் இறைவனின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

-குர்ஆன் 9:6

இறைவன் இந்த வசனத்தில் சிலை வணக்கம் புரிபவர்களை பாதுகாப்பு கோரி வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படியும் அவர்களின் சொந்த இடத்தில் பாதுகாப்பாக சேர்ப்பிக்கும் படியும் நபிக்கு இறைவன் கட்டளையிடுகிறான். குர்ஆன் இப்படி கூறியிருக்க அதற்கு மாற்றமாக தக்கியா செய்வது நீங்களன்றோ!

Sunday, November 23, 2014

அலைகடலென குழுமி விட்டார்!







எத்தனை எத்தனை அவதூறுகள்

அத்தனையும் தாண்டி இன்று

அரங்கத்துக்கும் வெளியே மக்கள்

அலைகடலென குழுமி விட்டார்.

எல்லா புகழும் அந்த படைத்த

ஒருவனுக்கே என்றும் உரித்தாகட்டும்!

இடம் : கோவை PVG மஹால் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில்
உரை :PJ
நாள் :23:11:2014

Saturday, November 22, 2014

கழுவற மீனில் நழுவுற மீன் - அப்பாஸ் அலி



போன மாதம் நான் தபூக் சென்றிருந்த போது தற்போது தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்களால் பிரபலப்படுத்தப்பட்டிருக்கும் முன்னால் தவ்ஹீத் ஜமாத் தாயி சகோ அப்பாஸ் அலி அவர்களோடும் சகோ சங்கை அப்துல் அஜீஸ் அவர்களோடும் ஒரு நாள் முழுக்க சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. இறைத் தூதர் சாலிஹ் நபியை பின்பற்றி வாழ்ந்து பின்னர் இறைவனால் தண்டனை கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஊரான மதாயீன் சாலிஹ் என்ற நகருக்கு சென்றோம். சகோ அப்பாஸ் அலியோடும் சகோ அப்துல் அஜீஸோடும் ஒரு நாள் முழுக்க அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்க இறைவன் வாய்ப்பை வழங்கினான். தபூக்கில் வேலை முடிந்து ரியாத் வந்து ஒரு சில நாட்களில் இணையத்தில் சகோ அப்பாஸ் அலியின் கொள்கை மாற்றம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு மனிதன் இரண்டொரு நாளில் இந்த அளவு மாற்றங்களை பெற முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன்.

'குர்ஆனுக்கு எந்த ஹதீஸ்களும் முரண்படாது: அவ்வாறு முரண்படுகிறது என்று சொல்பவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்' என்று கூறி தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறி இன்று பல ஊர்களில் (அறந்தாங்கி உட்பட) பேசி வருகிறார்.

குர்ஆன் மட்டும் போதுமா? என்ற தலைப்பில் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய இந்த கட்டுரையை மேலதிக விபரத்திற்காக படித்துப் பாருங்கள்.

http://www.onlinepj.com/books/quran_natum_pothuma/#.VG8Me2f4bct

தவ்ஹீத் ஜமாத் நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை இந்த கட்டுரையைப் படித்து விளங்கிக் கொள்ளலாம்.

https://www.facebook.com/video.php?v=888967654455583

https://www.facebook.com/video.php?v=888977997787882

https://www.facebook.com/video.php?v=888985471120468

https://www.facebook.com/video.php?v=889832521035763

தனது நிலையில் எந்த அளவு தடுமாற்றத்தில் சகோ அப்பாஸ் அலி உள்ளார் என்பதில் இந்த மூன்று காணெளிகளையும் பார்த்து நாம் தெளிவடைந்து கொள்ளலாம். கழுவுற மீனில் நழுவுற மீன் என்று சொல்வார்களே அது இந்த காணொளிகளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். 'நபிகள் நாயகம் அவர்கள் பெயரால் சொல்லப்பட்டு வரும் எந்த ஆதாரபூர்வமான நபி மொழிகளும் குர்ஆனுக்கு முரண்படவே செய்யாது என்று நான் எங்குமே பேசவில்லை' என்றும் சொல்கிறார். ஆனால் எனது நிலைப்பாட்டை பிறகு அறிவிப்பேன் என்கிறார். ரொம்பவும் குழம்பியிருக்கிறார். மக்களையும் குழப்புகிறார்.

குர்ஆனுக்கு பல ஹதீஸ்கள் முரண்டுகிறது என்பது தனது ஆய்வில் இருக்கிறது என்பது உண்மையானால் அப்பாஸ் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் உலக முடிவு நாள் வரையில் இந்த ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும். தவ்ஹீத் ஜமாத்தில் இது போன்று மேலும் பல ஆய்வுகள் தினமும் நடந்துதான் வருகிறது. முன்பு எடுத்த முடிவுகளை வீம்புக்காக மறுக்காமல் ஆய்வுகளுக்குப் பிறகு மாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். எனவே தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறுவதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்ற ரீதியில் தான் இவரது நிலைப்பாடு இருந்துள்ளது என்பதனை இந்த மூன்று காணொளிகளைக் காண்பவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தால் அதிக வருமானம் கிடைக்காது. அதே எதிர் தரப்பில் இருந்தால் சகட்டு மேனிக்கு பணம் வந்து கொண்டிருக்கும். தமிழகம் எங்கும் பிரபலமாகலாம். தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் இனி அப்பாஸ் அலியை தூக்கி வைத்து கொண்டாடலாம். இன்னும் வெளியில் சொல்லாத வேறு பல காரணங்களும் இருக்கலாம். இது தான் அப்பாஸ் அலி இன்று தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறியதற்கான காரணமே யொழிய கொள்கை மாறுபாடு அல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் எந்த கொள்கையையும் எந்த இடத்திலும் விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் மறுத்ததே கிடையாது.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக நாம் பார்த்து வருவது என்ன? அபு அப்துல்லாஹ் இந்த ஜமாத்தை விமரிசித்தார்: அதன்பிறகு ஜவாஹிருல்லாஹ், பிறகு ஹைதர் அலி, அடுத்து முக்காடு சம்சுதீன் காசிமி, பிறகு எஸ் எம் பாக்கர், அதன் பிறகு அலீம் புகாரி தற்போது அப்பாஸ் அலி என்று வரிசையாக வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு ஆறு மாதத்துக்கு தவ்ஹீத் ஜமாத்தின் எதிர் தரப்பினரால் கொண்டாடப்படுவார்கள். அவர்களின் வீடியோக்களை முடிந்த வரை ஷேர் பண்ணுவார்கள். தவ்ஹீத் ஜமாத்தின் வீரியத்தை முடிந்த வரை குறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் சில காலம் கழித்து உண்மைகள் வெளி வரும். பழையபடி தவ்ஹீத் ஜமாத்தின் உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும். பழையபடி எதிர்த்தவர்கள் மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள். இறைவன் இது போன்ற விவாதங்களுக்குப் பிறகு தான் தவ்ஹீத் ஜமாத்தின் மேன்மையை மேலும் மேலும் மேலோங்கச் செய்கிறான். இன்றுள்ள தாயிக்களின் இறப்புக்கு பின்னாலும் இந்த ஜமாத் தொடர்ந்து தனது பணிகளை செய்து வரும். அது உலக முடிவு நாள் வரை இறைவன் உதவியால் தொடரும்.

