Followers

Saturday, December 10, 2011

சரி கம பா பாகிஸ்தானின் அமானத் அலி!



சரி கம பா பாகிஸ்தானின் அமானத் அலி!

நமது ஜீ டிவி நடத்தும் சரி கம பா நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பார்ப்பதுண்டு. அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அமானத் அலியின் பாடலை விரும்பி கேட்பேன். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு முறை பேட்டியில் ஒரு பாடகனின் பாடல் அவனது உள் மனத்திலிருந்து வெளி வர வேண்டும் என்று சொல்வார். அது போல் இவர் எந்த பாடலை எடுத்துக் கொண்டாலும் அந்த பாடலிலேயே லயித்து பாடுவது இவரது ஸ்பெசாலிடி.

ஒருவனின் பிரிவை இந்த பாடல் விவரிக்கிறது. தாய், தந்தை, உற்றார் உறவினரை பிரியும் ஒருவன் தனது தனிமையில் அந்த சோகத்தை எப்படி வெளிக்காட்டுவான் என்பதை இந்த பாடல் நமக்கு தெளிவாககுகிறது.

இந்திய வெறுப்பிலேயே வளர்க்கப்பட்ட பல பாகிஸ்தானிகளை இது போன்ற சில நிகழ்ச்சிகள் நம் நாட்டின் மீது நட்பை வளர்க்க உதவலாம். பொதுவில் மனிதன் ஒரு சமூக விலங்கு. பெரும்பான்மையோர் எதைச் செய்கிறார்களோ அதன்படியே தனது வாழ்வை அமைத்துக் கொள்ள நினைப்பவன். பாகிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அங்குள்ள பிரச்னைகளை மூடி வைக்க இந்தியா பயன்படுகிறது. இந்தியா நம்மை தாக்க வருகிறது. வந்து விட்டது என்று ஒரு செய்தியை பரப்பி விட்டால் அவனது நினைவில் எந்த நேரமும் இந்தியாதான் இருக்குமேயொழிய விலைவாசி ஏற்றமோ, வேலையில்லா திண்டாட்டமோ அவனை பெரிதாக பாதிக்காது. இதை நன்றாகவே புரிந்து கொண்ட அங்குள்ள அரசியல்வாதிகள் காய்களை நன்றாகவே நகர்த்துகின்றனர்.

போதாக் குறைக்கு அமெரிக்காவின் சிஐஏ வும் அநியாயத்துக்கு பாகிஸ்தானை படுகுழியில் தள்ளப் பார்க்கிறது. இந்தியாவையும் சீனாவையும் மிரட்டி வைக்க பாகிஸ்தானை பகடைக்காயாக பயன்படுத்துகிறது அமெரிக்கா. ஆனால் அந்த உறவில் தற்போது உசாமா பின் லேடனால் பின்னடைவது ஏற்பட்டுள்ளது சற்று நிம்மதியை தருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரியாமல் இருந்திருந்தால் இரு நாட்டுக்குமே நல்லதாக இருந்திருக்கும். ஒரு சில சுயநலமிகளால் இந்த வரலாற்று தவறு நடந்து முடிந்து விட்டது. இன்று வரை பலருக்கு ஆறா வடுவையும் ஏற்படுத்தி விட்டது.

நான் இதை எல்லாம் எழுத காரணம் இயற்கையில் பாகிஸதானிய மக்கள் இந்தியாவோடு நட்புடன் இருக்கவே விரும்புகின்றனர் என்பதை எடுத்துக் காட்டவே. இங்கு சவுதியில் உள்ள பாகிஸ்தானிய இளைஞர்கள் பலரிடம் வலுவில் சென்று அரசியல் பேசுவது உண்டு. முதலில் இந்தியாவின் மீது மிகவும் காட்டமாக உள்ள அவர்களை சில வரலாற்று நிகழ்வுகளை எடுத்துச் சொன்னவுடன் அவர்களின் சுருதி குறைவதை பார்ததிருக்கிறேன். அங்குள்ள அரசியல்வாதிகளால் இந்திய எதிர்ப்பு இவர்கள் மண்டையில் நன்றாகவே ஏற்றப்பட்டிருக்கிறது.

ஒரு பாகிஸ்தானி என்னிடம் 'உங்களிடம்தான் பெரும் நில பரப்பு உள்ளதே! காஸ்மீரை எங்களுக்கு விட்டுக் கொடுத்தால்தான் என்ன?' என்று கேட்டான். அவனிடம் 'ஏற்கெனவே பிரித்து கொடுத்த மாகாணங்களை இதுவரை ஐந்து வருடம் ஒழுங்காக ஒரு தலைவர் ஆட்சி செய்துள்ளாரா? எப்போதும் ராணுவ ஆட்சிதானே! அப்படியே காஸ்மீரை தனிநாடாக பிரித்தாளும் பிரிப்போமே தவிர கையாலாகாத உங்களிடம் தர மாட்டோம்' என்றவுடன் பதில் தர முடியாது இடத்தை காலி செய்து விடுவான்.


சரி.. இனி அமானத் அலி விஷயத்துக்கு வருவோம். சரிகமபாவில் முதல் இடத்தை அமானத் அலிதான் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் இவரது குரல்வளம் அந்த அளவு அனைத்து பாடல்களிலும் பிரதிபலித்தது. ஆனால் பாகிஸ்தானிய எதிர்ப்பு நம் மக்கள் மத்தியிலும் வேரூன்றி இருந்ததால் கல்கத்தாவை சேர்ந்த நம் நாட்டு பாடகரை அனைவரும் தேர்ந்தெடுத்தனர். பததிரிக்கைகளில் எல்லாம் ஏதோ இந்தியா பாகிஸ்தான் சண்டை நடப்பது போல் பிரபல்யப்படுத்தப் பட்டு அமானத் அலி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். கடைசி நாளன்று வெளிநாட்டு ஓட்டுகள் தடை செய்யப்பட்டன. இதனால் பாகிஸ்தானிலிருந்து கிடைக்க வேண்டிய அமானத் அலி ஆதரவாளர்கள் ஓட்டுகள் கிடைக்காமல் போனது.

முதல் இடம்தான் அமானத் அலிக்கு கிடைக்கவில்லையே தவிர சினிமாவில் பாட சில சந்தர்ப்பங்கள் கிடைத்தது. ஒரு எதிரி நாட்டு பாடகருக்கு தளம் அமைத்து கொடுத்து உலக அளவில் பிரபல்யப்படுத்தியதே நாம் செய்த பெரிய உபகாரம் அல்லவா! சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியானாலும் இநத பாடலின் ஈர்ப்புக்காக இந்த பதிவு.

24 comments:

சார்வாகன் said...

ஸலாம் நண்பரே,
நல்ல பதிவு நானும் இந்த சரிகம நிகழ்ச்சி பார்த்தேன்.திரு அமானாத் அலிதான் வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன்.நல்ல குரல் வளம் மட்டுமன்றி உணர்வு பூர்வமாக பாடினார்.அவரை பற்றி நாம் இன்னும் பேசுவதே அவ்ருக்கு கிடைத்த வெற்றி.இந்த நிகழ்ச்சிகளில் ஓட்டு என்பதே ஒரு மோசடி என்பதும் என் கருத்து. ச்மீபத்தில் நடந்த ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட இது வெளிப்பட்டது.

பாகிஸ்தானும் இந்திய அரசும் ஆயுதப் போட்டியை சில வருடங்களுக்கு தவிர்த்தால் இரு நாடுகளும் பல உள்நாட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க இயலும்.ஆனால் இதற்கான் வாய்ப்பு இபோது மிகவும் குறைவு.உலக் அரசியல் சூதாட்டத்தில் இரு நாடுகளும் பகடைக்காயாக உருட்டப்படுகின்றன.வரும் காலங்களில் நட்புறவு வரும் என எதிர்பார்ப்போம்.

அவ்வப்போது இப்படி சில பதிவுகள் இடுங்கள்.த.ம முதல் ஓட்டு.நன்றி

suvanappiriyan said...

சலாம் சார்வாகன்!

//வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன்.நல்ல குரல் வளம் மட்டுமன்றி உணர்வு பூர்வமாக பாடினார்.அவரை பற்றி நாம் இன்னும் பேசுவதே அவ்ருக்கு கிடைத்த வெற்றி.இந்த நிகழ்ச்சிகளில் ஓட்டு என்பதே ஒரு மோசடி என்பதும் என் கருத்து. ச்மீபத்தில் நடந்த ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட இது வெளிப்பட்டது.//

உண்மைதான். விஜய் டிவியில் கூட இப்படி ஒரு மோசடி நடந்ததாக கேள்விப்பட்டேன். கலையை கலையாக ரசிக்க வேண்டும். அது போல் கிரிக்கெட் விளையாட்டை ஒரு விளையாட்டாக ரசிக்க வேண்டும். ஏதோ இது போன்ற பொழுது போக்கு அம்சத்தை இரு நாட்டின் மானப் பிரச்னையாக பலரும் ஆககுவதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

//பாகிஸ்தானும் இந்திய அரசும் ஆயுதப் போட்டியை சில வருடங்களுக்கு தவிர்த்தால் இரு நாடுகளும் பல உள்நாட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க இயலும்.//

ஆம். பொருளாதாரத்திலும் இரு நாடுகளும் முன்னேற்றம் இதனால் அடையலாம். தற்போது காங்கிரஸ் அரசு அதற்கான முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அமெரிக்கா இதறகு உடன்படாது. அஜ்மல் கசாபைப் போல் சில இளைஞர்களை ஜிஹாத் வெறி ஊட்டி (கள்ள முல்லாக்களால்) இந்தியாவில் சில பிரச்னைகளை உண்டு பண்ண அமெரிக்கா முயற்ச்சிக்கும். இதற்கு மொசாத்தும் உதவிக்கு வரும். வழக்கம் போல் இந்தியாவும் பாகிஸ்தானும் முறுக்கிக் கொள்ளும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அன்புள்ள சகோதரர் ஹெச் .ஜி . ரசூல்

உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதில் உண்மையிலேயே சந்தோஷம்தான் உங்களைப் போன்று இன்னும் பலர் நமது தக்கலை அபீமுஅ வை சார்ந்த சகோதரர்கள் இது போன்ற விவாதங்களில் நல்ல முறையில் பங்கெடுத்துக் கொள்வது மிக்க பயனுள்ளதாக இருக்கும் என உளமார நம்புகிறேன். உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் முறையாக பதில் தந்துள்ளேன். படிப்பவர்களின் வசதிக்காக உங்கள் கேள்விகளையும் பதிவு செய்து பதில் அமைந்துள்ளதால் இந்த மின்னஞ்சல் சற்று விரிவாக இருக்கிறது எனவே சிரமம் பாராமல் முழுவதுமாக படித்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

1 ) இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக நெஞ்சுருகச் சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா என்பதை யாராவது மறுக்கமுடியுமா..(அவூது பில்லாஹி எனத்துவங்கி பிறகுமத்திக்க யா அறுஹமற் றாகிமீன் எனமுடியும் 225 பாடல்களின் 2206 வரிகள்- இது உள்ளடக்க ஒத்திசைவு இணைகாணல் முறை மொழிபெயர்ப்பாகும்.) ———

நீங்கள் சொல்வது ஒருவேளை உண்மையென்றே வைத்துக் கொள்வோம் ! இதில் நமக்கென்ன பிரச்சினை ? …. இங்கே நமக்கு யார் முதலில் தமிழிலில் மொழி பெயர்த்தார்கள் என்பது விவாதமில்லையே !…. சூபிக்களின் கோட்பாடுகளை தனது பாட்டுக்களின் வாயிலாக சிறந்த புலமைத்திறனை மிக நன்றாக வெளிப்படுத்திய ஒரு சூபி தமிழ்ப் புலவர் பீரப்பா என்பதே எனது நிலைப்பாடு………. ஆனால் இல்லை ! இல்லை ! பீரப்பா என்பவர் அவ்லியாதான் என்று நமது தக்கலை அபீமுஅ மக்கள் உள்பட சுன்னத்துல் ஜமாத்தை பின் பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நமது முஸ்லிம் சகோதரர்களும் நம்பி வணக்க வழிபாடுகளை செய்து வருகிறார்கள். பீரப்பா போன்றவர்களை அவ்லியாக்கள், அல்லது இறைநேசர்கள் என்றெல்லாம் நாமாகத்தானே ! சொல்லிக் கொள்கிறோம் !… இங்கேதான் நமது பிரச்சினையே ! இவர்கள் அவ்லியாக்கள் அல்லது இறை நேசர்கள் என யார் முடிவு செய்தார்கள் ?. இறைநேசர்கள் யார் என்பதையோ அல்லது ஒருவரை நல்லவரென்றோ உலகத்தில் தீர்மானிக்க முடியுமா?…….திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.....

suvanappiriyan said...

“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எதற்காகவும் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் விசுவாசம் கொண்டு, (இறைவனை) அஞ்சி நடப்பார்கள்.” (10:62-63)

யாருடைய உள்ளத்தில் ஈமானும் இறைவனை அஞ்சி நடக்கும் தக்வாவும் உள்ளதோ அவர்கள் அனைவரும் இறைநேசர்கள் என்று இவ்வசனம் சொல்கிறது. என் அன்பு சகோதரரே ! இவ்விரண்டு பண்புகளையும் மனிதக்கண்களால் எடைபோட முடியாது. உலகில் எமது பார்வையில் மகானாகத் திகழ்ந்தவர் மறுமையில் மகாபாவியாக இருக்கலாம். உலகில் எமது கண்ணோட்டத்தில் பாவியாக இருப்பவன் மறுமையில் மிகச் சிறந்த பேறுபெற்றவனாகத் திகழலாம். எனவே, ஒருவரை நல்லவர் , கெட்டவர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். நிச்சயமாக மனிதனால் தீர்மானிக்க முடியாது. யாரைப்பற்றி இறைவன் நபிகளாருக்கு இவர்நல்லவர் என்று அறிவித்துக் கொடுத்தானோ அவரைப்பற்றி மட்டும் அல்லாஹ்வின் தூதர் ‘இவர் சுவர்க்க வாசி’ என்று கூறியுள்ளார்கள். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட 10 நபித்தோழர்களும் இவ்வாறு இறைவனால் நபிகளாருக்கு அறிவிப்புச் செய்யப்பட்டவர்களே. இதுதான் நபி (ஸல்) அவர்கள் வழியே நாம் அறிந்த செய்தி மற்றவர்களைப் பற்றி நமக்கு நிச்சயமாக எதுவும் தெரியாது ஆக நாமாகவே மனிதர்களை ஒரு குத்து மதிப்பாகவோ, மரியாதையின் காரணமாகவோ,அல்லது இறைவனைப் புகழ்ந்து பாட்டுக்கள் எழுதியதனாலோ, வேறு எந்த ஒரு காரணங்களுக்காகவோ இறை நேசர்கள் என சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது, தீர்மானிக்கவும் முடியாது. இதுவே உண்மையான இஸ்லாத்தின் நிலைப்பாடு… இஸ்லாம் நமக்கு கற்று தரும் இந்த விளக்கத்தை எப்படி? யார் ? மீறினார்கள் ? எந்த அடிப்படையில், எந்த தைரியத்தில் பலரையும் அவ்லியாவாக ஆக்கினார்கள் ? இதற்கான விடை இன்று வரை நமக்கு தெரிந்தபாடில்லை ஆனால் அறியாமையிலேயே அவ்லியாக்கள் என சொல்லப்படுகிறவர்களுக்கு ஆண்டுவிழா, திதி திவசம் போன்ற மாற்று மதத்தவர்களால் செய்யப்படும் சடங்குகளையெல்லாம் இஸ்லாமிய சாயம் பூசி , இஸ்லாத்தின் பெயரால் நாம் கொண்ட்டாடும் கொண்டாட்டங்கள் மட்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்பது யதார்த்தம்தானே ! . எனது கருத்துக்களை முறையான சரியான இஸ்லாத்தின் அடிப்படையில் இங்கே பதிவு செய்திருக்கிறேன் மறுப்பு இருந்தால் ???!!!!!! அல்லது அவ்லியா என்று ஒரு மனிதரை தீர்மானிக்க முடியும் என்று வாதிக்க முன் வருபவர்கள் (நீங்களோ அல்லது மற்ற சகோதரர்களோ ) தங்களது சொந்த கருத்துக்களை முன் வைக்காமல்முறையான குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ் ஆதாரங்களுடன் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் உங்கள் கருத்துக்கள் உண்மை என நிரூபிக்கப்படுமானால் இன்ஷா அல்லாஹ் மிகுந்த சகோதரத்துவத்துடனும் நாம் எல்லோருமே ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையிலேயே ஒற்றுமையுடனும் செயல்படலாமே !

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

2)இஸ்லாத்தின் அடிப்படைகளான அவ்வல் கலிமா ஷஹாதத்,99 இறைத்திருநாமங்கள் அஸ்மாவுல் ஹுஸ்னா,இஸ்முல் அக்ளம் பிஸ்மியின் தத்துவார்த்தவிளக்கம், தன்ஸுலாத் பிரபஞ்ச உருவாக்கம்,உயிரின்தோற்றம்,நபிமுகமது(ஸல்)வின்மாண்பு,ஆதம்நபி,நூஹூநபி,மூசாநபி,இபுராகீம்நபி,யூனூஸ்நபி,யூசுப்நபி,என நபிமார்களின் வரலாறு(பாடல்கள் 215 முதல் 225 முடிய) ஹதீஸ்மொழிகள்,என பல்வேறுவகைப்பட்ட இஸ்லாமிய மரபுகளை தமிழில் அற்புதமாக ஞானப்புகழ்ச்சியில் எடுத்துரைத்தது பீர்முகமது அப்பா என்பதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா.. —

இவ்விஷயத்தில் சந்தேகம் இருக்கிறதா? இல்லையா ? என்பதும் நமது விவாதமே இல்லை… ஆனால் இங்கே மிக முக்கியமாக ஒன்றை நாம் கவனித்தாக வேண்டும் அதாவது இது போன்ற விளக்கங்களை மிக அழகாக ,தெளிவாக, நல்ல முறையில் , எளிதில் புரியும்படி ஒருவர் எழுதிவிட்டால் அவரை மனிதர்களாகிய நாம் அவ்லியா (?!) நிலைக்கு உயர்த்தி அவருக்கு என்னவெல்லாம் நன்மையை நாடி செயல்களை செய்து கொள்ளலாம் என இன்றும் சுன்னத்துல் ஜமாஅத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்லக் கூடிய நமது மக்கள் செய்து வருகிறார்கள் என்பதையும் நாம் சற்று சீரியசாகவே பார்ப்போம்….. இதுபோன்றவர்களை அவ்லியா ஆக்கிக்கொள்ளலாம் , அவர்களுக்கு தர்ஹா கட்டிக்கொள்ளாலாம், அங்கே வணக்க வழிபாடுகளையெல்லாம் செய்து கொள்ளலாம், , மாற்று மதத்தவர்கள் மாதிரி பூசாரி ( மோதினார் – இஸ்லாமிய பூசாரி ?! ) என்று ஒருவரை பணிக்கு அங்கே அடக்கப்பட்டிருக்கும் அவ்லியாவுக்கு (?!) பணிவிடை செய்து கொள்ளாலாம், விடிய விடிய சமாதியின் முன்னால் பய பக்தியுடன் அமர்ந்து பொருள் தெரிந்தோ (?!) தெரியாமலோ (?!) பாட்டு (?!) பாடிக் கொள்ளலாம், பாட்டு படிக்க தெரியாதவர்கள் இசையில் லயித்தவர்கள் மாதிரி பாட்டை கேட்டுக் கொண்டிருப்பதிலே நன்மையுண்டு என நம்பி கலந்து கொள்ளலாம், வருடத்திற்கொரு முறை கொடியேற்றத்துடன் (?!) ஆண்டுப்பெருவிழா(?!) எடுத்து கொண்டாடலாம், பூப்பந்தல் அலங்காரத்துக்கென்றே மக்களிடம் தனியாக பண வசூல் வேட்டை நடத்தி தர்ஹா சன்னதியையும் அவரது கபரையும் பூக்களால் அலங்காரம் ( கோயில்களில் பூ அலங்காரம் செய்வது போல ) செய்து கொள்ளலாம் , விழா நிகழ்ச்சி நிரல் நோட்டீஸ் மற்றும் போஸ்டர் அடித்து அருள்(?!)பெற வாரீர் (?!) என இன்டர் நேஷனல் லெவலுக்கு விளம்பரம் செய்து செய்து மக்களை அழைக்கலாம் ,....

suvanappiriyan said...