Saturday, October 18, 2014

வஹாபியத்தால் தமிழகத்தின் அமைதி கெடுகிறதா?

திரு க்ருஷ்ணகுமார்!

//நான் சொல்ல வந்ததெல்லாம் சங்க நூற்கள் தமிழர் தம் வாழ்விடங்களை ஐவகை நிலங்களாகப் பிரித்து அந்த ஐவகை நிலங்களில் ஐந்து கடவுட்களை வழிபட்டதைப் பகிர்ந்தது.//

அடடா... நான் இதனை மறுக்கவில்லையே! ஐந்து நிலங்களையுடைய மக்கள் தங்கள் கற்பனைக்கு ஒப்ப பல தெய்வங்களை வணங்கியுள்ளனர். அதே நேரம் ஏக தெய்வ கொள்கையும் அதே தமிழர்களிடத்தில் இருந்துள்ளது. ஏக தெய்வ கொள்கைக்கு மாறுமாறு சித்தர்கள் தமிழர்களை கேட்டுக் கொள்வதாக வரும் பாடல்களை நான் முதலிலேயே கொடுத்துள்ளேன். திருவள்ளுவரும் பல இடங்களில் ஏக தெய்வ கொள்கையை பறை சாற்றுகிறார். திரு மூலர் அருளிய திருமந்திரத்திலும் ஏக தெய்வ கொள்கை விரவிக் கிடக்கிறது.

குர்ஆனில் என்னதான் ஏக தெய்வ கொள்கையையை பறை சாற்றினாலும் ஒரு சிலர் தர்காக்களில் வீழ்ந்து கிடப்பது போல் தமிழ் இந்துக்களிடமும் பல தெய்வ கொள்கை புகுத்தப்பட்டது. அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களிலும் உபநிஷத்களிலும் ஏக தெய்வ கொள்கை பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. வேறு சில இலக்கியங்களில் பல தெய்வ கொள்கையும் வருகிறது. இரண்டில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். தர்ஹாக்கள் எவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்டு சில முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறதோ அதுபோலவே இந்துக்களில் பல தெய்வ கொள்கையும் மனிதர்கள் தங்களின் சுயநலத்துக்காக உருவாக்கிக் கொண்டனர் என்பதே எனது வாதம். இந்துக்களிலும் ,முஸ்லிம்களிலும் இந்த தவறு நிறையவே நடந்துள்ளது. அதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது வாதம்.

//தமிழர் தம் வாழ்வியலின் முக்யமான கூறு பன்மை. ஆப்ரஹாமியத்தின் அரக்கக்கோட்பாடு (இறைக்கோட்பாடு) போதிக்கும் அசிங்கம் மிரட்டும் ஒருமை. அதை நெகிழ்த்தும் தன்மையதானதே தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள். மாற்று மதத்தவருடன் ஒருங்கிணைந்து நல்லிணக்கமாக வாழ விழையும் ஒரு கோட்பாடு தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள்.//

வஹாபியம் தமிழகத்தில் தலை எடுத்த பிறகுதான் பல நல்ல காரியங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

1. இன்று தமிழகத்தில் பல ஆண்டுகளாக இரத்ததானம் செய்வதில் முதலிடத்தில் இருப்பது 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பே. இதன் மூலம் பல இந்துக்களும் கிறித்தவர்களும் பலனடைகிறார்கள். இலவசமாக அவர்களுக்கு இரத்தம் போய் சேருகிறது.

தமிழகம் மட்டுமல்லாது ஒவ்வாரு சுதந்திர தினத்தன்றும், ஹஜ் நேரங்களிலும் இதே அமைப்பு வளைகுடாக்களிலும் 'இரத்ததான முகாம் நடத்துகிறது' ரியாத்தில் பல வருடங்களாக இந்த அமைப்பு அரசிடமிருந்து விருதுகளை பெற்று வருகிறது. தமிழனின் பெருமையை கடல் கடந்தும் கொண்டு செல்வது நீங்கள் வெறுக்கும் வஹாபியர்களே!

2. தமிழகமெங்கும் இலவச ஆம்புலன்ஸ் வசதிகளை 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற இந்த வஹாபிய அமைப்பு ஏற்படுத்தி இந்து கிறத்தவ அன்பர்களுக்கும் இலவச சேவையை செய்து வருகிறது.

3. 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தி இந்துக்களை கேள்வி கேட்க வைத்து இந்து முஸ்லிம் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்ததும் இதே வஹாபிய இயக்கம்தான்.

4. சென்ற மாதம் பில்லி சூன்யம் என்பது வெறும் ஏமாற்று வேலை என்பதை நிரூபிக்க இந்த அமைப்பின் நிறுவனர் பி.ஜெய்னுல்லாபுதீன் தனது உயிரையே பணயமாக வைத்து 'தனக்கு யாரும் பில்லி சூன்யம் வைத்து அதில் வெற்றியடைந்து விட்டால் அவருக்கு பரிசு 50 லட்சம் என்று அறிவிப்பு செய்து ஒரு சூன்யக்காரரோடு ஒப்பந்தமும் இட்டு இன்று சூன்யம் பொய் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. முஸ்லிம்களை விட இந்துக்களே பில்லி சூன்யம் உண்மை என்று நம்பி தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருந்தார்க்ள. அவர்கள் அனைவரும் 'சூன்யம் என்பது பொய்' என்பதை விளங்கிக் கொண்டு இன்று நேர் வழிக்கு வந்துள்ளதும் இதே வஹாபிய அமைப்பினால்தான்.

5. இந்த மாதத்தை 'தீவிரவாத எதிர்ப்பு மாதமாக' அனுசரித்து தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் தீவிரவாதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதும் இதே வஹாபிய அமைப்புதான்.

தமிழகத்தில் வஹாபியம் வேரூன்றிய பிறகுதான் இந்து முஸ்லிம் கலவரங்களே இல்லாமல் போனது. தமிழகம் என்றுமே அமைதிப் பூங்காவாக திகழும். அதற்கு ஏக இறைவனை மட்டுமே வணங்கும் நாங்கள் என்றுமே உறுதுணையாக இருப்போம்.

Friday, September 05, 2014

சூன்யம் சம்பந்தமாக ஒரு இந்து நண்பரின் மனக் குமுறல்!



'தலச்சன் பிள்ளை மண்டை ஓடு, மனித மூத்திரம், மனித வியர்வை, எலுமிச்சைபழம், தேங்காய் என்று எல்லாம் இருந்தும் சூன்யம் பலிக்கவில்லையே! நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறதே! நம்ம சக்தி அவ்வளவுதானா?"

--------------------------------------------------------------------



இந்து முஸ்லிம் கிறித்தவர்கள் நாத்திகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடிய ஒரு விஷயம் உண்டென்றால் அது சூன்யம்தான். இதன் மூலம் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னமாக்கி விடலாம். மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும், நாத்தனார் அண்ணன் மனைவிக்கும் செய்வினை செய்துள்ளதாக கதை கட்டி விடுவர் பலர். இந்த செய்வினையை எடுக்கிறேன் பேர்வழி என்று முழு சொத்தையும் அழித்த குடும்பங்கள் எத்தனையோ! சூன்யம் ஒருவன் தனக்கு செய்திருப்பதாக ஒருவன் நம்பி விட்டால் அது ஒன்றே போதும் அவனது வாழ்வை சீர்குலைக்க.

இந்த கொடிய நோயை எப்படியாவது தமிழகத்தை விட்டு விரட்டி விடலாம் என்று தனது உயிரையே பணயம் வைத்து பிஜே சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும். சம்சுதீன் காசிமியிலிருந்து நேற்று புதிதாக முளைத்த அலீம் புகாரி வரை எத்தனை எதிர்ப்புகள்? மதக்கலவரம் உண்டாகி விடும், முட்டாள், அயோக்கியன் என்று வாயில் வந்ததை எல்லாம் அடித்து விட்டு பிஜே க்கு நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருப்பதை சில நாட்களாக பார்க்கிறோம். பிஜே என்ற தனிப்பட்ட மனிதரின் மேல் உள்ள காழ்ப்புணர்வை இப்படியா காட்டுவது? ஊர் பேர் தெரியாதவர்களெல்லாம் பிஜேயை எதிர்த்து சவால் விட்டால் பிரபலாகி விடுவோம் என்று எண்ணி வரிசையாக வருகின்றனர்.

சூன்யம் இருக்கிறதா? நபிகள் நாயகத்துக்கு சூன்யம் வைக்கப்பட்டதா? இறைவன் இதைப் பற்றி குர்ஆனில் என்ன சொல்கிறான் என்பதெல்லாம் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். அதற்கு என்றுமே பிஜே தயாராகவே இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க சூன்யம் என்ற பெயரில் பலரது வாழ்வை நாசமாக்கும் இந்த கொடிய நோயை தமிழகத்திலிருந்து விரட்டி விட நம்மால் ஆன ஆதரவையும் நல்குவோம்.

இது போன்ற சூன்ய நம்பிக்கையினால் நிம்மதியைத் தொலைத்த ராகவா என்ற இந்து இளைஞர் மனம் வெதும்பி இந்த காணொளியில் எதிர்ப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கிறார். இஸ்லாத்தைப் பற்றியோ மற்ற உலக அறிவோ அதிகம் இல்லாத இவருக்கு இருக்கும் தெளிவு கூட 7 வருடம் மதரஸாவில் ஓதிய சம்சுதீன் காசிமிக்கும், அலீம் புகாரிக்கும் இல்லையே என்று நினைக்கும் போது நமக்கும் வருத்தம் ஏற்படுகிறது. இவர்களுக்கும் இறைவன் நேர்வழிக் காட்டுவானாக!

காணொளியைக் கேளுங்கள்.

Friday, August 29, 2014

அன்று யாரோ! ஆனால் இன்று அப்துல் குத்தூஸ்!



எல்லாப்புகழும் இறைவனுக்கே!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எழுச்சியை சாலையில் கண்டேன்:

ஆம்! இவர் பெயர் அப்துல் குத்தூஸ். தொண்டியை பிறப்பிடமாக கொண்டவர், அந்தநாளில் பி.யு.சி (P.U.C) படித்தவர். ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவர். இன்று நிலக் கடலை வண்டி இழுத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இவரை தற்செயலாக தொண்டி அருகேயுள்ள உப்பூர் என்ற கிராமத்தில் சந்தித்தேன்.