....மாற்று மதத்தவர்களின் சம்பிரதாயங்களான திதி, திவசம் போன்றவைகளை இங்கே நாம் 3ம் சியாரத்து ,10ம் சியாரத்து , 40ம் சியாரத்து அவ்லியாக்களுக்கு (?!) என சடங்குகளை விமரிசையாக நடத்தலாம், பூ பழம், பத்தி , சாம்பிராணி, குத்து விளக்கு, போன்றவைகள் சகிதமாக சமாதியின் முன்னால் வைத்து பக்தர்களுக்கு அவ்லியாவின் அருள் இறங்கிய காணிக்கையாக கொடுக்கலாம் , , பழக்குலைகள் கொடுத்து, பச்சைத்துணி (?!) கட்டி பால்குடம் (?!) எடுத்து நேர்ச்சை செய்து கொள்ளலாம், உண்டியல் வைத்து பண வசூல் வேட்டை நடத்தலாம், ஒப்பந்த அடிப்படையில் நன்மை வேண்டி , அவரின் அருள் வேண்டி , அவ்லியாவுக்கென நேர்ந்து கிடா, கோழி வெட்டி பலி கொடுக்கலாம், அவ்லியாவின் தர்ஹாக்களில் மொட்டை போடலாம் , கோயில்களில் நடக்கும் தினப் பூஜை, வாரப்பூஜை போன்று தினமும் மற்றும் வாரக் கிழமைகளில் பாத்திஹா மற்றும் யாசீன் ஓதிக் கொள்ளலாம், பிரசாதம் மாதிரி நேர்ச்சை வாங்கிக்கொள்ளலாம், கோயில் தீர்த்தம் மாதிரி கபரின் பக்கத்தில் வைத்து எடுத்த அருள் இறங்கிய தீர்த்தம் குடித்துக் கொள்ளலாம், வீட்டிற்கும் எடுத்து சென்று குடும்ப சகிதம் அருள் பெற்றுக் கொள்ளலாம், கை கால் , கண் மூக்கு , செவி என இந்த உறுப்புகளுக்கு ( மற்ற உறுப்புகளுக்கு உத்தரவாதம் இல்லையோ ) நோய்வாய் பட்டால் அதை அங்கேயே தர்ஹா வாசலில் கிடைக்கும் வெள்ளியினால் செய்யப்பட்ட ரெடிமேடு உடல் உறுப்புகளை வாங்கி அவ்லியாவிடம் நோய் தீர வேண்டி , நம்பிக்கை கொண்டு அவரின் சன்னதியில் இருக்கும் உண்டியலில் போட்டு நோயை தீர்த்துக் கொள்ளலாம் , இப்படியாக இந்த அவ்லியா(?!) சமாச்சாரங்களின் , கலாச்சார , அனாச்சார சீரழிவு பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகிறதே …. இதெல்லாம் இஸ்லாத்தில் உள்ளதா ? நபி வழியா ? யார் இதை இஸ்லாத்தில் புகுத்தினார்கள் ?, எதற்காக புகுத்தினார்கள் ? ஏன் புகுத்தினார்கள் ? அறிவுக்கேற்ற மார்கமான நன்மை தீமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்ட நமது தூய இஸ்லாத்தில் இப்படிப்பட்ட மாற்று மதக் கலாச்சார சடங்குகளையெல்லாம் முஸ்லிமாகிய நாமும் தவறாமல் பின்பற்றி வருகிறோமே !…. எந்த அடிப்படைகளில் ? என்ன ஆதாரங்களில் இவற்றை நன்மையை நாடி செய்து வருகிறோம் என்பதை நாம் என்றைக்காவது சிந்தித்தோமா ? ஞானப்புகழ்ச்சியை பாடவில்லையென்றால் அல்லாஹ் ஏன் பாடி நன்மையை சேர்க்கவில்லை என நம்மிடம் கோபப்படுவானா ? இல்லை பீப்ரபாதான் கோபப்பட்டு அல்லாஹ்விடம் சொல்லி தண்டனை வாங்கி தருவாரா ? அல்லது ஷிர்கான வரிகள், இஸ்லாமிய விரோத கருத்துக்கள் அடங்கிய இந்த பாட்டை பாடியதற்காக அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா ? யோசிக்க வேண்டும் … அருமை சகோதரர்களே !… நன்மைக்கு உத்தரவாதம் இல்லாத இந்தமாதிரியான செயல்களை விடுத்து குர்ஆனையும் ஹதீஸ்களையும் முறையாக கற்றுக் கொள்ள முற்பட்டோமா ? இன்று நம்மில் எத்தனை பேர் கற்று கொண்டுள்ளோம் இவற்றை தெரிந்து கொண்டு அதன்படி நமது செயல்களை அமைத்துக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டானா என யோசித்திருக்கிறோமா ?

மறுமையில் நமக்கு வெற்றி கிடைக்குமா ? இல்லையா ? அல்லாஹ்விடத்தில்என்ன பதில் சொல்லப் போகிறோம் ? கொஞ்சம் சீரியசாகவே சிந்தித்து செயல்பட ஏன் நம் மனம் மறுக்கிறது ?… இந்த அவல நிலைக்கு நாம் ஏன் தள்ளப்பட்டோம் ? இதற்கான விடை மிகத் தெளிவானது சகோதரர்களே !… குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்கள் கை விட்டதினால் , அல்லது முறையாக தெரிந்து கொள்ளாததால், அல்லது பாரம்பரியத்தின் மூட நம்பிக்கைகளில் இது பற்றியெல்லாம் பாராமுகமாக இருந்துவிட்டதினால் இந்த நிலை நம்மிடம் ஏற்பட்டுவிட்டது …. இம்மையிலும் மறுமையிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் இனியாவது நாம் நிச்சயம் சிந்திக்க வேண்டும் சகோதரர்களே !….. இன்ஷா அல்லாஹ், சிந்திப்பவர்களுக்கே அல்லாஹ் நேர்வழியை காட்டுகிறான் என்பது அவனுடைய வாக்கும் , விருப்பமும் …… நான் எழுதியிருக்கும் கருத்துக்களை மறுப்பவர்கள் முறையான ஆதாரங்களுடன் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்…. மேற்கொண்டு விவாதம் தேவைப்பட்டால் இன்னும் நல்ல விதத்தில் கூடுதல் விஷயங்களுடன் நன்மையை நாடி விவாதிக்கலாம்

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

3)பீர்முகமது அப்பா எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பதினெண்ணாயிரம். இன்று நமக்கு கைவசம் கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழாயிரத்தை எட்டும்.வெண்பா,விருத்தம் என பல்வகை பாவடிவில் ஏறத்தாழ நாற்பத்தி எட்டாயிரத்துக்கும் (48000) மேற்பட்ட வரிகளில் பீர்முகமது அப்பா ஞானக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.இதனை ஓரளவாவது கற்றுணராமல் இந்த 48000 வரிகளில் இரண்டுவரிகளை மட்டும் எடுத்து வைத்து பீர்முகமது அப்பாவை விமர்சிப்பது எந்தவகையில் நியாயம்.. –


புலமை வாய்ந்த சிறந்த சூபி கவிஞர்களின் கற்பனையான பொய்யான கவிதைப்பாட்டுக்களின் எண்ணிக்கைகளை வைத்து ஒருவரை அவ்லியா(?!) ரேஞ்சுக்கு மக்கள் கொண்டு செல்வதும் அதை வைத்துக் கொண்டு அவரை ஆராதிப்பதும் என்பது இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட இஸ்லாமிய அகீதா அடிப்படைகளுக்கு விரோதமான செயல் என்பதில் நிச்சயமாக சந்தேகமில்லை. மேலும் இந்த ஞானப்பாட்டை ஓரளவாவது கற்றுணர வேண்டும் என்று கருத்து சொல்வது மிகவும் , வேதனையான விஷமக் கருத்து காரணம் இந்த ஞானப்பாட்டை கற்றாலும் கற்காவிட்டாலும் ஒரு முஸ்லிமுக்கு எவ்வித பிரச்சினையும் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக இல்லை ஆனால் ஒரு முஸ்லிமாகிறவன் குர்ஆன் மற்றும்நபி வழிமுறைகளை உரிய முறையில் கற்றுக் கொள்ளாதவன், அறிந்து கொள்ளாதவன், அறிந்து கொள்ள சிறிதும் முயற்ச்சி செய்யாதவன் , மார்கத்தை நல்ல முறையில் கற்றுணராதவன் அதன்படி நடப்பதிலிருந்தும் , நேர்வழியிலிருந்தும் தவறி விடுவதால் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக மிகவும் கைசேதப்படுவான் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. இனி 48000 வரிகளில் இரண்டு வரிகளை மட்டும் எடுத்து வைத்து பீர்முகமது அப்பாவை விமர்சிப்பது எந்தவகையில் நியாயம்.. என சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் கேட்பது பகுத்தறிவாதத்திற்கோ , முற்போக்கு சிந்தனைக்கோ, அல்லது குறைந்த பட்சம் மிக சாதாரண எண்ணங்களிலோ புலப்பாடாமல் போனதில் எனக்கு உண்மையிலேயே ஆச்சரியந்தான் , ஆனாலும் நாமெல்லாம் சராசரி மனிதர்களல்லவா ! சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது யதார்த்தம்தான் ..