அந்த நாளில், அதாவது இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் பல சிறந்த தலைவர்களின் வரலாற்று நூல்களைப் படிப்பது இவரது அன்றாட வழக்கம். அப்படி படித்துக் கொண்டிருக்கும் போது தான் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், இஸ்லாமிய வணக்க வழிமுறைகளும் இவர் கைகளுக்கு கிடைத்தன. அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் தான் உள்ளத்தை நொடிப் பொழுதில் திருப்புபவனாச்சே! திருப்பி விட்டான் இவர் உள்ளத்தை. தழுவினார் இஸ்லாத்தை, வணங்கினார் அல்லாஹ்வை, வாழ்கிறார் இஸ்லாமிய அடிப்படையில். அல்ஹம்து லில்லாஹ்.(எல்லாப்புகழும் இறைவனுக்கே!)

அவர் சொன்ன மற்றொரு சிறப்பு தகவல் என்னவென்றால்! "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் பதில் சொல்லுவது என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த உதவியாக உள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கும், படிக்காத பாமரனுக்கும் விளங்கும் வகையில் பி.ஜைனுல் ஆபிதீனின் பதில் சொல்லும் விதம், அந்த மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக இருப்பதோடு, அந்த சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் பால் வருவதற்கு வகை செய்வதாகவும் அமைந்துள்ளது: எனக்கும் ஒரு வாய்ப்பையும் தந்தது" என்று தன் மனதில் உள்ளதை சொல்லுகிறார்.

இன்று தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் பணிகள் உலகளாவிய அளவில் இருப்பதை நாம் பெருமிதத் தோடு சொன்னாலும், மேலதிகமாக இவர்களைப் போல் பட்டி தொட்டி எல்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் சென்று அடைந்தது கொண்டுதான் இருக்கிறது என்பதை நினைக்கும் போது! அல்ஹம்து லில்லாஹ்(எல்லாப்புகழும் இறைவனுக்கே)! அல்லாஹ் மிகப் பெரியவன்.

இருப்பினும் நாம் மறுமையின் பலன் கருதி, இன்னும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை அனைத்து மக்களிடமும் சென்றடைய பாடுபடுவோம். இதன் கூலி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கிடைக்கும்.

S.L.நசீருதீன் - நன்றி புகைப்படம் தினத்தந்தி : 30.12.2009: இராமநாதபுரம் மாவட்ட செய்திகள் பக்கம் 13

இந்த அளவு பிஜேயின் பேச்சும் எழுத்தும் சாமானய மக்களை சென்றடைந்து கொண்டிருக்க தமிழகத்தில் இதனால் பாதிப்படைந்த பலரும் ஒன்று கூடி இவரை எதிர்ப்பதையே முழு நேர பணியாகக் கொண்டிருக்கின்றனர். நேற்று ஒரு பெண்மணி 'ஈஸ்வரும் அல்லாவும் ஒன்று என்று வாழ்ந்து வரும் எங்களை பிஜே பிரிக்க பார்க்கிறார்' என்று அபாண்டமாக பழி சுமத்தி அவரை அசிங்கமாக திட்டுவதையும் பார்த்து மனம் வேதனைபட்டது. பாதிக்கப்பட்ட புரோகிதர்களெல்லாம் ஒன்று கூடி கூலிக்கு ஆட்களை அழைத்து வந்திருப்பதையும் பார்க்க முடிந்தது. அந்த அம்மணிக்கு தலையில் முக்காட்டை போட்டு விடுவதற்கு கூட ஒரு பெண்மணி தேவைப்படுகிறார். தவ்ஹீத் ஜமாத்தின் அளப்பெரும் பணியினால்தான் இந்துத்வாவாதிகள் தங்களின் செயல்பாடுகளை தமிழகத்தில் சுருக்கிக் கொண்டுள்ளார்கள்: தீவிரவாதம் மட்டுப்படுத்தவும் பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல இந்துக்களின் கசப்பான எண்ணங்களை மாற்றியமைத்ததை கண் கூடாக கண்டோம். ரத்த தானத்தில் தமிழகத்திலேயே பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து மனித நேய சேவையை செய்து வருகிறோம். தீவிரவாத எதிர்ப்புக்கு எதிராக இன்று தினமும் பிரசாரம் செய்து வருகிறோம். நமது ஒற்றுமையால் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியரை தாக்கிய ஒரு போலீஸ் அதிகாரியை கண்ணியமாக எடுத்துரைத்து இட மாற்றம் செய்ய வைத்துள்ளோம். இந்த ஜமாத்துக்கு அரசும் எந்த அளவு மரியாதை கொடுக்கிறது என்பதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. காசுக்கு அடிபணியாத கூட்டம் இந்த தவ்ஹீத் ஜமாத் என்பதை முதல்வர் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்துள்ளார். 7 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட பேரியக்கம் என்று அவர் வாயாலேயே சொல்வது என்பது அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல.

இது போன்ற எதிர்ப்புகள் தவ்ஹீத் ஜமாத் மேலும் வலுவூன்ற துணையாகத்தான் இருக்குமே யொழிய பாதிப்பை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இவர்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டு நம்மை தரம் தாழ்த்தி கொள்ளாமல் ஆக்கபூர்வ பணிகளில் நம் சகோதரர்கள் ஈடுபடுவார்களாக. தமிழகத்தில் பிரபலமாக பிஜேயை திட்டினால் போதும் என்ற மனப்போக்கு பலரிடம் உள்ளது. அதற்கு நாமும் களம் அமைத்துக் கொடுக்க வேண்டாம்.

கண்ணை மூடிக் கொண்டு இவரைப் பின்பற்ற சொல்லி நான் கோரிக்கை வைக்கவில்லை. மனிதன் என்ற முறையில் இவரிடமும் தவறுகள் வரலாம். அதனை கண்ணியமாக சுட்டிக் காட்டுங்கள். பல முறை திருத்திக் கொண்டுள்ளார். இதுதான் ஆக்கபூர்வமான வேலை. உண்மையான முஸ்லிம் அதைத்தான் செய்வான். அதை விடுத்து அவருடைய ஒளி நாடாக்களை அங்கும் இங்கும் ஒட்டி வெட்டி பொய்களை பரப்புவது அவர் சொல்லாததை சொன்னதாக பரப்புவது நயவஞ்சகர்களின் வேலை. அதனை நாம் செய்ய வேண்டாம். இறைவனுக்கு பயந்து கொள்வோம்.

இன்று சவுதி அறிஞர்கள் மத்தியிலும் பிஜேயின் பல கருத்துகள் விவாதப் பொருளாக மாறி வருவதைப் பார்க்கிறோம். ஒரு தமிழனின் ஆக்கங்கள் மதினா பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். இவரின் பல புத்தகங்கள் உலகின் பல மொழிகளில் சவுதி அரசினால் மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளுக்கும் இலவசமாக அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. நாத்திகத்தின் பக்கம் சென்று கொண்டிருந்த என்னை அழைப்பு பணி செய்யும் ஊழியனாக மாற்றியது பிஜேயின் எழுத்துக்களும், பேச்சும் என்றால் மிகையாகாது. இவரின் தவ்ஹீத் பணி எந்த தொய்வுமின்றி மேலும் பல சிகரங்களைத் தொட இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Saturday, August 23, 2014

ஹூருல்ஈன்களைப் பற்றி தருமிக்கு சில விளக்கங்கள்!

திரு தருமி!

//சுவனம் பற்றிச் சொன்னால் சு.பி.க்கு பிரச்சனை தான். இல்லீங்களா..?//

திருப்பி ....திருப்பி ..... எத்தனை முறை சார்? ஒரு பிரச்னையும் நமக்கு இல்லை. இது பற்றி நாம் சில ஆண்டுகள் முன்பு விவாதித்திருக்கிறோம். தக்க பதிலும் கொடுத்தாகி விட்டது. இருந்தாலும். புதிதாக படிக்கும் வாசகர்களைக் கருத்தில் கொண்டு காப்பி பேஸ்ட் செய்து :-) பதில் தருகிறேன்.

“செல்லுங்கள், சுவனத்தில்! நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்! என்று அவர்களிடம் சொல்லப்படும்” (43 : 70)

இந்த வசனத்தின்படி இங்குள்ள குடும்பங்கள் இஸ்லாமிய முறையில் வாழ்ந்து மரணித்தால் அந்த குடும்பங்கள் அனைத்தும் சொர்க்கத்திலும் தொடருவார்கள் என்பதை விளங்குகிறோம். ஹூர்இல் ஈன்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் மனிதர்களையொத்தவர்களா? என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. அனைத்தையும் விவரித்துக் கொண்டிருந்தால் குர்ஆன் பல வால்யூம்கள் ஆகிவிடும்.

அடுத்து ஹூருல்ஈன்களைப் பற்றி உங்களின் கேள்விக்கு வருவோம்……

'சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்' என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண் துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? என்ற கேள்வி எழும்.

இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையாகக் கூறும் போது மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.

படர்க்கை பன்மையில் ஆண் களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக அவர்கள்' எனக் கூறுகிறோம்.

அரபு மொழியில் படர்க்கை பன்மையிலும் ஆண்களுக்கும் பெண் களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது. அது போல் முன்னிலையில் பேசும் போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நீ' நீங்கள்' என்று கூறுகிறோம். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.

ஆனால் அரபு மொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.

தமிழ் மொழியில் தொழுங்கள் என்று கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் நோக்கிப் பேசுகிறது என்று புரிந்து கொள்வோம்.

ஆனால் அரபி மொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க தனிச் சொல்லமைப்பு இல்லை.

ஸல்லூ' என்று அரபு மொழியில் கூறினால் தொழுங்கள்' என்று பொதுவாகப் பொருள் செய்ய முடியாது. ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும் போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.

பெண்களை நோக்கி தொழுங்கள்' என்று கூறுவதாக இருந்தால் ஸல்லீன' எனக் கூற வேண்டும்.

அரபு மொழியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் 'ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்' என்பது போல் இரு தடவை கூற வேண்டும்.

திருக்குர்ஆனில் உள்ள அனைத் துமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டும்

இரண்டு தடவை கூறினால் தற்போது உள்ள குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும் போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

சுருக்கமாகவும் இருக்க வேண்டும்; எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப் பட்டு விடாமலும் இருக்க வேண்டும்; ஆண்களையும் பெண்களையும் உள்ள டக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருக்குர்ஆன் ஒரு மாற்று வழியைத் தேர்வு செய்துள்ளது.

அதாவது அனைத்துக் கட்டளை களையும், அறிவுரைகளையும் ஆண் களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன' என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபியவர்களிடம் கேட்டனர். 'ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?' என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363)

இவ்வசனத்தில் (33:35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப் படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.


இதே போன்ற கருத்தில் திருக் குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன. ஆண்களும், பெண்களும் இறைவ னுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும் போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும்.

மறுமையில் பரிசு வழங்கும் போது அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்' என்று அல்லாஹ் கூறுகின்றான். அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

(பார்க்க: திருக்குர்ஆன் 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8)

எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு, பெண்களுக்குத் துணை இல்லாமல் விட மாட்டான்.

இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு யார் கணவராக இருந்தாரோ அவரே சொர்க்கத்தில் கணவராக அமைவார் என்பது கட்டாயமில்லை.
கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும் போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் நல்லவர்களாக இருந்தால் அவள் யாரு டன் சேர்க்கப்படுவாள்? என்றெல்லாம் பல கேள்விகளும் இக்கூற்றினால் எழும்.

'இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு' என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர் (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மது 25417). ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி இந்தப் பிரார்த்தனை செய்வது நபி வழியாகும்.

இங்கிருப்பதை விடச் சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கும், பெண் களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம். எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண் களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.