சரி இனி விஷயத்திற்கு வருவோம்… முதலில் சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இரண்டு வரிகள் மட்டுமல்ல , இன்னும் நிறைய வரிகளும் , வார்த்தைகளும் இந்த ஞானப்பாட்டிலே இருக்கிறது .. கூடுதல் விபரங்களுக்கு இந்த சுட்டியை

http://haiderghouse.blogspot.com/2011/09/part-1.html –

http://haiderghouse.blogspot.com/2011/09/part-2.html

சொடுக்கி தெரிந்து கொள்வது நல்லது, மேலும் தரீகத் முறைகளையும் , பரமா நபியை படைத்தில்லையாகில் படைப்பொன்றுமில்லை, என்கிற இஸ்லாம் கூறாத வழி முறைகளையும் , இஸ்லாமியவிரோத கருத்துக்களையும் தனது பாடல்களிலே பாடியிருக்கிறார் , ஆக இப்படியெல்லாம் பல வரிகளும் வார்த்தைகளும் இஸ்லாத்திற்கு
விரோதாமாகவே பீரப்பாவின் பாடல்களில் காணப்படுகிறது … சரி இனி இங்கே ஒரு வாதத்திற்காகவே ( மட்டுமே ) இரண்டே வரிகள்தான் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்…. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது கூடவா தமிழில் கவிதைகளும், கதைகளும் , எழுதி பிரபலமான முற்போக்கு எழுத்தாளராகிய நம் சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் அவர்களின் சிந்தனையில் சிக்காமல் சிதறிப்போய்விட்டது ?

உண்மையிலேயே வருத்தமான ஆச்சரியமான செய்திதான் ……. இன்னொன்றையும் நாம் இங்கே உணர்ந்து கொள்ளலாம் சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் அவர்களின் வாதத்திலிருந்தே அவர் ஒரு உண்மையை அழகாக தெளிவாக்கியிருக்கிறார் அதாவது இந்த இரண்டு வரிகள்தான் தவறானது என்றால் அதை விட்டு விட்டு மீதமுள்ள அத்தனை பாடல்களையும் நல்லதாகவே எடுத்துக் கொள்ளக் கூடாதா ? என ஆதங்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது அந்த இரண்டு வரிகளும் தவறுதான் என ஒத்துக் கொள்வதாகவே எனக்கு படுகிறது . சகோதரர் , கவிஞ ர்ஹெச் .ஜி . ரசூலின் வாதத்தை இன்னும் கொஞ்சம் கூட யதார்த்தமாகவே அணுகுவோமே !…. 48000 லிட்டர் தண்ணீரில் இரண்டு லிட்டர் மிக கொடிய விஷத்தை கலக்கிய செய்தி தெரிந்தால் நம்மில் யாராவது தைரியமுடன் குடிக்க முற்படுவோமா ? நிச்சயமாக முடியாது … அன்பு சகோதரர்களே !… இப்போது புரிந்திருக்குமென எண்ணுகிறேன் ஆதலால் இதற்கு மேல் இனி எந்த ஒரு விளக்கமும் தேவையில்லையென்றும் கருதுகிறேன்…

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

4) எதிர்தரப்பு சகோதரர்கள் நீயே உனக்கு ஸுஜூது செய்தாய்,நீயே புவிக்குள் றசூலாக வந்தவன் என வரும் வரிகள் ஞானப்புகழ்ச்சியின் 118வது பாடலில் இடம்பெறுவதாகும். இதன் ஆழ்ந்த பொருளுணர வேண்டுமானால் ஆறாறுக்கப்பால் எனத்துவங்கும் காப்புப் பாடலிலிருந்து வாசித்து ஒவ்வொரு சொல்லாடல்களுக்கும் மெய்ப் பொருளுணர்ந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.எனவே விமர்சிக்கும் சகோதரர்கள் ஆறாறுக்கப்பால்,ஐபேரும் காணாமல்,முத்தோடு பவளம் பச்சை என வரும் தமிழ்சொற்றொடர்களின் வழியாக 117 பாடல்களுக்கும் பொருளுணர்ந்து 118 வது பாடலுக்கு வரும்போதுதான் அவ்வரிகளின் பொருள் விளங்கும்.வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு மனநிலைகளில் வாசித்துப்பாருங்கள்.இதுதான் வாசிப்பின் அரசியல்(politics of reading)அப்படியும் அவ்வரிகளின் பொருள் விளங்காமலோஅல்லது இஸ்லாமிய இறையியலுக்கு மாறுபட்டதாகவோ அவ்வரிகள் இருப்பதாக மீண்டும் நினைத்தால் சொல்லுங்கள். அதன் சூட்சுமப் பொருளை குரானிய கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே நீங்கள் விளக்கம் பெறலாம்.ஆனால் அதற்குமுன், முந்தைய 117 பாடல்களின் விளக்கங்களை ,அவற்றை நீங்கள் புரிந்து கொண்டவிதத்தை நீங்கள் சொல்லியாக வேண்டும். -


1400 வருடங்களுக்கு முன்னால் அல்லாஹ் 23 வருடங்களாக இறக்கிய இஸ்லாத்தின் அடிப்படையான அருள்மறை குர்ஆனுக்கே விளக்கவுரை மிகத்தெளிவாக நம்மிடையே இருக்கிறது ஆனால் உண்மையிலேயே பரிதாபப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நமது மக்கள் புனிதமாக (?!) படிக்கும் ஞானப்புகழ்ச்சிக்கு இதுவரையிலும் விளக்கவுரை கிடையாது … ஆச்சரியம்தான் ஆனால் உண்மைதானே !…. ஏன் இந்த நிலைமை ?!… சகோதரர்களே !…. ஞானப்புகழ்ச்சிக்கு விளக்கவுரை இருந்தால் இந்த மாதிரியான சந்தேகங்களை அதில் பார்த்தாவது நாம் விளங்கிக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்….

ஒரு சிறிய உதாரணத்தைக் கொண்டு சகோதரர் ஹெச் .ஜி . ரசூல் அவர்களின் எடுத்து வைத்த வாதம் சரியானது இல்லை என நம்மால் எளிதில் புரிந்து கொள்ளலாம் …. நன்கு கற்றறிந்த ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரிடம் போய் குர்ஆனில் 118 வது வசனம் எனக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, அதனுடைய அர்த்தமும் , விளக்கமும் எனக்கு கிடைக்கவில்லை அப்படி கிடைத்தால் எனது சந்தேகம் நீங்கி விடும் ஆகையால் நீங்கள் உதவ முடியுமா ? என்று ஒருவர் கேட்டால் உடனே எந்த மறுப்பும் இல்லாமல் சந்தோஷத்துடனே அவர் கற்றறிந்ததை நமக்கு விளக்கமளிப்பார், அதை விடுத்து இல்லை ! இல்லை !, நீங்கள் முதலில் போய் 1 லிருந்து 117 வது வசனம் வரையுள்ள அர்த்தமும் விளக்கமும் ( இருந்தாலும் , இல்லாவிட்டாலும், உங்களுக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்) முழுமையாக படித்து விட்டு பின்னர் அதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என்கிற விதத்தையும் வந்துசொன்னால் மட்டுமே 118 வது வசனத்திற்கு என்ன விளக்கம் என நான் சொல்வேன் என்று அவர் சொன்னால் அதை நீங்கள் ஏற்பதாக இருந்தால் நான் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப் போவதில்லை…. ஆக மொத்தத்தில் இஸ்லாத்திற்கு விரோதமான விஷம கருத்துக்கள் அடங்கிய இந்த இரண்டு வரிகளுக்கு இன்று வரை பதிலும் அர்த்தங்களும் யாருக்கும் தெரிந்தபாடில்லை, இதுவரை விவாதத்தில் கலந்து கொண்டவர்களும் மற்றும் நீங்கள் உள்பட யாரும் விளக்கமும் தந்தபாடில்லை என்பதே மீண்டும் மீண்டும் பலமாக நிரூபணமாகி கொண்டேயிருக்கிறது…..