அது போல் தான் சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்தும் ஆண் பாலாகக் கூறப்பட்டுள்ளது. அதுவும் பெண்பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33)

சுவர்க்கத்தில் ஆண்கள் விரும்புவது ஹூருல் ஈன்களை. பெண்களைப் பொறுத்த வரையில் அதற்குச் சமமான சிறந்தவைகள் அவர்களுக்கு கிடைக்கும். நுண்ணறிவாளனான அல்லாஹ் அவனுடைய அளவிட முடியாத மதி நுட்பத்தைக் கொண்டு ஆண்களுக்கு ஹூருல் ஈன்கள் கிடைப்பது போன்ற அளவிற்கு பெண்களுக்கு என்ன கிடைக்கும் என வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இது அல்லாஹ் மிகவும் கண்ணியமானவன் என்பதையும் நாணமுறுபவன் என்பதையும் குறிக்கின்றது. மேலும் எதைக் குறித்து பெண்களே மிகவும் நாணமுறுபவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் இருக்கின்றார்களோ அதையே எப்படி அல்லாஹ் வெளிப்படையாகக் கூறி அதை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள் எனக் கூறுவான்? எனவே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பின்வரும் வசனத்தில் மறைமுகமாகக் கூறியிருக்கிறான்.

உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது (அல்குர்ஆன் 41:31)

அல்லாஹ்வின் நல்லடியார்களான பெண்கள் ஹூருல் ஈன்களை விட உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பார்கள்: -

ஹூருல் ஈன்கள் எவ்வளவு தான் அழகிலும் குணத்திலும் அவர்களின் படைப்பிலும் சிறப்பு மிக்கவர்களாயினும் இவ்வுலகில் நல்லறம் புரிந்த பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவர்களாகவும் அழகில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். ஏனென்றால் ஹூருல் ஈன்கள் இறைவனின் நல்லடியார்களை மகிழ்விப்பதற்காக சுவர்கத்தில் படைக்கப் பட்டவர்களாவார்கள். அவர்கள் இவ்வுலகில் நல்லறங்கள் புரிந்த நல்லடியார்களுக்கு கட்டுப்பட்டவர்களாக சுவனத்தில் இருப்பார்கள். ஆனால் இறைவனின் நல்லடியார்களான பெண்களோ தாங்கள் செய்த நற்செயல்களின் விளைவாக சுவனம் சென்றவர்கள். எனவே இவர்களுக்கும் ஹூருல் ஈன்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது.

தகவல் உதவி: பி.ஜெய்னுல்லாபுதீன்

அப்புறம் என்ன சார்? சந்தேகம் தீர்ந்ததா? ஏசுவையும், முகமது நபியையும், ஏக இறைவனின் இனி ஒத்துக் கொள்ளலாம் இல்லையா? வழக்கம் போல் எஸ்கேப் ஆகி விடுவீர்கள். தெரிந்ததுதானே! :-)


Wednesday, August 06, 2014

சாரங்கன் சமஸ்கிரத மந்திரத்தை பிஜே யின் மேல் ஏவலாமே!

சாரங்கன்!

//ஒரு வெள்ளி கிழமை தொழுகைக்கு போய் வருபவன் முகம் கோவத்தில் பொங்குகிறது,//

கோபத்தில் பொங்குகிறதா? அழகிய அமைதி தவழுகிறது. நேற்று இஸ்லாத்தை தழுவிய யுவன் சங்கர் ராஜா முதல் பெருநாளை தனது குடும்ப உறுப்பினர்களோடு கொண்டாடிய அந்த மகிழ்வான நேரத்தில் அவரது முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பாருங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2014/07/blog-post_80.html

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Yuvans-Biriyani-treat-for-Eid/articleshow/39296026.cms

//இஸ்லாம் ஹிந்து மதத்தை இழிவு படுத்தவில்லையா. idol worshippers பற்றி என்ன சொல்கிறது இஸ்லாம். ஏன் இந்த புரட்டு.//

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

ரிக் வேதம்

'மா சிதான்யாத்வி சன்ஷதா'

'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'

ரிக் வேதம் 8 : 1: 1

இந்து மத வேதங்களே நீங்கள் பண்ணி வரும் இன்றைய வழிபாட்டு முறைகளை கண்டிக்கிறதே! உண்மை வழியிலிருந்து தவறி இன்று பல தெய்வ வணக்கத்தில் புகுந்தது உங்களது குற்றமில்லையா? அதனையேதான் குர்ஆனும் சொல்கிறது. இதில் மட்டும் ஏன் குறை காண்கிறீர்கள்?

//இது நிற்க. மந்திர சக்தி என்பது நிரூபணமான ஒன்று. தமிழுக்கு சக்தி பக்தியுடன் கலந்தால் தான் வரும். சமஸ்க்ருத (சந்தஸீ) அக்ஷர கூட்டங்களுக்கு அது தானே அமைந்துள்ளது. அப்படி பட்ட சப்த பிரயோகங்கள் அம்மொழியிலேயே இருக்கின்றன. இதை விளங்கிக் கொள்ள கொள்ள மந்தரகிரம சாஸ்திரங்களை படிக்க வேண்டும்.//

சாரங்கன் சொன்னதை நம்பியதாலோ என்னவோ சமஸ்கிரத மொழியில் அகோரி மணி கண்டன் சில நாட்களாக யாகங்களை ஆரம்பித்து விட்டார். அவரது யாகத்தால் பிஜேயை முடக்கப் போகிறாராம். சூனியம் வைத்து அவரது வழிக்கு கொண்டு வரப் போகிறாராம். அந்த செய்தியை பாருங்கள்:

இஸ்லாமா ? சூனியமா ?
இஸ்லாமிய அறிஞரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனருமான பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூனியத்திற்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சூனியம் செய்யவே முடியாது, இது மக்களை ஏமாற்றும் செயல் அவ்வாறு செய்ய முடியும் என்பவர்கள் தமக்கு சூனியம் செய்யட்டும்.

அவ்வாறு செய்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சமீபத்தில் பேசியிருந்தார்.

அவரது பேச்சு தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக காட்டுத்தீப்போல் பரவியது.

இந்நிலையில்....

திருச்சி அரியமங்களம் சர்பநதிக்கரையை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து சூனியம் செய்ய முடியும் என்பதை தாம் நிரூபிக்க தயார் என்று பகீரங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தில் சரியாக 48 நாட்களுக்குள் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களே சூனியத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கிறேன் அல்லது அவரை சூனியத்தின் மூலமாக தற்கொலை செய்ய வைக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அகோரி மணிகண்டன் கூறியது போல் 48 நாட்களுக்குள் சூனியம் செய்து வெற்றியடைந்து விட்டால் பி. ஜைனுல் ஆபிதீன் தரப்பினர் 50 லட்சம் ரூபாயை அகோரி மணிகண்டனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சூனியம் செய்ய முடியாமல் அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் அமுலில் ஆகும் நாள் 01.08.2014 ஆரம்பம் ஆகிறது.

சரியாக 48 நாட்கள் கழித்து 18.09.2014 அன்று உண்மையை உலகம் அறிந்து கொள்ள இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்திற்கே வெற்றி....!!



https://www.facebook.com/photo.php?v=10203418517916251&set=vb.1011415831&type=2&theater
VIDEO
PART 1
https://www.facebook.com/photo.php?v=828999217119094
PART 2
https://www.facebook.com/photo.php?v=829023683783314
PART 3
https://www.facebook.com/photo.php?v=829042950448054
PART 4
https://www.facebook.com/photo.php?v=829064550445894
PART 5
https://www.facebook.com/photo.php?v=829074763778206
PART 6
https://www.facebook.com/photo.php?v=829488773736805

சமஸ்கிரதத்தை மிக நன்றாக அறிந்த சாரங்கன் யாகம் நடத்தும் அகோரி மணிகண்டனோடு சேர்ந்து மந்திரங்களை உச்சரித்து பிஜேயை ஒரு வழி பண்ணி விடலாமே! முயற்சிக்கலாமா? இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. வென்று விட்டால் பரிசுத் தொகை 50 லட்சம்.


Monday, August 04, 2014

அகோரி மணிகண்டனும் ஐம்பது லட்சமும்!

பின்வரும் செய்தியை அதிகமாக ஷேர் (SHARE) செய்து உண்மையை தெளிவுபடுத்துவோம்,
இன்ஷா அல்லாஹ்.!!

‪சூனியம்‬ ஒப்பந்தம் தொடர்பாக எழுப்படும் கேள்விகளுக்கு பி.ஜே அவர்கள் அளித்துள்ள பதில்கள்:

சூனியக்காரனுக்கு விட்ட சவால் விளம்பரம் தேடுவதற்கு என்று கூறுகின்றார்களே ?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-vilambaram/

சூனியம் ஒரு காலத்தில் இருந்து இப்போது இல்லை என்று சிலர் கூறுகிறார்களே?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-ippoluthu-illai/

சூனியம் என்ற பெயரில் நீங்கள் பந்தயம் கட்டியுள்ளது சரியா ?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-panthayam/

#‎இறைவன்‬ நாடினால் சூனியம் செய்வான் என்று கூறுவது குற்றமா ?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/iraivan-nadinal-suniyam/

50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் ‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத் தர வேண்டும் ?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/50-latcham-ungal-panam/



அகோரி மணிகண்டன் தனது ஆவி,காளி,மாரி,சூரி,அனைவரையும் அழைத்து பீஜேவை முடக்க பூஜையை ஆரம்பித்துவிட்டார் ???

"அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் (அழைத்துப்) பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது" என்று கூறுவீராக (al quran17:56)

--------------------------------------------------------------

50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் தவ்ஹீத் ஜமாஅத் தர வேண்டும் ?

கேள்வி

சூனியக்காரனுடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சூனியக்காரன் சூனியம் செய்து உங்களைத் தற்கொலை செய்ய வைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் 50 லட்சம் ரூபாய் தரும் என்று கூறியுள்ளீர்கள். உங்கள் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டியது தானே என்று சிலர் கேட்கிறார்கள்.

முஹம்மது சரீப், கானத்தூர்

பதில்

சூனியக்காரனை அல்லாஹ்வாக்கி ஈமானை இழந்தவர்கள் இந்தக் கேள்வியின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். சூனியக்காரன் தனது சூனியத்தில் வென்று 50 லட்சம் வாங்கப் போகிறான் எனபதில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

நடக்கவே நடக்காது என்ற விஷயத்தில் விடப்படும் அறைகூவலை எப்படி புரிந்து கொள்வது என்ற அறிவு இவர்களுக்கு இல்லை.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கிறது என்று கூறுவோருக்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மூலம் அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கச் சொல்கிறான்.

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 43:81

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருந்தால் நான் முதலில் வணங்குவேன் என்று கூறினால் அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கக்கூடும் என்றும் அந்தப் பிள்ளையை நபிகள் நாயகம் வணங்குவார்கள் என்றும் மூடன் தான் புரிந்து கொள்வான்.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பதை அதிக அழுத்தத்துடன் சொல்வதற்காகவே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று அறிவுடையோரும் அல்லாஹ்வை நம்பியவர்களும் புரிந்து கொள்வார்கள்.

சூனியக்காரன் வெல்லப்போவதும் இல்லை. நாம் 50 லட்சம் கொடுக்கப் போவதும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லவே இதைக் கூறுகிறோம். இதை ஒப்பந்த வீடியோவில் கூட தெளிவு படுத்திவிட்டோம்.

என் பணத்தையே கொடுப்பதாகச் சொன்னாலும் சூனியக்காரன் நம்பிக்கைப்படி நான் செத்துவிட்ட பின் என்னிடம் அவன் வாங்க முடியாது. அதற்காகத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தரும் என்று சொல்லப்பட்டது.

என் பணத்தையும் நான் கொடுக்கும் நிலை ஏற்படாது. ஜமாஅத்தின் பணத்தையும் கொடுக்கும் நிலை ஏற்படாது. சூனியக்காரன் ஒருக்காலும் வெல்ல மாட்டான் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

"உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.