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

5)ஒற்றை வாசிப்பு முறைக்கு எதிரான பன்மைவாசிப்பை (multiplicity of meaning) உருவாக்கினால்தான் பீர்முகமது அப்பாபயன்படுத்தியிருக்கும் சக்தி, சிவன், அங்கரன், பஞ்சாட்சரம், முகமாறு என அனைத்து யோக, பரிபாஷை சொற்களையும்,குறியீட்டு மொழிபற்றியும் ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும்.இம்முறையியலை கையாண்டு பாருங்கள். பிடிபடவில்லையெனில் இதனையும் உரைமரபின் துணை கொண்டு நாம் அறிந்து கொள்வது மிக எளிதானது.———

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இதை ஏன் ? இத்தனை வருட காலமாக இன்னும்உருவாக்கின பாடில்லை?!…… ஏன் யாரும் இன்னும் ஒரு புரிதலை ஏற்படுத்தவில்லை ?!… இப்படிப்பட்ட முறையியலை பயன்படுத்தி ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு விரிவுரை, விளக்கவுரை எழுதப்பட்டிருந்தால் நான் உள்பட எல்லோருமே அர்த்தங்களை படித்து புரிந்து கொண்டிருக்கலாமே !.. பின்னர் அதில் சந்தேகமோ, மறுப்போ இருந்தால் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் செய்யலாமே !… நீங்கள் சொன்னது போல உரைமரபின் துணை கொண்டு ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்குமேயானால் அதை எங்களுக்கும் தருவீர்கள் என அன்புடன் எதிர்பார்க்கிறேன்

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

6) பீர்முகமது அப்பாவின் சில பாடல்களது பொருளை நெருங்க வேண்டுமானால் பழந்தமிழ் சங்க இலக்கியம், 2-ம் நூறாண்டில் துவங்கும் வள்ளுவம் போன்ற சமண பெளத்த இலக்கியம்,7ம் நூற்றாண்டிற்கு பிறகான சைவ, வைணவ இலக்கியங்கள் வழியாக பல்சமயச் சூழல்தன்மையோடு பயணம் செய்ய வேண்டும். —


நீங்களே அழகாக சொல்கிறீர்கள்…. நாங்களும் இதைத்தான் சொல்கிறோம் , பீரப்பா என்ற தமிழ்ப் புலவரின் பாடல்களில் மாற்று மதத்தவர்களின் கொள்கை கோட்பாடுகள் காணப்படுகிறது அது இஸ்லாத்திற்கு விரோதமானது…. இது பற்றிய பல்சமய சூழல்தன்மை கொண்ட விளக்கங்கள் உங்களிடம் இருந்தால் தந்துதவுங்கள் நாம் அதை படித்து விட்டு இனியொரு சமயத்தில் விவாதித்துக் கொள்ளலாம்.
அரபு சொல்வரலாறு( அலிப், பே, லாம், ஹே, சீன், நூன், போன்றவை)அரபுமொழிச்சொற்கள்(தவக்கல்,தறஜாத்து,லவ்ஹு,ஷபாஅத்,அக்ல்,யகீன்,போன்றவை)அரபு மொழிக் கட்டமைப்பு(அவ்வல் அஹதாக நின்றமரம்/கொத்தாயிரங்கனியே ஹூ/துலங்கு ஷஹாதத்து,அத்தஹியாத்தும் மிக்கோர் புகழ்நபி சலவாத்தும் போன்றவை) தமிழோடு இணைத்து வாசித்து புரிந்திருக்க வேண்டும். —
நமது விவாதம் இது வல்ல
இந்தியதத்துவமரபின் அத்வைதம்,துவைதம்,விசிஷ்டாத்வைதம்,வேத மறுப்புத் தத்துவங்களான சாங்கியம்,சாருவாகம்,உலகாயதம்,ஆசீவகம்,சித்தர்மரபு வாசித்திருக்கவேண்டும்.இஸ்லாமிய சட்டவியல் ஷரீஅத்,ஆன்மீகவியல் தரீகத்,ஹகீகத்,மஹரிபத்,வஹ்த்துதுல் உஜூத்,வஹ்த்துல்ஷுஹுத்,உலூஹிய்யத்,ருபூபிய்யத் இவற்றின் துணையின்றி பீர்முகமது அப்பாவின் சில பாடல்களை எப்படி பொருள் கொள்வீர்கள்… ————-
வெவ்வேறு தத்துவங்களும் (?!) வேத மறுப்பும் (?!) அடங்கிய விஷயங்கள் பல இருப்பதால் பீரப்பாவின் ஞானப்புகழ்ச்சிக்கு பொருள் கொள்வது மிகவும் கஷ்டமான காரியமே என இங்கேயும் நீங்கள் மிக தெளிவாக சொல்லி விட்டீர்கள்.. அதனால்தான் இதுவரையிலும் யாரும் விளக்கவுரை எழுத முன்வரவில்லையோ ?! என்ன விந்தை பார்த்தீர்களா !…. நம்மைப் படைத்த அல்லாஹ் 1400 வருடங்களுக்கு முன்னால் நமக்கு அருளிய இறை வேதத்திற்கே எல்லா விபரங்களும் நமக்கு கிடைக்கிறது ஆனால் பீரப்பாவின் பாட்டுக்கு மட்டும் அர்த்தமும் கிடைக்கவில்லை, விளக்கவுரையும் இல்லை ….. அவருக்கு சரியான வரலாறும் இல்லை…… அன்பு சகோதரரே !… இது எப்படிப்பட்ட நிலைமை என கொஞ்சமாவது நம்மால் யோசித்து உணர முடிகிறதா ? இப்படி பொருள் தெரிந்து கொள்ள முடியாத பீரப்பாவின் ஞானப்பாட்டை விடிய விடிய அவரின் சமாதியின் முன்னால் உட்கார்ந்து பாடத்தான் வேண்டுமா ? எதற்காக பாட வேண்டும் ? ஏன் பாட வேண்டும் ? பீரப்பாவின் ஞானப்பாட்டுக்கள் ஒன்றும் குர்ஆன் இல்லையே (அஸ்தஃபிருல்லாஹ்) அர்த்தம் தெரியாமல் நாம் எப்படி பாடினாலும் நன்மைதான் கிடைக்கும் என முடிவு செய்வதற்கு…. இது பற்றி பீரப்பாவே என்னுடைய பாட்டை பாடினால் நன்மை கிடைக்கும் என எங்குமே சொல்லவேயில்லையே !.. ஏன் அவர் பெயரை சொல்லி இந்த பாட்டு மேளத்தை நடத்த வேண்டும்.. நான் மேளம் என்று சொன்னதற்கு காரணம் இந்த சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/5590.html சொடுக்குங்கள் விபரம் அறியலாம்
இவை அல்லாத மிக எளிமையான தமிழிலும் மனிதகுலம் முழுமைக்கும் பிரார்த்தனைபுரிகிற
பீர் முகமது அப்பாவின் இறை நேயம் வழி வெளிப்படுகிற மானுட நேயம் என்பது கொடுமுடி. இது குறித்து பிறிதொருதடவை பேசலாம். —-
இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம் கிடைத்தால், தேவைப்பட்டால் பேசலாம்

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

7) நாம் தொழுகை என்று தமிழில் குறிப்பிடுவதை சமணமரபின் திருவள்ளுவர் தெய்வம்தொழாஅள் என்பதாகவே பயன்படுத்தினார்.சைவமரபில் இது அடி தொழுதலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமணர்களும், சைவர்களும் பயன்படுத்தியதால் முஸ்லிம்கள் நாம் தொழுகை என்ற சொல்லை பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா என்ன..


நீங்கள் உதாரணமாக எழுதியிருக்கும் வார்த்தைகள் போலுள்ளதை இஸ்லாமிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை ஆனால் நாம் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளும் அது சார்ந்த வரிகளும் மாற்று மத தத்துவங்கள், கலாச்சாரங்கள் அடங்கியதாக காணப்படுகிறது இதற்கு அர்த்தம் தெரிந்தவர்கள் நமக்கும் தெரியப்படுத்தினால் புரிந்து கொள்ள வசதியாக இருக்குமென்றுதான் கேட்டிருந்தோம் . இந்த சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/part-2.html சொடுக்கி நீங்களே படித்துக் கொள்ளலாம் , ஆக எது சந்தேகமாக எங்களால் எடுத்து காட்டப்பட்டிருக்கிறதோ அதற்குரிய அர்த்தங்களும், உரிய விளக்கங்களும் நமக்கு கிடைத்தால் , அது நமது மார்கத்திற்கு விரோதமில்லாமல் இருக்குமானால் ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வது நல்லது …

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

8) பீர்முகமதுஅப்பா தனது பாடலில் தேவர்குலசிகாமணியே என்றொரு சொற்றொடரை பயன்படுத்துகிறார்.எனவே கள்ளர், மறவர் இனமான தேவர்சாதியின் தலைவராக மட்டும் அல்லாஹ்வை பீர்முகமது அப்பா கூறிவிட்டார் என்று கூறுவது சரியாகுமா..எனவே ஒரு பாடல்பிரதியை பொருள்கொள்ளும் போது சூழல்சார்ந்த அர்த்தம்(contextual meaning)பல்பொருள்சார்ந்த அர்த்தம்(multiple meaning) என்பவையும் முக்கியமானவை. கவனத்தில் கொள்வீர்களா..


எத்தனை அர்த்தங்கள் இருந்தாலும், மாற்று மதங்களை மிகத் தெளிவாக குறிக்கும் அல்லது அவர்களின் வணக்க வழிபாடுகளை மட்டுமே குறிக்கும் குறிப்பிட்ட வார்த்தைகளை கொண்டு நம் இறைவன் அல்லாஹ்வை பீரப்பாவோ அல்லது மற்றவர்களோ புகழவோ அல்லது பாட்டு பாடவோ செய்வதை இஸ்லாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்பதை நீங்கள் உணரவேண்டும் காரணம் அல்லாஹ்வைப் புகழ வேண்டுமானால் அவனுடைய அழகிய திருநாமங்களைக் ( அஸ்மாவுல் ஹுஸ்னா) கொண்டு புகழ வேண்டும் என்பது இஸ்லாம் நமக்கு காட்டித் தரும் வழிமுறை.. ஆதாரம்:- அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)
அதை விடுத்து புலவர்கள் தத்தமது கற்பனை திறன்களுக்கும் , புலமைத்திறன் மற்றும் மொழித்திறன்களுக்கும் ஏற்ப பலவிதமான தமிழ் சொல்லாடல்களை கையாண்டு மனங்கவரும் கவிதைகளையும், செய்யுள்களையும் அல்லது இலக்கியங்களையுமாக இயற்றியவைகளுக்கு நாம் பல ராகங்கள் கொடுத்து புனிதம் என்ற பெயரிலும் அல்லாஹ்விடத்தில் நன்மையே கிடைக்கும் என்கிற எண்ணத்தில் இறந்து போனவர்களின் சமாதிகளின் முன்னால் பயபக்தியுடன் பவ்யமுடன் அமர்ந்து விடிய விடிய பாடிக்கொள்வது என்பது நமது மார்கத்தில் இல்லாத வழிகேடான மாற்று மதத்தவர்களின்செயல்பாடு.,

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

9)இன்னும் நியாயமான முறையில் உரையாடலைத் தொடர்ந்தால் குரானிய மொழியாடல்களை பொருள் கொள்ளுதல் உட்பட இன்னும் நிறைய விஷயங்களையும்பேசலாம்.பீர்முகமது அப்பாவின் பாடல்களுக்கு வகாபிகளின் சித்தரிப்பு மட்டுமல்ல ,


நியாயமான முறையிலேயே என்னுடைய கருத்துக்களை இங்கே எடுத்து வைத்துள்ளேன், எனவே முதலில் இது பற்றிய மறுப்புகள் இருந்தால் குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ் ஆதாரங்களுடன் தெரிவியுங்கள் இன்ஷா அல்லாஹ் இன்னும் நாம் நல்ல முறையில் கூடுதல் விபரங்களுடன் விவாதிக்கலாம்
இந்துத்துவவாதிகளும்,மேற்கத்திய அறிவுஜீவிகளும் குரானிய மொழியாடல்களை எதிர்மறையாகவும், ஆபத்தானதாகவும் சித்தரிக்கும் முறையியலுக்கு எதிராக எப்படிப்பட்ட வாசிப்பை நாம் நிகழ்த்தவேண்டும் என்பதையும் கூட பேசலாம்.
உங்கள் ஆதங்கம் உண்மையானது !… நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் முதலில் நம்மவர்களே தங்களின் செயல்களுக்கு இப்படிப்பட்ட செயல்களை செய்கிறார்களே !… நாம் இன்னும் தர்ஹா வழிபாட்டில் ஊறிப் போய் இருக்கிறோம், நமது மார்க்க விஷயங்களை, குர் ஆன் , மற்றும் ஹதீஸ்களை சரிவர கற்றுக் கொள்வதில்லை , அதற்கான ஆர்வமும் நம்மிடையே மிகவும் குறைந்து காணப்படுகிறது ஆனால் ஞானப்புகழ்ச்சியையும், மவ்லீதையும் , இன்ன பிற பித்அத்துக்களையும் இஸ்லாத்தின் பெயரில் நடத்தி வருகிறோம் . மாற்று மதத்தவர் ஒருவர் நமது இஸ்லாத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பதை ஐந்தே சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/blog-post_7945.html சொடுக்கி நீங்கள் அறிந்து கொள்ளலாம். அனவே முதலில் நாம் சரியாக வேண்டும் அபோதுதான் முறையாக மற்றவர்களுக்கு நமது மார்கத்தை எத்தி வைக்க முடியும் , அதற்குரிய ஏற்பாட்டை நாம் நமது ஜமாத்துக்களில் முறையாக செய்வோமானால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு வெகு தீவிரமாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை

-தக்கலை கவுஸ் முகமது

suvanappiriyan said...

10.இதற்கு ஒற்றை அதிகாரத்தை வலியுறுத்தும் வகாபிய வாசிப்புமுறை உதவாது

நமது ரசூல் (ஸல்) எந்த ஒரு இசத்தையும் நமக்கு காட்டி தரவில்லை மேலும் அங்கீகரிக்கவும் இல்லை … ஆனால் நமது மக்கள்தான் ( நீங்கள் உள்பட) ஆதங்கப்பட்டு வஹாபிசம் அல்லது ஸலபிசம் போன்ற இசங்களை கடைபிடிப்பதாக எண்ணிக் கொண்டு என் நிலை போன்ற சகோதரர்களை வஹாபிகள் என வீணாக பழி சுமத்துகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன் அதனால்தான் வஹாபி வாசிப்பு முறை உதவாது என்று என்னிடம் குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என எனக்கு தோன்றுகிறது இதுவும் ஒரு மோசமான அநியாயமான குற்றச்சாட்டு. எனது நிலை குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் உள்ள கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் அது சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்கிறேன் இல்லையேல் அதற்குரிய பதில்களை முறையான ஆதாரங்களுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கிறேன். எனக்கு தெரியாவிட்டால் உரியவர்களிடம் கேட்டு விளக்கம் பெற்று ஆதாரங்கள் சரி பார்க்கப்பட்டு தெரிவிக்கிறேன். இதுதான் நான் இன்று வரை செயல்பட்டுவரும் விதம். இதில் தவறுகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு தன்னையும் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதே நிதர்சனம்.
நமது சிந்தனைக்கு சில : ஒற்றுமையாக இருக்க வேண்டிய நாம் ஒரு சில கருத்து வேறுபாடுகளுக்காக ஏன் பிரி(க்க)ய வேண்டும் ? ஏன் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ள வேண்டும்? அல்லது ஊர் சட்ட நடவடிக்கை என்ற பெயரில் ஏன் ஊர் விலக்கம் செய்ய வேண்டும்?. ஒற்றுமையாக இருந்து கருத்து வேறுபாடுகளை களைவதற்குரிய வழிகளை நம்மால் கண்டறிந்து செயல்பட முடியாதா ? ஊர் விலக்கம் என்ற இவர்களது இந்த செயலால் ஒற்றுமையா ஏற்படும் ? நாம் சிந்திக்க வேண்டும். எந்த ஒரு சமுதாயத்திலும் கருத்து வேறுபாடுகள் , என்பது தவிர்க்க முடியாதது ஆனால் அந்த கருத்து வேறுபாடுகள் மார்க்கத்தை முறையாக செயல்படுத்தாத நிலைகளை சுட்டிக் காட்டியோ அல்லது மார்க்கத்தில் பெயரால் அறியாமல் செய்யப்பட்டுவரும் தீமைகளை களையக்கூடியதாகவோ அல்லது நன்மையை கருதியோ இருக்குமானால் சமுதாய நலன் கருதி சொல்லப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள், தேவைப்படும் சட்ட மாற்றங்கள் , சீர்திருத்தங்கள் முதலியவைகள் நல்ல நோக்கங்களுடன் புரிந்து கொள்ளப்பட்டு இஸ்லாமிய மார்க்க விரோத செயல்களை தவிர்த்து அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் கட்டி தந்த வழி முறைகளை பின்பற்றுகிற முறையில் சரியான ஜமாஅத் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது என்பதில் நாம் நன்மையையே காணமுடியும்.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு முஸ்லிமும் தங்களது பொறுப்பினை உணர்ந்து சமூகக் கடமைகளில் தோள் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் பணிக்கின்றது இஸ்லாம் . இதனை மிகவும் பிரபலமானதொரு நபிமொழி இவ்வாறு கூறுகின்றது :
“எங்கெல்லாம் ஒரு மனிதன் தீமையைக் காணுகின்றானோ (அதனை தடுக்கும் பொருட்டு அல்லது அதற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு) அதனைத் தனது கரத்தால் அல்லது வலிமை கொண்டு தடுக்க வேண்டும், அல்லது அவனது நாவால் (அன்புடன் அறிவுரை கூறுவதன் மூலமோ, அதிகார தோரணையில் அதட்டுதல் மூலமோ) அதனைத் தடுக்க வேண்டும், இவை யாவற்றிலும் ஒருவனுக்கு இயலாது எனின், அவன் தனது மனதாலாவது அதனைத் தீமை என்று ஒப்புக் கொண்டு அதனை வெறுக்க வேண்டும்.”
ஆக, ஒரு முஸ்லிம் சமூகத்தில் நடைபெறும் இஸ்லாம் என்ற பெயரிலும் பாரம்பரியம் என்ற போர்வையிலும் விமரிசையாக நடத்தப்பட்டுவரும் அநாச்சாரங்களுக்கு எதிராக, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் ஏற்படும் தீமைகளுக்கு எதிராக இஸ்லாத்தினை அவன் பிரயோகிக்க முன் வர வேண்டும் என்றே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. எந்த ஒரு முஸ்லிமும் வெறும் தொழுகை வணக்க வழிபாடுகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டு சமூகத்தில் நிலவும் தீமைகளைக் கண்டு கொள்ளாதிருந்து விட முடியாது. எனவே இஸ்லாத்தை வெறும் வணக்க வழிபாடுகளுடன் சுருக்கிக் கொள்ளாது, பரந்த அளவில்நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். தீமைகள் களைப்பட்ட ஒரு ஜமாத்தை உருவாக்குவதில் நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். இஸ்லாம் வெறுத்தொதுக்கிய அனைத்து அம்சங்களையும் அல்லாஹ்வுக்காக என ஏதோ ஒருவழிமுறையில் தடுத்து, வெறுத்து ஒதுக்கி இஸ்லாம் ஏவிய விஷயங்களை, அக்கட்டளைகளை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
ஆனால் இன்றைய நிலையோ அப்படியில்லையே ! ஒரு ஜமாத்தில் நடக்கும் மார்க்க விரோத ( தர்ஹா )கலாச்சார அனாச்சார சீரழிவு செயல்பாடுகளை நாம் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டி இவைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்று பல வழிகளிலும் எத்தி வைக்க முற்பட்டால் கருத்து சொன்னவர்களை பாரம்பரியத்திற்கெதிராகவும்(?!), சமுதாய நடைமுறைகளுக்கெதிரான(?!) செயலில் ஈடுபட்டதாகவும் அவர்களாகவே தன்னிச்சையாக ( அதாவது காலக்கெடுவுடன் விளககம் கேட்டு, அவர்கள் போட்ட காலக்கெடுவை அவர்களே ?! ...

suvanappiriyan said...