திருக்குர்ஆன் 10:77

"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)

திருக்குர்ஆன் 20:69

அல்லாஹ்வின் கூற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள் சூனியக்காரன் வெல்ல மாட்டான் என்றுதான் நம்புவார்கள். அதை இன்னும் அழுத்தமாகச் சொல்வதற்குத் தான் ஐம்பது லட்சம் தருவதாகச் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் இந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லாமல் சூனியக்காரன் வெல்வான் என்று நம்பி காஃபிராகிப் போனவர்கள் தான் ஐம்பது லட்சம் யாருடைய பணம் என்று கேட்பார்கள். சூனியக்காரனை அல்லாஹ்வாக்கியே தீருவது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது இந்தக் கேள்வியில் இருந்து இன்னும் உறுதியாகிறது.

Sunday, April 13, 2014

தவ்ஹீத் ஜமாத்துக்கும் பிஜேக்கும் சில ஆலோசனைகள்!

இன்று அரசியல் களத்தில் மிக முக்கியமான இடத்தில் நிற்கிறோம். தற்போது தவ்ஹீத் ஜமாத் அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்ட செய்தியை படித்து ஆனந்தம் அடைந்தேன். மிச சரியான நேரத்தில் தெளிவாக எடுக்கப்பட்ட முடிவாகவே நினைக்கிறேன். இன்று கரூர் கூட்டத்தில் அதன் எதிரொலியாக பிஜேபியை தாக்கி ஜெயலலிதா சில வார்த்தைகளை விட்டுள்ளார். இவை எல்லாம் உதட்டளவிலான வார்த்தைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த அளவு ஜெயலலிதாவை இறங்க வைத்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

பார்பனர் சோ ராமசாமி போன்றவர்கள் பிஜேபி நிற்காத மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு வாக்களித்து மோடியை பிரதமராக்க முயற்சி செய்யுங்கள் என்று வெளிப்படையாக கூறும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் வந்துள்ளது. விஜயகாந்தையும், வைகோவையும், ராமதாஸையும் கூட்டணி தர்மத்தை உடைத்து பூணூல் தர்மத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். பாவம் விஜயகாந்தும், ராமதாஸூம், வைகோவும். :-( விட்டில் பூச்சிகள். பிஜேபியில் யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் போன்ற மிதவாத தலைவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு இன்று மோடி முரளி மனோகர் ஜோஸி போன்ற தீவிரவாத தலைவர்கள் முன்னிலைப்படுத்தப் பட்டு இந்த தேர்தலை சந்திக்கிறது பிஜேபி. இன்று மோடி ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்ட செய்தியையும் பார்த்தேன். மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பதை கூத்தாடிகளை வீடு தேடி சந்திப்பதிலிருந்து தெரிய வருகிறது. எதிரிகள் மிக சாமர்த்தியமாக தங்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர். இதற்கு முன்னால் வாஜ்பாயின் ஆட்சியில் உளவுத்துறை ராணுவம் போன்ற முக்கிய துறைகளில் இந்துத்வாவரினர் திட்டமிட்டு புகுத்தப்பட்டனர். அதன் பலனை இஸ்லாமிய இளைஞர்கள் பொய் வழக்குகளால் சொல்லொணா துயரங்களை இன்று வரை அனுபவித்து வருகின்றனர். இந்தியன் முஜாஹிதீன் கதைகளை நாம் அறியாதவர்கள் அல்ல.

இந்த முறை மோடி பதவியேற்றால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் மதக் கலவரங்களை நாடெங்கும் சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே எந்த வகையிலாவது இந்த மோடி என்ற கொடுங்கோலனை வர விடாமல் தடுப்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்முன் உள்ள தேர்வுகளாக காங்கிரஸூம், ஆம் ஆத்மி கட்சியும், திமுகவும் உள்ளன. இவற்றில் ஆம் ஆத்மிக்கு தமிழகத்தில் சரியான அடித்தளம் இல்லை. காங்கிரஸூக்கு பலமான கூட்டணியும் இல்லை. அதிலும் இலங்கை பிரச்னையில் தமிழர்கள் பலரின் கோபத்தில் இருக்கிறது காங்கிரஸ். எனவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் போடும் ஓட்டுக்கள் சிதறவே வாய்ப்பிருக்கிறது. ஐந்து முனை போட்டி நிலவுவதால் இஸ்லாமியர்களின் ஓட்டு எந்த பக்கம் சாய்கிறதோ அவர்களே வெற்றிக் கனியை பறிப்பவர்களாக தெரிகின்றனர்.

கடைசியாக நமக்குள்ள தேர்வாக திமுகவே தெரிகிறது. ஒரு வார காலமாக மோடியை மிகக் காட்டமாக கலைஞரும், ஸ்டாலினும் விமரிசித்து வருவதால் பிஜேபியின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறோம். மோடியும், அதன் ஆதரவு கட்சியான அதிமுகவும் வராமல் தடுக்க நாம் திமுகவை ஆதரிப்பதுதான் சிறப்பானதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த முடிவை பெரும்பாலான தவ்ஹீத் சகோதரர்களும் விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன். தமுமுகவை 'இனி வருங்காலங்களில் இஸ்லாமிய ஊர்களில் தவ்ஹீத் பிரச்னைகளில் தலையிட மாட்டோம்' என்ற உறுதி மொழியை வாங்கிக் கொண்டு அவர்களையும் ஆதரிக்கலாம். மத்தியில் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்கவும், மோடியை ஆதரிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியையும் திமுகவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு சம்மதிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

தவ்ஹீத் ஜமாத்தும் பிஜே அண்ணனும் எந்த முடிவை எடுத்தாலும் அது வருங்கால ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.

நமது இந்திய நாடு சாதி மத பூசல்களை தவிர்த்து அனைத்து மக்களும் அண்ணன் தம்பிகளாக மாமன் மச்சான்களாக என்றும் போல வாழக் கூடிய ஆட்சியை வழங்கக் கூடிய ஆட்சியாளர்களை தந்தருள்வானாக என்று எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

'இறைவா! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்' என்று கூறுவீராக.

குர்ஆன் 3:26