...?! மதிக்காமல் முடிவு செய்து சம்மந்தப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் ஜமாத் உறுப்பினர் உரிமைகளை தற்காலிகமாக இழக்கிறார் எனஅறிவிப்பு செய்வது பின்னர் 3 வருடத்திற்குள் மன்னிப்பு கேட்டால் ( இஸ்லாமிய மார்க்க விரோத செயல்களை செய்யாதீர்கள் , இஸ்லாமை முறையாக தெரிந்து கொண்டு செயல்களை நன்மையின் பக்கம் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் ) அப்படியானால் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் இல்லையெனில் நிரந்தரமாக ஊர் விலக்கம் செய்வார்கள்.

அருமை சகோதரரே !….. இதுதான் இஸ்லாத்திற்கும் அதை பின்பற்றுகிற மக்களுக்கும் உகந்த செயலா ? சிந்திக்க வேண்டும் ! ஒற்றுமை பற்றி பேசும் நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரர்களே நாம் எதில் ஒற்றுமையை காண வேண்டும் ? இஸ்லாத்திற்கு உகந்த செயல்களிலா அல்லது இஸ்லாத்திற்கு எதிரான செயல்களிலா ? இல்லை வெறுமனே நம் சமுதாய ஒற்றுமை என்கிற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான எந்த ஒரு செயல்களையும் கண்டும் காணாமல் இருந்து ஒற்றுமையாக இருக்க வேண்டுமா ? குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் நாம் ஒன்றுபட வேண்டும் . இதற்கு மாற்றமாக யார் நடந்தாலும் அதை அவர்களுக்கு உணர்த்தி கொடுக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமும் கடமையே . குர் ஆன், சுன்னாஹ் வழிகளில் இல்லாமல் நம் சமுதாயம் செயல்பட்டால் முன்னேற்றம் எப்படி வரும் ? இஸ்லாமிய சிந்தனை முன்னேற்றம் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே அடைவது என்பது மறுமையில் நஷ்டத்தையே சம்பாதிக்க நேர்ந்துவிடும் என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் சிந்தித்து பார்த்து முடிவு செய்து கொள்வது நல்லது என்பதே எனது கருத்து.

இன்ஷா அல்லாஹ் இனியும் நாம் நல்ல முறையில் கூடுதல் விஷயங்களுடன் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு நமது விவாதங்களை இறை அச்சத்துடன் தொடரலாம் அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும் என்கிற நம்பிக்கைகளுடனும் , மிக்க அன்புடனும் , சலாத்துடனும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சர்வ வல்லமை படைத்த இறைவன் அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என்றென்றும் நேர்வழியை காட்டட்டும். நம் எல்லோருடைய நற்காரியங்களையும், நற்செயல்களையும், நற்கருத்துக்களையும், நல்ல அமல்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும் எனவும் துஆ செய்து கொள்வோம்…. ஆமீன் … ஆமீன்….. யாரப்பில் ஆலமீன். கீழ்காணும் துஆக்களுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்

59:10………….“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” ……………………

3:8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!”…………………………
வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் …………
தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்
Blog: http://haiderghouse.blogspot.com/
* குறைகள் என்னை சாரும், நிறைகள் ஏக இறைவனை சாரும் …………..
* படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே நாம் வணங்குவோம் !
* குர்ஆனை பொருளுணர்ந்து முறையாக ஓதுவோம் ! அதனை சிந்தித்து செயல்படுவோம் !
* அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !

suvanappiriyan said...

தக்கலை கவுஸ் முகம்மது!

அருமையான விளக்கங்கள். இவ்வளவு பொறுமையாக ஹெச்.ஜி.ரசூலுக்கு பதில் கொடுத்தது அறிந்து மகிழ்ச்சி. நாம் கொடுக்கும் பதில் அவரை நேர்வழிப்படுத்துகிறதோ இல்லையோ படிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு நல்ல தெளிவினை கொடுக்கும்.

//வலைத்தளத்தின் பின்னூட்டங்கள் உள்ளூர உங்களுக்குக் கிளர்ச்சியை ஊட்டலாம். பீர்முகம்மது அப்பாவை குர்ஆனின் மொழிபெயர்ப்பாளராகச் சித்திரித்து அது விவாதிக்கப்படுவதைப் பற்றியோ ஞானப்புகழ்ச்சி குர்ஆனின் மொழிபெயர்ப்பாக விவாதிக் கப்படுவதைப் பற்றியோ தாங்கள் கவலைப்படவே மாட்டீர்கள் என்பதுவும் தெரியும். தங்களுக்குத் தேவை, இணைய தளமாக இருந்தால் பின்னூட்டம்; பத்திரிகையாக இருந்தால் விமர்சனங் கள்.//

இதுதான் ஹெச்.ஜி.ரசூலைப் பற்றிய என்னுடைய எண்ணமும்.

suvanappiriyan said...

தர்வேஸ்!

//மு.முகமதுயூசுப், சுவனப் பிரியன்,காவ்யா உள்ளிட்ட அறிஞர்களுக்கு என் தாழ்மையான சில சந்தேகங்கள்..//

//லா இலாஹ இல்லல்லாஹு,முகம்மதுர் ரசூலில்லாஹி.. இதன் பொருள் கடவுள் இல்லை. அல்லாஹ்வைத் தவிர- முகமது அவனின் தூதர்
அல்லாஹ்மட்டுமே உண்மை வேறுகடவுள்கள் பொய் என்னும் இந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன சைவர்கள் கும்பிடும் சிவன் பொய்,வைணவர்கள் வனங்கும் கிருஷ்ணன் பொய்,நாடார்கள் வணங்கும் பத்ரகாளியம்மன் பொய்,தலித்துகள் வணங்கும் கருப்பண்ணசாமி பொய், பழங்குடிகள் வணங்கும் அசுரன் பொய் கிறிஸ்துவர்கள் வணங்கும் யேசுகிறிஸ்து பொய் அல்லாஹ் மட்டுமே மெய் என்பதாக அல்லவா சொல்கிறது.//

உண்மையைத்தானே சொல்கிறது. நமது தமிழ் பண்பாடு ':ஒன்றே குலம் ஒருவனே தேவன் அல்லவா'. அடுத்து இந்து மத வேதங்கள் அனைத்தும் ஓரிறைக் கொள்கையையே பறை சாற்றுகிறது. நீங்கள் குறிப்பிடும் கடவுள்கள் அல்லாது இன்னும் ஆயிரக்கணக்கில் இந்தியாவில் கற்பனைக் கடவுள்கள் உண்டு. நீங்கள் வணங்கும் பிள்ளையார், அல்லது முருகன் போன்ற உருவங்கள் கடவுள் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஏதும் வேத அறிவிப்புகள் உண்டா? ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் இதற்கொ மற்ற கடவுள்களுக்கோ ஆதாரம் காட்ட முடியுமா? இல்லை என்றால் உங்களின் வேதங்கள் பொய் சொல்கிறது என்று பொதுவில் அறிவித்து விடுங்கள்.

அதே போல் 'நான் தான் இறைவன்' என்று ஏசு எங்காவது ஒரு இடத்தில் பைபிளில் கூறியுள்ளாரா? எல்லாம் பின்னால் வந்தவர்களின் புனைவுகளே!
//இந்த ஈமானே பிற சமய நம்பிக்கைகள்மீது வணக்கவழிபாடுகள் மீது மாபெரும் யுத்தத்தை செய்கிறதல்லவா.. இதை எப்படி இந்திய தமிழக பல்சமயச் சூழலில் வாழும் மக்கள் அனுமதிக்க முடியும்.அரபுமொழியில் சொல்லிக் கொண்டிருப்பதால் ஏதோ முஸ்லிம்களின் இந்த கலிமா பற்றி இந்துக்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ சரியாக எதுவும் தெரியவில்லை.எவ்வளவு ஆபத்தான கலிமா இது.பெரியாரும் அம்பேத்கரும் இதற்கு எப்படி வக்கலாத்து வாங்கினார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.//

இந்திய மற்றும் தமிழக மக்களோடு இன்று வரை முஸ்லிம்கள் சகோதர பாசத்தோடுதானே பழகி வருகிறார்கள். எங்காவது ஒரு இடத்தில் இரு தரப்பிலுமே தவறு செய்பவர்கள் இருக்கலாம். அதை களைவதுதான் அறிவுடையோர் செய்ய வேண்டிய வேலை.

மேலும் மத சண்டைகளை விட சாதி சண்டைகள்தான் தமிழகத்தில் அதிகம் நடக்கிறது. மனிதனை மலம் தின்ன வைத்து அழகு பார்த்தவர்களும் நாம் தான். இதனால் சாதியை ஒழிக்க நீங்கள் களத்தில் இறங்கினீர்களா?

//ஏழாம் நூற்றாண்டில் நபிமுகமது என்ன செய்தார்.. லாத் உஜ்ஜா,மனாத் பெண்தெய்வங்கள் உள்ளிட்ட 360 க்கும் மேற்பட்ட சிலைகளை மக்கமா நகரின் கபாவில் அடித்து நொறுக்கி உடைத்தெறிந்தாரே..//

அந்த ஆலயம் ஏக இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன்முதல் நிர்மாணிக்கப்பட்டது. நபி ஆப்ரஹாம் தனது மகனோடு சேர்ந்து அதை மறு நிர்மாணம் செய்ததாக வரலாறு. அதன் பிறகு பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சிலை வணங்கிகள் வசம் காஃபா செல்கிறது. அதனை முகமது நபியும் அவரது தோழர்களும் மீட்டு முதலில் எவ்வாறு வணக்கம் நடை பெற்றதோ அந்த நிலைக்கு காஃபாவை மாற்றுகின்றனர். இடையில் வந்த சிலை வணக்கம் இடையிலேயே சென்று விட்டது.

//தலிபான்கள் புத்த சிலைகளை உடைத்தெறியும் போது இந்த நபிவழியைத்தானே பின்பற்றினார்கள்.//

புத்தர் சிலைகளை பாதுகாக்க பண உதவி தருவதாக ஒரு வெளிநாட்டு நிறுவனம் தாலிபான்களிடம் கேட்டது. தாலிபான்கள் 'தங்கள் நாட்டில் போரினால் வறுமை தாண்டவமாடுகிறது. குழந்தைகள் பட்டினியால் சாகிறார்கள். அவர்களுக்கு ஏதும் உதவுங்கள்' என்று அவர்களிடம் கேட்டனர். அதற்கு வெளிநாட்டவர் மறுத்தனர். எனவே கோபம் கொண்ட தாலிபான்கள் பாமியான் சிலைகளை வெடி வைத்து தகர்த்தனர்.

நீங்களே சொல்லுங்கள். ஒன்றும் பேசாத கற்சிலைகளின் புனர்வாழ்வு முக்கியமா? அல்லது குழந்தைகளின் உயிர் முக்கியமா?

suvanappiriyan said...

தர்வேஸ்!

//நபிவழி இதுதான் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் அனைத்துக் கோவில்களின் சிலைகளையும் உடைக்கும் ஜிகாதிகளாய் மாறினால் என்ன ஆகும்…
இந்த மனோபாவம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் கலிமாவின் மூலம் உருவாகியிருப்பது எவ்வளவு பெரிய அபாயகரமான நிலை..என்வேதானே அடிப்படைவாதமும் தீவிரவாதமும் முஸ்லிம்களால் மேலெழும்புகிறது..//

1400 வருடங்களாக இஸ்லாம் தமிழகத்தில் உள்ளது. என்றாவது ஒரு நாளாவது எந்த முஸ்லிமாவது கோவிலை இடித்து பள்ளி கட்டியதாக வரலாறை காண்பிக்க முடியுமா?

ஆனால் நம் கண் எதிரிலேயே சில ஆண்டுகளுக்கு முன் 'ராமர் இங்கு தான் பிறந்தார்' என்ற ஒரு பொய்யை சொல்லி பழமை வாய்ந்த மசூதியை நேரம் குறித்து இடித்தார்களே! அவர்களைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்க வேண்டும்.

//இந்தச் சூழலில்தான் சூபிகளின் கவிதை மொழிக்கான முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இறைவனை அனைத்து சமயத்திற்குமான இறைவனாக சமயவடிவாய் சற்குருவாய் தரிசிக்க சொல்வது எவ்வளவு மாட்சிமைதாங்கிய விசயம்.இதைத்தானே குணங்குடியாரும் பீரப்பாவும் தமிழ்சூபிகளும் செய்தனர்.//

இதற்கு விளக்கமாக தக்களை முகமது கவுஸ் விரிவாக இந்த பதிவிலேயே பதிலளித்திருக்கிறார். பார்த்துக் கொள்ளுங்கள்.

//நீங்கள் யார் பக்கம்… அடிப்படைவாத இஸ்லாத்தின் பக்கமா.. அல்லது.. சூபிகளின் ஜனநாயக இஸ்லாத்தின் பக்கமா..
அல்லது இப்படிக் கேட்கிறேன்
உங்களுக்கு எந்த அல்லாஹ் வேண்டும்.. அரபு குறைஷி மேலாண்மையையும்,ஆணாதிக்கத்தையும்,பிறசமய காழ்ப்புணர்வையும் பேசும் அரபு அல்லாஹ்வா.. அல்லது சமய சமரசம் பேசும் தமிழ் அல்லாஹ்வா..//

அரபு அல்லாஹ், தமிழ் அல்லாஹ் என்றெல்லாம் மொழிக்கு ஒரு அல்லாஹ் கிடையாது அன்பரே! அகில உலகுக்கும் ஒரு அல்லாஹ்தான். அதாவது ஒரு இறைவன்தான். நான் அந்த ஏக இறைவனின் பக்கம்.

'மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.'

'அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை நாம் படைத்திருப்பதை மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான்.

'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்' என்று கூறுவீராக!
-குர்ஆன் 36:77,78,79

VANJOOR said...

click the link and read

**** தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!!

தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.
*****

.

suvanappiriyan said...

தங்கமணி!

//இந்து மதம் பற்றி அறிந்துகொள்ளுங்கள். பிறகு பேசலாம்,
விஷ்ணுமயம் ஜகத்து என்பது வேத வாக்கியம்.
வேதம் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருப்பது பிரம்மம் என்று உரைக்கிறது. ஆகவே கல் பூண்டு, கற்சிலை, சுவனப்பிரியன் எல்லாவற்றிலும் இருப்பது சிவமே. சுவனப்பிரியன் தன்னை உணரும்போது தன்னுள்ளே இருக்கும் இறைவனை அறிவார்.
ஆகவே முருகன், பிள்ளையார் அனைத்தும் தெய்வமே. யார் எதனை வணங்கினாலும் என்னையே வணங்குகிறார்கள் என்று கிருஷ்ணர் உரைக்கிறார்.//

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

' மாருத்பிஹி ராக்னா ஆஹாஹி'
'அக்னியின் ரகசியம் பாலைவன மக்களுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்டது'
1 : 19 : 1-9 -ரிக் வேதம்

ரிக் வேதம்

'மா சிதான்யாத்வி சன்ஷதா'

'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'

ரிக் வேதம் 8 : 1: 1

'யா எகா இத்தாமுஸ்துதி'

'தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்'

ரிக் வேதம் 6 : 45 : 16

நீங்கள் கொடுக்கும் இந்து மத விளக்கத்துக்கும் நான் இந்து மத வேதங்களிலிருந்து தரும் ஆதாரங்களும் கொஞசமாவது ஒத்துப் போகிறதா. சற்று சிந்தியுங்கள்.

suvanappiriyan said...

தங்கமணி!
//திருச்சியில் இருக்கும் நத்தர்ஷா பள்ளிவாசல் முன்பு அங்கிருந்த சிவன் கோவிலை அங்கு ஆண்டுவந்த நவாபின் துணையுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்பதை நத்தர்ஷா பள்ளிவாசல் வெளியிடும் விழா மலரே கூறுகிறது.//

அந்த காலத்தில் அரசரகள் ஒரு நாட்டின் மீது படையெடுப்பதும் அங்கு தனது நினைவாக சில கட்டிடங்களை நிர்மாணிப்பதும் தொன்று தொட்டு வரும் வழக்கம். சேர சோழ பாண்டிய பல்லவ மௌரிய ஆட்சிகளில் இது சர்வசாதாரணமாக நடந்துள்ளது. இன்று உள்ள அநேக இந்து மத கோவில்கள் முன்பு சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் உரியனவாக இருந்தது.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

இன்றுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலும் முன்பு சமணக் கோவிலாக இருந்தது. மேலும் ஆதாரங்கள் கேட்டால் தருகிறேன்.

suvanappiriyan said...

தங்கமணி!

//மேலும் மனாத் உஜ்ஜா போன்ற தெய்வங்களை மட்டுமே அரபியர்கள் வணங்கியும் வரவில்லை. அரபியா முழுவதும் வெவ்வேறு அரபியர்கள் வெவ்வேறு அரபிய தெய்வங்களை வணங்கிவந்தார்கள். அவற்றின் கோவில்களை இடித்ததும் அவற்றை வணங்கிவந்த மக்களை கட்டாயமாக மதம் மாற்றியதும் இஸ்லாமிய வரலாறுதான்.//

கஃபா முன்பு ஏக இறைவனை வணங்கும் தலமாக இருந்ததற்கான ஆதாரத்தை சவுதியின் வரலாற்றின் துணை கொண்டு சொல்லியுள்ளேன். என் வாதம் தவறு என்றால் நீங்கள்தான் மறுப்பு ஆதாரத்தை தர வேண்டும்.

மேலும் திருச்சி பள்ளியை ஒரு அரசன் ஆக்கிரமித்தான் என்றுதான் சொல்கிறீர்கள். பொது மக்கள் யாரும் பாபரி மசூதியை இடித்ததைப் பொன்று நாள் குறித்து மசூதியை தரை மட்டமாக்கவில்லை. பாபரி மசூதியைப் பற்றி மூச்சு விட மாட்டேன் என்கிறீர்களே! பாபரி மசூதியை இடித்தது சரி என்கிறீர்களா?

கட்டாயமாக சமணர்களை இந்துக்களாக மாற்றியது யார் என்பதன் ஆதாரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

தங்கமணி!
//சரி இந்தியாவில் நிறைய ஏழைக்குழந்தைகள் பசியால் வருந்துகிறார்கள். ஆகவே செல்வம் நிறைந்த சவுதி அரேபியா உடனே பணம் கொடுக்க வேண்டும் என்று நாம் கோருவோம்.
பணம் கொடுக்காவிட்டால் இந்தியாவில் அவர்கள் கட்டி வைத்திருக்கும் மசூதிகளை இடிப்போம். வருகிறீர்களா? இதனை நியயபப்டுத்துவீர்களா?//

பவுத்த சிலைகளை இடிக்கும் போது அந்த சிலைகளை வணங்க ஆப்கானிஸ்தானத்தில் பவுத்தர்கள் யாரும் இலலை. அடுத்து சவுதி அரேபியா தன்னால் ஆன உதவிகள் அனைத்தையும் செய்தே வருகிறது. வேண்டுமானால மன்மோகன் சிங்கை இங்குள்ள குழந்தைகளுக்கு உதவ கோரிக்கை வைக்க சொல்லுங்கள். கண்டிப்பாக சவுதி அரசு இந்தியாவுக்கு உதவி செய்யும்.

suvanappiriyan said...

சலாம்! சிறந்த இடுகை வாஞ்சூர் பாய். தொடருங்கள்.